Tuesday 19 February 2019

விண்வெளி துளிகள்

* விண்வெளிக்குச் சென்ற முதல் விண்கலம் ஸ்புட்னிக்-1.

* ஸ்புட்னிக், 1957-ம் ஆண்டு அக்டோபர் 4-ந் தேதி ரஷ்யாவிலிருந்து அனுப்பப்பட்டது.

* ஸ்புட்னிக் என்றால் சகபயணி என்று பொருள்.

* விண்வெளிக்கு சென்ற முதல் அமெரிக்க விண்கலம் எக்ஸ்புளோரர் - 1.

* முதன் முதலாக சந்திரனின் மறுபக்கத்தை படம் பிடித்த ரஷிய விண்கலம் லூனா-2.

* விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர் யுரிககாரின்.

* விண்வெளியில் நடந்த முதல் மனிதர் அலெக்ஸ் லியானோவ்.

* விண்வெளி விபத்தில் மறைந்த முதல் விண்வெளி வீரர் கோமரோ.

* முதல் விண்வெளி சுற்றுலா பயணி டெனிஸ் டிடோ.

* விண்வெளிக்கு சென்ற முதல் சுற்றுலா பெண்மணி அனுஷே அன்ஸாரி.

* மனிதனோடு சென்ற முதல் விண்கலம் வாஸ்டாக்-1.

* வாஸ்டாக் என்ற ரஷ்ய வார்த்தைக்கு கிழக்கு என்று பொருள்.

* விண்வெளிக்கு சென்ற முதல் பெண்மணி வாலன்டினா தெரஸ்கோவா.

* முதல் இந்திய விண்வெளி வீரர் ராகேஷ் சர்மா.

* விண்வெளிக்கு சென்ற முதல் விலங்கு லைக்கா என்ற நாய்.

No comments: