Monday 8 October 2018

உலக புகழ்பெற்ற ஐன்ஸ்டீன்


ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சார்பியல் கோட்பாட்டை உலகுக்கு அளித்த புகழ்பெற்ற அறிவியலாளர். அவரைப் பற்றிய அரிய சுவாரசியங்கள்..

ஜெர்மனியில் யூதக் குடும்பத்தில் பிறந்த இவர், படிப்பில் மிகவும் மந்தமாக இருந்தவர் என்று கூறப்படுகிறது.

இளம் வயதில் வயலின் கற்றார். காம்பஸ் கருவியை ஓயாமல் ஆராய்ந்து கொண்டிருந்தார்.

எளிமையானவர். நகைச்சுவை உணர்வு கொண்டவர்.

கணிதம், அறிவியலில் இவருக்கு அளவில்லா ஆர்வம் உண்டு.

இயந்திரவியல், அணுக்கள், ஒளிமின் விளைவு, ஈர்ப்பு விசை உள்ளிட்ட பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். தன் ஆராய்ச்சி தவிர வேறு எதிலும் கவனம் செலுத்த மாட்டார். சில சமயங்களில் தன் வீட்டு முகவரியையேகூட மறந்துவிடுவாராம்.

நியூட்டனின் விதிகளை ஆராய்ந்தபோதுதான், இவரது உலகப் புகழ்பெற்ற ‘சார்பியல் கோட்பாடு’ பிறந்தது.

அந்த கோட்பாடு அறிவியல் உலகில் மாபெரும் புரட்சியை ஏற் படுத்தியது. பல பல்கலைக்கழகங்கள் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கின.

ஒளிமின் விளைவைக் கண்டறிந்து விளக்கியதற்காகவும், 1921-ல் இவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

பல்வேறு நூல்களை எழுதி உள்ளார். ‘அறிவியல் கண்டுபிடிப்புகள் அனைத்தும் மனிதகுல நன்மைக்கே பயன்பட வேண்டும்’ என்று உறுதியாகக் கூறினார்.

மகாத்மா காந்தி மீது மிகுந்த, மரியாதை கொண்டவர். ‘‘நம் காலத்து மனிதர்களில் உலகிலேயே தலைசிறந்த மாமனிதர் காந்தி’’ என்று புகழ்ந்துள்ளார்.

‘விடைபெறும் நேரம் வந்துவிட்டது, கண்ணியமாக விதியை எதிர்கொள்ள விரும்புகிறேன்’ என்று தான் இறக்கும் முன்பு கூறினார்.

No comments: