Tuesday, 30 October 2018

கடந்த வாரம் | சமீபத்திய நிகழ்வுகள் 30.10.2018

எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும்
பதினெட்டு சட்டப்பேரவை உறுப்பினர்களை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்தது செல்லும் என உயர் நீதிமன்றத்தின் மூன்றாவது நீதிபதி சத்திய நாராயணன் அக்டோபர் 25 அன்று தீர்ப்பு வழங்கினார். சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க இருந்த தடை நீக்கப்படுவதாகவும் நீதிபதி தெரிவித்தார். இந்த வழக்கை ஜூன் 14 அன்று விசாரித்த இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால் மூன்றாவது நீதிபதியிடம் வழக்கு ஒப்படைக்கப்பட்டது.

பட்டாசுக்குத் தடை இல்லை
நாடு முழுவதும் பட்டாசுக்குத் தடை விதிக்கக் கோரித் தொடரப்பட்ட வழக்கில், பட்டாசுகளைத் தயாரிக்க, விற்பனை செய்ய, வெடிக்கத் தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் அக்டோபர் 23 அன்று தீர்ப்பளித்தது. ஆனால், ஆன்லைன் தளங்களில் பட்டாசுகளை விற்பனைசெய்ய உச்ச நீதிமன்றம் தடைவிதித்தது. அத்துடன் தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாட்டையும் விதித்துள்ளது.

சிபிஐ: தற்காலிக இயக்குநர் நியமனம்
ஊழல் புகார் தொடர்பாக சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே நீடித்துவந்த மோதல் போக்குக் காரணமாக இருவருக்கும் கட்டாய விடுப்பு அளித்து அக்டோபர் 23 அன்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. சிபிஐ-யின் தற்காலிக இயக்குநராக நாகேஸ்வரராவ் நியமிக்கப்பட்டார். இந்தக் கட்டாய விடுப்பை எதிர்த்து அலோக் வர்மா உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், இரண்டு வாரங்களில் அவர் மீதான விசாரணையை முடிக்குமாறு மத்திய புலனாய்வு ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

நாடக ஆளுமை ந. முத்துசாமி மறைவு
தமிழ்நாட்டின் நாடக ஆளுமையும் கூத்துப்பட்டறையின் நிறுவனருமான ந. முத்துசாமி உடல்நலக் குறைவு காரணமாக அக்டோபர் 24 அன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 82. தமிழ்த் திரைத் துறையில் பல்வேறு நடிகர்களை உருவாக்கிய பெருமை இவருக்கு உண்டு. இவரது கலை பங்களிப்புகளுக்காக 2012-ம் ஆண்டு இவருக்கு பத்ம  விருது வழங்கப்பட்டது.

செயற்கை நுண்ணறிவில் 13-வது இடம்
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களில் மிகவும் மேம்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பெற்றிருப்பதாக பின்லாந்தைச் சேர்ந்த செயற்கை நுண்ணறிவு நிறுவனம் 'ஸைஃப்ரா' தெரிவித்திருக்கிறது. இந்த நிறுவனம் நடத்திய ஆய்வில், செயற்கை நுண்ணறிவுப் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும் சீனா இரண்டாவது இடத்திலும் இந்தியா 13-வது இடத்திலும் இருக்கின்றன.

உலகின் நீளமான கடல் பாலம்
ஹாங்காங் ஸுஹாய் இடையே கட்டப்பட்ட உலகின் நீளமான கடல் பாலத்தை சீன அதிபர் ஜி ஜின்பிங் அக்டோபர் 23 அன்று திறந்துவைத்தார். 55 கிலோமீட்டர் நீளத்தில் 4,00,000 டன் இரும்பால் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்தப் பாலம், பூகம்பம், சூறாவளி போன்றவற்றைத் தாங்கும்படி வடிவமைக்கப் பட்டிருக்கிறது.

பிரதமரானார் மகிந்த ராஜபக்ச
இலங்கையின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்ச அக்டோபர் 26 அன்று பதவியேற்றார். இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனவின் கட்சி, கூட்டணியை விட்டு விலகியதால், புதிய பிரதமராக மகிந்த ராஜபக்ச பதவியேற்றார். பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கவை நீக்கிவிட்டு, பெரும்பான்மையில்லாமல் ராஜபக்சவைப் பிரதமராக ஆக்கியிருப்பது அரசியலமைப்புச் சிக்கலை உருவாக்கும் என்று இலங்கை அரசியல் ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்திருக்கின்றனர்.

கேரளாவுக்கு ரூ. 31,000 கோடி தேவை
வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்தைச் சீரமைக்க ரூ. 31 ஆயிரம் கோடி தேவை என்று அக்டோபர் 26 அன்று வெளியான ஐ.நா. அறிக்கை தெரிவிக்கிறது. இந்த அறிக்கையின்படி, கேரளாவின் குடியிருப்பு (ரூ. 5,443 கோடி), போக்குவரத்து உள்கட்டமைப்பு (ரூ. 10,046 கோடி), விவசாயம், பால் பண்ணை (ரூ. 4,498 கோடி) மற்ற உள்கட்டமைப்பு (ரூ. 2,246 கோடி) ஆகிய தேவைகளுக்கு மொத்தம் ரூ. 31,000 கோடி செலவாகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

மக்களைத் தோற்கடித்த மோட
சசி தரூர் எழுதிய ‘Paradoxical PM’ ('முரண்பாடான பிரதமர்') புத்தக வெளியீட்டு விழாவில் அக்டோபர் 26 அன்று பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், “பயத்துடன் வாழும் மக்கள், பொறுப்பற்ற முயற்சிகளால் வீழ்ச்சியடைந்து இருக்கும் பொருளாதாரம், வேலைவாய்ப்பின்மை, விவசாயிகளின் அவநவம்பிக்கை, பாதுகாப்பற்ற எல்லைகள், காஷ்மீர் பிரச்சினை, மேக் இன் இந்தியா, தூய்மை இந்தியா போன்ற திட்டங்களின் தோல்வி என இந்த இந்தியாவுக்குத்தான் பிரதமர் நரேந்திர மோடி தலைமை வகிக்கிறார்” என்று தெரிவித்திருக்கிறார்.

அமலாக்கத் துறை புதிய இயக்குநர்
அமலாக்கத் துறையின் புதிய இயக்குநராக மூன்று மாதங்களுக்குக் கூடுதல் பொறுப்பில் சஞ்சய் மிஸ்ரா அக்டோபர் 27 அன்று மத்திய அரசால் நியமிக்கப்பட்டிருக்கிறார். தற்போதைய அமலாக்க இயக்குநர் கர்னல் சிங் ஓய்வுபெற்றதால் புதிய இயக்குநராக சஞ்சய் மிஸ்ரா நியமிக்கப்பட்டிருக்கிறார்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 29 October 2018

பாசியும், பூஞ்சையும்!

வகைப்பாட்டியல் வல்லுனர்கள் தொடக்க காலத்தில் பாசி, பூஞ்சை இரண்டையும் ‘காலோபைட்டா’ என்ற தாவரப் பிரிவில் அடக்கினர். ராபர்ட் விடேகர் தன்னுடைய ஐந்துலக வகைப்பாட்டு முறையில் (1968-ல்) பூஞ்சைகளை தாவரம் விலங்கு இரண்டிலும் சேர்க்காமல் தனி உலகமாக வைத்தார். பாசிகள் இப்போதும் தாலோபைட்டா பிரிவிலேயே உள்ளன. பூஞ்சைகளுக்கு பச்சையம் இல்லாததால் இவற்றை பச்சையமற்ற தாவரம் என்று அழைத்தனர். பூஞ்சைகளின் தனித்தொகுதியாக இருப்பினும், இவை கைட்டின் என்ற பொருளால் ஆன செல் சுவரைப் பெற்றிருப்பதால் பள்ளிப்பாட நூல்களில் அது தாவரவியலில் இடம் பெறுகிறது. பாசியும், பூஞ்சையும் ஒரு செல் அல்லது பல செல் கொண்ட யூகேரியாட்டிக் (உண்மையான செல் உட்கரு கொண்ட) உயிரினங்களாகும். ஒரு செல் பூஞ்சைக்கு எடுத்துக்காட்டு ஈஸ்ட், பலசெல் பூஞ்சைகளாவன : பெனிசிலியம், அகாரிகஸ் ஒரு செல் பாசிக்கு உதாரணம் கிளாமிடோமோனஸ் அசிடாபுலேரியா. பல செல் பாசிகள் - லேமினேரியா, ஜெலிடியம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அணு உலைகள்

இந்திய அணுசக்தி திட்டம் மூன்று வகை அணு உலைகளை அடிப்படையாகக் கொண்டது. செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை எரிபொருளாகப் பயன்படுத்தும் முதல்வகை அணுஉலை, அழுத்த கனநீ்ர் உலை எனப்படும். இந்த உலைகள் நரோரா, கெய்கா உள்ளிட்ட பல இடங்களில் உள்ளன.

இரண்டாம் வகை புளுடோனியத்தை எரிபொருளாகப் பயன்படுத்துவது. இந்த உலை கல்பாக்கத்தில் உள்ளது. இவை ஈனுலை எனப்படும். தோரியத்தை எரிபொருளாகப் பயன்படுத்தும் மூன்றாம் வகை அணுஉலைகள் 2020-ல் பெருமளவு பயன்பாட்டுக்கு வரும் என்ற விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதன் மாதிரி அணுஉலை காமினி மற்றும் கல்பாக்கத்தில் இயங்கி வருகிறது. மூன்று வகை அணு உலைகளையும் கொண்ட அணுமின் நிலையம் என்ற சிறப்பை கல்பாக்கம் பெறுகிறது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

சீர்திருத்த கமிட்டிகள்

ஆட்சி நிர்வாக சீர்த்திருத்தங்களுக்காக உருவாக்கப்பட்ட சில கமிட்டிகளை அறியலாம்...

ஸ்வரன்சிங் கமிட்டி - அடிப்படை கடமைகள்

பசல் அலி கமிட்டி - மொழி வாரி மாநிலங்கள்

தார் கமிட்டி - மாநில எல்லை சீரமைப்பு

சர்க்காரியா கமிட்டி - மத்திய மாநில உறவுகள்

ராஜமன்னார் கமிட்டி - மத்திய மாநில உறவுகள்

நாகநாதன் கமிட்டி - மத்திய மாநில உறவுகள்

இந்திரஜித் குப்தா கமிட்டி - தேர்தல் சீர்திருத்தம்

தினேஷ் கோஸ்வாமி கமிட்டி - தேர்தல் சீர்திருத்தம்

பல்வந்த்ராய் மேத்தா கமிட்டி - மூன்றடுக்கு பஞ்சாயத்து முறை

அசோக் மேத்தா கமிட்டி - இரண்டடுக்கு பஞ்சாயத்து முறை

எல்.எம்.சின்வி கமிட்டி - பஞ்சாயத்து ராஜ் முறைக்கு அரசியலமைப்பு அங்கீகாரம்

காக்கலேகர் கமிட்டி - பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கான முதல் கமிட்டி

மண்டல் கமிட்டி - பிற்படுத்தப்பட்டோர் 27 சதவீத இட ஒதுக்கீடு

சச்சார் கமிட்டி - கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு

ரங்கநாத் மிஸ்ரா கமிட்டி - முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு

வேங்கடாசலய்யா கமிட்டி - அரசியலமைப்பு சட்ட மறு ஆய்வு

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பொது அறிவு | வினா வங்கி,

பொது அறிவு | வினா வங்கி,

1. பருவக்காற்று காடுகள் என்று அழைக்கப்படுவது எது?
2. சூரியனின் வெப்பநிலையை கணக்கிடும் விதி எது?
3. தர்ப்பூசணி எந்த வகைப் பயிராகும்?
4. அமெரிக்க அதிபரின் பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள்?
5. காந்தி ஜெயந்தியன்று பிறந்த இந்திய பிரதமர் யார்?
6. சூரிய ஒளியில் 7 நிறங்கள் இருப்பதை கண்டறிந்தவர் யார்?.
7. எடையின் சி.ஜி.எஸ். அலகு எது?
8. இந்திய பொருளாதாரம் எந்த வகையைச் சேர்ந்தது?
9. சிந்திரி பகுதி என்ன தொழிற்சாலைகளுக்கு புகழ் பெற்ற இடம்?
10. மகாவீரரின் பிறப்பிடம் எது?

விடைகள்
1. இலையுதிர் காடுகள், 2. ஸ்டீபன்சன் நான்மடி விதி, 3. சயத் பயிர், 4. நான்கு ஆண்டுகள், 5. லால்பகதூர் சாஸ்திரி, 6. ஐசக் நியூட்டன், 7. பவுண்டு, 8. கலப்பு பொருளாதாரம், 9. உரத் தொழிற்சாலைகள், 10. வைசாலி(பீகார்).

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 22 October 2018

ஓவியம்

மோனாலிசா ஓவியத்தை வரைந்தவர் லியானார்டோ டாவின்சி (இத்தாலி).

டாவின்சியின் புகழ்பெற்ற மற்றொரு ஓவியம் ‘தி லாஸ்ட் சப்பர்’.

சிஸ்டைன் சேப்பல் ஆலய உட்புற ஓவியங்களை வரைந்தவர் மைக்கேல் ஏஞ்சலோ.

மைக்கேல் ஏஞ்சலோவின் புகழ்பெற்ற ஓவியம் ‘தி லாஸ்ட் ஜட்ஜ்மென்ட்’.

கியூபிசம் என்ற ஓவிய முறையில் சிறந்து விளங்கியவர் பாப்லோ பிகாஸோ (ஸ்பெயின்).

நவீன ஓவியத்தின் தந்தை எனப்படுபவர் பிகாஸோ. அவரின் ஓவியங்களில் மிகவும் புகழ்பெற்றது குயர்னிகா (guernica)

லித்தோ பெயிண்டிங் முறையை இந்தியாவில் அறிமுகப்படுத்தியவர் ராஜா ரவி வர்மா.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முகப்பு ஓவியத்தை வரைந்தவர் நந்தலால் போஸ்.

அபேந்திரநாத் தாகூர், அம்ரிதா சர்ஜில் ஜெமினி ராய், எம்.எப்.ஹுசைன் போன்றோர் புகழ்பெற்ற இந்திய ஓவியர்கள்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஹார்மோன்கள்

ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கூட்டும் ஹார்மோன் குளுக்கோகான்.

ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது இன்சுலின்.

மனிதனின் ரத்தத்தில் உள்ள குளுக்கோசின் சராசரி அளவு 80-120 மில்லி கிராம்.

ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு 80-க்கு கீழே குறையும்போது பசி ஏற்படுகிறது.

ரத்தத்தில் உள்ள அதிகப்படியான குளுக்கோஸை கிளைகோஜனாக மாற்றுவது இன்சுலின்.

நம் உடம்பில் குளுக்கோஸ் தசை, கல்லீரலில் கிளைகோஜனாக சேமிக்கப் படுகிறது.

ரத்தத்தில் அதிக குளுக்கோஸ் உள்ள நோய்க்குப் பெயர் நீரிழிவு.

பட்டினி உண்ணா நோன்பு சமயங்களில் கிளைக்கோஜன் குளுக்கோஸாக மாறி சக்தி தருகிறது.

கிளைக்கோஜனை குளுக்கோஸாக மாற்றும் ஹார்மோன் குளுக்கோகான்.

மது அருந்துபவர்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்கக் காரணம் வாஸோபிரஸ்ஸின் சுரப்பு குறைவு.

பால் உற்பத்திக்கு காரணமான ஹார்மோன் புரோலாக்டின்.

பால் சுரப்பியிலிருந்து பால் வெளிவர காரணமான ஹார்மோன் ஆக்சிடோஸின்.

ரத்தத்தில் கால்சியம் அளவை கட்டுப்படுத்துவது கால்சிடோனின்.

1, 25 டைஹைட்ராக்சி கோலி கால்சிபெரல் என்பது ‘வைட்டமின்-டி’யின் ஹார்மோன் வடிவமாகும்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

காப்பியங்கள்

சோழர்கள் ஆட்சிக்காலம் காப்பிய காலம் என போற்றப்படுகிறது.

ஐம்பெருங்காப்பியங்களாவன: சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி.

நாக குமார காவியம், யசோதர காவியம், உதயண குமார காவியம், சூளாமணி, நீலகேசி ஆகியவை ஐஞ்சிறுகாப்பியங்கள்.

திருத்தக்க தேவர் எழுதிய விருத்தக் காப்பியம், சீவகசிந்தாமணி.

கம்பர் எழுதிய விருத்தக் காப்பியம் கம்பராமாயணம்.

கம்பர் தான் எழுதிய ராமாயணத்திற்கு இட்டபெயர் ராமாவதாரம்.

கம்பராமாயணம் 6 காண்டங்களைக் கொண்டது.

கம்பரின் பிறநூல்கள், சடகோபரந்தாதி, ஏர் எழுபது, திருக்கை வழக்கம்.

புகழேந்திப்புலவரின் வெண்பாக் காப்பியம் நளவெண்பா.

குண்டலகேசியை எழுதியவர் நாதகுத்தனார்.

திருத்தொண்டர் புராணம் எழுதியவர் சேக்கிழார்.

திருத்தொண்டர் புராணத்தி்ன் வேறுபெயர் பெரிய புராணம்.

பெரிய புராணத்தின் கதைத் தலைவர் சுந்தரர்.

63 நாயன்மார்களின் வரலாறு பெரிய புராணம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பொது அறிவு | வினா வங்கி,

வினா வங்கி


1. ஒரு பொருளிலுள்ள பருப்பொருளின் அளவு எப்படி அழைக்கப்படுகிறது?

2. ஐரோப்பிய நாடுகள் எந்த ஒப்பந்தப்படி தங்களுக்கு ஒரே நாணய முறையை அறிமுகம் செய்தன?.

3. பஞ்சாயத்துராஜ் சட்டம் அமலாக்கப்பட்டபோது பிரதமராக இருந்தவர் யார்?

4. ராஜா செல்லையா கமிட்டி எதற்காக உருவாக்கப்பட்ட கமிட்டியாகும்?

5. கினியாவில் காணப்படும் பிரபலமான புல்வெளி எது?.

6. பற்பசையில் இருக்கும் வேதிச் சேர்மம் எது?.

7. இந்தியாவின் ஆபரணம் எனப்படுவது எது?

8. வானிலை மாறுபாடுகள் நிகழும் வளிமண்டல அடுக்கு எது?.

9. குஷாணர்களின் இரண்டாவது தலைநகரம் எது?

10. செல்லின் கட்டுப்பாட்டு மையம் எது?

11. இன்குலாப் ஜிந்தாபாத் என்று முழங்கியவர் யார்?

12. தியசாபிகல் சொசைட்டியை நிறுவியவர்கள் யார்?.

13. வாயுவானது நகரும்போது எப்படி அழைக்கப்படுகிறது?

14. இலங்கை ஆட்சிப்பகுதியை மீண்டும் இலங்கை மன்னனிடமே வழங்கிய சோழ மன்னன் யார்?

