Tuesday 9 October 2018

அமெரிக்காவைச் சேர்ந்த 2 பேருக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு

அமெரிக்கர்கள் வில்லியம் நார் தாஸ் மற்றும் பால் எம் ரோமர் ஆகியோர், இந்த ஆண்டு பொருளா தாரத்துக்கான நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ‘பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு - 2018’ஐ சுவீடன் அகா டமி நேற்று ஸ்டாக்ஹோம் நகரில் அறிவித்தது. அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தில் படித்த வில்லியம் நார்தாஸ் மற்றும் நியூ யார்க் பல்கலைக்கழக ஸ்டெர்ன் ஸ்கூல் ஆப் பிஸினஸை சேர்ந்த பால் எம்.ரோமர் ஆகிய 2 பேர் இந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். நார்தாஸ் மற்றும் ரோமர் ஆகிய இருவரும் சர்வதேச பொருளாதாரத் தில் நீடித்த வளர்ச்சிக்கான தொழில்நுட்ப வழிமுறைகள் மற்றும் உலக மக்களின் பொருளாதார நலனுக்கான வழிமுறைகள் குறித்து விரிவான ஆய்வு நடத்தி உள்ள னர். மற்றும் பருவநிலை மாற்றங் களால் பொருளாதாரத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், சமூகத்துக் கும் இயற்கைக்கும் உள்ள தொடர்பு கள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். சர்வதேச அளவில் சிறந்த பொருளாதார வளர்ச்சியை, பொரு ளாதார நிபுணர்கள் எப்படி முன் னெடுத்து செல்வது என்பது குறித்து பால் ரோமர் விரிவாக ஆராய்ந்து சில வழிமுறைகளை முன்மொழிந்துள்ளார். அதேபோல், பருவ நிலை மாறுபாட்டுப் பிரச்சினைக்கு தீர்வு காண கொள்கை வகுப்பவர்கள், உண்மையான பாதிப்புகளை அறி யாமல் உள்ளது குறித்து நார்தாஸ் மிக விரிவாக ஆராய்ந்து ஆதாரப் பூர்வமாக விளக்கி உள்ளார். பூமி வெப்பமயமாவதால், பருவநிலை மாற்றங்களால் பொருளாதாரம் எப்படி எல்லாம் பாதிக்கப்படுகிறது என்பதை ஆராய்ந்து அறிக்கை வெளியிட்டுள்ளார். பிரச்சினைக்களுக்கான உறுதியான பதில்கள் எதையும் இவர்கள் சுட்டிக்காட்டவில்லை. எனி னும், இவர்களுடைய ஆய்வுகள் பிரச்சினைகளுக்கு எப்படி தீர்வு காண்பது என்ற கேள்விக்கு மிகவும் ஒத்துப் போகும் பதில்களாக அமைந்துள்ளன. இந்த நோபல் பரிசுடன் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவித்து முடிக்கப்பட்டுவிட்டன. கடந்த 1901-ம் ஆண்டு முதல் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு மட்டும் கடந்த 1969-ம் ஆண்டுதான் புதிதாக சேர்க்கப் பட்டது. இந்த விருதையும் ஆல்பிரட் நோபல் நினைவாக சுவீடன் மத்திய வங்கி உருவாக்கியது. ஆனால், நோபல் பரிசுக்கான தேர்வு குழுவில், பாலியல் சர்ச்சை ஏற்பட்டதால் இலக்கியத்துக்கான நோபல் பரிசு மட்டும் முதல் முறை யாக இந்த ஆண்டு அறிவிக்கப் படவில்லை. இந்த ஆண்டுக்கான விருது, அடுத்த ஆண்டு விருதுடன் சேர்த்து அறிவிக்கப்படும் என்று சுவீடன் அகாடமி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

1 comment:

Sunder said...

Sarkari Naukri Daily is Top Sarkari Jobs Portal For Banking, Railway Naukari, Public Sector, Research Sarkari Naukri 2018 2019 in India