இந்தியாவில் மொகலாயர் ஆட்சி.

- பாபர், துருக்கி நாட்டைச் சேர்ந்தவர். இவர் செங்கிஸ்கான் மற்றும் தைமூர் ஆகிய இருவருக்கும் உறவினர்.
- பஞ்சாபைச் சேர்ந்த தௌலத்கான் லோடி, பாபரை இந்தியா மீது படையெடுக்க அழைத்தார்.
- கி.பி 1526-ல் நடந்த முதல் பானிபட் போரில், பாபர் இப்ராஹிம் லோடியை வென்று மொகலாய வம்சத்தை நிறுவினார்.
- பாபரின் சுயசரிதை, 'பாபர் நாமா' (துருக்கி மொழி) ஆகும்.
- பாபருக்குப் பின் ஹுமாயூன் ஆட்சிக்கு வந்தார்.
- ஹுமாயூன் நாட்டை இழந்து தவித்தபோது, அக்பர் அமரக்கோட்டையில் பிறந்தார்.
- ஷெர்ஷாவிடம் தோற்று நாடிழந்த ஹுமாயூன், பின்னர் இரான் அரசரின் உதவியுடன் நாட்டை மீட்டார்.
- ஹுமாயூன் தனது நூலகத்தின் மாடிப்படிகளில் இருந்து தவறி விழுந்து இறந்தார்.
- 'ஹுமாயூன் நாமா' என்ற நூலை அவரது சகோதரியான குல்பதன் பேகம் எழுதினார்.
- தாய்மாமன் பைராம்கான் உதவியுடன் அக்பர் தனது 13-வது வயதில் ஆட்சிக்கு வந்தார்.
- 2-ம் பானிபட் போரில் (1556) அக்பர், ஹெமுவைத் தோற்கடித்தார்.
- அக்பரின் அவையை அலங்கரித்த அறிஞர்கள் 'நவரத்தினங்கள்' என்று அழைக்கப்பட்டார்கள்.
- அக்பரின் அவையிலிருந்த அபுல் பாசல், 'அக்பர் நாமா' மற்றும் 'அயனி அக்பரி' என்ற நூல்களை எழுதினார்.
- அக்பரின் அவையிலிருந்த துளசிதாஸர், இந்தியில் எழுதிய ராமாயணத்தின் பெயர் 'ராமசரித மானஸ்' ஆகும்.
- அக்பரின் அவையிலிருந்த பாடகர் தான்சேன்.
- அக்பரின் ராணுவ அமைச்சர் ராஜா மான்சிங்.
- அக்பரின் வருவாய்த்துறை அமைச்சர் ராஜா தோடர்மால்.
- அக்பரின் புத்திசாலி அமைச்சர் பீர்பால்.
- அக்பர் தோற்றுவித்த மதம் 'தீன் இலாஹி' (தெய்வீக மதம்).
- இந்துக்கள் மீது விதிக்கப்பட்ட 'ஜசியா' வரியை அக்பர் நீக்கினார்.
- அக்பருடைய ராணுவ நிர்வாக முறைக்கு 'மன்சப்தாரி முறை' என்று பெயர்.
- அக்பர் தக்காண வெற்றியைக் கொண்டாட பதேபூர் சிக்ரி நகரை நிர்மாணித்து, புலந்த் தர்வாஸா எனும் வாசலை அமைத்தார்.
- அக்பருக்கு அடுத்து ஆட்சிக்கு வந்த ஜஹாங்கீரின் இயற்பெயர் சலீம்.
- ஜஹாங்கீரை மணந்த நூர்ஜஹானின் இயற்பெயர் மெஹருன்னிஸா.
- ஓவியக்கலை ஜஹாங்கீர் காலத்தில் உச்சநிலையில் இருந்தது.
- ஐந்தாவது சீக்கிய குரு அர்ஜுன்சிங், ஜஹாங்கீரால் கொலை செய்யப்பட்டார்.
- இந்தியாவிலேயே பெரிய மசூதி ஷாஜஹான் கட்டிய ஜும்மா மசூதி.
- தாஜ்மஹாலை வடிவமைத்தவர் உஸ்தாத் இசா என்ற கட்டடக்கலை வல்லுநர்.
- ஷாஜஹானின் மனைவி மும்தாஜின் இயற்பெயர் அர்ஜுமான் பானுபேகம்.
- ஔரங்கசீப்-ன் இயற்பெயர் ஆலம்கீர்.
- ஔரங்கசீப் 'உயிர் வாழும் புனிதர்' என அழைக்கப்பட்டார்.
- ஒன்பதாவது சீக்கிய குருவான தேஜ்பகதூர், ஔரங்கசீப்பால் கொலை செய்யப்பட்டார்.
- ஜசியா வரியை மீண்டும் இந்துக்கள் மீது விதித்தவர் ஔரங்கசீப்.
0 Comments
||| www.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||