15. Tb என்பது எந்த தனிமத்தின் குறியீடு?

விடை–கள்

1. நிறை, 2. மாஸ்ட்ரிக் ஒப்பந்தம், 3. பி.வி.நரசிம்மராவ், 4. வரிசீர்திருத்தம், 5. லானாஸ், 6. கால்சியம் கார்பனேட், 7. மணிப்பூர், 8. டிரபோஸ்பியர், 9. மதுரா, 10. உட்கரு, 11. பகத்சிங், 12. ஜெனரல் ஆல்காட், மேடம் பிளாவெட்ஸ்கி, 13. காற்று, 14. வீரராஜேந்திரன், 15. டெர்பியம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 16 October 2018

CURRENT AFFAIRS in Tamil - 16.10.2018

தமிழக முதல்வர் மீது சிபிஐ விசாரணை

தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது நெடுஞ்சாலை துறை டெண்டர் ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு சென்னை உயர் நீதிமன்றம் அக்டோபர் 12 அன்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது. திமுக தொடர்ந்த இந்த வழக்கில், லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநரகம், முதல்வர் மீதான முறைகேடு புகார்களுக்கு முகாந்திரம் இல்லை என்று அக்டோபர் 9 அன்று தெரிவித்த நிலையில், இந்த வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஊழல்: 3-வது இடத்தில் தமிழ்நாடு

நாட்டில் ஊழல் நிறைந்த மாநிலங்களில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் இருப்பதாக ‘டிரான்ஸ்பரென்ஸி இன்டர்நேஷனல்’ அக்டோபர் 11 அன்று வெளியிட்ட ‘இந்திய ஊழல் ஆய்வு 2018’ அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த ஆய்வில், நாட்டின் ஊழல் நிறைந்த மாநிலங்களில் முதல் இடத்தில் உத்திரபிரதேசம், இரண்டாவது இடத்தில் பஞ்சாப்பும் இடம்பிடித்திருக்கின்றன.

பரிதி இளம்வழுதி மறைவு

முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி உடல்நலக் குறைவால் சென்னையில் அக்டோபர் 13 அன்று காலமானார். அவர் ஆறு முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். 1996 -2001-ம் ஆண்டு வரை அவர் தமிழ்நாடு சட்டப்பேரவையில் துணை சபாநாயகராகப் பதவிவகித்திருக்கிறார். 2006 2011-ம் ஆண்டு வரை, திமுக ஆட்சிக் காலத்தில் அவர் செய்தி, விளம்பரத் துறை அமைச்சராகப் பதவிவகித்திருக்கிறார்.

தூய்மையான காற்றுத் திட்டம்

நாட்டின் 102 நகரங்கள் தேசிய காற்றுத் தரத்தைப் பேணவில்லை என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அக்டோபர் 11 அன்று தெரிவித்திருக்கிறது. நாட்டின் 23 மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் இரண்டு மாதங்களுக்குள் தூய்மையான காற்றுத் தரத்தை உருவாக்குவதற்கான செயல் திட்டத்தை வடிவமைக்குமாறு தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவுறுத்தியிருக்கிறது.

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இந்தியா

ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் உறுப்பினர் தேர்வில், ஆசிய பசிபிக் பிரிவில் போட்டியிட்ட இந்தியா 193 வாக்குகளில் 188 வாக்குகள் பெற்று அக்டோபர் 12 அன்று மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியால், 1 ஜனவரி, 2019 முதல் மூன்று ஆண்டுகளுக்கு இந்தியா ஐ.நா. மனித உரிமை கவுன்சில் உறுப்பினராகச் செயல்படும். இந்தியாவுடன் ஆசிய பசிபிக் பிரிவில் பஹ்ரைன், வங்கதேசம், ஃபிஜி, பிலிப்பைன்ஸ் ஆகிய ஐந்து நாடுகளும் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலுக்குத் தேர்வுசெய்யப்பட்டுள்ளன.

புதிய சொலிசிட்டர் ஜெனரல்

இந்தியாவின் புதிய சொலிசிட்டர் ஜெனரலாக துஷார் மேத்தா அக்டோபர் 10 அன்று நியமிக்கப்பட்டார். சொலிசிட்டர் ஜெனரலாக இருந்த ரஞ்சித் குமார் கடந்த அக்டோபரில் ராஜினாமா செய்ததிலிருந்து அந்தப் பதவிக்கு யாரும் நியமிக்கப்படாமல் இருந்துவந்தது. தற்போது கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக இருந்த துஷார் மேத்தா அந்தப் பதவியில் நியமிக்கப்பட்டிருக்கிறார். அவரது பதவிகாலம் 30, ஜூன், 2020 வரை நீடிக்கிறது.

தகவல் அறியும் உரிமை: 6-வது இடம்

தகவல் அறியும் உரிமைச் சட்டங்களில் (RTI) இந்தியா 6-வது இடத்தில் இருப்பதாக 123 நாடுகளில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘சட்ட, ஜனநாயக மையம்’, ‘ஆக்ஸஸ் இன்ஃபோ ஐரோப்பா’ ஆகிய இரண்டு அமைப்புகளும் இணைந்து இந்த ஆய்வை நடத்தியிருக்கின்றன. 2011-ம் ஆண்டில் தகவல் அறியும் உரிமைச் சட்டங்களில் இரண்டாவது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 6-வது இடத்துக்குத் தள்ளப்பட்டிருப்பது இந்த ஆய்வில் தெரியவந்திருக்கிறது.

ராஜஸ்தானில் ஜிகா வைரஸ்

ராஜஸ்தானில் ஜிகா வைரஸால் 22 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் அக்டோபர் 9 அன்று தெரிவித்திருக்கிறது. இந்திய மருத்துவ கவுன்சில் கண்காணிப்பு அமைப்பின் மூலம் ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. ஜிகா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும் இதுவரை 86 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

மிக புதுமையான பல்கலைக்கழகம்

2018-ம் ஆண்டில், உலகின் மிக புதுமையான பல்கலைக்கழகமாக ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகம், ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் அக்டோபர் 11 அன்று வெளியிட்ட தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இந்த பல்கலைக்கழகப் பட்டியல் உலகம் முழுவதும் இருந்து 100 புதுமையாகச் செயல்படும் பல்கலைக்கழகங்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் ஓர் இந்திய பல்கலைக்கழகம்கூட இடம்பெறவில்லை.

பேரிடர்களால் பெரும் இழப்பு

இயற்கை பேரிடர்களால் கடந்த இருபது ஆண்டுகளில் இந்தியாவுக்கு 7950 கோடி அமெரிக்க டாலர்கள் பொருளாதார இழப்பு ஏற்பட்டிருப்பதாக அக்டோபர் 12 அன்று ஐ.நா. வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச பேரிடர் குறைப்பு நாளையொட்டி (அக்டோபர் 13) இந்த அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. பேரிடர்களால் பொருளாதார இழப்பைச் சந்தித்த நாடுகளில் அமெரிக்கா, சீனா, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகள் முதல் நான்கு இடங்களில் இருக்கின்றன.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 15 October 2018

முத்தடுப்பு ஊசி

பிறந்த குழந்தைகளுக்குப் போடப்படும் தடுப்பூசிகளில் ஒன்று முத்தடுப்பூசி (triple vaccine). குழந்தை பிறந்த 6,10,14-வது வாரத்தில் முத்தடுப்பு ஊசி போடப்படுகிறது. கக்குவான் இருமல், டெட்டனஸ், டிப்தீரியா ஆகிய நோய்களை தடுப்பதற்காக இந்த ஊசி போடப்படும். பார்டெல்லா பெர்டூசிஸ் என்ற பாக்டீரியா கக்குவான் இருமலை பரப்பும் கிருமியாகும். கிளாஸ்டிரிடியம் டெட்டனஸ் பாக்டீரியா பரப்பும் வியாதி டெட்டனஸ், கொர்னிபாக்டீரியம் டிப்தீரியே பரப்பும் வியாதி டிப்தீரியா.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

வானமும், கடலும்...

வானம் மற்றும் கடல் பயணங்களுக்கான சில கருவிகளை அறிவோம்...

* வானில் பறக்கும் விமானங்களை கண்டறிய உதவுவது ரேடார்.

* விமானம் பறக்கும் உயரத்தை அறிய உதவுவது ஆல்டி மீட்டர்.

* விமான இயந்திரங்களின் நுணுக்கமாக பதிவு செய்து விபத் தின் காரணத்தை அறிய உதவுவது பிளாக் பாக்ஸ்.

* கப்பல் செல்லும் தீர்க்க ரேகையையும், நேரத்தையும் அறிய உதவுவது குரோனோமீட்டர்.

* கப்பல் செல்லும் திசையை அறிய உதவுவது மரைனர்ஸ் காம்பஸ்.

* நீர்மூழ்கி கப்பலில் இருந்து நீரின் மேல்மட்டத்தை பார்க்க உத வுவது பெரிஸ்கோப்.

* கப்பல் இயந்திரங்களின் செயல்பாடுகளை பதிவு செய்ய உதவுவது வாயேஜ் ரெக்கார்டர்.

* கடலின் ஆழத்தை அளக்க உதவுவது பாதம் மீட்டர்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

சிற்றிலக்கியங்கள்

நாயக்கர்கள் ஆட்சிக் காலம் சிற்றிலக்கிய காலம்.

தமிழில் 96 வகை சிற்றிலக்கியங்கள் உண்டு.

பரணி, தூது, உலா, அந்தாதி, கலம்பகம், பிள்ளைத்தமிழ், கோவை, பள்ளு, குறவஞ்சி ஆகியவை முக்கிய சிற்றிலக்கிய வகைகள்.

போரில் ஆயிரம் யானைகளை கொன்றவனை போற்றிப் பாடப்படுவது பரணி.

தோற்றுப்போன நாட்டின் பெயரில் பரணி பாடப்படுகிறது. திராவிட பரணி இந்த இலக்கண முறைக்கு விதிவிலக்காக, திராவிட நாட்டின் வெற்றியை பாடுவதாக அமைந்துள்ளது.

தமிழ் பரணி நூல்களில் புகழ்பெற்றது கலிங்கத்துப் பரணி. இதை எழுதியவர் ஜெயங்கொண்டார்.

குலோத்துங்க சோழனின் தளபதியான கருணாகர தொண்டைமான் கலிங்கத்தை வெற்றி கொண்டதை சிறப்பித்துப் பாடுகிறது கலிங்கத்துப்பரணி.

குறவஞ்சியில் புகழ்பெற்றது திருக்குற்றால குறவஞ்சி. இதை திரிகூடப்பராசப்ப கவிராயர் பாடினார்.

கடவுளை அல்லது பெரியோரை குழந்தையாக பாவித்து பாடும் இலக்கியம் பிள்ளைத்தமிழ். பிள்ளைத் தமிழ் ஆண்பால் பிள்ளைத்தமிழ் பெண்பால் பிள்ளைத் தமிழ் என 2 வகைப்படுகிறது.

10 பருவங்களில் பிள்ளைத்தமிழ் பாடப்படும். காப்பு, தால், செங்கீரை, அம்புலி, வருகை, முத்தம், சப்பாணி என ஏழு பருவங்கள் இருபால் பிள்ளைத் தமிழுக்கும் பொதுவானவை.

சிற்றில், சிறுதேர், சிறுபறை என்பன ஆண்பால் பிள்ளைத்தமிழுக்கு உரிய மூன்று சிறப்பு பருவங்கள். கழங்கு, அம்மானை, ஊசல் போன்றவை பெண்பால் பிள்ளைத் தமிழுக்கு உரிய சிறப்பு பருவங்கள்.

முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் மற்றும் மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ் போன்றவை புகழ்பெற்ற பிள்ளைத்தமிழ் நூல்களாகும்.

18 உறுப்புகளால் பாடப்படும் ஒரு சிற்றிலக்கியம் கலம்பகம். இளஞ் சூரியார், முதுசூரியார் எனும் இரட்டைப்புலவர்கள் கலம்பகம் பாடுவதில் புகழ்பெற்றவர்கள். நந்திக்கலம்பகம் புகழ்பெற்ற கலம்பக நூலாகும். இதன் ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை.

தலைவன், தலைவி இருவரும் தூதனுப்பி பாடும் சிற்றிலக்கியம் தூது. அன்னம்,கிளி, மயில், மேகம், நெஞ்சு, பூவை, பாங்கி, வண்டு, குயில், தென்றல் ஆகியன தூது விடும் பொருட்களாக பாடப்பட்டுள்ளன. அழகர் கிள்ளைவிடு தூது, காக்கைவிடு தூது போன்றவை புகழ்பெற்றவை.

வீதிஉலா வரும் அரசரை கண்டு மகளிர் மயங்குவதாக பாடப்படுவது உலா.

பள்ளு வகை சிற்றிலக்கியத்திற்கு சிறந்த நூல் முக்கூடற்பள்ளு.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பொது அறிவு | வினா வங்கி,

வினா வங்கி


1. அரசியல் நிர்ணய சபையில் தமிழை இந்தியாவின் தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும் என்று வாதிட்டவர் யார்?

2. கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது பாடல் எந்த வரலாற்று நிகழ்வில் பாடப்பட்டது?

3. மரபணுவின் திடீர் மாற்றம் யாரால் கண்டறியப்பட்டது?

4. தலைமைச் சுரப்பி எனப்படுவது எது?

5. யானைக் கூட்டம் எப்படி அழைக்கப்படுகிறது?

6. முதுகு எலும்பு உயிரிகளின் சிறுநீர் மஞ்சள் நிறமாக இருக்க காரணம் யூரிக் அமிலம் என்பது சரியா?

7. ஒரு பண்பு கலப்பு சோதனையின் மரபுத் தோற்ற விகிதம் என்ன?

8. ஒரு செல் பூஞ்சைக்கு எடுத்துக்காட்டு எது?

9. பிளீச்சிங் பவுடரின் வேதிப் பெயர் என்ன?

10. அழுத்தம் அதிகரிக்கும்போது நீரின் கொதிநிலை உயருமா, குறையுமா?

விடைகள்

1. காயிதே மில்லத், 2. வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரக ஊர்வலத்தில், 3. ஹீகோ தே விரிஸ், 4. பிட்யூட்டரி சுரப்பி, 5. பரேடு, 6. இல்லை, 7. 1:2:1, 8. ஈஸ்ட், 9. கால்சியம் குளோரோ ஹைப்போ குளோரைட், 10. உயரும்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

சென்னை சுதேசி சங்கம்

சென்னைவாசிகள் சங்கம் அல்லது சென்னை சுதேசி சங்கம் எனப்படும் ‘மெட்ராஸ் நேட்டிவ் அசோசியேசன்’ 1852-ம் ஆண்டு பிப்ரவரி 26-ம்தேதி தொடங்கப்பட்டது. சி.ஏகாம்பர முதலியார் இதன் தலைவர். தென்னிந்தியாவில் தோன்றிய மேற்கத்திய முறையிலான அரசியல் சார்ந்த முதல் அமைப்பு இதுவே. வருவாய்த்துறை மற்றும் பிற துறை அதிகாரிகளின் செயல்பாடுகள் பற்றி இது விமர்சித்தது. 1868 வரை தீவிரமாக செயல்பட்டது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 9 October 2018

CURRENT AFFAIRS 09.10.18

புதிய தலைமை நீதிபதி
உச்ச நீதிமன்றத்தின் 46-வது தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகோய் அக்டோபர் 3 அன்று பதவியேற்றார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவருக்குப் பதவி பிரமாணம் செய்துவைத்தார். அவரின் பதவிகாலம் 2019, நவம்பர் 17 அன்று நிறைவடைகிறது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமிலிருந்து தலைமை நீதிபதியாகும் முதல் நபர் இவர். நாட்டின் கீழ் நீதிமன்றங்களில் நிரப்பப்படாமல் உள்ள 5000 நீதிபதிகளுக்கான இடங்கள் முன்னுரிமை கொடுத்து நிரப்பப்படும் என்று அவர் தெரிவித்தார்.

ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 74-க்குக் கீழே முதன்முறையாக அக்டோபர் 5 அன்று வீழ்ச்சியடைந்தது. ரிசர்வ் வங்கி தன் பணக் கொள்கையை அறிவித்தவுடன், சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 74.20 ஆக வீழ்ச்சியடைந்தது. கடந்த மூன்று மாதங்களாகவே ரூபாய் மதிப்பு பல்வேறு காரணிகளால் தொடர்ந்து வீழ்ச்சியடைந்துவருகிறது.

இந்தியா-ரஷ்யா ஏவுகணை ஒப்பந்தம்

இந்தியா-ரஷ்யா இடையே 543 கோடி அமெரிக்க டாலர் (ரூ. 40 ஆயிரம் கோடி) மதிப்பிலான ஐந்து எஸ்-400 ஏவுகணைகள் வாங்குவதற்கான ஒப்பந்தம் அக்டோபர் 5 அன்று டெல்லியில் கையெழுத்தானது. ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், இந்திய பிரதமர் நரேந்திர மோடி இடையே நடைபெற்ற சந்திப்பின்போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

பெட்ரோல் விலை ரூ. 2.50 குறைப்பு

பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ. 2.50 குறைக்கப்படுவதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அக்டோபர் 4 அன்று அறிவித்தார். மாநில அரசுகளை வாட் வரியைக் குறைக்குமாறு அவர் அறிவுறுத்தினார். இந்த அறிவிப்புக்குப் பிறகு, நாட்டின் 14 மாநிலங்களில் வாட் வரிக் குறைக்கப்பட்டதால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5 குறைந்திருக்கிறது.

பூகம்பம், சுனாமிக்கு 1,550 பேர் பலி

இந்தோனேசியாவின் சுலாவேசி தீவில் செப்டம்பர் 28 அன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் (ரிக்டர் அளவுகோலில் 7.5) தாக்கியதால் ஏற்பட்ட சுனாமியில் 1,558 பேர் பலியானதாக இந்தோனேசிய அரசு தெரிவித்தது. இந்த நிலநடுக்கும், சுனாமியால் 70,000 வீடுகள் சிதைந்திருக்கின்றன. அந்நாட்டின் பேரிடர் நிர்வாகம், இந்த பூகம்பத்தால் 2 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கிறது.

ஹைப்பர்லூப் பயணிகள் கேப்ஸ்யூல்

உலகின் முதல் ‘ஹைப்பர்லூப் பயணிகள் கேப்ஸ்யூலை’ அமெரிக்காவின் ஹைப்பர்லூப் போக்குவரத்துத் தொழில்நுட்ப நிறுவனம் ஸ்பெயினில் அக்டோபர் 3 அன்று அறிமுகம் செய்திருக்கிறது. 2019-ம் ஆண்டிலிருந்து இந்த கேப்ஸ்யூல் பயன்பாட்டுக்கு வரும் என்று அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது. ‘குவின்டெரோ ஒன்’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்த கேப்ஸ்யூல் ஒருமணி நேரத்தில் 700 மைல்களைக் கடக்கும் வேகத்துடன் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

கிர் பூங்காவில் 23 சிங்கங்கள் பலி

குஜராத் கிர் தேசியப் பூங்காவில் கடந்த மாதத்தில் 23 ஆசிய சிங்கங்கள் மர்ம வைரஸ் தாக்குதலால் பலியாகியிருக்கின்றன. இதனால் குஜராத் வனத் துறை, கிர் தேசிய பூங்காவிலிருக்கும் சிங்கங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. கிர் தேசிய பூங்காவில் 600 ஆசிய சிங்கங்கள் வசித்து வந்ததாக அம்மாநில வனத் துறை தெரிவித்திருக்கிறது.

மின் வழிக் கட்டணம்: இந்தியாவுக்கு 28-வது இடம்

உலக அளவில் மின் வழிக் கட்டணங்களை (e-Payments) நடைமுறைப் படுத்தும் அரசுகளில், 2018-ம் இந்திய அரசு 28-வது இடத்தில் இருப்பதாக எகனாமிக் இன்டெலிஜென்ஸ் யூனிட் அக்டோபர் 3 அன்று தெரிவித்திருக்கிறது. 73 நாடுகள் இடம்பெற்றிருந்த ‘Government e-Payments Adoption Ranking’ என்ற தரவரிசைப் பட்டியலில் நார்வே அரசு முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது.

ரயில் நிலைய மறுவளர்ச்சித் திட்டங்கள்

ரயில் நிலையங்களுக்கான மறுவளர்ச்சித் திட்டங்களை உருவாக்குவதற்கு மத்திய அமைச்சரவை அக்டோபர் 3 அன்று ஒப்புதல் வழங்கியிருக் கிறது. ரயில் நிலையங்களில் வணிக வளர்ச்சியை உருவாக்கும் நோக்கத்தில் இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்பட இருக்கின்றன. நாட்டின் 600 ரயில் நிலையங்களில் நிறைவேற்றப்படவிருக்கும் மறுவளர்ச்சித் திட்டங்களுக்கு ரூ. 1 லட்சம் கோடி செலவாகும் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது.

முதல் சர்வதேச சூரிய ஆற்றல் கூட்டணி

சர்வதேச சூரிய ஆற்றல் கூட்டணியின் முதல் சபையைப் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் அக்டோபர் 2 அன்று தொடங்கிவைத்தார். இந்தத் தொடக்க விழாவில் ஐ.நா.வின் பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் கலந்துகொண்டார். இந்தச் சூரிய ஆற்றல் கூட்டணி வருங்காலத்தில் சர்வதேச ஆற்றல் வழங்குநரான ஒபெக் (Organization of the Petroleum Exporting Countries) அமைப்புக்கு மாற்றாக அமையும் என்று இந்த விழாவில் மோடி தெரிவித்தார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அமெரிக்காவைச் சேர்ந்த 2 பேருக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு

அமெரிக்கர்கள் வில்லியம் நார் தாஸ் மற்றும் பால் எம் ரோமர் ஆகியோர், இந்த ஆண்டு பொருளா தாரத்துக்கான நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ‘பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு - 2018’ஐ சுவீடன் அகா டமி நேற்று ஸ்டாக்ஹோம் நகரில் அறிவித்தது. அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தில் படித்த வில்லியம் நார்தாஸ் மற்றும் நியூ யார்க் பல்கலைக்கழக ஸ்டெர்ன் ஸ்கூல் ஆப் பிஸினஸை சேர்ந்த பால் எம்.ரோமர் ஆகிய 2 பேர் இந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். நார்தாஸ் மற்றும் ரோமர் ஆகிய இருவரும் சர்வதேச பொருளாதாரத் தில் நீடித்த வளர்ச்சிக்கான தொழில்நுட்ப வழிமுறைகள் மற்றும் உலக மக்களின் பொருளாதார நலனுக்கான வழிமுறைகள் குறித்து விரிவான ஆய்வு நடத்தி உள்ள னர். மற்றும் பருவநிலை மாற்றங் களால் பொருளாதாரத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், சமூகத்துக் கும் இயற்கைக்கும் உள்ள தொடர்பு கள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். சர்வதேச அளவில் சிறந்த பொருளாதார வளர்ச்சியை, பொரு ளாதார நிபுணர்கள் எப்படி முன் னெடுத்து செல்வது என்பது குறித்து பால் ரோமர் விரிவாக ஆராய்ந்து சில வழிமுறைகளை முன்மொழிந்துள்ளார். அதேபோல், பருவ நிலை மாறுபாட்டுப் பிரச்சினைக்கு தீர்வு காண கொள்கை வகுப்பவர்கள், உண்மையான பாதிப்புகளை அறி யாமல் உள்ளது குறித்து நார்தாஸ் மிக விரிவாக ஆராய்ந்து ஆதாரப் பூர்வமாக விளக்கி உள்ளார். பூமி வெப்பமயமாவதால், பருவநிலை மாற்றங்களால் பொருளாதாரம் எப்படி எல்லாம் பாதிக்கப்படுகிறது என்பதை ஆராய்ந்து அறிக்கை வெளியிட்டுள்ளார். பிரச்சினைக்களுக்கான உறுதியான பதில்கள் எதையும் இவர்கள் சுட்டிக்காட்டவில்லை. எனி னும், இவர்களுடைய ஆய்வுகள் பிரச்சினைகளுக்கு எப்படி தீர்வு காண்பது என்ற கேள்விக்கு மிகவும் ஒத்துப் போகும் பதில்களாக அமைந்துள்ளன. இந்த நோபல் பரிசுடன் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவித்து முடிக்கப்பட்டுவிட்டன. கடந்த 1901-ம் ஆண்டு முதல் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு மட்டும் கடந்த 1969-ம் ஆண்டுதான் புதிதாக சேர்க்கப் பட்டது. இந்த விருதையும் ஆல்பிரட் நோபல் நினைவாக சுவீடன் மத்திய வங்கி உருவாக்கியது. ஆனால், நோபல் பரிசுக்கான தேர்வு குழுவில், பாலியல் சர்ச்சை ஏற்பட்டதால் இலக்கியத்துக்கான நோபல் பரிசு மட்டும் முதல் முறை யாக இந்த ஆண்டு அறிவிக்கப் படவில்லை. இந்த ஆண்டுக்கான விருது, அடுத்த ஆண்டு விருதுடன் சேர்த்து அறிவிக்கப்படும் என்று சுவீடன் அகாடமி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 8 October 2018

வேதங்களும், ஆகமங்களும்...!

சம்கிதை, பிரமாணம், ஆரண்யகம், உபநிடதம் என 4 வகை நூல்களால் வேதம் விளக்கப்படுகிறது.

சம்கிதை துதிப்பாடல்கள் கொண்டது.

பிரமாணங்கள் கர்ம மார்க்கத்தை போதிக்கின்றன.

பிரமாணங்களின் நிறைவுப்பகுதியாக அமைவது ஆரண்யகங்கள்.

உபநிடதங்கள் ஞான மார்க்கத்தை போதிக்கின்றன.

ஆரண்யகங்கள் ஞான, கர்ம மார்க்கங்களுக்கு இணைப்பு பாலங்களாக அமைகின்றன.

உபநிடதங்களை வேதாந்தம் எனவும் அழைக்கலாம்.

வேதாந்தம் என்பதற்கு வேதத்தின் நிறைவுப்பகுதி என்பது பொருள்.

உபநிடதம் என்பதற்கு குருவின் அருகில் அமர்ந்து பெறும் ஞானம் என்பது பொருள்.

சங்கரர் 10 உபநிடதங்களுக்கு உரை எழுதி உள்ளார்.

சத்யமேவ ஜெயதே (வாய்மையே வெல்லும்) முண்டக உபநிடதத்தில் இடம் பெற்றுள்ளது.

எழுமின், விழுமின் எண்ணியாங்கெய்த உழைமின் என்ற கருத்து சதா உபநிடதத்தில் இடம் பெற்றுள்ளது.

எமதர்மனுக்கும், நஸிகேதனுக்கும் நடந்த உரையாடலாக அமையும் சண்டோக்ய உபநிடதத்தில் மரணத்துக்குப்பின் மனிதர்நிலை விளக்கப்படுகிறது.

ஆலய நிர்மாணம், ஆலய அமைப்பு, பூைஜ முறைகள் பற்றி விளக்கும் நூல்கள் ஆகமங்கள்.

ஆகமம் என்பதற்கு ஆ- ஆன்மாக்களின், கமம் - பாசம் நீக்கி முக்தி அருள்வது என்பது பொருள்.

சைவ ஆகமங்களின் எண்ணிக்கை 28.

சைவ ஆகமங்கள் சிவனின் பஞ்ச முகங்களில் இருந்து தோன்றின என்பவர்.

காரண ஆகமம் ஆகமங்களின் தோற்றம் பற்றிக் கூறுகிறது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

டி.என்.ஏ. ரேகைப்பதிவு

ஒவ்வொரு நபருக்கும் டி.என்.ஏ.யின் ATG=C, இணைகார வரிசை தனித்துவமான ஒழுங்கில் உள்ளது.

தனிநபரின் டி.என்.ஏ. அமைப்புக்கு டி.என்.ஏ. ரேகைப்பதிவு என்று பெயர்.

டி.என்.ஏ. ரேகைப்பதிவு குற்றவாளிகளைக் கண்டறியப் பயன்படுகிறது.

டி.என்.ஏ. ரேகைப்பதிவு தொழில்நுட்பத்தை கண்டறிந்தவர் அலீஸ் ஜெப்ரி.

ஒரு குறிப்பிட்ட டி.என்.ஏ. மாதிரியை கொண்டு அதன் டி.என்.ஏ. நகல்களை உருவாக்க உதவுவது பாலிமரேஸ் சங்கிலித் தொடர் வினை.

பாலிமரேஸ் சங்கிலித் தொடர்வினையைக் கண்டறிந்தவர் கேரி முல்லிஸ்.

ஓர் உயிரினத்தின் டி.என்.ஏ.வை மற்றொரு உயிரினத்துக்கு மாற்றும் தொழில்நுட்பத்துக்கு டி.என்.ஏ. மாற்றிணைவு தொழில்நுட்பம் என்று பெயர்.

இன்சுலின் உற்பத்திக்கு காரணமான டி.என்.ஏ.வை. இ.கோலி பாக்டீரியாவின் டி.என்.ஏ.வில் பொருத்தி ஹுமுலின் ஹார்மோன் உற்பத்தி செய்யப்பட்டு டிரான்ஸ்ஜெனிக் இ.கோலி பாக்டீரியா உருவாக்கப்பட்டது.

மரபு பொறியியல் முறையில் உருவாக்கப்பட்ட முதல் ஹார்மோன் ஹுமுலின்.

பால் வோர்ம் எனப்படும் தோல்புழுவை கொல்லும் பி.டி. பாக்டீரியல் டி.என்.ஏ.வை பருத்தி விதையில் பொருத்தி, பால் ஓர்ம் தாக்குதலுக்கு எதிர்ப்புத்திறன் பெற்ற பி.டி.பருத்தி தயாரிக்கப்பட்டது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பொது அறிவு | வினா வங்கி,

1. இதயத்துடிப்பு தொடங்கும் இடம் எப்படி அழைக்கப்படுகிறது?

2. மவுஸ் அசைவை குறிக்கும் அலகு எது?

3. தங்கம் இருக்கும் இடத்தை காட்டிக் கொடுக்கும் தாவரம் எது?.

4. சூரிய ஒளி 7 வண்ணங்களால் ஆனது என்ற உண்மையை முதலில் கூறியவர் யார்?

5. கிரிக்கெட் மற்றும் ரக்பி விளையாட்டை தேசிய விளையாட்டுகளாக கொண்ட நாடு எது?

6. புதுமுக இயக்குனரின் முதல் சிறந்த படத்துக்கான தேசிய விருது எது?

7. ஐ.நா. சுற்றுச்சூழல் திட்ட அமைப்பின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?

8. ‘ஸ்பீஷிஸ் பிளான்டாரம்’ என்ற நூலை எழுதியவர் யார்?.

9. டி.என்.ஏ.வே மரபு பொருள் என்பதை கண்டறிந்தவர் யார்?

10. ஒரு காரட் வைரம் என்பது எவ்வளவு மில்லிகிராம்?

விடைகள் :

1. எஸ்.ஏ. முடிச்சு அல்லது பேஸ்மேக்கர், 2. மிக்கி, 3. ஈகுசீட்டம் ஆர்வன்சிஸ், 4. நியூட்டன், 5. இங்கிலாந்து, 6. இந்திராகாந்தி விருது, 7. நைரோபி, 8. கரோலஸ் லின்னேயஸ், 9. ஏவ்ரி, 10. 200 மி.கி.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

உலக புகழ்பெற்ற ஐன்ஸ்டீன்


ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சார்பியல் கோட்பாட்டை உலகுக்கு அளித்த புகழ்பெற்ற அறிவியலாளர். அவரைப் பற்றிய அரிய சுவாரசியங்கள்..

ஜெர்மனியில் யூதக் குடும்பத்தில் பிறந்த இவர், படிப்பில் மிகவும் மந்தமாக இருந்தவர் என்று கூறப்படுகிறது.

இளம் வயதில் வயலின் கற்றார். காம்பஸ் கருவியை ஓயாமல் ஆராய்ந்து கொண்டிருந்தார்.

எளிமையானவர். நகைச்சுவை உணர்வு கொண்டவர்.

கணிதம், அறிவியலில் இவருக்கு அளவில்லா ஆர்வம் உண்டு.

இயந்திரவியல், அணுக்கள், ஒளிமின் விளைவு, ஈர்ப்பு விசை உள்ளிட்ட பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். தன் ஆராய்ச்சி தவிர வேறு எதிலும் கவனம் செலுத்த மாட்டார். சில சமயங்களில் தன் வீட்டு முகவரியையேகூட மறந்துவிடுவாராம்.

நியூட்டனின் விதிகளை ஆராய்ந்தபோதுதான், இவரது உலகப் புகழ்பெற்ற ‘சார்பியல் கோட்பாடு’ பிறந்தது.

அந்த கோட்பாடு அறிவியல் உலகில் மாபெரும் புரட்சியை ஏற் படுத்தியது. பல பல்கலைக்கழகங்கள் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கின.

ஒளிமின் விளைவைக் கண்டறிந்து விளக்கியதற்காகவும், 1921-ல் இவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

பல்வேறு நூல்களை எழுதி உள்ளார். ‘அறிவியல் கண்டுபிடிப்புகள் அனைத்தும் மனிதகுல நன்மைக்கே பயன்பட வேண்டும்’ என்று உறுதியாகக் கூறினார்.

மகாத்மா காந்தி மீது மிகுந்த, மரியாதை கொண்டவர். ‘‘நம் காலத்து மனிதர்களில் உலகிலேயே தலைசிறந்த மாமனிதர் காந்தி’’ என்று புகழ்ந்துள்ளார்.

‘விடைபெறும் நேரம் வந்துவிட்டது, கண்ணியமாக விதியை எதிர்கொள்ள விரும்புகிறேன்’ என்று தான் இறக்கும் முன்பு கூறினார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday, 6 October 2018

இராக் மனித உரிமை போராளி முராட், காங்கோ டாக்டர் முக்வேஜாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு

போரின்போது ஆயுதமாக கையாளப் படும் பாலியல் வன்கொடுமைக்கு எதிராகப் போராடும், இராக்கைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் நாடியா முராட், காங்கோவைச் சேர்ந்த மனித உரிமை ஆர் வலரும், டாக்டருமான டெனிஸ் முக் வேஜா ஆகியோர் 2018-ம் ஆண்டுக் கான அமைதி நோபல் பரிசைப் பெறு கிறார்கள். நார்வோ தலைநகர் ஆஸ்லோவில் அமைதிப் பரிசு நேற்று அறிவிக்கப்பட் டது. இதுகுறித்து நோபல் பரிசு கமிட்டி தலைவர் பெரிட் ரீஸ்-ஆண்டர்சன் நேற்று கூறியதாவது: பெண்களுக்கு அடிப்படை உரிமைகளும், பாதுகாப்பு உரிமைகளும் வழங்கப்படவேண்டும். போரில் பெண்கள் பாதுகாக்கப்பட்டால் மட்டுமே அமைதியான உலகம் என்ற இலக்கு சாத்தியமாகும். பாலியல் வன்கொடுமையை போரின் ஒரு பகுதியாக பயன்படுத்த எதிர்ப்புத் தெரிவித்து போராடிம் டெனிஸ் முக்வேஜா, நாடியா ஆகியோர் 2018-ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசை பகிர்ந்துகொள்கின்றனர். டெனிஸ் முக்வேஜா, நாடியா முராட் இருவருமே தங்கள் உயிருக்கு ஆபத்து வரும் என்று அறிந்தும் போர்க் குற்றங்களை எதிர்த்து தீரத்துடன் போராடி வருகின்றனர். போர்க் கைதி களுக்கு நீதி வேண்டி போராடிய அவர்கள் பாராட்டுக்குரியவர்கள். இவ்வாறு அவர் கூறினார். டாக்டர் டெனிஸ் முக்வேஜா: 63 வயதாகும் டெனிஸ் முக்வேஜா, மருத்து வம் படித்தவர். காங்கோ நாட்டைச் சேர்ந்த முக்வேஜா அங்குள்ள தெற்கு கிவு பகுதியில் 1999-ல் ஒரு மருத்துவ மனையை அமைத்து பாலியல் பலாத் காரம் செய்யப்பட்ட பெண்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார். போரால் பாதிக்கப்பட்ட காங்கோ நாட்டில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு அவர் சிகிச்சை அளித்துள்ளார். காங்கோ நாட்டு அரசின் கொடூர சட்டங் களை எதிர்த்துப் போராடி வருகிறார் முக்வேஜா. காங்கோவில் நடைபெறும் கூட்டு பலாத்கார சம்பவங்களை தடுக்க காங்கோ அரசும், உலக நாடுகளும் எது வும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டி அதுதொடர்பான பிரச்சாரங்களையும் அவர் முன்னெடுத்து வருகிறார். பாலியல் வன்கொடுமையை போரின் ஒரு பகுதியாகப் பயன்படுத்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் முக்வேஜா, தான் எங்கு சென்றாலும் தனது கருத்தை ஆணித்தரமாக பதிவு செய்து விட்டு வருவார். இவரை அப்பகுதி மக்கள் `மருத்துவர் அற்புதம்' என்று அன்போடு அழைத்து வருகின்றனர். நாடியா முராட்: மனித உரிமை ஆர்வலரான 25 வயதாகும் நாடியா முராட் இராக்கைச் சேர்ந்தவர். அங்குள்ள யாசிதி சமூகத்தைச் சேர்ந்தவர். 2014-ல் இவர் ஐஎஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு 3 மாதம் அடைத்து வைக்கப்பட்டு பலரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். பின்னர் அவர்களிடமிருந்து தப்பி வந்து, போரில் கைதாகும் பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார். 2014-ல் ஐஎஸ் தீவிரவாதிகளால் கைதான 3 ஆயிரம் யாசிதி பெண்களில் நாடியாவும் ஒருவர். தனது துயரங்களை வெளியுலகுக்கு மிகவும் தைரியமாக சொல்லி உலக மக்களின் பாராட்டையும், அன்பையும் பெற்றவர். 2018-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுக்கு மொத்தம் 331 பேரின் பெயர் கள், அமைப்புகள் பரிந்துரை செய்யப்பட் டன. அதிலிருந்து நாடியாவும், முக்வேஜாவும் தேர்வு செய்யப்பட்டனர். டிசம்பர் 10-ம் தேதி நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட அனைவருக்கும் வழங்கப்படவுள்ளது. - ஏஎப்பி

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, 4 October 2018

3 பேருக்கு வேதியியல் நோபல் பரிசு 

இந்த ஆண்டின் வேதியியல் துறைக்கான நோபல் பரிசு ஒரு பெண் உட்பட 3 விஞ்ஞானிகளுக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமைதிக்கான நோபல் பரிசு நாளை அறிவிக்கப்படுகிறது. ஸ்வீடனைச் சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் நினைவாக ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. நடப்பு ஆண்டுக்கான நோபல் பரிசு கடந்த 1-ம் தேதி முதல் துறை வாரியாக அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், பிரான்செஸ் எச்.அர்னால்ட், ஜார்ஜ் பி.ஸ்மித் மற்றும் சர் கிரிகோரி பி.வின்ட்டர் ஆகிய 3 பேருக்கு வேதியியல் துறைக்கான நோபல் பரிசு வழங்கப்படும் என ‘ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயன்சஸ்’ நேற்று அறிவித்தது. மனித குலத்துக்கு உதவும் வகையில் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத வேதியியல் பொருட்களைக் கண்டுபிடித்ததற் காக இவர்களுக்கு இந்த பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பெண் விஞ்ஞானியான பிரான்செஸ் எச்.அர்னால்ட் கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகத்தில் பேராசிரி யராக உள்ளார். இவர் வேதியியல் செயல்பாட்டில் நொதிகளின் (Enzymes) பரிணாமம் மற்றும் புரதங்களின் வினையூக்கம் குறித்து மேற்கொண்ட ஆய்வுக்காக இந்த பரிசு வழங்கப்படுகிறது. இவருக்கு பரிசு தொகையான ரூ.6.5 கோடியில் 50 சதவீதம் வழங்கப்படும். அமெரிக்காவைச் சேர்ந்தவரும் மிசவுரி பல்கலைக்கழக (கொலம்பியா) பேராசிரியருமான ஜார்ஜ் பி.ஸ்மித் மற்றும் பிரிட்டனைச் சேர்ந்தவரும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பேராசிரியருமான சர் கிரிகோரி பி.வின்ட்டர் ஆகிய இருவருக்கும், மீதம் உள்ள 50 சதவீத பரிசுத் தொகை சரிசமமாக பகிர்ந்தளிக்கப்படும். பாக்டீரியாக்களை தாக்கும் வைரஸ்கள் மூலம் புதிய புரதங்கள் உருவாவதை ஸ்மித் கண்டறிந்துள்ளார். புதிய மருந்து உருவாக்கத்துக்கு இந்த நுட்பம் உதவிகரமாக உள்ளதால் இவர் நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதே நுட்பத்தைப் பயன்படுத்தி மருந்து கண்டுபிடிக்க உதவியதற்காக மற்றொரு விஞ்ஞானியான வின்ட் டருக்கு நோபல் பரிசு வழங்கப் படுகிறது. மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அமெரிக்கா மற்றும் ஜப்பானை சேர்ந்த இரு விஞ்ஞானிகளுக்கு கடந்த 1-ம் தேதியும், இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு பெண் உட்பட 3 விஞ்ஞானிகளுக்கு கடந்த 2-ம் தேதியும் அறிவிக்கப்பட்டது. அமைதிக்கான நோபல் பரிசு நாளையும் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு வரும் 8-ம் தேதியும் அறிவிக்கப்பட உள்ளது. இலக் கியத்துக்கான நோபல் பரிசுக்கு உரியவர்களை தேர்வு செய்யும் தேர்வுக் குழு மீது புகார் எழுந்துள்ளதால், இத்துறைக் கான நோபல் பரிசு ஒத்தி வைக்கப் பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள் ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday, 3 October 2018

ஒரே விடை

கீழே உள்ள குறிப்புகளின் உதவியுடன் அவை உணர்த்தும் நாடு எது என்பதைக் கண்டுபிடியுங்கள்.
1. நாற்புறமும் நிலத்தால் சூழப்பட்ட ஒரே தென்கிழக்கு ஆசிய நாடு.
2. 19 ஜூலை 1949-ம் ஆண்டு பிரான்ஸிடமிருந்து சுதந்திரம் பெற்றது.
3. இந்த நாட்டின் தேசியச் சின்னம் யானை. தேசிய மலர் மர சம்பங்கி.
4. விவசாயம் முக்கியமான தொழில்.
5. வியன்டியேன் இதன் தலைநகரம்.
6. புத்தர் ஆலயங்கள் இங்கு ஏராளமாக இருக்கின்றன. பா தட் லுவாங் என்ற புத்தர் ஆலயம் 3-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இதன் கோபுரம் தங்கத்தால் செய்யப்பட்டிருக்கிறது.
7. அதிக விஷத்தன்மை கொண்ட 14 அடி நீளப் பாம்புகள் இங்கே இருக்கின்றன.
8. கம்போடியாவுக்கு அருகில் இருக்கக்கூடிய கோனே அருவியில், நயாகரா அருவியைவிட இரு மடங்கு தண்ணீர் விழுகிறது.
9. காடுகளை அழித்து வருவதால் ஆசிய யானை, சிவப்பு பாண்டா, புலி போன்ற விலங்குகளின் எண்ணிக்கை இங்கே குறைந்து வருகிறது.
10. உலகின் மிகப் பெரிய 11-வது நதியான மேகாங், இந்த நாட்டில் பாய்கிறது.
ஒரே விடை  | லாவோஸ்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பெண் விஞ்ஞானி உட்பட 3 பேருக்கு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு

இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு பெண் விஞ்ஞானி உட்பட 3 பேருக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டுக்கான நோபல் பரிசு துறை வாரியாக அறிவிக் கப்பட்டு வருகிறது. இதில் மருத் துவத் துறைக்கான நோபல் பரிசு அமெரிக்கா மற்றும் ஜப் பானை சேர்ந்த இரு விஞ்ஞானி களுக்கு நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசை, ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக் ஹோமில் நோபல் பரிசுக் குழு நேற்று அறிவித்தது. அமெரிக்காவைச் சேர்ந்த ஆர்தர் அஷ்கின் (96), பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜெரார்டு மவுரோ (74), கனடாவை சேர்ந்த டோனா ஸ்ட்ரிக்லேண்ட் ஆகியோருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள் ளது. லேசர் இயற்பியல் துறையில் இவர்கள் புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்த்தியுள்ளனர். கண் அறுவை சிகிச்சையில் நவீன சாதனங்களை பயன்படுத்திட இவர்களின் கண்டுபிடிப்பு வழிகோலியுள்ளது. பரிசுத் தொகையான 90 லட்சம் ஸ்வீடன் குரோனர்களில் (10 லட்சத்து 10 ஆயிரம் டாலர் அல்லது சுமார் ரூ.7 கோடியே 36 லட்சம்) சரிபாதியை ஆர்தர் அஷ்கின் பெறுகிறார். எஞ்சிய பாதித் தொகையை ஜெரார்டு மவுரோ, டோனா ஸ்ட்ரிக்லேண்ட் ஆகிய இருவரும் பகிர்ந்துகொள்ள உள்ளனர். இந்நிலையில் வேதியல் துறைக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட உள்ளது. மேலும் அமைதிக்கான நோபல் பரிசு வெள்ளிக்கிழமையும் பொரு ளாதாரத்துக்கான நோபல் பரிசு திங்கட்கிழமையும் அறிவிக்கப்பட உள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 2 October 2018

அமெரிக்க, ஜப்பான் பேராசிரியர்களுக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு புற்றுநோய் சிகிச்சைக்கு புதிய முறையை கண்டுபிடித்ததற்காக வழங்கப்படுகிறது

                 ஜேம்ஸ் ஆலிசன்


தசுகு ஹோன்ஜோ
இந்த ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு, புற்றுநோய் சிகிச்சைக்கு புதிய முறையை கண்டுபிடித்த அமெரிக்க, ஜப்பான் பேராசிரியர்களுக்கு கூட்டாக வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மருத்துவத்துக்கான நோபல் பரிசு மருத்துவம், விஞ்ஞானம், பொருளாதாரம், இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புதிய சாதனை படைத்தவர்களையும், அமைதிக்காக பாடுபடுபவர்களையும் நோபல் பரிசு அமைப்பு ஆண்டுதோறும் தேர்ந்து எடுத்து நோபல் பரிசு வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த ஆண்டு (2018) மருத்துவத்துக்கான நோபல் பரிசு அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வரும் ஜேம்ஸ் ஆலிசன், ஜப்பானில் உள்ள கியோட்டோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரியும் தசுகு ஹோன்ஜே ஆகியோருக்கு வழங்கப்பட்டு உள்ளது. புற்றுநோய்க்கு புதிய சிகிச்சை முறை உலக அளவில் மனிதகுலத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் புற்று நோய்க்கு புதிய சிகிச்சை முறையை கண்டுபிடித்ததற்காக இவர்கள் இருவரும் கூட்டாக நோபல் பரிசுக்கு தேர்ந்து எடுக்கப்பட்டு இருப்பதாக நோபல் பரிசு குழு அறிவித்து உள்ளது. இவர்களில் புற்றுநோய் சிகிச்சை நிபுணரான ஜேம்ஸ் ஆலிசன், தனது ஆய்வின் மூலம், ஒரு குறிப்பிட்ட புரதம்தான் நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை கட்டுப் படுத்துகிறது (‘பிரேக்’) என்றும், இந்த கட்டுப்பாட்டை விலக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சிகிச்சை அளிப்பதன் மூலம் புற்றுநோயை கட்டுப்படுத்துவதில் நல்ல பலன் கிடைக்கும் என்பதையும் கண்டுபிடித்து உள்ளார். ரூ.7 கோடி பரிசு இதேபோல் தசுகு ஹோன்ஜோவும், நோய் எதிர்ப்பு செல்களில் உள்ள ஒரு புரதம்தான் நோய் எதிர்ப்பு செல்களை தூண்டிவிடாத வகையில் தடுப்பாக இருப்பதையும், அதை கட்டுப்படுத்தி நோய் எதிர்ப்பு செல்களை தூண்டும் முறையையும் கண்டு அறிந்தார். இதனால், புற்று நோய்க்கு சிகிச்சை அளிப்பதில் ஒரே மாதிரியான புதிய முறையை கண்டுபிடித்த ஜேம்ஸ் ஆலிசனும், தசுகு ஹோன்ஜோவும் மருத்துவத்துக்கான நோபல் பரிசுத்தொகையான 1.01 மில்லியன் அமெரிக்க டாலரை (சுமார் ரூ.7 கோடியே 37 லட்சம்) கூட்டாக பகிர்ந்து கொண்டு உள்ளனர். வருகிற டிசம்பர் மாதம் சுவீடனின் ஸ்டாக்ஹோம் நகரில் நடைபெறும் விழாவில் இவர்களுக்கு இந்த பரிசு வழங்கப்படும். இந்திய வம்சாவளி நோபல் பரிசு பெற்ற பேராசிரியர்களில் ஒருவரான ஜேம்ஸ் ஆலிசனின் மனைவி பத்மானி சர்மா இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். கயானா நாட்டில் பிறந்தவர். இவரும் புற்றுநோய் சிகிச்சை நிபுணர் ஆவார். இவரது தந்தை இந்தியர்; தாயார் கயானாவைச் சேர்ந்தவர். பத்மானி சர்மாவுக்கு 10 வயதாக இருந்த போது அவரது குடும்பம் கயானாவில் இருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தது. ஜேம்ஸ் ஆலிசனின் தாயாரும், சகோதரரும் புற்றுநோயால் மரணம் அடைந்தனர். இதுவே அவர் புற்றுநோய் சிகிச்சைக்கு புதிய முறையை கண்டுபிடிப்பதற்கு தூண்டுகோலாக அமைந்தது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 1 October 2018

காரங்கள்

நீரில் கரையும் காரங்களுக்கு எரி காரங்கள் (அல்கலி) என்று பெயர்.

அல்கலி என்ற சொல்லுக்கு தாவரச் சாம்பல் என்று பொருள்.

அல்கலி என்ற சொல் அல்குவிலி என்ற அரேபிய மொழிச் சொல்லில் இருந்து பெறப்பட்டது.

அனைத்து அல்கலிகளும் காரங்கள். ஆனால் அனைத்து காரங்களும் அல்கலிகள் அல்ல.

சோடியம் ஹைட்ராக்சைடு (எரிசோடா), பொட்டாசியம் ஹைட்ராக்சைடு (எரி பொட்டாஷ்) போன்றவை அல்கலிகள்.

கால்சியம் ஹைட்ராக்சைடு (நீர்த்த சுண்ணாம்பு), நீரில் லேசாகக் கரையும் காரம்.

கால்சியம் ஆக்சைடு (சுட்ட சுண்ணாம்பு) மக்னீசியம் ஹைட்ராக்சைடு (மக்னீசியா பால்மம்) போன்றவை நீரில் கரையாத காரஙக்ள்.

காரம் சிகப்பு லிட்மஸ் தாளை நீலமாக மாற்றும்.

அமில கார நடுநிலையாக்கல் வினையில் கிடைப்பவை உப்புகள்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

சுரப்பிகள்

நம் உடலிலுள்ள இருவகைச் சுரப்பிகள் நாளமுள்ள சுரப்பிகள், நாளமில்லாச் சுரப்பிகள்.

உமிழ்நீர், என்சைம், கண்ணீர், பித்தநீர், வியர்வை, பால், நாளமுள்ள சுரப்பிகளின் சுரப்பிகள்.

என்சைம்களைச் சுரப்பவை நாளமுள்ள சுரப்பிகள்.

ஹார்மோன்களைச் சுரப்பவை நாளமில்லாச் சுரப்பிகள்.

நாளமுள்ள சுரப்பிகளின் சுரப்புகள் நாளங்கள் வழியே வெளிவருவதால் அவற்றை நாளமுள்ள சுரப்பிகள் என்கிறோம்.

உமிர்நீர் சுரப்பிகள், கணையம், வியர்வை சுரப்பிகள் லாக்ரிமல் சுரப்பி போன்றவை முக்கிய நாளமுள்ள சுரப்பிகள்.

நம் உடம்பில் பரோட்டிட் சப்லிங்வல் சப்மாக்சி லரி என மூன்று வகை உமிர் நீர்ச்சுரப்பிகள் உள்ளன.

நாளமில்லா சுரப்பிகளின் சுரப்புகளான ஹார்மோன் களை எடுத்து ெசல்ல அந்த சுரப்பிகளுக்கு நாளங்கள் இல்லாததால் அவற்றை நாளமில்லா சுரப்பிகள் என்கிறோம்.

சுரப்பிகளை பற்றிய படிப்புக்கு சுரப்பியல் என்று பெயர்.

நம் உடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகளிலேயே மிகப்பெரியது தைராய்டு.

நம் உடலில் உள்ள நாளமுள்ள சுரப்பிகளிலேயே மிகப்பெரியது கல்லீரல்.

நம் உடலில் உள்ள சுரப்பிகளிலேயே மிகப்பெரியதும் கல்லீரலே.

கணையம் நாளமுள்ள, நாளமில்லாச் சுரப்பிகளாகச் செயல்படுவதால் இரட்டைச் சுரப்பி எனப்படுகிறது.

கணையம் தன் நாளங்கள் வழியே டிரிப்சின், கைமோ டிரிப்சின், லிப்பேஸ் போன்ற என்சைம்களை சுரக்கிறது.

கணையத்திலுள்ள லாங்கர்ஹான் திட்டுகளிலிருந்து இன்சுலின், குளுக்கோகான் ஆகிய ஹார்மோன்கள் சுரக்கின்றன.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஐரோப்பியர்கள்

வணிகத்துக்காக இந்தியா வந்த முதல் ஐரோப்பியர்கள் போர்ச்சுக்கீசியர்கள்.

போர்ச்சுக்கீசிய மாலுமி வாஸ்கோடகாமா 1498-ல் இந்தியாவுக்கு கடல் வழி கண்டறிந்தார்.

கள்ளிக்கோட்டை வந்த வாஸ்கோடகாமாவை வரவேற்ற அரசர் சாமோரின்.

வாஸ்கோடகாமா 1501-ல் கண்ணனூர் என்னும் இடத்தில் போர்ச்சுக்கீசிய வணிகத் தலத்தை நிறுவினார்.

கோழிக்கோடு, கொச்சின், கண்ணனூர் ஆகியவை போர்ச்சுக்கீசியர்களின் வர்த்தகத் தலங்களாக இருந்தன.

பிரான்சிஸ்கோ டி.அல்மேடா இந்தியாவுக்கான முதல் போர்ச்சுக்கீசிய வைசிராய்.

இந்திய கடலைச் சுற்றி போர்ச்சுக்கீசிய ஆதிக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற அல்மேடாவின் கொள்கை நீல நீர்க்கொள்கை எனப்பட்டது.

இந்தியாவின் 2-வது போர்ச்சுக்கீசிய கவர்னரான அல்புகர்க், 1510-ல் கோவாவை போர்ச்சுக்கீசியரின் தலைமை இடமாக்கினார்.

நாகப்பட்டினத்தில் வணிகம் செய்ய போர்ச்சுக்கீசியருக்கு அனுமதி அளித்த நாயக்க மன்னர் செவப்ப நாயக்கர்.

தமிழகத்தின் போர்ச்சுக்கீசிய குடியேற்றங்கள் தூத்துக்குடி, நாகப்பட்டினம், சென்னை சாந்தோம்.

டச்சுக்காரர்கள் என்போர் ஹாலந்து நாட்டினர்.

டச்சுக்காரர்கள் 1608-ல் தேவனாம்பட்டினத்தை கைப்பற்றினர்.

ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி 1600-ல் நிறுவப்பட்டது.

ஆங்கிலேயர் இந்தியாவில் வணிகம் செய்ய அனுமதி தந்தவர் ஜஹாங்கிர்.

ஜஹாங்கிரிடம் அனுமதி பெற்ற ஆங்கில வணிகர்கள் சர் தாமஸ் ரோ மற்றும் ஹாக்கின்ஸ்.

தரங்கம்பாடி 1620-ல் டேனிஷ் மக்களின் குடியேற்றமானது.

மெட்ராஸ் நகரம் பிரான்சிஸ்டே என்பவரால் உருவாக்கப்பட்டது.

செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டுமானம் 1639-ல் தொடங்கப்பட்டது.

செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் முதல் ஆளுநர் ஆரன் பேக்கர்.

புனித டேவிட் கோட்டையை ஆங்கிலேயர் கடலூரில் கட்டினார்கள்.

பிரெஞ்சுக் குடியேற்றங்களுள் மிக முக்கியமானது பாண்டிச்சேரி.

செயின்ட் லூயி கோட்டை பாண்டிச்சேரியில் உள்ளது.

பாண்டிச்சேரி பிரெஞ்சு ஆளுநர்களில் குறிப்பிடத்தக்கவர் டுயூப்ளக்ஸ்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பொது அறிவு | வினா வங்கி,

1. இந்தியாவில் தேர்தலில் போட்டியிட்ட முதல் பெண்மணி யார்?

2. இந்தியாவில் உள்ளாட்சி அமைப்பை ஏற்படுத்தியவர் யார்?

3. புனித ஜார்ஜ் கோட்டையை கட்டியவர் யார்?

4. குடவோலை முறையை ஏற்படுத்தியவர்கள் யார்?

5. செஞ்சிக் கோட்டை எந்த மாவட்டத்தில் உள்ளது?

6. தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பு எப்படி அழைக்கப்படுகிறது?

7. சிப்பாய் கலகம் ஏற்பட்ட நாள் எது?

8. கணினியின் நினைவாற்றலில் ஒரு நிப்பில் என்பது எத்தனை பிட்டுகள் சேர்ந்ததாகும்?

9. மியான்மர் என்ற நாட்டின் பழைய பெயர் என்ன?

10. ஈர்ப்புவிசையை கண்டறிந்த விஞ்ஞானி யார்?

11. தமிழ்வேதம் எனப்படுவது எது?

12. உமிழ்நீரில் உள்ள என்சைம் எது?

13. உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களின் இட ஒதுக்கீடு எவ்வளவு?

14. இந்தியாவின் மிகப்பெரிய அணைக்கட்டு எது?

15. இந்தியாவில் தேர்தலில் முதன் முதலில் பெண்கள் வாக்களித்த ஆண்டு எது?

விடைகள்

1. கமல்தேவி சட்டோபாத்தியா, 2. ரிப்பன் பிரபு, 3. சர் பிரான்சிஸ் டே, 4. சோழர்கள், 5. விழுப்புரம், 6. சார்க், 7. 10-7-1806, 8. நான்கு பிட்டுகள், 9. பர்மா, 10. நியூட்டன், 11. திருக்குறள், 12. டயலின், 13. 33 சதவீதம் 14. பக்ரா நங்கல், 15. 1950.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

printfriendly

Print Friendly and PDF