Saturday 6 October 2018

இராக் மனித உரிமை போராளி முராட், காங்கோ டாக்டர் முக்வேஜாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு

போரின்போது ஆயுதமாக கையாளப் படும் பாலியல் வன்கொடுமைக்கு எதிராகப் போராடும், இராக்கைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் நாடியா முராட், காங்கோவைச் சேர்ந்த மனித உரிமை ஆர் வலரும், டாக்டருமான டெனிஸ் முக் வேஜா ஆகியோர் 2018-ம் ஆண்டுக் கான அமைதி நோபல் பரிசைப் பெறு கிறார்கள். நார்வோ தலைநகர் ஆஸ்லோவில் அமைதிப் பரிசு நேற்று அறிவிக்கப்பட் டது. இதுகுறித்து நோபல் பரிசு கமிட்டி தலைவர் பெரிட் ரீஸ்-ஆண்டர்சன் நேற்று கூறியதாவது: பெண்களுக்கு அடிப்படை உரிமைகளும், பாதுகாப்பு உரிமைகளும் வழங்கப்படவேண்டும். போரில் பெண்கள் பாதுகாக்கப்பட்டால் மட்டுமே அமைதியான உலகம் என்ற இலக்கு சாத்தியமாகும். பாலியல் வன்கொடுமையை போரின் ஒரு பகுதியாக பயன்படுத்த எதிர்ப்புத் தெரிவித்து போராடிம் டெனிஸ் முக்வேஜா, நாடியா ஆகியோர் 2018-ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசை பகிர்ந்துகொள்கின்றனர். டெனிஸ் முக்வேஜா, நாடியா முராட் இருவருமே தங்கள் உயிருக்கு ஆபத்து வரும் என்று அறிந்தும் போர்க் குற்றங்களை எதிர்த்து தீரத்துடன் போராடி வருகின்றனர். போர்க் கைதி களுக்கு நீதி வேண்டி போராடிய அவர்கள் பாராட்டுக்குரியவர்கள். இவ்வாறு அவர் கூறினார். டாக்டர் டெனிஸ் முக்வேஜா: 63 வயதாகும் டெனிஸ் முக்வேஜா, மருத்து வம் படித்தவர். காங்கோ நாட்டைச் சேர்ந்த முக்வேஜா அங்குள்ள தெற்கு கிவு பகுதியில் 1999-ல் ஒரு மருத்துவ மனையை அமைத்து பாலியல் பலாத் காரம் செய்யப்பட்ட பெண்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார். போரால் பாதிக்கப்பட்ட காங்கோ நாட்டில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு அவர் சிகிச்சை அளித்துள்ளார். காங்கோ நாட்டு அரசின் கொடூர சட்டங் களை எதிர்த்துப் போராடி வருகிறார் முக்வேஜா. காங்கோவில் நடைபெறும் கூட்டு பலாத்கார சம்பவங்களை தடுக்க காங்கோ அரசும், உலக நாடுகளும் எது வும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டி அதுதொடர்பான பிரச்சாரங்களையும் அவர் முன்னெடுத்து வருகிறார். பாலியல் வன்கொடுமையை போரின் ஒரு பகுதியாகப் பயன்படுத்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் முக்வேஜா, தான் எங்கு சென்றாலும் தனது கருத்தை ஆணித்தரமாக பதிவு செய்து விட்டு வருவார். இவரை அப்பகுதி மக்கள் `மருத்துவர் அற்புதம்' என்று அன்போடு அழைத்து வருகின்றனர். நாடியா முராட்: மனித உரிமை ஆர்வலரான 25 வயதாகும் நாடியா முராட் இராக்கைச் சேர்ந்தவர். அங்குள்ள யாசிதி சமூகத்தைச் சேர்ந்தவர். 2014-ல் இவர் ஐஎஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு 3 மாதம் அடைத்து வைக்கப்பட்டு பலரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். பின்னர் அவர்களிடமிருந்து தப்பி வந்து, போரில் கைதாகும் பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார். 2014-ல் ஐஎஸ் தீவிரவாதிகளால் கைதான 3 ஆயிரம் யாசிதி பெண்களில் நாடியாவும் ஒருவர். தனது துயரங்களை வெளியுலகுக்கு மிகவும் தைரியமாக சொல்லி உலக மக்களின் பாராட்டையும், அன்பையும் பெற்றவர். 2018-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுக்கு மொத்தம் 331 பேரின் பெயர் கள், அமைப்புகள் பரிந்துரை செய்யப்பட் டன. அதிலிருந்து நாடியாவும், முக்வேஜாவும் தேர்வு செய்யப்பட்டனர். டிசம்பர் 10-ம் தேதி நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட அனைவருக்கும் வழங்கப்படவுள்ளது. - ஏஎப்பி

No comments: