Wednesday 3 October 2018

பெண் விஞ்ஞானி உட்பட 3 பேருக்கு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு

இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு பெண் விஞ்ஞானி உட்பட 3 பேருக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டுக்கான நோபல் பரிசு துறை வாரியாக அறிவிக் கப்பட்டு வருகிறது. இதில் மருத் துவத் துறைக்கான நோபல் பரிசு அமெரிக்கா மற்றும் ஜப் பானை சேர்ந்த இரு விஞ்ஞானி களுக்கு நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசை, ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக் ஹோமில் நோபல் பரிசுக் குழு நேற்று அறிவித்தது. அமெரிக்காவைச் சேர்ந்த ஆர்தர் அஷ்கின் (96), பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜெரார்டு மவுரோ (74), கனடாவை சேர்ந்த டோனா ஸ்ட்ரிக்லேண்ட் ஆகியோருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள் ளது. லேசர் இயற்பியல் துறையில் இவர்கள் புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்த்தியுள்ளனர். கண் அறுவை சிகிச்சையில் நவீன சாதனங்களை பயன்படுத்திட இவர்களின் கண்டுபிடிப்பு வழிகோலியுள்ளது. பரிசுத் தொகையான 90 லட்சம் ஸ்வீடன் குரோனர்களில் (10 லட்சத்து 10 ஆயிரம் டாலர் அல்லது சுமார் ரூ.7 கோடியே 36 லட்சம்) சரிபாதியை ஆர்தர் அஷ்கின் பெறுகிறார். எஞ்சிய பாதித் தொகையை ஜெரார்டு மவுரோ, டோனா ஸ்ட்ரிக்லேண்ட் ஆகிய இருவரும் பகிர்ந்துகொள்ள உள்ளனர். இந்நிலையில் வேதியல் துறைக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட உள்ளது. மேலும் அமைதிக்கான நோபல் பரிசு வெள்ளிக்கிழமையும் பொரு ளாதாரத்துக்கான நோபல் பரிசு திங்கட்கிழமையும் அறிவிக்கப்பட உள்ளது.

No comments: