Wednesday, 11 December 2019

தெற்காசிய விளையாட்டுப் போட்டி: 174 தங்கம் உள்பட 312 பதக்கங்களுடன் இந்தியா சாதனை: கடந்த போட்டியை விடகூடுதல் பதக்கம்


 • தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் 174 தங்கப் பதக்கத்துடன், மொத்தம் 312 பதக்கங்களை கைப்பற்றி இந்தியா புதிய சாதனையுடன் முதலிடத்தைப் பெற்றுள்ளது. 
 • இது முந்தைய 2016 போட்டிகளைக் காட்டிலும் 3 பதக்கங்கள் கூடுதலாகும். நேபாளத் தலைநகா் காத்மாண்டு, பொக்ராவில் 13-ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் கடந்த 1-ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. 
 • இதில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், இலங்கை, மாலத்தீவுகள், பூடான் உள்ளிட்ட 7 நாடுகளைச் சோ்ந்த 2700-க்கு மேற்பட்ட வீரா், வீராங்கனைகள் 27 விளையாட்டுப் பிரிவுகளில் பங்கேற்று போட்டியிட்டனா். 
 • முதல் இரண்டு நாள்கள் நேபாள அணியினா் ஆதிக்கம் செலுத்தி, பதக்கப் பட்டியலில் முன்னிலை வகித்தனா். அதன் பின் வழக்கம் போல், இந்தியா தொடா்ந்து அதிக தங்கப் பதக்கங்களை கைப்பற்றி, முதலிடத்தை கைப்பற்றியது. 
 •  இந்திய அணி தொடா்ந்து 13-ஆவது முறையாக தெற்காசிய போட்டியில் முதலிடத்தைப் பெற்றுள்ளது. 
 • தற்போதைய போட்டியில் 174 தங்கம், 93 வெள்ளி, 45 வெண்கல பதக்கங்களுடன் மொத்தம் 312 பதக்கங்களை குவித்தது. கடந்த 2016 போட்டியில் மொத்தம் 309 பதக்கங்களை கைப்பற்றியிருந்தது இந்தியா. 
 • தற்போது 2 தங்கம் கூடுதலாக வென்றுள்ளது. 2016-இல் 172 தங்கம், 93 வெள்ளி, 45 வெண்கலப் பதக்கங்களை வென்றிருந்தது இந்தியா. நேபாளம் 51 தங்கம், 60 வெள்ளி, 95 வெண்கலத்துடன் 206 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்திலும், இலங்கை 40 தங்கம், 83 வெள்ளி, 128 வெண்கலத்துடன் 251 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தையும் பெற்றன. 
 • பாகிஸ்தான் 31 தங்கம், 41 வெள்ளி, 59 வெண்கலத்துடன் 131 பதக்கங்களுடன் நான்காவது இடத்தைப் பெற்றது. 
 • வங்கதேசம் 19 தங்கம் உள்பட 138 பதக்கங்களையும், மாலத்தீவு 1 தங்கத்துடன் 5 பதக்கங்களையும், பூடான் 20 பதக்கங்களுடன் கடைசி இடத்தையும் பெற்றன. 
 • ஹுஷு, நீச்சல், வாலிபால், கூடைப்பந்து, கால்பந்து, கபடி, டேபிள் டென்னிஸ், பாட்மிண்டன், டேக்வாண்டோ, ஸ்குவாஷ், உள்பட பல்வேறு விளையாட்டுகளில் இந்தியா ஆதிக்கம் செலுத்தியது குறிப்பிடத்தக்கது.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 10 December 2019

விடுதலைப் போரின் வீர மங்கைகள்

இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களும் பெருந்திரளாகப் பங்கேற்றனர். அகிம்சைப் போராட்டம் மட்டுமல்லாமல் ஆயுதமேந்திய போராட்டங்களிலும் பெண்கள் பலர் பங்கேற்று உயிர்த்தியாகம் செய்துள்ளனர். கொடுமையான தண்டனைகளையும் பெற்றுள்ளனர். அப்படிப்பட்டவர்களில் முக்கியமான சிலர்:

உஷா மேத்தா

குஜராத்தில் பிறந்த இவர் 1928-ல் சைமன் கமிஷனை எதிர்த்து நடந்த போராட்டத்தில் பங்கேற்று ‘சைமன் வெளிய போ’ என்று முழக்கம் எழுப்பிய போது, இவருடைய வயது எட்டு. காந்திய வழியில் போராடிய இவர் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தின்போது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து ‘காங்கிரஸ் ரேடியோ’ என்ற ரகசிய வானொலி ஒலிபரப்பைத் தொடங்கினார். இதற்காகச் சிறைக்குச் சென்றவர் 1946-ல் விடுதலையானார்.

துர்காவதி தேவி

1907-ல் வங்கத்தில் பிறந்து விடுதலைக்காக ஆயுதமேந்திப் போராடியவர். 1928-ல் பிரிட்டிஷ் அதிகாரி ஜான் பி.சாண்டர்ஸைக் கொன்றபின் பகத் சிங், ராஜகுரு ஆகியோர் காவல் துறையிடமிருந்து தப்பிக்க இவர் உதவினார். அதன் பிறகு ஹெய்லி பிரபுவைக் கொல்ல முயன்றதற்காக மூன்றாண்டு சிறைத் தண்டனை பெற்றார்.

சுனிதி செளத்ரி

இவரும் சாந்தி கோஷ் என்பவரும் வங்கத்தில் கொமில்லா மாவட்ட மாஜிஸ்திரேட் சார்லஸ் ஸ்டீவன்ஸை 1931-ல் சுட்டுக் கொன்றதற்காகச் சிறைக்குச் சென்றனர். அப்போது சுனிதிக்கு வயது 14, சாந்திக்கு 15. ஆங்கிலேய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி 1942-ல் இருவரையும் விடுவிக்கச் செய்தார் காந்தி.

பீனா தாஸ்

1911-ல் கொல்கத்தா வில் பிறந்தவர். 1932 பிப்ரவரி 6 அன்று கொல்கத்தா பல்கலைக் கழகத்தில் ஒரு விழாவில் பங்கேற்ற ஆங்கிலேய அரசின் வங்க ஆளுநர் ஸ்டான்லி ஜாக்ஸனைச் சுட்டுக் கொல்ல முயன்றதற்காகச் சிறைத் தண்டனை கிடைத்தது. 1939-ல் விடுதலையான பின் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் பங்கேற்று 1942 முதல் 45 வரை சிறையில் அடைக்கப்பட்டார். இவருடைய அக்கா கல்யாணி தாஸும் விடுதலைப் போராட்ட வீராங்கனையே.

ராணி காயிதின்ல்யு

மணிப்பூரில் இருந்த ‘ஹெராகா’ என்ற மத அமைப்பில் சேர்ந்தார். அந்த அமைப்பு மணிப்பூர் உள்ளிட்ட நாகா பகுதிகளிலிருந்து ஆங்கிலேயர்களை விரட்டி அடிப்பதற்கான அரசியல் இயக்கமாக உருப்பெற்றது. விடுதலைப் போராட்டத்தில் மிகத் தீவிரமாகப் பங்கேற்ற காயிதின்ல்யு, 1932-ல் தனது 16-வது வயதில் ஆயுள் தண்டனை பெற்றார். 1947-ல் நாடு விடுதலை பெற்ற பிறகு விடுவிக்கப்பட்டார். இவருக்கு ‘ராணி’ என்ற பட்டத்தை நேரு வழங்கினார்.

அக்கம்மா செரியன்

திருவிதாங்கூர் சமஸ் தானத்தில் பிறந்தவர். 1938-ல் தனது ஆசிரியப் பணியை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்து விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றார். கட்சிக்குத் தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து 20,000 பேர் கொண்ட பேரணியை வழிநடத்தினார். ஆங்கிலேயக் காவலர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தத் தயாரானபோது, “என்னை முதலில் சுடுங்கள்” என்று துணிச்சலாக முன்வந்தார். இதையறிந்த காந்தி, இவரை ‘திருவிதாங்கூரின் ஜான்சிராணி’ என்று புகழ்ந்தார்.

கமலாதேவி சட்டோபாத்யாயா

மங்களூருவில் பிறந்த இவர் 1919-ல் 16 வயதில் விதவையானார். அன்றைய சமுதாயத்தின் கடும் எதிர்ப்பை மீறி ஹரீந்திரநாத் என்ற கலைஞரை மணந்து அவருடன் லண்டனில் குடியேறினார். காந்தியின் ‘ஒத்துழை யாமை இயக்க’த்தால் ஈர்க்கப்பட்டுத் தாய்நாடு திரும்பி, சமூக முன்னேற் றத்துக்காக காந்தி தொடங்கிய ‘சேவா தள’த்தில் இணைந்தார். ‘உப்பு சத்தியாகிரக’த்தில் பங்கேற்றுச் சிறைக்குச் சென்றார்.

அருணா ஆசஃப் அலி

1909-ல் ஹரியாணா வில் பிறந்தவர். 1930-ல் உப்பு சத்தியா கிரகத்தில் பங்கேற்றுச் சிறைக்குச் சென்று இரண்டு ஆண்டுகளில் விடுவிக்கப்பட்டார். 1942 ஆகஸ்ட் 8 அன்று பம்பாய் மாநாட்டில் ‘வெள்ளையனே வெளியேறு’ தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து காங்கிரஸ் முக்கியத் தலைவர்கள் அனைவரும் கைதாயினர். மறுநாள் அதே மாநாட்டில் காங்கிரஸ் கொடியை ஏற்றிவைத்து, ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தைத் தொடங்கிவைத்தார். ‘வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் கதாநாயகி’ என்று அழைக்கப்படுகிறார்.

கனகலதா பரூவா

அசாமில் 1924-ல் பிறந்த வர். ‘வெள்ளை யனே வெளியேறு’ இயக்கத்தின்போது, ஒரு காவல் நிலையத்தில் தேசியக் கொடியை ஏற்றுவதற்காக நடத்தப்பட்ட ஊர்வலத்தில் முன்வரிசையில் சென்றார். அப்போது காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 18 வயதில் உயிர் நீத்தார்.

போகேஸ்வரி ஃபுக்கானனி

1885-ல் அசாமில் பிறந்த இவர் எட்டுக் குழந்தைகளுக்குத் தாயாக இருந்தபோதும் அகிம்சைவழி விடுதலைப் போராட்டங்களில் தீவிரமாகப் பங்கேற்றார். 1942-ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது காவல்துறை தாக்குதல் நடத்தியது. அப்போது ஒரு காவலர் தேசியக் கொடியை அவமதித்ததற்காகத் தன் கையிலிருந்த கொடிக்கம்பால் அவரைத் தாக்கினார் போகேஸ்வரி. இதையடுத்து, காவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அறிவியல் நோபல் 2019: கண்டறிதல்களின் முக்கியத்துவம்

 • உலகின் உயரிய விருதான நோபல் பரிசுகள் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் அறிவிக்கப்படுகின்றன. 
 • இந்த விருதை நிறுவிய ஆல்பிரட் நோபலின் நினைவு நாளான டிசம்பர் 10 அன்று பரிசுகள் வழங்கப்படுகின்றன. 
 • இந்த ஆண்டு மருத்துவம், இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட அறிவியல் நோபல் பரிசுகளின் பின்னணி:
ஆக்ஸிஜனைத் தக்கவைக்கும் அதிசயம்!
 • ஆக்ஸிஜன் பூமியில் உள்ள பெரும்பான்மை உயிரிகளுக்கு வாழ்வாதாரம் என்பது நாம் அறிந்ததே. 
 • உடலில் ஆக்ஸிஜன் இல்லையென்றால் உணவில் இருந்து நம்மால் ஆற்றலைப் பெற முடியாது; ஆக்ஸிஜன் குறையும்போது தலைசுற்றல், மயக்கம் போன்றவை ஏற்படும். 
 • இதன் காரணமாக, ஆக்ஸிஜன் இல்லாத சூழலில் உடல் உடனடியாகச் சில மாற்றங்களை ஏற்படுத்திக்கொள்கிறது. 
 • உடலின் வளர்சிதை மாற்றத்தின் வேகத்தை (Metabolic rate) மாற்றிக்கொள்கிறது. 
 • கூடுதலாக ஆக்ஸிஜனைப் பெற என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அவற்றையும் உடல் செய்கிறது.
 • உடலில் ஆக்ஸிஜன் அளவு குறையும்போது, நம் சிறுநீரகத்துக்கு மேலிருக்கும் செல்களில் இருந்து ‘எரித்ரோபாய்டின்’ (Erythropoetin) என்ற ஹார்மோன் சுரக்கிறது. 
 • இது கூடுதல் சிவப்பு அணுக்களை உற்பத்திசெய்யச் சொல்லி எலும்பு மஜ்ஜைக்குக் கட்டளையிடுகிறது. 
 • இவற்றால் ஆக்ஸிஜனைச் சற்றுக் கூடுதலாக எடுத்துக்கொள்ள முடியும்.
 • ஆனால், இந்த ஆக்ஸிஜன் குறைவை உடல் எப்படிக் கண்டறிகிறது என்பது மிகப் பெரிய புதிராக இருந்தது. 
 • வளிமண்டலத்தில் ஒரு வாயுவின் அளவு குறையும்போது உடல் அதை உணர்ந்துகொள்ளும் வழிமுறைகள் என்ன, அதன் பின்னால் இருக்கும் உயிரியல், வேதியியல் நிகழ்வுகள் என்னென்ன என்பது போன்ற கேள்விகளுக்கு நீண்ட நாட்களாக விடை தெரியாமல் இருந்துவந்தது.
 • மிகச் சிக்கலான ஒரு ஆய்வுக்குப் பின், எரித்ரோபாய்டின் சுரப்புக்கு ‘ஹைபாக்ஸியா இண்ட்யூஸ்டு ஃபேக்டர் -1ஆல்ஃபா’ (Hypoxia Induced Factor -1 alpha, சுருக்கமாக HIF-1⍺) என்ற புரதம் தூண்டுதலாக இருப்பதைக் கண்டறிந்தார்கள். 
 • இந்தப் புரதம் சிதைக்கப்பட்டால் எரித்ரோபாய்டின் சுரப்பதில்லை. 
 • இது சிதைக்கப்படுவதை ‘வான் ஹிப்பல் லிண்டா மரபணு’ (Von Hippel Lindau Gene) கட்டுப்படுத்துவதையும், அந்தச் சிதைத்தல் வினையில் ஆக்ஸிஜனுக்குப் பங்கிருப்பதையும் கண்டுபிடித்தார்கள்.
 • இந்தச் செயல்முறையைக் கண்டறிந்ததற்காக, கிரெக் எல். செமன்ஸா, வில்லியம் ஜி. கேலின் ஜூனியர், பீட்டர் ஜே. ராட்க்ளிஃப் ஆகிய மூவருக்கும் 2019-ம் ஆண்டுக்கான மருத்துவ நோபல் பரிசு வழங்கப்படுகிறது. 
 • இந்த ஆய்வு தொற்றுநோய் மருத்துவம், புற்றுநோய் மருத்துவம், செல் செயல்பாடு, புண் ஆறுதல் ஆகிய பல இடங்களில் பயன்படக்கூடியது. 
 • HIF-1 செயல்பாட்டைத் தூண்டுதல், செயல்பாட்டைக் கட்டுப்படுத்துதல் இரண்டுமே மருத்துவரீதியாக முக்கியமானவை.

மின்கல மேம்பாட்டு ஆராய்ச்சி :
 • ஆக்ஸிஜன் குறைந்தால் உயிர்கள் எப்படிப் போர்க்கால அடிப்படையில் இயங்குகின்றனவோ, அதுபோலத்தான் நம் மின்னணுச் சாதனங்களும். 2019-ம் ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசு, நம் அன்றாட வாழ்வில் நீங்காத அங்கம் வகிக்கும் மின்னணுச் சாதனங்களைச் சாத்தியப்படுத்திய மின்கலங்களை வடிவமைத்ததில் பங்காற்றியதற்காக வழங்கப்படுகிறது. மின்சாரத்தை நமக்குத் தேவையான இடங்களுக்கெல்லாம் எடுத்துச் செல்ல‌ ஏதுவாக இருக்கும் கருவியான மின்கலங்கள் மக்களின் வாழ்க்கைத் தரத்தில் ஏற்படுத்திய தாக்கம் அளப்பரியது.
 • மின்கலம் என்பது ஒரு நேர்மின் முனையம், ஒரு எதிர்மின் முனையம், ஒரு மின்பகுளி (electrolyte) ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது. அயனிகள் மின்பகுளி வழியாக ஒரு முனையத்தில் இருந்து இன்னொரு முனையத்துக்குப் பயணிக்கும். அதேநேரத்தில் எலெக்ட்ரான்கள் மின்கலத்துக்கு வெளியே மின்சுற்றில் பயணிக்கும். இப்படித்தான் ஒரு மின்கலம் மின்சாரத்தைத் தருகிறது.
 • தொடக்ககால மின்கலங்கள் திரவ நிலையில் அமிலங்களைக் கொண்டிருந்தன; இன்றைக்குச் சுவர்க்கடிகாரங்களில் பயன்படுத்தக்கூடிய திடநிலை மின்பகுளிகளைக் கொண்ட மின்கலங்கள் (dry cell) பின்னர் வந்தன. ஆனால், மின் ஆற்றல் குறைந்தால் மீண்டும் மின்சாரம் ஏற்றிப் பயன்படுத்தக்கூடிய வகையிலான மின்கலங்களுள் லித்தியம் அயனி மின்கலங்கள் முக்கியமானவை.
 • லித்தியம், எளிதில் எலெக்ட்ரானை இழக்கும் தன்மை கொண்ட ஒரு தனிமம். அப்படி வெளியேறும் எலெக்ட்ரானை மின்சுற்றில் சுற்றவிட்டு, லித்தியம் அயனியை ஒரு முனையத்தில் இருந்து இன்னொரு முனையத்துக்குப் பாயவிட்டால் கச்சிதமான மின்கலம் தயார்.
 • ஆனால், இரண்டு வாக்கியத்தில் அடங்கிவிட்ட இந்தச் செயலைச் செய்வது மிகவும் சிக்கலான காரியம். லித்தியத்தின் ஆபத்தான வெடிக்கும் பண்புகளைச் சமாளிப்பதும், மின்கலத்தின் திறனை மேம்படுத்தும் பொருட்களைப் பயன்படுத்துவதும் முக்கியம். இன்றைக்குப் புழக்கத்தில் உள்ள லித்தியம் அயனி மின்கலங்களின் ஆராய்ச்சி, வடிவமைப்பு ஆகியவற்றில் முக்கியப் பங்காற்றிய அகிரா யோஷினோ, ஸ்டான்லி விட்டிங்ஹாம், ஜான் பி. குடெனஃப் ஆகிய மூவருக்கும் இந்த ஆண்டு வேதியியல் நோபல் பகிர்ந்தளிக்கப்படுகிறது.
பேரண்டமும் புறக்கோள்களும்!
 • பேரண்டம் நம் கற்பனைக்கு எட்டாத அளவுக்குப் பிரம்மாண்டமானது. பல ஆண்டுகளாக அதன் பிறப்பை, இயக்கத்தைக் கோட்பாட்டுரீதியாகவே வரையறுத்துவந்தார்கள்; ஆய்வுரீதியாக எந்தச் சான்றும் இருக்காது. 
 • அதற்குத் தேவையான கருவிகள் நம்மிடையே இல்லாததே இதற்குக் காரணம். ஒரு துறை கோட்பாட்டுரீதியில் இருக்கும்போது, சில ஆய்வுகள் அந்தத் துறையை ஊகங்கள் அடிப்படையிலான கணிதம் சார்ந்த ஆய்வுத் துறையாக மாற்றிவிடும்.
 • அப்படி அண்டவியல் துறையைக் கோட்பாட்டுத் துறையில் இருந்து, ஆய்வுகள் சார்ந்த துறையாக மாற்றிய பெருமை ஜேம்ஸ் பீபிள்ஸ் என்பவரைச் சேரும். 
 • அண்ட நுண்ணலைப் பின்புலம் (Cosmic Microwave Background) என்று அறியப்படும் பிரபஞ்சம் முழுக்க விரவியிருக்கிற நுண்ணலைகளை ஆராய்ந்து பிரபஞ்சம் உருவாகும்போது எப்படி இருந்தது, பின் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்தன, பிரபஞ்சத்தின் பொருண்மை (Matter) எத்தனை சதவீதம், ஆற்றல் எத்தனை சதவீதம், நம்மால் உணர முடியாத கரும் பொருள் (Dark Matter), கரும் ஆற்றல் (Dark Energy) எத்தனை சதவீதம் என்று அவர் கண்டறிந்தார். 
 • இவருக்கு இந்த ஆண்டு இயற்பியல் பரிசுத்தொகையில் பாதி பகிர்ந்தளிக்கப்படுகிறது.
 • இரவு வானில் தெரியும் விண்மீன்களை எண்ணத் தொடங்கினால் நம் வெறும் கண்களுக்குப் புலப்படும் விண்மீன்களே ஆயிரக்கணக்கில் இருக்கும். ஆற்றல் வாய்ந்த தொலைநோக்கிகள் மூலம் லட்சக்கணக்கான விண்மீன்களைக் காணலாம். 
 • ஆனால், நம் சூரியனைப் போலவே அந்த விண்மீன்களையெல்லாம் கோள்கள் சுற்றிவருமா. 
 • அப்படியென்றால் அவை எப்படி இருக்கும்?பிற விண்மீன்களைச் (புறக்கோள்கள்/ exoplanets) சுற்றும் கோள்களைக் கண்டறிய உதவும் தொழில்நுட்பங்கள் அனைத்தும், கோள்கள் சுற்றிவருவதால் விண்மீனின் ஒளி அளவு, துடிப்பெண்ணில் ஏற்படும் மாற்றங்களை அலசுவதை அடிப்படையாகக் கொண்டவை. 
 • அந்தத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி 1995-ம் ஆண்டு 51 பெகாஸஸ் (51 Pegasus) என்ற விண்மீனைச் சுற்றும் 51 பெகாஸஸ் பி (51 Pegasus b) என்னும் கோளை, பிரான்ஸைச் சேர்ந்த மிஷல் மயோர், டிடியர் க்விலோ ஆகியோர் கண்டுபிடித்தார்கள்.
 • அதன் பிறகு இன்றுவரை சுமார் நாலாயிரத்துக்கும் மேற்பட்ட விண்மீன்களைச் சுற்றும் கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 
 • வேறொரு விண்மீனைச் சுற்றும் முதல் கோளைக் கண்டுபிடித்தமைக்காக அந்த இருவருக்கும் இந்த ஆண்டு இயற்பியல் நோபல் பரிசின் மற்றொரு பாதி பகிர்ந்தளிக்கப்படுகிறது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

இஸ்ரோவின் ‘ரிசாட்-2பிஆர்1’ உட்பட உலக நாடுகளின் 10 செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி-சி 48 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது 

ஹரிகோட்டாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்துக்கு இஸ்ரோவின் ரிசாட்-2பி ஆர்1 மற்றும் 9 வெளிநாட்டு செயற்கைக்கோள்களுடன் கொண்டு செல்லப்படும் பிஎஸ்எல்வி- சி48 ராக்கெட்.

விவசாயம், பேரிடர் மேலாண்மை ஆகியவற்றுக்கு உதவும் இஸ்ரோவின் ‘ரிசாட்-2பிஆர்1’ உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த மொத்தம் 10 செயற்கைக் கோள்கள் ஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி - சி48 ராக்கெட் மூலம் நாளை மாலை விண்ணில் செலுத்தப்படுகின்றன.

விவசாயம், காடு வளர்ப்பு, பேரிடர் மேலாண்மை ஆகியவற்றுக்கு உதவும் வகையில் துல்லியமான வானிலை தரவுகளை பெறும் விதமாக ‘ரிசாட்-2பிஆர்1’ செயற்கைக் கோளை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) உருவாக்கியுள்ளது. ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி - சி48 ராக்கெட் மூலம் இந்த செயற்கைக் கோள் நாளை (டிச.11) மாலை 3.25 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது. இதற்கான கவுன்ட்-டவுன் இன்று தொடங்குகிறது.

இந்த செயற்கைக் கோளுடன் சேர்ந்து ஜப்பான், இத்தாலி, இஸ்ரேல் ஆகிய நாடுகளின் தலா ஒரு செயற்கைக் கோள், அமெரிக்காவின் 6 செயற்கைக் கோள்கள் என மொத்தம் 9 வெளிநாட்டு செயற்கைக் கோள்கள் வர்த்தக ரீதியில் விண்ணில் ஏவப்பட உள்ளன.

வானிலை தொடர்பான ரேடார் படங்களை வழங்கும் ‘ரிசாட்-2பிஆர்1’ புவி கண்காணிப்பு செயற்கைக் கோள் 628 கிலோ எடை கொண்டது. இது 576 கி.மீ. உயரத்தில் நிலைநிறுத்தப்பட உள்ளது. செயற்கைக் கோள் அந்த இலக்கை அடைய 21 நிமிடங்கள், 19 விநாடிகள் எடுத்துக்கொள்ளும் என்று கூறப்படுகிறது. இதன் ஆயுள்காலம் 5 ஆண்டுகள். இது பிஎஸ்எல்வி வகை ராக்கெட்டின் 50-வது பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Sunday, 8 December 2019

பாலங்கள்

செவிச் செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை என்பது வள்ளுவர் வாக்கு. கற்றலின் கேட்டல் நன்று என்பார்கள். கேட்டுத் தெளியும் கருத்துகள் மனதில் ஆழமாகப் பதியும். அதனால்தான் ஆசிரியர் பாடங்களின் மூலம் விளக்க, நாம் கேட்டுக் கேட்டு அறிந்துகொள்கிறோம். இங்கே கேள்வி பதில் வடிவில் சில விஷயங்களை அறிவோம். இந்த வாரம் பாலங்களைப் பற்றி பார்க்கலாம்...

பாலங்களில் எத்தனை வகைகள் உள்ளன?

தரைப்பாலம், கயிற்றுப் பாலம், மூங்கில் பாலம், கற்பாலம், படகு பாலம், தூண் பாலம், திறப்புடன்கூடிய தூக்கு பாலம், தொங்கு பாலம், கம்பி வடம் பாலம், சுழலும் பாலங்கள், செங்குத்தாக நகரும் லிப்ட் பாலங்கள், பிளவு பாலம், பாஸ்கல் பாலம் மற்றும் சிற்ப பாலங்கள் என பல வகை பாலங்கள் வழக்கத்தில் உள்ளன.

உலகின் உயரமான சாலைப் பாலம் எது?

இந்திய ராணுவத்தால் லடாக் பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள பெய்லி பிரிட்ஜ் பாலம்தான் உலகில் உயரமாக அமைக்கப்பட்ட சாலைப் பாலமாகும். இது ஜம்மு காஷ்மீர் பகுதியில் லடாக் பள்ளத்தாக்கில் 5 ஆயிரத்து 600 மீட்டர் உயரத்தில் இரு குன்றுகள் இடையே ஆற்றை கடந்து பயணிக்கும் வகையில் அமைக்கப்பட்டு உள்ள பாலமாகும். 30 மீட்டர் நீளம் கொண்டது. இது 1982-ம் ஆண்டு இந்திய ராணுவத்தால் கட்டமைக்கப்பட்டது.

லண்டன் பாலம் நடுவில் பிளவு பட்டுள்ளதே ஏன்?

இங்கிலாந்தின் லண்டன் நகரில் தேம்ஸ் நதியின் குறுக்கே டவர் பிரிட்ஜ் எனும் பாலம் 1894-ல் கட்டப்பட்டது. இது லண்டனின் அடையாளங்களில் ஒன்றாக விளங்குகிறது.

கப்பல்கள் தேம்ஸ் நதியை கடந்து செல்ல வசதியாக லண்டன் பாலம் பிளவுபட்டு வழியை திறந்துவிடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பயன்பாட்டிற்காக பிளவு பாலம், தூக்கு பாலம், செங்குத்து பாலம் போன்ற பாலங்கள் உலகின் பல இடங்களில் பல்வேறு நீர்நிலைகளின் குறுக்கே அமைக்கப்பட்டு உள்ளன. தமிழகத்தில் ராமேஸ்வரத்தில் அமைக்கப்பட்டுள்ள ரெயில்வே தூக்குபாலம் அவற்றில் ஒன்றாகும்.

புகழ்பெற்ற கோல்டன் கேட் பாலம் எங்குள்ளது, அது ஏன் சிறப்பு பெற்றது?

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் கோல்டன் கேட் பாலம் உள்ளது. இந்த பாலம் சிறப்பு பெற பல காரணங்கள் உண்டு. குறிப்பாக அது அமைந்திருக்கும் இடம் வேகமான நீரோட்டம் கொண்ட இடமாகும். மேலும் இந்த பகுதியில் வேகமான காற்று மற்றும் மூடுபனியும் நிலவும். இத்தகைய சீதோஷ்ண நிலையைத் தாங்கும் நல்ல உறுதித்தன்மையுடன் சிறந்த தொழில்நுட்ப கட்டமைப்புடன் பாலம் கட்டப்பட்டுள்ளதால் கோல்டன் கேட் பாலம் உலகளாவிய புகழ்பெற்ற பாலங்களில் ஒன்றாக விளங்குகிறது. 1964-ம் ஆண்டிற்கு முன்புவரை இந்த இடத்தில் மிகப்பெரிய தூக்கு பாலம்தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பேண்டூன் பாலம் ஏன் உருவாக்கப்படுகிறது, அதன் பயன் என்ன?

பேண்ட்டுன் பாலம் என்பது ஆற்றில் வரிசையாக படகுகளை ஒன்றிணைத்து உருவாக்கப்படும் படகு பாலமாகும். ராணுவ வீரர்கள் ஆற்றை கடப்பதற்காக இந்த வகை பாலங்கள் பல இடங்களில் போர்க்காலங்களில் உருவாக்கப்பட்டிருக்கின்றன. சில இடங்களில் பாதசாரிகள், சிறிய வாகனங்கள் ஆற்றை கடப்பதற்காக தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ படகு பாலங்களை உருவாக்குவது உண்டு. உலகின் பல்வேறு இடங்களில் படகுப் பாலங்கள் உள்ளன.

உலகின் நீளமான பாலம் எது?

சீனாவில் தன்யாங் மற்றும் ஹன்ஷான் இடையே உள்ள கிராண்ட் பிரிட்ஜ் பாலம்தான் உலகின் மிக நீளமான பாலமாகும். 2011-ம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த பாலம் 165 கிலோமீட்டர் நீளம் கொண்டது. ரெயில்வே சேவைக்காக வெறும் 4 ஆண்டு காலத்தில் 10 ஆயிரம் பணியாளர்களைக் கொண்டு இந்த பாலம் கட்டமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதுபோல இன்னும் பிரம்மாண்டமான பல பாலங்கள் சீனாவில் உள்ளது நினைவூட்டத்தக்கது.

தாய்லாந்தில் உலகின் நீளமான சாலைப் பாலம் உள்ளது. ‘பாங் நா’ என அழைக்கப்படும் இந்த சாலைப்பாலம் 55 கிலோமீட்டர் நீளம் கொண்டதாகும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தேதி சொல்லும் சேதி

ஜனவரி முதல் வாரம் சாலை பாதுகாப்பு வாரம்.

ஜனவரி 15 ராணுவ தினம். ஜெனரல் கே.எம்.கரியப்பா இந்திய ராணுவ சீப் கமாண்டராக பொறுப்பேற்ற தினமே இது. ஜனவரி 25 தேசிய வாக்காளர் தினம்.

பிப்ரவரி 28 தேசிய அறிவியல் தினம்

மார்ச் 21 இரவும் பகலும் சம நேரம் கொண்ட தினம். உலக வன தினமும் இதே நாளில் பின்பற்றப்படுகிறது.

மார்ச் 22 உலக தண்ணீர் தினம்

ஏப்ரல் 22 பூமி தினம்.

மே முதல் வாரம் மலேரியா தடுப்பு வாரம்

மே 3 பத்திரிகை சுதந்திர தினம்.

மே 15 சர்வதேச குடும்ப தினம்

மே 24 காமன்வெல்த் தினம்

மே 31 புகையிலை ஒழிப்பு தினம்

ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினம்

ஜூலை 11 உலக மக்கள் தொகை தினம்

செப்டம்பர் 8 சர்வதேச எழுத்தறிவு நாள், கண்தான தினம்.

செப்டம்பர் 16 உலக ஓசோன் தினம்

செப்டம்பர் 21 இரவு பகல் சமநேரம் கொண்ட நாள்.

அக்டோபர் 1 ரத்ததான தினம், உலக முதியோர் தினம்

அக்டோபர் 16 உலக உணவு தினம்

அக்டோபர் 24 ஐ.நா. தினம்

நவம்பர் 10 சர்வதேச அறிவியல் தினம்.

நவம்பர் 11 தேசிய கல்வி தினம்

டிசம்பர் 7 கொடிநாள்.

டிசம்பர் 10 நோபல் பரிசு வழங்கும் நாள், மனித உரிமை தினம்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

இரு பெயரிடுதல் முறை

உலகம் முழுவதும் உள்ள மக்கள் குழப்பமின்றி புரிந்து கொள்ள ஏதுவாக தாவரங்கள் மற்றும் விலங்குகளை இரு சொல்லால் ஆன ஒரே அறிவியல் பெயரால் அழைக்கும் முறை உள்ளது. இதை ஆங்கிலத்தில் பைனாமியல் நாமன்கிலச்சர் என்பார்கள்.

இந்த முறையை அறிவியல் பூர்வமாக முதலில் உருவாக்கியவர் ஸ்வீடன் நாட்டு தாவரவியல் வல்லுநரான கரோலஸ் லின்னேயஸ் ஆவார். இவரே இருசொல் பெயர்முறையின் தந்தை எனப்படுகிறார்.

லின்னேயஸுக்கு முன்னரே கஸ்பர்டு பாஹின் என்பவர் இந்த முறையை அறிமுகம் செய்துவிட்டதாக சில ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் பாஹீன் பின்பற்றிய முறை அறிவியல் பூர்வமானதல்ல என்று புறம்தள்ளப்படுகிறது.

அசாடிரசக்டா இண்டிகா, எலபஸ் மேக்சிமஸ், ஹோமோ செப்பியன்ஸ் போன்றவை இரு சொல் பெயரிடல் முறைக்கு சில சான்றுகள். இந்த மூன்றும் முறையே வேம்பு, ஆசிய யானை, மனிதன் ஆகியவற்றை குறிக்கும் இருசொல் பெயர்களாகும்.

இந்த முறையில் எழுதும்போது முதலில் உள்ள சொல் பேரினப் பெயரை குறிக்கும். அதன் முதல் எழுத்தை ஆங்கிலத்தில பெரிய எழுத்தில் குறிப்பிடுவார்கள். இரண்டாவது சொல் சிற்றினத்தை குறிக்கும். பேரினச் சொல் ஒரு பெயர்ச் சொல்லாகும், சிற்றினப் பெயர் ஒரு உரிச்சொல்லாகும்.

ஹோமோ என்பது மனித இனத்தின் பேரினப் பெயர், செப்பியன்ஸ் என்பது தற்கால மனிதர்களை குறிக்கும் சிற்றின பெயராகும். ஹோமோ செப்பியன்ஸ் என்றால் புத்திசாலி மனிதன் என்பது பொருளாகும். மனிதனின் பரிணாம வளர்ச்சியில் இதற்கு முந்தைய மனித இனத்தின் பெயர் ஹோமோ எரக்டஸ் எனப்படுகிறது. இதற்கு நிமிர்ந்து நின்ற மனிதன் என்பது பொருளாகும்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

வினாவங்கி - பொது அறிவு குவியல்,

1. பல்லவ பேரரசை நிறுவியவர் யார்?

2. நிலவில் அதிக அளவில் காணப்படும் கனிமம் எது?

3. டெல்லி தீன்பானாவை கட்டியவர் யார்?

4. யூதர் மற்றும் எத்தியோபியா பழங்குடியினர் எப்படி அழைக்கப்படுகிறார்கள்?

5. வேதத்துக்கு திரும்புக எனும் முழக்கம் யாருடையது?

6. கடல் அலை, காற்று, பெட்ரோல் இவற்றில் எது புதுப்பிக்க இயலாத எரிசக்தி?

7. பத்தினி வழிபாட்டை ஏற்படுத்தியவர் யார்?

8. தமிழகத்தில் காற்றாலைக்கு புகழ்பெற்ற இடம் எது?

9. மாநில எல்லை சீரமைப்புக்காக உருவாக்கப்பட்டகமிட்டி எது?

10. குடியரசுத் தலைவரால் இந்த அவையை கலைக்க முடியாது?

11. இந்திரா ஆவாஸ் திட்டத்தின் நோக்கம் எது?

12. லுக்கா பேசியாலா அறிஞர் எந்த துறையில் புதுமை படைத்தார்?

13. பாசிட்ரானை கண்டுபிடித்தவர் யார்?

14. வெப்பத்தால் விரிவடையாத உலோக கலவை எது?

15. உலர்ந்த பனிக்கட்டி என்பது என்ன?

16. ஐந்தாவது வேதம் எனப்படுவது?

17. பேகம்பூர் மசூதி எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?

18. யூகேரியாட்டுகளில் எந்த வகை ரைபோசோம் காணப்படுகிறது?

19. ரத்தத்தை சுத்தப்படுத்தும் உறுப்பு எது?

20. ஹைடு guide எனும் பிரபல நூலை எழுதிய பிரபலம் யார்?

விடைகள்

1. சிம்மவிஷ்ணு, 2. டைட்டானியம், 3. ஹுமாயூன், 4. செமிட்டிஸ், 5.தயானந்த சரஸ்வதி, 6.பெட்ரோல், 7. செங்குட்டுவன், 8. முப்பந்தல், 9. தார் கமிட்டி10. மாநிலங்களவை, 11. இலவச வீட்டு வசதி கொடுத்தல், 12. இரட்டைப்பதிவு கணக்குப்பதிவியல், 13. டிராக் ஆண்டர்சன், 14. இன்வார், 15. திண்ம கார்பன்டைஆக்ஸைடு, 16. ஆயுர்வேதம், 17. திண்டுக்கல், 18. 80எஸ், 19. நுரையீரல், 20. ஆர்.கே.நாராயண்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday, 30 November 2019

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம்

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, 28 November 2019

பிஎஸ்எல்வி சி-47 ராக்கெட் மூலம் நேற்று செலுத்தப்பட்ட கார்ட்டோசாட்-3 செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம் 25 செ.மீ. அளவுக்கு நிலப்பரப்பை துல்லியமாக படம்பிடிக்க முடியும்

புவி கண்காணிப்புக்கான கார்ட்டோ சாட்-3 உள்ளிட்ட 14 செயற்கைக் கோள்கள், பிஎஸ்எல்வி சி-47 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக நேற்று விண்ணில் செலுத்தப்பட்டு நிலைநிறுத்தப்பட்டன.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ), புவி கண் காணிப்புக்கான அதிநவீன கார்ட் டோசாட்-3 செயற்கைக்கோளை தயாரித்தது. இந்த செயற்கைக் கோளுடன் அமெரிக்காவின் 13 நானோ வகை செயற்கைக் கோள்களையும் பிஎஸ்எல்வி சி-47 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டு, அதற்கான 26 மணி நேர கவுன்ட்டவுன் நேற்று முன்தினம் தொடங்கியது.

அதைத் தொடர்ந்து ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி-47 ராக்கெட் நேற்று காலை 9.28 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. தரையில் இருந்து புறப்பட்ட 17 நிமிடம் 42 விநாடியில் 515 கி.மீ தூரத்தில் திட்டமிட்ட சூரிய ஒத்திசைவு சுற்றுப்பாதையில் செயற்கைக்கோளை ராக்கெட் வெற்றிகரமாக நிலைநிறுத்தியது. அடுத்த 10 நிமிட இடைவெளியில் அமெரிக்காவுக்குச் சொந்தமான 13 நானோ வகை செயற்கைக் கோள்களும் அதற்கான சுற்றுப் பாதைகளில் நிலைநிறுத்தப்பட்டன.

மூன்றாம் தலைமுறை செயற் கைக்கோளான கார்ட்டோசாட், 1,625 கிலோ எடையுடையது. இதன் ஆயுட்காலம் 5 ஆண்டுகள். இது முழுவதும் புவி கண்காணிப்பு மற்றும் ராணுவப் பாதுகாப்புக்கு பயன்படும். இதிலுள்ள நவீன பல்நோக்கு கேமராக்கள் புவியை பல்வேறு கோணங்களில் முப்பரி மாணத்தில் படம் எடுக்கும். அனைத்து சீதோஷ்ண நிலை களிலும், இரவு நேரங்களிலும் படம் பிடிக்கும் திறன் கொண்டது.

இதேபோல், நகர்ப்புற திட்ட மிடல், விவசாயம், பேரிடர் மேலாண் மைக்கும் இது பயன்படும். மேலும், போக்குவரத்து கண்காணிப்பு, ஊரகப் பகுதி வளங்களைக் கண் டறிதல் மற்றும் அடிப்படை கட்ட மைப்பை மேம்படுத்துதல், கட லோர நிலங்களை முறைப்படுத்தல், நீர்வள மேம்பாடு, வனங்களைக் கண்காணித்தல் போன்ற புவி சார்ந்த ஆய்வு பணிகளுக்கும் பயன்படும். இது கார்ட்டோசாட் வரிசையில் 9-வது செயற்கைக்கோளாகும்.

இதுதவிர, இந்தியாவின் நிலப்பரப்பு மற்றும் அதன் எல்லைப் பகுதிகளையும் இது கண்காணிக்கும். இதன்மூலம் நாட்டின் எல்லைப் பகுதிகளில் தீவிரவாதிகள் ஊடுருவலைத் தடுக்க முடியும்.

கார்ட்டோசாட்டைத் தொடர்ந்து ரிசாட்-2பிஆர்1, ரிசாட்-2பிஆர்2 ஆகிய செயற்கைக்கோள்களும் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் டிசம்பர் மாதம் விண்ணில் ஏவப்பட உள்ளன. இதனால் நாட்டின் ராணுவ பாதுகாப்பு மேலும் பலமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது:

இதற்கு முன்பு ஏவப்பட்ட கார் ட்டோசாட் வகை செயற்கைக்கோள் கள் மூலம் அதிகபட்சம் 65 செ.மீட்டர் அளவுள்ள நிலப்பரப்பை மட்டுமே படம் பிடிக்க முடியும். ஆனால், கார்ட்டோசாட்-3 செயற் கைக்கோளில் உள்ள நவீன கேமராக் கள் மூலம் 25 செ.மீட்டர் பரப்பளவை நெருங்கி விண்ணில் இருந்து மிகத் துல்லியமாக 3-டியில் படம் பிடிக்கலாம். அதை 2-டிக்கு மாற்றும் வசதியும் உள்ளது. அமெரிக்காவின் வேர்ல்டுவியூ-3 செயற்கைக்கோள் நிலப்பரப்பை அதிகபட்சம் 31 செ.மீ அளவில்தான் படம் எடுக்கும். இதன்மூலம் உலகிலேயே மிகத் துல்லியமாக நிலப்பரப்பை படம் எடுக்கும் திறனை நாம் பெற்றுள்ளோம்.

இதில் உள்ள கேமராக்கள், செயற்கைக்கோள் சுழற்சிக்கேற்ப தன் கோணங்களை மாற்றிக் கொள்ளும். அதிலுள்ள நவீன ஆண்டெனா அதிக அளவு படங்கள் மற்றும் தகவல்களை ஒருங்கிணைத்து விரைவாக அனுப்பவும், பெறவும் உதவியாக இருக்கும். இதன் சிறப்பம்சமே 24 மணி நேரமும் கண்காணிப்பு பணிகளுக்கு பயன்படுத்தலாம். இதனால் நமது நாட்டின் பாதுகாப்பு மேலும் வலுப்பெறும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இஸ்ரோ, 1999-ம் ஆண்டு முதல் இதுவரை 368 செயற்கைக் கோள்களை விண்ணில் வெற்றி கரமாக நிலைநிறுத்தி சாதனை புரிந் துள்ளது. அதில் 48 செயற்கைக் கோள்கள் இந்தியாவுக்காகவும், 310 செயற்கைக்கோள்கள் வணிக ரீதியாக வெளிநாடுகளுக்காகவும் அனுப்பப்பட்டன. மேலும் 10 செயற்கைக்கோள்கள் மாணவர்கள் தயாரித்தவையாகும்.

கார்ட்டோசாட்-3 செயற்கைக் கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரோ விஞ்ஞானி களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரது ட்விட்டர் பதிவில், ‘‘கார்ட் டோசாட்-3 மற்றும் அமெரிக்காவின் 13 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-47 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டதற்காக, இஸ்ரோ விஞ்ஞானிகள் குழுவுக்கு மனமார்ந்த பாராட்டு. தொலையுணர்வு திறனை அதிநவீன கார்ட்டோசாட்-3 அதிகரிக்கும். இஸ்ரோ விஞ்ஞானிகளின் சாதனையால், நாடு மீண்டும் பெருமையடைகிறது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 26 November 2019

நிலக்கொடை

பலவிதமான நிலக்கொடைகள் உள்ளன. அவை பற்றி அறிவோம்...

மடப்புரம் - மடத்துக்கு வழங்கப்படும் நிலம்

தேவதானம் - சிவன் கோவிலுக்கு வழங்கப்படும் நிலம்

பிரம்மதேயம் - பிராமணர்களுக்கு வழங்கப்படும் நிலம்.

பள்ளிச்சந்தம் -சமணப்பள்ளி, புத்தவிகாரங்களுக்கு வழங்கப்படும் நிலம்

திருவிடையாட்டம் - திருமால் கோவிலுக்கு வழங்கப்படும் நிலம்.

சாலபோகம் - அந்தணர் சிவயோகி நிலம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

சுதந்திர போராட்ட பத்திரிகைகள்

* யங் இந்தியா - காந்திஜி

* நியூ இந்தியா - அன்னி பெசன்ட்

* இந்தியா, விஜயா - பாரதியார்

* கேசரி, மராட்டா - பால கங்காதர திலகர்

* நேஷனல் ஹெரால்ட் - ஜவகர்லால் நேரு

* இண்டிபெண்டன்ட் - மோதிலால் நேரு

* பெங்காலி - சுரேந்திரநாத் பானர்ஜி

* தி ஹிண்டு - சுப்பிரமணிய ஐயர்

* அல்ஹிலால் - அபுல்கலாம் ஆசாத்

* நவசக்தி, தேசபக்தன் - திரு.வி.க.

* ஞானபானு - சுப்பிரமணிய சிவா

* பாலபாரதி - வ.வே.சு. ஐயர்

* காமன் வீல் - அன்னிபெசன்ட்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

சார்பு உயிரிகள்

நீங்கள் சொந்த உழைப்பில் சோறு சாப்பிடுபவராக இருந்தாலும் கூட உயிரியல் அடிப்படையில் நீங்கள் ஒரு மற்றவற்றை சார்ந்து வாழும் பிறசார்பு உயிரி என்றே அழைக்கப்படுவீர்கள். வளிமண்டலத்தில் இருந்து கார்பன்-டை-ஆக்சைடையும், மண்ணிலிருந்து நீரையும் உறிஞ்சி ஸ்டார்ச் தயாரிக்கும் தாவரங்களும், ஒளிச்சேர்க்கை, வேதிச்சேர்க்கை மூலம் உணவு தயாரிக்க்கும் பாக்டீரியாக்களும் மட்டுமே உயிரியலில் மற்றவற்றை சாராமல் வாழும் தற்சார்பு உயிரிகளாகும்.

ஒளிச்சேர்க்கை செய்யும் திறன் அற்ற உயிரினங்களான பூஞ்சைகளும், விலங்குகளும் மனிதன் உட்பட பிறசார்பு உயிரிகள் எனப்படுகின்றன. மேலும் பிறசார்பு உயிரிகள் அவை உணவு எடுத்துக் கொள்ளும் முறை மற்றும் உணவை அடிப்படையாகக் கொண்டு ஒட்டுண்ணிகள், சாறுண்ணிகள், தாவர உண்ணிகள், விலங்குண்ணிகள், அனைத்துண்ணிகள் என பலவகையாக வகைப்படுத்தப்படுகின்றன. மனிதன் இவற்றில் அனைத்துண்ணி வகையில் அடங்குவான்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

முதல் பேரரசு

இந்தியாவின் முதல் பேரரசர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் சந்திரகுப்த மவுரியர். மகதத்தை ஆண்ட நந்த வம்சத்தின் கடைசி மன்னராக இருந்தவர் தனநந்தர். இவர் தனது முதன்மை அமைச்சராக இருந்த கவுடில்யர் என்ற சாணக்கியரை ஒரு சந்தர்ப்பத்தில் அவமானப்படுத்திவிட்டாராம். அதனால் கோபமுற்ற சாணக்கியர், தனநந்தரை பதவியிலிருந்து அகற்றுவதற்கு சபதம் ஏற்றார். அவர் விளையாட்டு சிறுவனாக இருந்த சந்திர குப்தருக்கு பயிற்சி கொடுத்து வெற்றி வீரனாக்கினார் என்று வரலாறு கூறுகிறது.

தனநந்தரை வென்று மவுரிய வம்சத்தை நிறுவிய சந்திர குப்தர், தனநந்தருக்கும் முரா என்ற தாழ்ந்த குல பெண்ணுக்கும் பிறந்தவர் என்று கூறுவோரும் உண்டு. மவுரியர் என்பது சந்திர குப்தரின் தாயார் பெயரில் இருந்தோ, மயிலின் வடமொழிச் சொல்லான மயூர் என்பதில் இருந்தோ (சந்திர குப்தன், மயில் விற்கும் குடும்பத்தை சேர்ந்தவன் என்பதால்) வந்திருக்க வேண்டும் என்பார்கள்.

சந்திரகுப்தரின் மகன் பிந்துசாரர், அவருடைய மகனே உலகப் புகழ்பெற்ற அசோகர் ஆவார். சந்திரகுப்த மவுரியர், அலெக்சாண்டரின் தளபதி செல்யூகஸ் நிகேடரை போரில் வென்றார். பிருகத்ரதா, கடைசி மவுரிய மன்னராவார். அவர் கி.மு. 185-ல் புஷ்யமித்ர சங்கரால் கொல்லப்பட்டார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பொது அறிவு குவியல்,

1. ஓசோன் படலத்தின் தடிமன் எந்த அலகால் அளக்கப்படுகிறது?

2. நைலான், பருத்தி, பாலியெஸ்டர் இவற்றில் எந்த இழை எளிதில் தீப்பற்றுவது இல்லை?

3. எலியின் சிறுநீரால் பரவும் நோய் எது?

4. சடுதி மாற்றத்தை கண்டறிந்தவர் யார்?

5. கணினி அலகில் ஒரு ‘நிபிள்’ என்பது எதற்கு சமம்?

6. பாராளுமன்ற கூட்டத்தை எதிர்கொள்ளாமல் பதவி காலம் முடிவுற்ற இந்திய பிரதமர் யார்?

7. பீகார் மாநிலம் சிந்திரியில் எந்த வகை தொழிற்சாலைகள் நிரம்பி உள்ளன?

8. டோக்கன் நாணய முறையை அறிமுகம் செய்தவர் யார்?

9. சோனோரன் பாலைவனம் எந்த கண்டத்தில் உள்ளது?

10. அணுவின் ஆரம் எவ்வளவு?

11. அரிக்கமேடு, முசிறி, அலெக்சாண்டிரியா இவற்றில் எது இந்தியர்கள் மற்றும் ரோமானியர்களின் முக்கிய வணிக நகரமாக விளங்கியது?

12. உலக ஊழல் குறியீட்டை வெளியிடும் அமைப்பு எது?

13. அணு உலையில் எரிபொருளாக பயன்படும் இரு உலோகங்கள் எவை?

14. அதிக வெப்பத்தை தாங்கும் கண்ணாடி வகை எது?

15. லண்டனில் உள்ள இந்தியா ஹவுசில் இருந்து இந்திய விடுதலைக்காக போராடியவர் யார்?

விடைகள்:

1. டாப்ஸன், 2. பருத்தி, 3. லெப்டோஸ்பைரோஸிஸ், 4. டி.எச்.மார்கன், 5. 4 பிட்டுகள், 6. சரண்சிங், 7. உர தொழிற்சாலைகள், 8. முகமது பின் துக்ளக், 9. வட அமெரிக்கா, 10. 10-10மீ, 11. அலெக்சாண்டிரியா, 12. பன்னாட்டு வெளிப்படை நிறு வனம், 13. யுரேனியம் மற்றும் புளூடோனியம், 14. பைரக்ஸ் கண்ணாடி, 15. ஷியாம்ஜி கிருஷ்ணவர்மா.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 18 November 2019

தாவர குறிப்புகள்

ஆஞ்சியோஸ்பெர்ம் தாவரங்கள் பற்றிய குறிப்புகள்...

* மிளகாயின் தாவரவியல் பெயர் கேப்சிகம் புருட்டெசென்ஸ். இது மேற்கு இந்திய தீவுகளை பூர்வீகமாக கொண்டது.

* மிளகாய்க்கு காரம் தருவது காப்சிசின்.

* தேங்காய் எண்ணெய்யில் நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் அதிகம்.

* எள்ளில் இருந்து குளிர் அழுத்த முறையில் பெறப்படுவது நல்லெண்ணெய்.

* தேங்காய் எண்ணெய் ஹைட்ராலிக் அழுத்த முறையில் பெறப்படுகிறது.

* ஆமணக்கு எண்ணெய் கரைப்பான் வடிகட்டல் முறையில் பெறப்படுகிறது.

* மஞ்சளின் தாவரவியல் பெயர் கர்கூமா டோமஸிடிகா. இது ஒரு தரைகீழ் தண்டு ஆகும்.

* கிராம்பு, மொலுக்கஸ் தீவில் இருந்து ஆங்கிலேயர்களால் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டதாகும்.

* இந்தியாவில் முதலில் கிராம்பு பயிரிடப்பட்ட இடம் குற்றாலம்.

* குப்பைமேனியில் இருந்து அகலிபா எனும் மருந்து தயாரிக்கப்படுகிறது.

* வல்லாரையின் அறிவியல் பெயர் சென்டெல்லா ஏசியாடிகா.

* இஞ்சியின் அறிவியல் பெயர் ஜிஞ்ஜிபர் அபிஸினாலிஸ்.

* நன்னாரி வேர்களால் நீரை குளிர வைக்கலாம்.

* பச்சைத் தங்கம் எனப்படும் தாவரம் யூகலிப்டஸ்.

* தாவரங்களில் இலை உதிர காரணமான ஹார்மோன் அப்ஸிஸிக் அமிலம்.

* தாவரம் வளர்க்க உதவும் செயற்கை அறை பைட்டோட்ரான் எனப்படுகிறது.

* பாலைவனத் தாவரங்கள் ஸீரோபைட்ஸ்.

* ஆய்வாளர் சர் சாம் போர்டு ரெப்ளிஸ் நினைவாக உலகின் பெரிய மலர் ரெப்ளிசியா எனப்பெயர் பெற்றது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

நிலக்கரி

நிலக்கரி என்பது கரிமப்பொருளும், கனிம தாதுக்களும் கலந்த இறுகிய திடமான எரியத்தக்க ஒரு படிவுப்பாறை. நிலக்கரியில் 60-90 சதவீதம் கார்பனும், 1லிருந்து 12 சதவீதம் ஹைட்ரஜனும் 2-20 சதவீதம் ஆக்சிஜனும் 1-லிருந்து 3 சதவீதம் நைட்ரஜனும் உள்ளன.

இந்திய நிலக்கரி வளங்களை பெர்மியன் (230 மில்லியன் வருடங்களுக்கு முன்) காலத்தில் உருவான கோண்ட்வானா நிலக்கரி யூசின் மற்றும் மியோசின் காலத்தில் உருவான டெர்ஷரி நிலக்கரி என இரண்டாக பிரிக்கலாம்.

பீட், லிக்னைட், பிடுமினஸ், ஆந்த்ராசைட் என்பதே நிலக்கரி உருவாக்க வரிசையாகும். இதன் மறுதலையே கார்பன் விழுக்காட்டின் அடிப் படையில் நிலக்கரிகளின் வரிசை பீட்டில் 3 சதவீதமும், ஆந்த்ராசைட்டில் 95 சதவீதமும் கார்பன் உண்டு.

இந்தியாவில் தாமோதர், கோதாவரி, நர்மதா, ஆற்றுப்படுகைகளில் கோண்ட்வானா நிலக்கரியும், தமிழ்நாடு, அசாம், ராஜஸ்தான் மாநிலங்களில் டெர்டியல் நிலக்கரியும் கிடைக்கின்றன. இந்திய மின் உற்பத்தியில் 71 சதவீதத்திற்கு மேல் அனல்மின்சாரமே. அனல் மின்துறையின் முக்கிய ஆற்றல் மூலம் நிலக்கரியே.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பொது அறிவு குவியல்

வினா-வங்கி

1. ஒரு கிலோ பிளாஸ்டிக் கழிவுக்கு மரக்கன்று மற்றும் துணிப்பையை இலவசமாக தரும் திட்டத்தை அறிமுகம் செய்த மாநிலம் எது? அந்த திட்டத்தின் பெயர் என்ன?

2. சுருளி மற்றும் கும்பக்கரை அருவிகள் எங்கு உள்ளது?

3. ராமன்சாட்-2 எனும் சிறிய செயற்கை கோளை தயாரித்தவர் யார்?

4. கங்கையின் வலதுபக்க நதிகளாக இணையும் நதிகள் எவை?

5. அமைதிச்சாலை அல்லது ‘ரோடு ஆப் பீஸ்’ எனும் பாதை எங்கு அமைந்துள்ளது?

6. 2019-ம் ஆண்டுக்கான எம்.பி. பிர்லா நினைவு விருது பெற்ற இயற்பியல் விஞ்ஞானி யார்?

7. இந்த ஆண்டுக்கான முதியோர் தினத்தில் முதியவர்களுக்காக மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட திட்டம் என்ன?

8. இந்தியாவிற்காக சர்வதேச பண நிதியத்தின் நிர்வாக இயக்குனராக பொறுப்பேற்று இருப்பவர் யார்?

9. காந்தியின் 150-வது பிறந்த தினத்தை முன்னிட்டு 1650 கிலோ எடையில் ஒரு ராட்டை சக்கரம் தயாரிக்கப்பட்டது. அது எந்த இடத்தில் தயாரிக்கப்பட்டது?

10. கடற்கரையை ஒட்டிய சிறிய சதுப்புநிலங் களைப் பற்றிய தகவல்களுக்காக புதிய அப்ளிகேசனை உருவாக்கி வரும் அமைப்பு எது?

11. எந்த டெல்லி சுல்தானின் படைவீரர்களில் பாதிக்கு மேற்பட்டோர் பிளேக் நோய்க்கு பலியானார்கள்?

12. மனோரா டவா் எதற்காக கட்டப்பட்டது?

13. சிவாலிக் குன்றுகளின் தெற்கில் அமைந்துள்ள பகுதியின் பெயர்?

14. மக்களவைத் தேர்தலில் வரிசையில் நின்று வாக்களித்த முதல் குடியரசுத் தலைவர் யார்?

15. தமிழ்நாட்டில் 69 சதவீத இட ஒதுக்கீட்டைப் பாதுகாத்த அரசியல் சட்ட திருத்தம் எது?

விடைகள்

1. அசாம், பிளான்ட்ஸ் பார் பிளாஸ்டிக் திட்டம், 2. தமிழ்நாட்டில் தேனி மற்றும் கொடைக்கானலில் இவை அமைந்துள்ளன, 3. அப்பாஸ் சிக்கா என்ற மாணவர், நாசா ஆய்வு மையம் இதை விண்ணில் செலுத்தியது, 4. யமுனா, தாம்ஸா, சன் மற்றும் பன்பன், 5. இந்தியா பாகிஸ்தான் எல்லையில் கர்தாபூர் என்ற இடத்தில் அமைந்துள்ள பாதையே அப்படி அழைக்கப்படுகிறது, 6. தாணு பத்மநாபன், 7.வயோஸ்ரேஸ்தா சம்மான் 2019, 8. சுர்ஜித் எஸ்.பல்லா, 9. உத்தரபிரதேச மாநிலம், நொய்டா, 10. இஸ்ரோவின் ஸ்பேஸ் அப்ளிகேசன் சென்டர், 11. முகம்மது பின் துக்ளக், 12. நெப்போலியனை ஆங்கிலேயர்கள் தோற்கடித்ததற்காக இரண்டாம் சரபோஜி மன்னரால் கட்டப்பட்ட நினைவுச்சின்னமாகும், 13. பாபர், 14. கே.ஆர்.நாராயணன், 15. 76-வது சட்ட திருத்தம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday, 15 November 2019

2020-ம் ஆண்டு குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார் பிரேசில் அதிபர்

2020-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி நடைபெறும் குடியரசு தின விழா வில் சிறப்பு விருந்தினராக பங் கேற்க வருமாறு பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பை பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ ஏற்றுக்கொண்டுள்ளார்.

பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடு களின் 11-வது உச்சி மாநாடு பிரேசில் தலைநகர் பிரேசிலியாவில் நடைபெற்றது. நேற்றுடன் முடிவடைந்த இந்த 2 நாள் மாநாட்டில் பிரிக்ஸ் அமைப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இந்நிலையில் நேற்று இந்த மாநாட்டுக்கு இடையே பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார். அப்போது இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். இந்தியாவில் வேளாண் உப கரணங்கள், கால்நடை பண்ணை கள், அறுவடைக்கு பிந்தைய தொழில்நுட்பம், உயிரி எரிபொருள் உள்ளிட்ட துறைகளில் முதலீடு செய்யுமாறு பிரதமர் அழைப்பு விடுத்தார்.

இந்த சந்திப்பின்போது, டெல்லியில் அடுத்த ஆண்டு நடைபெறும் இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்குமாறு போல்சனாரோவுக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார். இதனை போல்சனாரோ மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்.

பிரேசில் நாட்டில் இந்திய குடிமக்கள் விசா இன்றி பயணம் செய்ய அனுமதிக்கும் அதிபரின் முடிவுக்கு மோடி வரவேற்பு தெரிவித்தார்.

பிரிக்ஸ் மாநாட்டுக்கு இடையே ரஷ்ய அதிபர் புதினை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 11 November 2019

மெண்டலின் ஆய்வுக் குறிப்புகள்

கிரிகர் ஜோகன் மெண்டல் மரபியலின் தந்தை எனப்படுகிறார்.

மெண்டல், தாவரங்களில் மரபுப் பண்புகளை கடத்தும் பொருட்களை பேக்டர் (காரணிகள்) என்று குறிப்பிட்டார். இதை மரபணு (ஜீன்) என்று அழைத்தவர் ஜோகன்ஸன் ஆவார்.

மெண்டல் ஆய்வுக்குப் பயன்படுத்திய பட்டாணி தாவரத்தின் அறிவியல் பெயர் பைசம் சட்டைவம்.

பட்டாணி தாவரம் குறைந்த வாழ்நாளையும் அதிக வகைகளையும் கொண்டிருந்ததே மெண்டல் இந்த தாவரத்தை ஆய்வுக்குப் பயன்படுத்த காரணமாகும்.

பட்டாணியில் ஒரு பண்பு. இரு பண்பு கலப்பு சோதனைகளை மெண்டல் மேற்கொண்டார்.

ஆய்வின் முடிவாக தனித்துப் பிரிதல் விதி, சார்பின்றி ஒதுங்குதல் விதி ஆகிய மரபியல் விதிகளை மெண்டல் உருவாக்கினார்.

மெண்டலின் ஒரு பண்பு கலப்பை விளக்குவது தனித்துப் பிரிதல் விதி.

மெண்டலின் இருபண்பு கலப்பை விளக்குவது சார்பின்றி ஒதுங்குதல் விதி.

ஒரு பண்பு கலப்பு என்பது உயரமான பட்டாணி தாவரத்தை குட்டையான பட்டாணி தாவரத்துடன் கலப்பு செய்வது.

ஒரு பண்பு கலப்பு சோதனையின் புறத்தோற்ற விகிதம் 3:1

ஒரு பண்பு கலப்பு சோதனையின் மரபுத் தோற்ற விகிதம் 1:2:1

இருபண்பு கலப்பு என்பது வட்டமான பச்சை விதை பட்டாணி தாவரத்தை சுருங்கிய மஞ்சள் விதை பட்டாணி தாவரத்துடன் கலப்பு செய்வது.

இரு பண்பு கலப்பு சோதனையின் புறத்தோற்ற விகிதம் 9:3:3:1

பிற்கலப்பு என்பது முதல் தலைமுறை தாவரத்தை ஏதேனும் ஒரு பெற்றோர் தாவரத்துடன் கலப்பு செய்வது.

சோதனைக் கலப்பு என்பது முதல் தலைமுறை தாவரத்தை ஒடுங்கு பெற்றோர் தாவரத்துடன் கலப்பு செய்வது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

விதிகள்

கல் எறிந்து மரத்திலிருந்து மாங்காயை வீழ்த்துவதை நியூட்டனின் முதல் விதிப்படி விளக்கலாம்.

ஓடும் பேருந்து திடீரென நிறுத்தப்படும்போது முன் சீட்டில் இருப்பவர் நிலை தடுமாறி முன்புறம் சாய்வதை முதல் விதிப்படி விளக்கலாம்.

நியூட்டனின் இரண்டாவது விதிப்படி ஒரு பொருள் மீது செயல்படும் விசை அதன் நிறை மற்றும் முடுக்கம் ஆகியவற்றுக்கு நேர் விகிதத்தில் இருக்கும்.

நெரிசலான தெரு ஒன்றில் வாகனம் ஓட்டும்போது அதிக பெட்ரோல் செலவாவதை நியூட்டனின் இரண்டாம் விதிப்படி விளக்கலாம்.

ஒவ்வொரு விசைக்கும் சமமான அதன் எதிர்திசையில் செயல்படும் விசை ஒன்று உண்டு என்பதே நியூட்டனின் மூன்றாம் விதி.

துப்பாக்கியின் பின் இயக்கம் நீச்சலடித்தல் ராக்கெட் ஏவுதல் ஆகியவற்றை நியூட்டனின் மூன்றாம் விதியை கொண்டு விளக்கலாம்.

கப்பல் மிதப்பதை விளக்குவது ஆர்கிமிடிஸ் கோட்பாடு.

விமானம் புறப்படுவதை விளக்குவது பெர்னோலியின் தத்துவம்.

புகைவண்டி நம்மை விட்டு விலகிச் செல்லும்போது அதன் ஒலி சுருதி குறைவதுபோல் தோன்றுவதே டாப்ளர் விளைவு.

பாரடே விதிகள், லென்ஸ் விதி மற்றும் பிளமிங்கின் வலது கை விதி ஆகியன மின்காந்தத் தூண்டல் பற்றியவை.

பிளமிங்கின் இடது கைவிதி மின்னோட்டத்தின் இயந்திர விளைவு பற்றியது.

ஆம்பியர் நீச்சல் விதியும் மாக்ஸ்வெல் திருகு விதியும் மின்னோட்டத்தின் காந்த விளைவு பற்றியவை.

மின்னோட்டத்தின் வெப்பவிளைவு, ஜூல் வெப்பவிளைவு விதியால் விளக்கப்பட்டது.

பாரடேயின் மின்னாற்றல் பகுப்பு விதிகள் மின்னோட்டத்தின் வேதியியல் விளைவை விளக்குகின்றன.

மின்னோட்டத்துக்கும் மின் அழுத்த வேறுபாட்டுக்கும் உள்ள தொடர்பை விளக்குவது ஓம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 4 November 2019

இந்திய பசுமைப்புரட்சியின் தந்தை

இந்திய பசுமைப்புரட்சியின் தந்தை

எம்.எஸ்.சுவாமிநாதன்

பசுமைப் புரட்சியை ஏற்படுத்தி, உணவு உற்பத்தியில் இந்தியாவைத் தன்னிறைவு பெற வைத்த பெருமைக்கு உரியவர் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன்.

இவர், நாட்டின் முதுகெலும்பாக உள்ள வேளாண் துறையில் வளர்ச்சி ஏற்படுத்தி, உலக அரங்கில் இந்தியாவை வியந்து பார்க்க வைத்தவர். உலகம் போற்றும் விஞ்ஞானி, பேராசிரியர்களில் ஒருவர், கவுரவ டாக்டர் பட்டங்கள் நாற்பதுக்கு மேல் பெற்றவர். “மகசேசே'' விருதும், உணவுக்கான உலகப் பரிசும் பெற்றவர். இந்தியாவிலும் அனைத்துலக அரங்கிலும் அதிகாரமிக்கப் பல பதவிகளை வகித்தவர். நூற்றுக்கணக்கான ஆராய்ச்சிக் கட்டுரைகளையும், நூல்களையும் எழுதிக் குவித்தவர். இவர்தான், “பசுமைப் புரட்சியின் தந்தை'' என்றழைக்கப்படும் எம்.எஸ்.சுவாமிநாதன்.

சிறுவயதிலேயே தந்தையை இழந்த இவர், பள்ளி மற்றும் கல்லூரி படிப்பில் சிறந்து விளங்கினார். வங்கப் பஞ்சத்தின் கொடுமைகளை அறிந்து, நாட்டின் உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன், விவசாய ஆராய்ச்சியை தனது துறையாகத் தேர்ந்தெடுத்தார். இந்தியாவின் பசுமைப் புரட்சிக்கு வித்தூன்றியவர்களில் இவரும் ஒருவரே. வேளாண்மையில் பி.எஸ்சி. பட்டம், உயிரணு மரபியலில் பட்டம், பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் தாவர விதைப் பெருக்க நிறுவனத்தில் முனைவர் பட்ட ஆராய்ச்சியில் ஈடுபட்டு பிஎச்.டி. பட்டம் பெற்றார். இவர் அமெரிக்காவின் உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிறுவனத்திலும் பணியாற்றினார். ஆசிரியர், ஆராய்ச்சியாளர், ஆய்வு நிர்வாகி ஆகிய பொறுப்புகளை வகித்த உலக அளவிலும் சுவாமிநாதனின் திறமை உலக அளவிலும் அங்கீகரிக்கப்படுகிறது. அமெரிக்காவின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் தலைவராகவும், பிலிப்பைன்ஸில் சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிலையத்தின் தலைமை இயக்குநராகவும் அவர் பொறுப்பேற்றிருந்தார். தமிழகத்தின் ‘வேளாண் விஞ்ஞானி’ என கருதப்படும் எம்.எஸ்.சுவாமிநாதன், கும்பகோணத்தில் 1925-ம் ஆண்டு பிறந்தார். மான்கொம்பு சதாசிவன் சுவாமிநாதன் என்பதன் சுருக்கமே எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகும்.

மு.திவ்யதர்ஷினி, 9-ம் வகுப்பு,

அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி,

கீழ்மணம்பேடு, திருவள்ளூர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, 31 October 2019

யூனியன் பிரதேசங்களாக காஷ்மீர், லடாக் உதயம்

காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகள் அதிகாரபூர்வமாக யூனியன் பிரதேசங்களாகி உள்ளன. இதன் துணைநிலை ஆளுநர்கள் இன்று பொறுப்பேற்கின்றனர்.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி ரத்து செய்தது. மேலும் அம்மாநிலம் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்றும் அறிவித்தது. இதில் காஷ்மீர் மட்டும் சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் இயற்றப்பட்டது. அக்டோபர் 31-ம் தேதி முதல் இச்சட்டம் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய 2 புதிய யூனியன் பிரதேசங்கள் நள்ளிரவில் உதயமாகின.

காஷ்மீர் துணைநிலை ஆளுநராக ஜி.சி.முர்மு வும் லடாக் துணைநிலை ஆளுநராக ராதாகிருஷ்ண மாத்தூரும் ஏற்கெனவே நியமிக்கப்பட்டனர். இவர்கள், முறையே நகர் மற்றும் லடாக்கில் இன்று நடை பெறும் நிகழ்ச்சியில் பதவியேற்கின்றனர். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதையடுத்து, அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. போலீஸார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டத்தின்படி, காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளின் காவல், சட்டம் மற்றும் ஒழுங்கு விவகாரங்கள் இன்று முதல் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வருகிறது.

அதேநேரம், காஷ்மீரைப் பொறுத்தவரை நிலம் தொடர் பான விவகாரங்கள் அங்கு தேர்ந்தெடுக்கப்படும் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும். லடாக்கில் சட்டப்பேரவை இருக்காது.

தங்கள் அதிகார எல்லைக்குட்பட்டு காஷ்மீர் முழுமைக் குமோ ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு மட்டுமோ தேவையான சட்டங்களை இயற்றும் அதிகாரம் சட்டப்பேரவைக்கு உள்ளது. ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஊழல் தடுப்பு அமைப்பின் (ஏசிபி) அதிகாரிகள் துணைநிலை ஆளுநரின் கட்டுப்பாட்டில் இருப்பார்கள்.

ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றம், இரு யூனியன் பிரதேசங்களுக்கும் பொதுவானதாக செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, 24 October 2019

பிரபஞ்ச அழகியாக சென்னை பெண் அக்‌ஷரா ரெட்டி தேர்வு

‘மிஸ் சூப்பர் குளோப்’ பிரபஞ்ச அழகியாக சென்னை பெண் அக்‌ஷரா ரெட்டி தேர்ந்தெடுக்கப்பட்டார்.‘மிஸ் சூப்பர் குளோப்’ பிரபஞ்ச அழகியாக சென்னை பெண் அக்‌ஷரா ரெட்டி தேர்ந்தெடுக்கப்பட்டார். அழகி பட்டம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தது மகிழ்ச்சி அளிக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.

‘மிஸ் சூப்பர் குளோப்’ பிரபஞ்ச அழகி போட்டியின் இறுதி நிகழ்வு துபாயில் சில நாட்களுக்கு முன்பு நடந்தது. இந்தியா உள்பட 22 நாடுகளை சேர்ந்த அழகிகள் போட்டியாளர்களாக பங்கேற்றனர்.

ஒய்யார நடை, பொது அறிவு கேள்வி சுற்று உள்ளிட்ட பல்வேறு சுற்றுகள் வாரியாக அழகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதன் அடிப்படையில் இந்தியா சார்பில் பங்கேற்ற சென்னையை சேர்ந்த பெண் அக்‌ஷரா ரெட்டி பிரபஞ்ச அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பிரபஞ்ச அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அக்‌ஷரா ரெட்டி சென்னையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

‘மாடலிங்’ என்பது சிறுவயதில் இருந்தே என்னுடைய உணர்வாக இருந்தது. விளையாட்டு துறையில் சாதிப்பவர்களை பார்த்து, நாமும் ஏதாவது சாதித்து நாட்டுக்கு பெருமை சேர்க்கவேண்டும் என்பது என்னுடைய லட்சியம். அதே சமயத்தில் ‘மாடலிங்’ துறையில் இருக்கும் என்னால் நாட்டுக்கு பெருமை சேர்க்க முடியுமா? என்ற கேள்வி எழுந்துகொண்டே இருந்தது.

இதற்காக நான் கடுமையாக உழைத்துக்கொண்டே இருந்தேன். ‘மிஸ் சூப்பர் குளோப்’ பட்டம் வென்றது மிகவும் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. தாய்மை குறித்து நான் கூறிய பதில் எனக்கு புள்ளிகளை ஈட்டிக் கொடுத்தது.

இறுதிச்சுற்றுக்கு முந்தைய சுற்றில் 6 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அப்போது, ‘என்னுடைய குழந்தை பருவத்தை திருடிவிட்டீர்கள், என்னுடைய கனவை கலைத்துவிட்டீர்கள்’ என்று பள்ளி செல்லும் 16 வயது மாணவி உலக தலைவர்களை நோக்கி கூறினார் அவர் யார்? என்ற கேள்வி கேட்கப்பட்டது. இந்த கேள்வி கேட்ட உடனே அனைவரும் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான பெண் தான் கூறியிருப்பார் என்று நினைத்தார்கள்.

சுற்றுச்சூழலுக்காக போராடி வரும் சுவீடன் நாட்டு பெண்ணான கிரெட்டா தன்பெர்க் என்பதை அறிந்துகொண்டு, நான் அதனை விடையாக கூறினேன். இதற்கும் எனக்கு நல்ல மதிப்பெண்கள் கிடைத்தது. கடுமையாக உழைத்ததன் மூலம் ‘மிஸ் சூப்பர் குளோப்’ பிரபஞ்ச அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளேன். தினந்தோறும் சராசரியாக 3 மணி நேரம் உடற்பயிற்சிக்காக செலவிட்டேன். உலக அழகி பட்டம் வெல்லவேண்டும் என்பதை நினைத்து தூக்கம் இல்லாமல் தவித்தேன்.

பட்டம் பெற்றதன் மூலம் என்னுடைய கனவு நனவாகி இருக்கிறது. இந்த பட்டத்தை வெல்ல என்னுடைய குடும்பத்தினர், நண்பர்கள் மிகவும் உதவிகரமாக இருந்தார்கள்.

தமிழ் திரையுலகில் எனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். நல்ல நடிகர்கள் அனைவரோடும் நடிக்கவேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. ஐஸ்வர்யாராய், சுஷ்மிதாஷென் ஆகிய 2 பேரையும் பார்த்து தான் எனக்கு உலக அழகி பட்டம் பெறவேண்டும் என்ற ஊக்கம் வந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday, 23 October 2019

ஆங்கில நாவல்களுக்கான உயரிய விருது இரு எழுத்தாளர்களுக்கு புக்கர் பரிசு அறிவிப்பு

 • ஆங்கில நாவல்களுக்கான உயரிய விருதான, 'புக்கர் பரிசு' இம் முறை இரு பெண் எழுத்தாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 
 • இங்கிலாந்தில் பிரசுரிக்கப்பட்ட மற்றும் ஆங்கில மொழியில் எழுதப்பட்ட நாவல்களுக்கு ஆண்டுதோ றும் உயரிய, புக்கர் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. 
 • இந்தாண்டுக்கான புக்கர் விருது, கனடா எழுத்தாளர் மார்க்ரெட் அட்வுட் மற்றும் இங்கிலாந்து எழுத்தாளர் பெர்னார்டைன் எவ ரிஸ்டோ ஆகியோருக்கு கூட்டாக வழங்கப்பட்டுள்ளது. 
 • பொதுவாக இவ்விருது ஒரு எழுத்தாளருக்கு மட்டுமே வழங்கப்படும். 
 • கடைசியாக 1992ல் இரு எழுத்தாளர்களுக்கு இவ் விருது வழங்கப்பட்டது. அதன் பிறகு, இந்த விதி முறை மாற்றப்பட்டு, ஒருவருக்கு மட்டுமே வழங்க முடிவு செய்யப்பட்டது. 
 • இந்தாண்டு பரிசுப் போட்டியில் அட்வுட் எழுதிய 'தி டெஸ்டாமென்ட்' நாவலுக்கும். 
 • எவரிஸ்டோ எழுதிய 'கேர்ள், உமன், அதர்' நாவலுக்கும் கடும் போட்டி ஏற்பட்டது. 
 • இரண்டையும் விட்டுத்தர மனமில்லாத தேர்வுக்குழு, 5 மணிநேர விவாதத்திற்குப் பிறகு புக்கர் பரிசு விதிமுறையை மீண்டும் உடைத்து, இரு எழுத்தாளர்களுக்கும் பரிசை பகிர்ந்தளிக்க முடிவு செய்தனர். 
 • இதன்படி பரிசுத் தொகையான 145 லட்சம் பகிர்ந்தளிக்கப்பட உள்ளது. 
 • 1969ம் ஆண்டு புக்கர் பரிசு உருவாக்கப்பட்ட பின் இவ்விருது பெறும் முதல் கறுப்பின பெண் என்ற சாதனையையும் எவரிஸ்டோ படைத்துள்ளார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அபிஜித் பானர்ஜிக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு


 • இந்த ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு இந்திய-அமெரிக்கப் பொருளாதார நிபுணர் அபிஜித் பானர்ஜி, பிரான்ஸ் வம்சாவளி அமெரிக்கரான எஸ் தர் டஃப்லோ , அமெரிக்கப் பொருளாதார நிபுணர் மைக்கேல் கிரெமர் ஆகியோ ருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 
 • இதில் அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டஃப்லோ ஆகியோர் கணவர் மனைவியாவர். 
 • சர்வதேச அளவில் வறுமையை ஒழிப்பதற்காக அவர்களது பொருளாதார ஆய்வு சிறப்பாக உத வியதை கௌரவித்து நோபல் பரிசுக்கு அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட் டுள்ள து. 
 • இளம் வயதில் நோபல்: இதில் அபிஜித் - எஸ் தர் தம்பதி அமெரிக்காவின் சிறந்த கல்வி நிறு வனங்களில் ஒன்றான மாசசூசெட்ஸ் தொழில் நுட்பக் கல்வி நிலையத்தில் (எம்ஐடி பணியாற்றி வருகின்றனர். 
 • கிரெமர் (54), ஹார்வர்டு பல்க லைக்கழகத்தில் பணிபுரிந்து வருகிறார். எஸ்தர் டஃப்லோ, பொருளாதாரத்துக்கான நோபல் பரிசைப் பெறும் இரண்டாவது பெண். 
 • மேலும், மிக இளம் வயதில் (46) பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெறுபவர் என்ற பெருமையும் அவ ருக்குக்கிடைத்துள்ளது. இந்த நோபல் பரிசுடன் 9,18,000 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ. 6.53 கோடி), தங்கப் பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் ஆகியவையும் அடங்கும். பரிசுத் தொகை மூவருக்கும் சமமாக பகிர்ந்தளிக்கப்படும். 
 • இந்த மூவரின் பொருளாதார ஆய்வுகளைப் பின்பற்றும் நாடுகள் வறுமை ஒழிப்பில் வெற்றி கரமாக செயல்பட்டுள்ளன. 
 • சர்வதேச அளவில் பொருளாதாரரீதியாக பல பிரச்னைகள் இருந்தா லும் அடிப்படையில்வறுமை ஒழிக்கப்பட்டுவிட்டாலே, ஒரு நாடு முன்னேற்றப் பாதைக்குத் திரும் பிவிடும். 
 • எனவே, வறுமை ஒழிப்பு சார்ந்த பொரு ளாதார ஆய்வில் முக்கியப் பங்காற்றிய மூவருக் கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 • இவர்களின் பொருளாதார ஆய்வு முறை மூலம் இந்தியாவில் சுமார் 50 லட்சம் சிறார்கள் பள்ளிக் கல்வி பெற்றுள்ளனர். 
 • இது நேரடியாக கிடைத்த பலனாகும். இது தவிர சுகாதாரத் துறையிலும் இவர்களின் பொருளாதாரத் திட்டங்கள் பயன ளித்துள்ளன. முக்கியமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலம் நோய்களைத் தடுப்பதற்கான மானியத் திட்டம்தொடர்பான ஆய்வு பலநாடுக ளில் சிறப்பான பலனை அளித்துள்ளது. 
 • அபிஜித் பானர்ஜி (58) மேற்கு வங்கத்தில் பிறந்தவர். கொல் கத்தா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பட்டப்படிப்பு முடித்த அபிஜித், பின்னர் தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பொரு ளாதாரத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றார். 
 • அதைத் தொடர்ந்து அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில், 1988-ஆம் ஆண்டு முனை வர் பட்டம் பெற்றார். வளர்ச்சிப் பொருளாதா ரத்தில் நிபுணத்துவம் பெற்றவரான பானர்ஜி, 
 • தற் போது மாசசூசெட்ஸ் ஆய்வுக் கல்வி நிறுவனத் தில் பொருளாதாரப் பேராசிரியராக உள்ளார். 
 • கடந்த 2003-ஆம் ஆண்டில் அப்துல் லத்தீப் ஜமீல் வறுமை ஒழிப்பு நடவடிக்கை மையத்தை உருவாக்கினார். 
 • இதில் பானர்ஜியின் மனைவி எஸ்தர், தமிழகத்தைச் சேர்ந்தவரும், தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் பொருளாதார நிபுணருமான செந்தில் முல்லைநாதன் ஆகியோர் முக்கியப் பங்கு வகித்தனர். 
 • ஐ.நா. பொதுச்செயலருக்கான உயர்நிலை ஆலோசனைக் குழுவிலும் அபிஜித்பானர்ஜி இடம்பெற்றுள்ளார். 
 • "நோபல் பரிசு கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. வாழ்வில் ஒரு சிலருக்கு மட்டுமே இது போன்ற உயரிய கௌரவம் கிடைக்கும். இதனை பணிவுடன் ஏற்கிறேன்' என்று அபிஜித் கூறியுள் ளார். 
 • பொருளாதாரத் துறையில் சாதித்த பெண்: நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட பிறகு செய்தியா ளர்களைச் சந்தித்த எஸ்தர் கூறுகையில், இப் போது பெண்கள் பல துறைகளில் சாதித்து வரு கிறார்கள் என்றாலும், பொருளாதாரத் துறை யில் பெண்களின் பங்கு குறைவாகவே உள்ளது. 
 • எனக்கு நோபல் பரிசு கிடைத்துள்ளதன் மூலம் இத்துறையில் பெண்களுக்கு கூடுதல் ஈடுபாடு ஏற் படும் என்று நம்புகிறேன். 
 • இதன் மூலம் பெண்க ளின் மதிப்பு சர்வதேச அளவில் மேலும் அதிக ரிக்கும். எங்கள் பணிக்கு மிகஉயரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது' என்றார். 
 • எஸ்தர் 1972-ஆம் ஆண்டு பிரான்ஸில் பிறந் தவர். வறுமை ழிப்பு மற்றும் வளர்ச்சி சார்ந்த பொருளாதாரத்தில் நிபுணத்துவம் பெற்ற அவர், அபிஜித் பானர்ஜியுடன் இணைந்து பல்வேறு நிலைகளில் மாசசூசெட்ஸ் ஆய்வுக் கல்வி நிறுவ னத்தில் பணியாற்றியுள்ளார். 
 • வறுமை ஒழிப்பு, ஏழ்மையை அகற்றுவது தொடர்பாக பல ஆய்வு களை நடத்தியுள்ளார். வறுமை ஒழிப்பு தொடர் பான இவரது புத்தகம் 17 மொழிகளில் மொழி யாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் பொருளாதாரம் சார்ந்த பல விருதுகளையும் வென்றுள்ளார். முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு பொரு ளாதார ஆலோசகராகவும் இருந்துள்ளார். 
 • அபிஜித்-எஸ்தர் தம்பதிக்கு குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் தலை வர் சோனியா காந்தி உள்ளிட்ட பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 
 • பிரதமர் மோடி சுட்டுரையில் வெளியிட்ட வாழ்த்துச்செய்தியில், 'வறுமை ஒழிப்பு நடவடிக்கையில் அபிஜித்-எஸ் தர் தம்பதி மற்றும் அமெரிக்கப் பொருளாதார நிபுணர்மைக்கேல் கிரெமரின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. 
 • நோபல் பரிசு வென்றுள்ள அவர் களுக்கு எனது வாழ்த்துகள் என்று கூறியுள்ளார். மம்தா பானர்ஜி வெளியிட்ட சுட்டுரைப் பதி வில், நோபல் பரிசு வென்றதன் மூலம் நமதுதேசத் துக்கும், மேற்கு வங்கத்துக்கும் அபிஜித் பானர்ஜி பெருமை சேர்த்துள்ளார்' என்று கூறியுள்ளார். 
 • அமர்த்தியா சென் பாராட்டு: நோபல் பரிசு வென்ற மூவருக்கும், 1998-ஆம் ஆண்டு பொரு ளாதாரத்துக்கான நோபல் பரிசு வென்ற இந்திய நிபுணர் அமர்த்தியா சென் பாராட்டு தெரிவித் துள்ளார். 'அபிஜித் உள்ளிட்ட மூவர் பொரு ளாதாரத்தில் நோபல் பரிசு பெற்றுள்ளது மிக வும் மகிழ்ச்சியளிக்கிறது. 
 • மிகச்சரியான நபர்க ளுக்கு பரிசு அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு எனது பாராட்டுகள் என்று கூறியுள்ளார். 
 • 86 வயதாகும் அமர்த்தியா சென் இப்போது ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பேராசிரியராகப் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. அமர்த்தியா சென்னும், அபிஜித் பானர்ஜியும் கொல்கத்தாவின் பிரசிடென்சி கல்லூரி முன் னாள் மாணவர்களாவர். 
 • மைக்கேல் கிரெமரின் வளர்ச்சிக் கோட்பாடு மைக்கேல் கிரெ மர் ஹார்வர்டு பல்க லைக்கழகத்தில் சமுக அறிவியலில் பட்டப் படிப்பை முடித்து, பொருளாதாரத்தில் முனைவரானார். 
 • வளர்ச்சி மற்றும் சுகா தாரம் சார்ந்த பொருளாதார ஆய்வுகளில் நிபுணத்துவம் பெற்றவர். மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கல்வி நிலையத்திலும், சிகாகோ பல்கலைக்கழகத் திலும் பணியாற்றியுள்ள அவர், இப்போது ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரிய ராக உள்ளார். 
 • 1993-இல் அவர் வெளியிட்ட 'கிரெமரின் ஒ-ரிங் பொருளாதார வளர்ச் சிக் கோட்பாடு' மிகவும் பிரபலமானதாகும். சர்வதேச அளவில் சமுக-பொருளாதார வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் பிரச்னை கள் குறித்து ஆய்வு செய்து அவற்றுக்கு தீர்வு களை அளித்துள்ளார். 
 • தாயார் மகிழ்ச்சி அ பி ஜித் பானர்ஜி மற் றும் அவரது மனைவி எஸ் தர் ஆகியோர் நோபல் பரிசு பெற்றுள்ளது குறித்து அபிஜித் தின் தாயார் நிர் மலா பானர்ஜி மகிழ்ச்சி தெரி வித்துள்ளார். 
 • கொல்கத்தாவில் வசித்து வரும் அவர் இது தொடர்பாக கூறுகையில், 'எனது மகனும், மருமகளும் சர்வதேச அளவில் உயர்ந்த விருதை பெற்றது மிகவும் மகிழ்ச் சியளிக்கிறது. 
 • இது நமது தேசத்துக்கு பெரு மையளிக்கும் விஷயம்' என்று கூறியுள்ளார். 
 • நிர்மலா பானர்ஜி முன்னாள் பொருளாதாரப் பேராசிரியை என்பது குறிப்பிடத்தக்கது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அண்டை நாட்டுடன் எல்லை பிரச்னைக்கு தீர்வு கண்டதால் எத்தியோப்பியா பிரதமருக்கு அமைதிக்கான நோபல் பரிசு 100வது பரிசை வென்று சாதனை


 • எத்தியோப்பியா பிரதமர் அபை அகமது அலிக்கு இந்தாண்டு அமைதிக் கான நோபல் பரிசு அறி விக்கப்பட்டுள்ளது. 
 • 6 மருத்துவம், இயற்பியல், வேதியியல், அமைதி,  இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. 
 • இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு வெற்றியா ளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். 
 • இந்நிலையில், 2019ம் ஆண்டுக்கான அமைதிக் கான நோபல் பரிசு எத் தியோப்பியா பிரதமர் அபை அகமது அலிக்கு நேற்று அறிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு பிரதமராக பதவியேற்ற அவர், அண்டை நாடான எரிட் டிரியாவுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி, இரு நாடுகளுக்கு இடையேயான எல்லைப் பிரச்னையை தீர்த்து வைத்துள்ளார். 
 • 20 ஆண்டாக நில விய இப் பிரச்னை தீர்க்கப்பட்டதால், இரு நாடுகளில் வசிக்கும் உறவினரகள் ஒருவரை ஒருவர் கண்ணீர் மல்க சந்தித்து ஒன்றிணைந்த நிகழ்வுகள் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தின. 
 • மேலும், சர்வதேச நாடு களுடனான ஒத்துழைப்பு, உள்நாட்டில் அமைதியை மீட்பதற்கான நடவடிக்கை கள் ஆகியவைகளுக்காக அபை தேர்வு செய்யப்பட் டுள்ளதாக நார்வேயின் ஓஸ்லோவில் நோபல் விருதுக் குழு கூறி உள்ளது. 
 • அமைதிக்கான 100வது நோபல் பரிசு வெல்லும் நபர் என்ற பெருமையையும் அபை பெற்றுள்ளார். 
 • இவருக்கு வயது 43 என்பதும் குறிப் பிடத்தக்கது. கிரேட்டா மீது குவிந்த பெட்டிங் இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு 223 நபர்களும், 78 அமைப்புகளும் பரிந்துரை செய்யப்பட்டன. 
 • இதில், இளம் சுற்றுச்சூழல் ஆர்வலரான கிரேட்ட துன்பெர்க்குக்கு இவ்விருது வழங்கப்படும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. பருவநிலை மாற்றத்திற்கு எதிராக போராடி வரும் ஸ்வீடனை சேர்ந்த 16 வயது சிறுமி துன்பெர்க், சமீபத்தில் ஐநாபருவநிலை மாநாட்டில் உரையாற்றினார். 
 • அப்போது அவர், 'எவ்வளவு தைரியம் உங்களுக்கு? உங்கள் வெற்று வார்த்தையால் என்னுடைய குழந்தை பருவத்தையும், கனவுகளையும் களவாடி விட்டீர்கள்' என உலக தலைவர்களை மிரட்டிய விதம் பெரிதும்பாராட்டப்பட்டது. 
 • எனவே, கிரேட்டாவுக்கே விருது என பலரும் பந்தயம் கட்டினர். இறுதியில் அவர் தேர்வாகவில்லை. 
 • ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு, நோபலுக்கு இணையான விருது கிரேட்டாவுக்கு ஐநா வழங்கியது குறிப்பிடத்தக்கது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 22 October 2019

வானிலை 3 வகை அலர்ட்


 • வானிலை ஆய்வுமைய கணிப்பின்படி தமிழகத்தில் அதிக மழை பெய்யும் இடங்கள் மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு என்ற நிறங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. 
 • மஞ்சள் நிறத்தின்படி, 64.5 மிமீ முதல் 115.5 மிமீ(7-11 செமீ) மழை பெய்யும். 
 • ஆரஞ்சு நிறத்தின்படி, 115.6 மிமீ முதல் 204.4 மிமீ (12-20 செமீ) வரை மழை பெய்யும். 
 • சிவப்பு நிறத்தின்படி, 204.4 மிமீ முதல் அதற்கும் அதிமாக (21 செ.மீ மேல்) மழை பெய்யும். 
 • கடந்த 2015ம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டத்தில் 250 மிமீ (25 செமீ) அதிகமாக மழை பெய்த காரணத்தால், செம்பரம் பாக்கம் ஏரி ஒரேநாள் இரவில் 90 ஆயிரம் கன அடி அளவுக்கு நீர் நிரம்பியது குறிப்பிடத்தக்கது. 
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 21 October 2019

சூரிய மையக் கோட்பாடு


 • சூரியன் மத்தியில் நிலையாக இருக்க கோள்கள் அதைச்சுற்றி வருகின்றன என்ற உண்மையை முதலில் கூறி சூரிய குடும்பத்தைப் பற்றி விளக்கியவர், 
 • போலந்து நாட்டு விஞ்ஞானியான நிகோலஸ் கோபர்நிகஸ் (1475-1543). அந்தக் கருத்தைப் பின்னாட்களில் பிரபலப்படுத்தியவர் இத்தாலி நாட்டு விஞ்ஞானி கலிலியோ (1564-1642). 
 • அதற்காக வாடிகன் தேவாலயத்தினரால் கண்டிக்கப்பட்டு தேவாலயத்தில் மன்னிப்புக் கேட்க வைக்கப்பட்டார். 
 • கலிலியோவை மன்னிப்புக் கேட்க வைத்ததற்கு வாடிகன் தேவாலயம் 2009-ல் வருத்தம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பாறைகள்

கிரானைட், ரையோலைட், பெக்மடைட், பசால்ட், டொலிரைட் போன்றவை அக்னிப்பாறை வகையில் அடங்கும். சுண்ணாம்புக்கல், டோலமைட், ஜிப்சம், மணல்பாறை போன்றவை படிவுப் பாறைகளுக்கு சான்றுகளாகும். மார்பிள், ஸ்லேட், குவார்ட்சைட், சிஸ்ட், க்னீயிஸ் போன்றவை முக்கிய உருமாறிய பாறைகளாகும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE