Thursday 28 March 2019

விண்வெளி தொழில்நுட்பத்தில் இந்தியா புதிய சாதனை செயற்கைக்கோள் அழிப்பு ஏவுகணை சோதனை வெற்றி தொலைக்காட்சி உரையில் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

ஒடிசா மாநிலத்தில் உள்ள அப்துல் கலாம் தீவிலிருந்து நேற்று (28.03.2019) ஏவப்பட்ட ஏ-சாட் ஏவுகணை இலக்கை நோக்கி சீறிப் பாய்கிறது.புதுடெல்லி நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, விண்வெளியில் செயற்கைக் கோளை இடைமறித்து சுட்டு வீழ்த்தும் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமையுடன் தெரிவித்துள்ளார். இதன் மூலம், இத்தகைய விண் வெளி தொழில்நுட்பம் கொண்ட அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுடன் இந்தியாவும் இணைந்துள்ளது. பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி, வானொலி மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் ஆற்றிய உரையில் கூறியதாவது: ஒவ்வொரு நாட்டின் பயணத் திலும் மிகுந்த பெருமை தரக்கூடிய மற்றும் அடுத்த தலைமுறையின ரிடம் வரலாற்று சிறப்புமிக்க தாக் கத்தை ஏற்படுத்தக்கூடிய தருணங்கள் இருக்கும். நம் நாட்டில் இன்று (நேற்று) அதுபோன்ற ஒரு தருணம் நிகழ்ந்துள்ளது. ஆம், முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட செயற்கைக்கோள் அழிப்பு ஏவுகணையை (ஏ-சாட்) இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. இதன்மூலம் விண் வெளி தொழில்நுட்பத்தில் இந்தியா மிகப்பெரிய சாதனை புரிந்துள் ளது. இந்த ஏவுகணை நாட்டின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும். பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) ‘மிஷன் சக்தி’ என்ற பெயரில் இந்த சோதனையை நடத்தியது. ஒடிசா மாநிலத்தில் உள்ள அப்துல் கலாம் தீவிலிருந்து ஏவப்பட்ட இந்த ஏவு கணை, தாழ்வான புவி வட்டப் பாதையில் (எல்இஓ) (பூமியிலிருந்து 300 கி.மீ. உயரத்தில்) சுற்றி வந்த ஒரு செயற்கைக்கோளை சுட்டு வீழ்த்தியது. இதன் வெற்றிக்காக பாடுபட்ட அனைவருக்கும் வாழ்த்து கள். இந்த ஏவுகணை எந்த ஒரு நாட்டுக்கும் எதிரானது அல்ல. நம் நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த சோதனை மூலம் சர்வதேச சட்டங்கள் மற்றும் உடன்படிக்கைகள் என எதையும் இந்தியா மீறவில்லை. மிஷன் சக்தி என்ற இந்த திட்டம் மிகவும் சிக்கலானது. தாழ்வான புவி வட்டப் பாதையில் சுற்றி வரும் செயற்கைக்கோளை சுட்டு வீழ்த்து வது அரிய சாதனை ஆகும். அதுவும் அதிவேகத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இந்த ஏவுகணை ஏவப்பட்ட 3 நிமிடங்களில் குறி வைக்கப்பட்ட செயற்கைக்கோளை இடைமறித்து சுட்டு வீழ்த்தியது. நம் நாட்டு விஞ்ஞானிகளின் திறமை மற்றும் விண்வெளி திட்டங்களின் வெற்றியை பறைசாற்றுவதாக இந்த சோதனை அமைந்துள்ளது. இதன் மூலம், விண்வெளியில் சுற்றி வரும் செயற்கைக்கோள்களை சுட்டு வீழ்த்தும் ஏவுகணைகளை வைத்திருக்கும் நாடுகள் பட்டிய லில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா வுடன் இந்தியாவும் இணைந் துள்ளது. இவ்வாறு அவர் தெரி வித்தார். இந்த சோதனையின்போது எந்த செயற்கைக்கோள் சுட்டு வீழ்த் தப்பட்டது என்ற தகவலை பிரதமர் மோடி தெரிவிக்கவில்லை. எனி னும், இந்தியாவுக்கு சொந்தமான கைவிடப்பட்ட அல்லது செயலிழந்த செயற்கைக்கோளை இலக்காக கொண்டு இந்த சோதனை நடந்த தாக தகவல் வெளியாகி உள்ளது. வருங்காலத்தில் போர் மூண்டால் எதிரி நாட்டு செயற்கைக்கோள் மீது தாக்குதல் நடத்த இதுபோன்ற ஏவுகணைகள் பயன்படுத்தப்பட வாய்ப்பு உள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் இது போன்ற அறிவிப்பை வெளியிட்ட பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உட்பட் எதிர்க்கட்சித் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆனால், பாதுகாப்பு தொடர்பான அறிவிப்புக்கு தேர்தல் ஆணை யத்திடம் அனுமதி பெறத் தேவை யில்லை என அதன் உயர் அதிகாரிகள் வட்டாரத்தினர் தெரிவித் துள்ளனர். இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், “மிஷன் சக்தி திட்டம் வெற்றி பெற்றதற்காக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ), இந்திய விண் வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) ஆகியவற்றுக்கு வாழ்த்துகள். பிரதமர் மோடிக்கும் ‘உலக நாடக தின’ நல்வாழ்த்துகள்” என பதிவிட்டுள்ளார். பின்னர் டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ராகுல் பேசும்போது, “பிரதமர் மோடி தனது அறிவிப்புக்காக நாட்டு மக்களை 45 நிமிடம் காக்க வைத்துவிட்டார். அப்போது அவருடைய முகத்தைப் பார்த்தீர்களா? காங்கிரஸ் கட்சி இப்போது நீதி வழங்கும் என்று அவர் உணர்ந்து கொண்டார். தன்னுடைய நேரம் முடிவுக்கு வர உள்ளது என்பதை நினைத்து அவர் பயப்படுகிறார்” என்றார். காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் பக்கத்தில், “மிஷன் சக்தி திட்டம் வெற்றி பெற்றதற்கு டிஆர்டிஓ, இஸ்ரோ மற்றும் மத்திய அரசுக்கு வாழ்த்துகள். இந்திய விண்வெளி அமைப்பு 1961-ல் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் நிறுவப்பட்டது. பின்னர் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தலைமை யிலான ஆட்சியின்போது நிறுவப் பட்ட இஸ்ரோ, நாட்டுக்கு பெருமை சேர்க்கும் வகையில் தொடர்ந்து பல்வேறு சாதனைகளை செய்து வருகிறது” என கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் கூறும்போது, “முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தான் ஏ-சாட் திட்டத்துக்கு அடித்தள மிட்டது. அந்தத் திட்டம்தான் இன்று வெற்றி பெற்றுள்ளது. இதற்காக நமது விஞ்ஞானிகளுக்கும் மன் மோகன் சிங்குக்கும் வாழ்த்துகள்” என்றார். மேற்கு வங்க மாநில அமைச்சர் பிர்ஹத் ஹக்கிம் கூறும்போது, “பிறர் செய்த சாதனைகளுக்கு சொந்தம் கொண்டாடுவதை பிரதமர் மோடி நிறுத்திக் கொள்ள வேண்டும். மக் களவைத் தேர்தல் நெருங்கும் நிலை யில், மக்களை முட்டாளாக்குவதற் காக பிரதமர் மோடியும் பாஜகவும் இதுபோன்ற செயலில் ஈடுபடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இதனால் வரும் தேர்தலில் பாஜக வுக்கு எந்தப் பயனும் கிடைக்காது” என்றார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday 25 March 2019

மலர்கள்

மகரந்தத் தாள், சூலக வட்டங்கள், அல்லி வட்டம், புல்லி வட்டம் ஆகிய 4 வட்டங்களையும் கொண்ட மலர்கள் முழுமையான மலர்களாகும்.

ஓரிரு வட்டங்கள் இல்லாத மலர்கள் முழுமையற்ற மலர்களாகும்.

மகரந்தத்தாள் சூலக வட்டம் இரண்டையும் கொண்டவை இருபால் மலர்கள்.

எந்த ஒரு நீள வாக்கில் வெட்டினாலும், இரு சம பாகமாகப் பிரியும் மலர் ஆரச்சமச்சீர் மலர். எடுத்துக்காட்டு - செம்பருத்தி.

ஒரு குறிப்பிட்ட நீள வாக்கில் வெட்டினால் மட்டுமே இரு சமபாகமாக பிரியும் மலர் இருபக்க மலர்.

மலரில் புல்லி, அல்லி இதழ்கள் அமைந்திருக்கும் முறை இதழமைவு எனப்படுகிறது. தொடு இதழ் அமைவு, திருகு இதழமைவு, இறங்கு தழுவிதழமைவு, ஏறு தழுவிதழமைவு என இவை வகைப்படுத்தப்படுகிறது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

எது, எந்த பயன்பாட்டிற்கு?

எது, எந்த பயன்பாட்டிற்கு?

கடின நீரை மென்நீராக்க - சோடியம் கார்பனேட்

பற்பசை தயாரிக்க - கால்சியம் கார்பனேட்

வெள்ளையடிக்க - கால்சியம் ஹைட்ராக்சைடு

செயற்கை மழைக்கு - சில்வர் அயோடைடு

வெடிமருந்தாக பயன்படுவது - பொட்டாசியம் நைட்ரேட்

தீயணைக்க - சோடியம் பை கார்பனேட்

அஜீரண கோளாறுகளுக்கு - சோடியம் பை கார்பனேட்

உணவை பதப்படுத்த - சோடியம் குளோரைடு

சிமெண்டு தயாரிக்க - கால்சியம் சல்பேட்

புகைப்படச் சுருள் தயாரிக்க - சில்வர் புரோமைடு

புகைப்பட தொழிலுக்கு பயன்படுவது - சோடியம் தையோசல் பேட்




விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பொது அறிவு குவியல்,

1. சக ஆண்டின் முதல் தேதி எப்போது தொடங்குகிறது?

2. மைமோசா புடிகா என்பது எந்த தாவரத்தின் அறிவியல் பெயர்?

3. பாலி அமைட், பாலி சாக்ரைட், பாலி ஐசோப்ரின் இவற்றில் இயற்கை ரப்பர் எது?

4. ‘ஸ்ட்ரே பெதர்ஸ்’ யார் எழுதிய நூல்?.

5. விஷமுறிவு மருந்து எப்படி அழைக்கப்படுகிறது?

6. குளுக்கோஸில் இருந்து பைருவிக் அமிலமாக மாறுவது எத்தகைய மாற்றமாகும்?

7. God save the Queen என்று ஆரம்பிக்கும் தேசிய கீதம் எந்த நாட்டினுடையது?

8. ஒலிம்பிக் ஜோதி எப்போது அறிமுகமானது?

9. சாம்பல் நிற அணில் சரணாலயம் எங்குள்ளது?

10. தன் ரத்தத்தால் விளக்கேற்ற முனைந்த நாயன்மார் யார்?

விடைகள்

1. மார்ச் 22, 2. தொட்டாச் சிணுங்கி, 3. பாலி ஐசோப்ரின், 4. டாக்டர் சலீம் அலி, 5. ஆன்டிடோட், 6. கிளைக்காலைசிஸ், 7. இங்கிலாந்து, 8. பெர்லின் ஒலிம்பிக், 1936, 9. ஸ்ரீவில்லிபுத்தூர், 10. கலியர்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

நெருக்கடிநிலை - மொரார்ஜி தேசாய் பிரதமரானார்.

நெருக்கடிநிலை அறிவிப்பை 1977 மார்ச் 21-ல் விலக்கிக்கொண்டார் பிரதமர் இந்திரா காந்தி. சிறையிலிருந்த எதிர்க்கட்சித் தலைவர்கள் விடுவிக்கப்பட்டனர். 1977 மக்களவைத் தேர்தலில் ஜெயப்பிரகாஷ் நாராயண் வழிகாட்டலில் ஸ்தாபன காங்கிரஸ், பாரதிய லோக் தள், சோஷலிஸ்ட் கட்சிகள், பாரதிய ஜனசங்கம் ஆகியவை இணைந்து ஜனதா என்ற பெயரில் ஒரே கட்சியாக ‘ஏர் உழவன்’ சின்னத்தில் போட்டியிட்டது. 298 தொகுதிகளை ஜனதா கைப்பற்றியது. மொரார்ஜி தேசாய் பிரதமரானார். காங்கிரஸ் கட்சி 197 தொகுதிகளை இழந்து, 153 தொகுதிகளை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. உத்தர பிரதேசத்தில் இந்திரா காந்தி அவருடைய இளைய மகன் சஞ்சய் காந்தி இருவரும் தோற்றனர். தேர்தலுக்கு முன்னதாக பாபு ஜகஜீவன் ராம், ஹேமவதி நந்தன் பகுகுணா, நந்தினி சத்பதி ஆகியோர் காங்கிரஸிலிருந்து விலகினர். பத்திரிகைத் தணிக்கை, எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது, பேச்சு சுதந்திரம் மறுப்பு ஆகியவற்றுடன் கட்டாய கருத்தடைச் சிகிச்சையும் மக்களிடையே பெரும் பீதியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியது. மும்பை நகரின் அனைத்துத் தொகுதிகளிலும் ஜனதா வென்றது. உத்தர பிரதேசத்தில் காங்கிரஸுக்கு ஒரு தொகுதிகூடக் கிடைக்கவில்லை. மேற்கு வங்கத்திலும் படுதோல்வி. மகாராஷ்டிரம், குஜராத்தில் வெற்றி-தோல்வி இரண்டும் சம அளவுக்குக் கிடைத்தது. தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், ஆந்திரம் ஆகிய தென்னிந்திய மாநிலங்களில் காங்கிரஸ் கூட்டணிக்குக் கணிசமான ஆதரவு கிடைத்தது. கேரளத்தைச் சேர்ந்த சி.எம்.ஸ்டீபன் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ஆனார். ஜனதா கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், சிரோமணி அகாலிதளம், உழவர், உழைப்பாளர் கட்சி, அனைத்திந்திய ஃபார்வர்ட் பிளாக், இந்தியக் குடியரசுக் கட்சி (கோபர்கடே), திமுக இடம்பெற்றிருந்தன. காங்கிரஸ் கூட்டணியில் அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கேரள காங்கிரஸ், புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி (பிரிந்துசென்றவர்கள்) இடம்பெற்றிருந்தன. ஜனதா கட்சியின் ஆட்சி நீண்ட நாள் நீடிக்கவில்லை. பிரதமர் பதவியை பாரதிய லோக் தள் தலைவரான சரண் சிங் ஆரம்பத்திலிருந்தே குறிவைத்திருந்தார். ஜனசங்கம் ஜனதாவில் இணைந்திருந்தாலும் அதன் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் ஒரே குழுவாகச் செயல்படுவதும் சந்திப்பதும் மற்றவர்களுக்கு உறுத்தலாகவே இருந்தது. எனவே, ஜனசங்கத்தின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருப்பவர்கள் ஜனதாவில் இருக்கக் கூடாது என்று இரட்டை உறுப்பினர் பிரச்சினையைக் கிளப்பினர். இது பெரிதானது. முன்னாள் ஜனசங்கத்தினர் விலகத் தயாராயினர். கட்சி உடைந்தது. உடைந்த ஜனதாவுக்கு வெளியிலிருந்து ஆதரவு என்று இந்திரா காந்தி அறிவித்தார். அவரை நம்பி பிரதமர் பதவியை ஏற்ற சரண்சிங், நாடாளுமன்றத்தைச் சந்திக்காமலேயே பதவி விலக நேர்ந்தது. ஜனதா சோதனை முயற்சி படுதோல்வி அடைந்தது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Sunday 24 March 2019

சீனப் பெருஞ்சுவர்


  • உலக அதிசயங்களில் ஒன்றான சீனப் பெபெருஞ்சுவர் வடக்கிலிருந்து (மங்கோலியர்களிடமிருந்து) வரும் ஊடுருவல்களைத் தடுப்பதற்காக எடுக்கப்பட்ட மிகப் பெரும் முயற்சியாகும். 
  • பொ.ஆ.மு. 220ல் குவின் ஷி ஹுவாங் படையெடுப்புகளைத் தடுப்பதற்காக, அதற்கு முன்னர் கட்டப்பட்டிருந்த ஏராளமான பழைய கோட்டைச் சுவர்களை இணைத்தார். 
  • பொ.ஆ.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து பொ.ஆ. 17ஆம் நூற்றாண்டு வரை இதன் விரிவாக்கப் பணிகள் நீடித்தன. 
  • கிழக்கே கொரிய எல்லையிலிருந்து மேற்கே ஆர்டோஸ் பாலைவனம் வரை மலைகள், சமவெளிகளை இணைத்தபடி இது 20,000 கிமீ தூரம் நீள்கிறது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday 18 March 2019

ஸ்னூக்கர்

ஸ்னூக்கர் விளையாட்டின் அடிப்படை அளவுகள்...

மேஜை - 11.8’’X5.10’’

மேஜையின் உயரம் - 3’’

பந்துகளின் எண்ணிக்கை - 22

பந்தின் எடை - சுமார் 160 கிராம்

கியூபந்தின் எடை - 170 கிராம்

பந்துகளுக்கு இடையேயான எடை வித்தியாசம் அதிகபட்சம் 3 கிராமுக்கு மேல் போககக்கூடாது.

பந்துகளின் நிறங்கள் - 7, சிவப்பு, மஞ்சள், பச்சை, பழுப்பு, நீலம், இளஞ்சிவப்பு, கருப்பு. இவை தவிர்த்து கியூ பந்து வெள்ளை நிறமுடையது.

மதிப்புகள் - சிவப்பு - 1, மஞ்சள் -2, பச்சை-3,

பழுப்பு-4, நீ்லம் - 5, இளஞ்சிவப்பு,- 6, கருப்பு-7

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழ் மற்றும் தமிழர் பற்றிய பிரபலமான ஆங்கில நூல்களை அறிவோம்..

The Tamil Plutarch (1859) - சைமன் காசி செட்டி

The Ten Tamil Idyles - பெ.சுந்தரம்பிள்ளை

The Age of Thirugnanasambanda - பெ.சுந்தரம்பிள்ளை

The Augustan Age of Tamil Literature - எம்.கிருஷ்ணசாமி ஐயங்கார்

The poets of Tamil lands - ஜி.யு.போப்

Red earth and pouring rain - ஏ.கே.ராமானுஜம்

The chronology of the early Tamils - கே.என்.சிவராஜப்பிள்ளை

The Tamils eighteeen hundred years ago - வெ.கனகசபை

Sangam Age - கே.ஏ.நீலகண்டசாஸ்திரி

Foreign notices of South India - கே.ஏ.நீலகண்டசாஸ்திரி

South Indian history - கே.ஏ.நீலகண்டசாஸ்திரி

The Cholas - கே.ஏ.நீலகண்டசாஸ்திரி

The Pandiyan Kingdom - கே.ஏ.நீலகண்டசாஸ்திரி

Tamil India -எம்.எஸ்.பூர்ணலிங்கம்

The Dance of Siva - ஆனந்தகுமாரசாமி

Ancient and modern Tamil poets - மறைமலை அடிகள்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கிடைத்த இடம்

பூம்புகாரில் புதையுண்ட பழமையான படகுத்துறை
கற்கால கருவிகளான குவார்ட்சைட் கற்கள் கிடைத்த இடம் - பல்லாவரம் (சென்னை)

பழைய கற்கால கைக்கோடரிகள் - சென்னையை அடுத்த கொறட்டலையாற்றுச் சமவெளி, வடமதுரை

புதிய கற்கால மண்பாண்டங்கள் - திருநெல்வேலி, திருச்சி, சேலம், புதுக்கோட்டை மாவட்டங்கள்

இரும்புக்கால கருவிகள் - ஸ்ரீபெரும்புதூர்

பெருங்கற்கால நீத்தார் நினைவுச்சின்னங்கள் - காஞ்சி, வேலூர், கடலூர், திருச்சி, திருவண்ணாமலை

முதுமக்கள் தாழிகள் - ஆதிச்சநல்லூர் (திருநெல்வேலி)

சங்க கால கப்பல் சிதைவுகள் - பூம்புகார் கடல் பகுதி

சங்கம் மருவிய காலத்து புத்த விகாரம் - கீழையூர் (காவிரிபூம்பட்டினம்)

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

நியூக்ளிக் அமிலங்கள்,

டி.என்.ஏ., ஆர்.என்.ஏ. இரண்டும் நியூக்ளிக் அமிலங்கள்

நியூக்ளிக் அமிலங்கள் நியூகியோடைடுகளால் ஆனவை.

ஒரு நியூக்ளியோடைடு ஒரு சர்க்கரை, ஒரு பாஸ்பாரிக் அமிலம், நைட்ரஜன் காரங்களைக் கொண்டது.

சர்க்கரையும், நைட்ரஜன் காரமும் கொண்டது நியூக்ளியோசைடு.

நியூக்ளிக் அமிலம் என்பது பல நியூக்ளியோடைடு அலகுகளால் ஆனது.

டி.என்.ஏ. காணப்படும் சர்க்கரை டி.ஆக்ஸிரிபோஸ்.

ரிபோஸ், டி.ஆக்சிரிபோஸ் இவை ஐந்து கார்பன் அணுக்களைக் கொண்ட சர்க்கரைகள்.

நைட்ரஜன் காரங்கள் அடினைன், சைட்டோசின், தயாமின், யுராசில் என 5 வகைப்படும்.

டி.என்.ஏ.வில் உள்ள காரங்கள் அடினைன், குவானைன், தயாமின் மற்றம் சைட்டோசின்

ஆர்.என்.ஏ.வில் உள்ள காரங்கள் அடினைன், குவானைன், சைட்டோசின் மற்றும் புராசில்.

அடினைன் மற்றம் தயாமின் இடையே இரட்டைப் பிணைப்பு காணப் படுகிறது.

குவானைன் மற்றும் சைட்டோசின் இடையே காணப்படுவது முப்பிணைப்பு.

டி.என்.ஏ. இரட்டைச்சுருள் திருகு அமைப்பை கண்டறிந்தவர் வாட்சன் மற்றும் கிரிக்.

இரு சுழற்சிகளுக்கு இடையே 10 கார இணைகள் உள்ளன.

இரு சுழற்சிகளுக்கு இடைப்பட்ட தொலைவு 34 நானோமீட்டர்.

டி.என்.ஏ.வின் விட்டம் 20 ஆங்க்ஸ்ட்ரம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பொது அறிவு | வினா வங்கி,


1. முதன்முதலாக எந்த இந்திய நகரம் மின்சார வசதி பெற்றது?

2. வேல்ஸ் இளவரசர் கோப்பை எந்த விளையாட்டுடன் தொடர்பு உடையது?

3. காயத்ரி மந்திரத்தை இயற்றியவர் யார்?

4. கூடு கட்டும் பாம்பு இனம் எது?

5. பரோடாவை ஆண்ட மராட்டிய தலைவர்கள் எப்படி அழைக்கப்பட்டனர்?

6. லென்சின் திறன் எந்த அலகால் அளக்கப்படுகிறது?

7. கர்நாடகாவில் தாமிர சுரங்கம் எங்கு அமைந்துள்ளது?

8. கைபர் கணவாய் எங்குள்ளது?

9. சிம்லா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிரதமர்கள் யார்?

10. விண்வெளியில் முதன்முதலாக உருவாக்கப்பட்ட பொருள் எது?

விடைகள்

1. கொல்கத்தா, 1899-ல், 2. கோல்ப், 3. விஸ்வாமித்திரர், 4. ராஜநாகம், 5. கெய்க்வாட், 6. டயாப்டர், 7. இன்காலாடல், 8. ஆப்கானிஸ்தான், 9. இந்திராகாந்தி, சுல்பிகர் அலி பூட்டோ, 10. செயற்கை முத்து


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday 15 March 2019

தமிழக சட்ட மேலவை

தமிழகத்தின் சட்ட மேலவை 1986-ம் ஆண்டு கலைக்கப்பட்டது. சட்ட மேலவையை மீண்டும் உருவாக்குவதற்கான தமிழக சட்டப் பேரவையின் தீர்மானத்துக்கு 2010-ம் ஆண்டு பாராளுமன்றம் ஒப்புதல் அளித்தது. ஆனால் இன்னும் மேலவை உருவாக்கப்படவில்லை. ஆந்திர பிரதேசம், ஜம்மு காஷ்மீர், பீகார், கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் ஆகிய 6 மாநிலங்களில் சட்ட மேலவை உள்ளது. அரசமைப்புச் சட்டத்தின்படி சட்ட மேலவை உறுப்பினர்களின் எண்ணிக்கை, சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்குக்கு மேல் இருக்கக்கூடாது. குறைந்தபட்சம் 40 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். ராஜ்ய சபாவைப் போலவே ஆறு ஆண்டுகள் பதவிக்காலம் கொண்டது சட்டமேலவை.

சட்ட மேலவை உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கை, உள்ளாட்சி அமைப்புகள் தேர்ந்தெடுக்க வேண்டும். மூன்றில் ஒரு பங்கினை மாநில சட்டப்பேரவை தேர்ந்தெடுக்கும். பன்னிரண்டில் ஒரு பங்கினரை பல்கலைக்கழக மாணவர்கள் தேர்வு செய்வார்கள். மேலும் பன்னிரண்டில் ஒரு பங்கினரை இடைநிலை அதற்கு மேற்பட்ட கல்விக்கூட ஆசிரியர்கள் தேர்வு செய்வார்கள்.

ஆறில் ஒரு பங்கினர் ஆளுநரால் நியமிக்கப்படுவார்கள்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மருத்துவ கண்டுபிடிப்புகள்


முக்கியமான சில மருத்துவ கண்டுபிடிப்புகளையும், அதை கண்டுபிடித்தவர்களையும் அறிவோம்...

ஆன்டிசெப்டிக் அறுவைசிகிச்சை - ஜோசப் லிஸ்டர்

ரத்த மாற்று சிகிச்சை - ஜீன் டெங்ஸ் (1625)

தடுப்பூசி முறை - எட்வர்டு ஜென்னர் (1796)

ஸ்டெதஸ்கோப் - ரேனே லைனக் (1819)

செயற்கை இதயம் - வில்லியம் கோல்ப் (1957)

இதய மாற்று அறுவைச் சிகிச்சை - கிறிஸ்டியன் பர்னார்ட் (1967)

பேஸ்மேக்கர் - ஹைமேன் (1932)

ரேபிஸ் தடுப்பு மருந்து - லூயி பாஸ்டர் (1885)

போலியோ தடுப்பு மருந்து - ஜோனஸ் சால்க் (1954)

பென்சிலின் - அலெக்சாண்டர் பிளமிங் (1928)

நீரிழிவு இன்சுலின் சிகிச்சை - பென்டிங், பெஸ்ட் (1921)

இ.சி.ஜி - ஈந்தோவன் (1906)

இ.இ.ஜி - ஹான்ஸ்பர்க் (1929)

சோதனை குழாய் குழந்தை - ஸ்டாப்டோ, எட்வர்ட்ஸ் (1978)

எண்டாஸ்கோப் - பியர்ரே செகாலஸ் (1827)

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஆக்சிஜன்

பூமியில் அதிகம் காணப்படும் தனிமம் ஆக்சிஜன். பூமியில் 49.5 சதவீதம் இது உள்ளது.

வளிமண்டலத்தில் ஆக்சிஜன் 21 சதவீதம் உள்ளது.

ஆக்சிஜனை கண்டுபிடித்தவர்கள் ஷீலே, பிரிஸ்ட்லி.

ஆக்சிஜன் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு 1774.

ஆக்சிஜனுக்கு பெயரிட்டவர் லவாய்ஸியர்.

ஆக்சிஜனின் அணு எண் 8

ஆக்சிஜனின் இரு வடிவங்கள் O2,O3

உருவாகி உடனே அழியும் ஆக்சிஜன் நேஸன்ட் ஆக்சிஜன்.

நேஸன்ட் ஆக்சிஜன் O என்று குறிப்பிடப்படுகிறது.

ஓஸோன், ஸ்ட்ராட்டோஸ்பியரில் காணப்படுகிறது.

ஓஸோன் படலத்தின் தடிமனைக் குறிப்பது டாப்ஸன் அலகு.

உலக ஓசோன் தினம் செப்டம்பர் 16-ந்தேதி.

செயற்கை சுவாசம் அளிக்க ஆக்சிஜன் பயன்படுகிறது.

ஆக்சிஜனின் இரட்டைச் சேர்மங்கள் ஆக்சைடுகள்.

உலோகங்கள் கார ஆக்சைடுகளைத் தரும்.

அலோகங்கள் அமில ஆக்சைடுகளைத் தரும்.

முக்கிய அமில ஆக்சைடுகள் SO2,NO2,CO2

முக்கிய கார ஆக்சைடுகள் MgO, CaO

முக்கிய ஈரியல்பு ஆக்சைடு ZnO

ராக்கெட்டில் திரவ எரிபொருளாக ஆக்சிஜன் பயன்படுகிறது.

ஆக்ஸி அசிட்டிலின் சுடர், உலோகங்களை ஓட்ட வைக்கும்.

ஆக்சிஜன் பாரா காந்தத்தன்மை உடையது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பொது அறிவு | வினா வங்கி,

1. இந்திய சிவில் சர்வீஸின் தந்தை எனப்படுபவர் யார்?

2. நிலவில் மனிதன் இறங்கி ஆய்வு செய்த இடம் எப்படி அழைக்கப்படுகிறது?

3. இந்தியாவின் மொத்த பரப்பளவு எவ்வளவு?

4. திருப்பூர் எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது?

5. யாருடைய கருத்தின்படி ஜனநாயக சமத்துவ சமுதாயம் என்ற சொல் விவரிக்கப்படுகிறது?.

6. மொத்த தேசிய உற்பத்திக்கும், நிகர தேசிய உற்பத்திக்கும் உள்ள வித்தியாசம் எப்படி அழைக்கப்படுகிறது?

7. y என்பது எந்த தனிமத்தின் குறியீடு?

8. வைரத்தின் ஒளி விலகல் எண் எத்தனை?

9. சைரனின் என்ற பாலியல் ஹர்மோனை உற்பத்தி செய்யும் உயிரி எது?

10. ‘ஷோ பிஸினஸ்’ (show business) என்ற ஆங்கில நூல் யாரால் எழுதப்பட்டது?

விடைகள்

1. காரன்வாலிஸ், 2. அமைதிக்கடல், 3. 32 லட்சம் சதுர கிலோமீட்டர், 4. நொய்யல், 5. ஜவகர்லால் நேரு, 6. தேய்மானம், 7. எட்ரியம், 8. 2.4, 9. பூஞ்சை, 10. ஷசிதரூர்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday 9 March 2019

தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றமும் அதன் அதிகாரங்களும்

குல்பூஷண் ஜாதவ் வழக்கு தொடர்பாக சர்வதேச நீதிமன்றம் சமீபகாலமாக செய்திகளில் அதிகம் அடிபடுகிறது.

சர்வதேச நீதிமன்றம் என்பது என்ன? அதன் பணிகள் என்ன?

சர்வதேச நீதிமன்றமே ஐக்கிய நாடுகள் சபையின் முதன்மையான நீதிமன்றம். நெதர்லாந்தின் தி ஹேக்கில் இயங்கும் இந்த நீதிமன்றத்தின் முக்கிய வேலை, உலக நாடுகளுக்கு இடை யிலான சச்சரவுகளைத் தீர்த்து வைப்பதுதான்.

கடந்த 2017-ம் ஆண்டு சர்வதேச நீதிமன்றத்தின் 15 நீதிபதிகளில் ஒருவராக இந்திய நீதிபதி தல்வீர் பண்டாரியும் தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னதாக சுப்ரீம் கோர்ட்டில் மூத்த நீதிபதியாக பண்டாரி பணியாற்றியிருக்கிறார்.

ஒரு நாட்டின் வழக்கு சர்வதேச நீதிமன்றத்துக்கு வரும்போது, தொடர்புடைய நாட்டின் நீதிபதி யாரும் சர்வதேச நீதிமன்ற நீதிபதிகளின் அமர்வில் இல்லையென்றால், அந்நாடு தற்காலிக நீதிபதியாக ஒருவரை குறிப்பிட்ட வழக்குக்காக நியமிக்கலாம்.

பாகிஸ்தான் நீதிபதிகள் யாரும் சர்வதேச நீதிமன்றத்தில் இல்லையென்பதால் கடந்த ஆண்டு தற்காலிக நீதிபதி ஒருவர் நியமிக்கப்பட்டார். பாகிஸ்தானின் முன்னாள் தலைமை நீதிபதி தஸாடக் ஹுசைன் ஜிலானி தற்போது குல்பூஷண் வழக்கை விசாரிக்கும் அமர்வில் தற்காலிக நீதிபதியாகச் செயல்படுகிறார்.

ஒவ்வொரு நாடும் தன்னிடம் கொண்டு வரும் வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்குவது சர்வதேச நீதிமன்றத்தின் முக்கிய வேலை.

ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அதன் உறுப்பு அமைப்புகள் ஆகியவை இதனை அணுகும்போது சட்டம் தொடர்பாக ஆலோசனை வழங்குவதும் இதன் பணியாகும்.

15 நீதிபதிகளை கொண்டது சர்வதேச நீதிமன்றம். நீதிபதிகள் ஒவ்வொருவரும் வெவ்வேறு நாட்டைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். ஐ.நா. பொதுச் சபை மற்றும் பாதுகாப்பு சபையால் நியமிக்கப்படும் இந் நீதிபதிகளுக்கு பதவிக்காலம் ஒன்பது ஆண்டுகள்.

சர்வதேச நீதிமன்ற நீதிபதிகள் தத்தமது நாடுகளின் பிரதி நிதிகளாகப் பணி புரியமாட்டார்கள். மாறாக, சுதந்திரமான மாஜிஸ்திரேட்டாக செயல்படுவார்கள்.

சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட நாடுகள் மட்டுமே சர்வதேச நீதிமன்றத்தை அணுக முடியும். ஐ.நா. சபையில் 193 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த நாடுகள்தான் சர்வதேச நீதிமன்றத்தை அணுகமுடியும்.

தனது அதிகார வரம்பை ஏற்றுக்கொள்ளும் நாடுகள் கொண்டுவரும் வழக்குகளை மட்டுமே இந்நீதிமன்றம் விசாரிக்கும். முதலில் சம்பந்தப்பட்ட நாடுகள் வழக்கைப் பதிவு செய்து எழுத்துப்பூர்வமாக ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். அதன் பிறகே நேரடியாக பொது விசாரணையில் தங்களது வாத, பிரதிவாதங்களை எடுத்து வைக்க முடியும்.

சரி, சர்வதேச நீதிமன்ற முடிவுகள் கட்டாயமாக அமல் படுத்தப்படுகிறதா?

இரு தரப்பின் வாத விவாதங்களைக் கேட்ட பிறகு, தனிக் கூட்டம் நீதிமன்றத்தில் நடக்கும். அதன் பின்னர் சர்வதேச நீதிமன்ற பொது அவையில் தீர்ப்பு வாசிக்கப்படும். இந்தத் தீர்ப்பே இறுதியானது. மேல்முறையீடு செய்ய முடியாது.

சம்பந்தப்பட்ட தரப்பு தீர்ப்பை நிறைவேற்றத் தவறும்பட்சத்தில் மற்றொரு தரப்பு ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு இவ்விவகாரத்தைக் கொண்டு செல்லும்போது, ஐ.நா.வின் உறுப்பினர்களில் உள்ள ஐந்து ‘வீட்டோ’ அதிகார நாடுகளும் மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதற்கு முட்டுக்கட்டை போட முடிவு செய்துவிட்டால் அந்த விவகாரத்துக்கு தீர்வே கிடைக்காமல் போகக்கூடும்.

1946-ல் இருந்து இந்நீதிமன்றம் எல்லை சார்ந்த விவகாரங்கள், பிராந்திய இறையாண்மை தொடர்பான விவகாரங்கள், பணயக்கைதிகள், தஞ்சம் கோரும் உரிமை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் தீர்ப்பு வழங்கி வருகிறது.

ஆனால், சர்வதேச நீதிமன்றம் வெற்றிகரமாக மட்டுமே செயல்பட்டுள்ளது எனக் கூற முடியாது. இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் இந்நீதிமன்றம் அமைக்கப்பட்டது. ஆனால் இதை உருவாக்கியவர்கள் சர்வதேச பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஒரு மன்றமாக இதைக் கருதினார்கள். அதனை முழுமையாக நிறைவேற்ற இந்நீதிமன்றம் தவறிவிட்டது. அதற்குக் காரணம் பல்வேறு அரசுகள்தான்.

1984-ல் நிகரகுவாவின் சான்டிநிஸ்டா அரசு ஒரு வழக்கு தொடுத்தது. அமெரிக்க ஆதரவு கான்ட்ரா கிளர்ச்சியாளர்களின் நடவடிக்கைகள் குறித்து சர்வதேச நீதிமன்றத்தில் புகார் தொடுத்தது.

இதை தனது அதிகார எல்லைக்குட்பட்ட விஷயமாக நீதிமன்றம் கூறியதைக் கேட்டு ஆத்திரமடைந்த ரொனால்டு ரீகன் தலைமையிலான அமெரிக்க அரசு, மேற்கொண்டு இவ்வழக்கு தொடர்பாக நீதிமன்ற நடவடிக்கைகளில் கலந்துகொள்ள மறுத்தது.

1977-ல் அர்ஜென்டினா- சிலி இடையிலான பீகில் கால்வாய் தொடர்பான சச்சரவில் சர்வதேச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை ஏற்க மறுத்தது அர்ஜென்டினா. போப் இதில் தலையிட்ட பின்னரே போர் தடுக்கப்பட்டது.

சர்வதேச நீதிமன்றம், இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்சினைகளை மட்டுமே விசாரிக்கிறது. தனிநபர்களைத் தண்டிக்க முடியாது. ஐ.சி.சி. எனப்படும் சர்வதேச குற்ற வியல் நீதிமன்றமும், சர்வதேச நீதிமன்றமும் வேறுபட்டவை.

மோசமான குற்றங்கள், இனப்படுகொலை, மனிதநேயத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் உலகத்தின் எந்தப் பகுதியிலும் நடக்கும் போர் குற்றங்களையும் குற்றவியல் நீதிமன்றம் விசாரிக்கும்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கடந்து வந்த பாதை - பிப்ரவரி 23 28


  • டெல்லியில் நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பந்தயத்தில் இந்திய வீராங்கனை அபுர்வி சண்டிலா 252.9 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்து தங்கப் பதக்கம் பெற்றார். அத்துடன் புதிய உலக சாதனையும் படைத்தார். (பிப்ரவரி 23)
  • பாரத ரிசர்வ் வங்கியின் அன்னியச் செலாவணி கையிருப்பு, பிப்ரவரி 15ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 15 கோடி டாலர் உயர்ந்து 39 ஆயிரத்து 827 கோடி டாலராக அதிகரித்து இருக்கிறது. பிப்ரவரி 8ம் தேதியுடன் முடிவடைந்த முந்தைய வாரத்தில் அது 211 கோடி டாலர் சரிவடைந்து 39 ஆயிரத்து 812 கோடி டாலராக இருந்தது. (பிப்ரவரி 23)
  • உத்தரபிரதேசத்தின் ரோத்தா பஜாரில் பட்டாசுக் கடையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் சிக்கி 13 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தில் 3 வீடுகளும் இடிந்து தரைமட்டமாகின. (பிப்ரவரி 23)
  • கட்டி முடிக்கப்படாத வீடுகளுக்கான ஜி.எஸ்.டி.யை 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகவும், குறைந்த விலை வீடுகளுக்கான ஜி.எஸ்.டி.யை ஒரு சதவீதமாகவும் குறைக்க ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. (பிப்ரவரி 24)
  • உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் ஆண்களுக்கான 100 மீட்டர் ஏர் பிஸ்டல் பந்தயத்தில் 16 வயதான இளம் இந்திய வீரர் சவுரப் சவுத்ரி உலக சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்றார். (பிப்ரவரி 24)
  • கடந்த ஜனவரி மாதத்தில், ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி டாலர் மதிப்பு அடிப்படையில் 9 சதவீதம் அதிகரித்து 153 கோடி டாலராக உயர்ந்தது. முந்தைய டிசம்பர் மாதத்தில் ஏற்றுமதி 3 சதவீதம் மட்டுமே அதிகரித்து இருந்தது. (பிப்ரவரி 25)
  • மும்பையில் இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய பெண்கள் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது. (பிப்ரவரி 25)
  • அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் நடந்த விழாவில் 2018ம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருதுகள் வழங்கப்பட்டன. இதில் சிறந்த படமாக ‘கிரீன் புக்’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டது. சிறந்த நடிகராக ரமி மாலிக்கும், சிறந்த நடிகையாக ஒலிவியா கால்மனும் விருது பெற்றனர். (பிப்ரவரி 25)
  • இந்திய விமானப் படை விமானங்கள் அதிகாலையில் பாகிஸ்தானின் பாலகோட், முசாபராபாத், சகோதி ஆகிய இடங்களில் குண்டுமழை பொழிந்தன. இதில் 350 பயங்கர வாதிகள் கொல்லப்பட்டனர். (பிப்ரவரி 26)
  • ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். அப்போது அவர், பாகிஸ்தானில் இந்திய விமானப் படை நடத்திய அதிரடித் தாக்குதல் குறித்த தகவல்களைத் தெரிவித்தார். (பிப்ரவரி 26)
  • ஜனவரி மாதத்தில், ரூபாய் மதிப்பு அடிப்படையில் கடல் உணவுப்பொருள்கள் ஏற்றுமதி 1.45 சதவீதம் உயர்ந்து ரூ. 3 ஆயிரத்து 58 கோடியாக அதிகரித்தது. (பிப்ரவரி 26)
  • இந்தியாவும் பாகிஸ்தானும் பொறுமையைக் கடைப்பிடிப்பதுடன் தூதரக ரீதியாகத் தீர்வுகாண வேண்டும் என்று உலக நாடுகள் வேண்டுகோள் விடுத்தன. (பிப்ரவரி 26)
  • அயோத்திய ராமஜென்ம பூமி வழக்கில் புதிய திருப்பமாக, மத்தியஸ்தம் மூலம் சுமுகமாகத் தீர்க்க சுப்ரீம் கோர்ட்டு யோசனை தெரிவித்தது. (பிப்ரவரி 26)
  • காஷ்மீருக்குள் நுழைந்த பாகிஸ்தான் விமானங்களை இந்திய போர் விமானங்கள் விரட்டி அடித்தன. அப்போது இந்திய போர் விமானம் ஒன்று பாகிஸ்தானுக்குள் விழுந்ததால், அதில் இருந்த சென்னையைச் சேர்ந்த விமானி அபிநந்தன் அந்த நாட்டு ராணுவத்திடம் சிக்கினார். காஷ்மீருக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. (பிப்ரவரி 27)
  • தனது மண்ணில் இயங்கிவரும் பயங்கரவாதிகள் மீது பாகிஸ்தான் அர்த்தமுள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்கா கண்டித்தது. (பிப்ரவரி 27)
  • வரும் 2019 2020ம் நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை 3.6 சதவீதமாக உயரும் என பிட்ச் சொல்யூஷன்ஸ் நிறுவனம் மதிப்பீடு செய்தது. (பிப்ரவரி 27)
  • காஷ்மீர் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். (பிப்ரவரி 27)
  • அமெரிக்காவில் அவசர நிலைக்கு எதிரான தீர்மானம், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. (பிப்ரவரி 27)
  • நில உரிமை இன்றி சட்டவிரோதமாக காடுகளில் வசித்து வரும் பழங்குடியினரை வெளியேற்றத் தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதுதொடர்பாக பிப்ரவரி மாதம் 13ம் தேதி பிறப்பித்த உத்தரவை நீதிபதிகள் நிறுத்திவைத்தனர். (பிப்ரவரி 28)
  • பதிலடி தாக்குதலின்போது பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்ட சென்னையைச் சேர்ந்த விமானி அபிநந்தன் விடுவிக்கப்படுவார் என்று அந்நாட்டு நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் இம்ரான்கான் அறிவித்தார். (பிப்ரவரி 28)
  • பாகிஸ்தான் அத்துமீறினால் பதிலடி கொடுப்போம் என்று டெல்லியில் இந்திய முப்படை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். (பிப்ரவரி 28)
  • மும்பையில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி ஆறுதல் வெற்றி பெற்றது. (பிப்ரவரி 28)
  • வியட்நாமில் நடந்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வடகொரியத் தலைவர் கிம் ஜாங் அன் இடையிலான சந்திப்பு எந்த உடன்பாடும் எட்டப்படாமல் முடிவுக்கு வந்தது. (பிப்ரவரி 28)
  • நாசா’வின் புதிய தொலைநோக்கியால் 1400 கிரகங்களை கண்டுபிடிக்கலாம்



விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday 4 March 2019

பிரபலங்கள் பிறப்பிடம்

பாரதியார் - எட்டயபுரம்

பாரதிதாசன் - புதுச்சேரி

கண்ணதாசன் - சிறுகூடற்பட்டி

ரமணர் - திருச்சுழி

ராகவேந்திரர் - புவனகிரி

கிருபானந்தவாரியார் - காங்கேய நல்லூர்

பூலித்தேவன் - நெற்கட்டும் செவல்

மருதநாயகம் - பனையூர்

வ.உ.சிதம்பரனார் - ஓட்டப்பிடாரம்

சுப்பிரமணியசிவா - வத்தலக்குண்டு

வாஞ்சிநாதன் - செங்கோட்டை

கொடிகாத்த குமரன் - திருப்பூர்

ராஜாஜி - தொராப்பள்ளி

பெரியார் - ஈரோடு

காமராஜர் - விருதுநகர்

அண்ணா - காஞ்சீபுரம்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

செம்மொழி

செம்மொழி தமிழாய்வு நிறுவனம்.
செம்மொழி தகுதி என்பது மொழியியல் அறிஞர்களால் தீர்மானிக்கப்படுகிறது. உலகிலுள்ள ஆறாயிரம் மொழிகளில் ஆறு மொழிகள் செம்மொழிகளாக கருதப்படுகின்றன.

கிரேக்கம், லத்தீன், எபிரேயம், சீனம், சமஸ்கிருதம், தமிழ் ஆகிய ஆறும் செம்மொழிகளாகும்.

செம்மொழிகள் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானதும், இலக்கிய வளமும் கொண்டவை.

பாலி, அரபி, பாரசீகம் ஆகிய மொழிகளும் செம்மொழிகளாக கருதப்படுவது உண்டு.

2 ஆயிரம் ஆண்டு தொன்மை, சுயசிந்தனையில் உருவான இலக்கிய வளம், தனித்த பண்பாடு, தனித்து இயங்கும் தன்மை, தனித்தன்மை, பிற மொழிகளை உருவாக்கிய தாய்த்தன்மை ஆகியவை செம்மொழிகளுக்குரிய முக்கிய தகுதிகளாகும்.

உலக செவ்வியல் மொழிகளின் வரிசையில் தமிழ் என்ற நூலில் செம்மொழிக்குரிய பதினோரு தகுதிகளை பட்டியலிடுகிறார் டாக்டர் வா.செ.குழந்தைசாமி.

‘செம்மொழி உள்ளும் புறமும்’ என்ற நூலில் செம்மொழிக்குரிய பதினோரு தகுதிகளை பட்டியலிடுகிறார் தமிழறிஞர் மணவை முஸ்தபா.

இந்திய அரசாங்கம் 2004-ம் ஆண்டு அக்டோபர் 12-ம் நாள் தமிழைச் செம்மொழியாக அறிவித்து அரசாணை வெளியிட்டது.

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் 2008-ம் ஆண்டு முதல் சென்னையில் செயல்பட தொடங்கியது.

உலக தமிழ்ச்செம்மொழி மாநாடு 2010-ம் ஆண்டு ஜூன் 23 முதல் 27-ந் தேதி வரை கோவையில் நடைபெற்றது.

செம்மொழிக்கான அரசாணையில் குறைந்தபட்சம் ஆயிரம் ஆண்டு பழமையான இலக்கியம் வளம் கொண்ட மொழிகள் செம்மொழிகளாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் உயர் தனிச் செம்மொழி என்ற கருத்தை பரிதிமாற் கலைஞர் 1897-ல் அவர் எழுதிய தமிழ் மொழி வரலாறு என்ற நூலில் முதன் முதலாக விளக்கி உள்ளார்.

தென்னிந்தியாவில் பேசப்படும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், குடகு, துளு ஆகிய ஆறு மொழிகளும் வடமொழியிலிருந்து தோன்றியவை அல்ல என்ற கருத்தை அயர்லாந்து நாட்டுமொழியியல் அறிஞர் ராபர்ட் கால்டுவெல் 1858-ல் அவர் வெளியிட்ட ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்ற நூலில் விளக்கி உள்ளார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கிழக்கு தொடர்ச்சி மலை

கிழக்கு தொடர்ச்சிமலையின் பிரிவுகள் உள்ள இடங்களை அறிவோம்...

சேர்வராயன் மலை - ஏற்காடு

கல்வராயன்மலை - விழுப்புரம்

கொல்லிமலை - நாமக்கல்

பச்சைமலை - திருச்சி

ஏலகிரி - வேலூர்


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பொது அறிவு குவியல் - வினாவங்கி

1. மூன்று தமிழ்ச் சங்கங்கள் இருந்ததாக குறிப்பிடும் நூல் எது?

2. ஹிமடாலஜி என்பது எதைப் பற்றிய படிப்பு?

3. கிரிக்கெட் மட்டையை பந்து தொட்டதா என்பதை அறிய உதவும் கருவி எது?

4. உலக வசிப்பிட தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

5. தூங்கல் இசையில் பாடப்படும் பா வகை எது?

6. சிலப்பதிகாரம், ‘மாதவ முனிவன்’ என்று யாரை குறிப்பிடுகிறது?

7. உரிச்சொல் நிகண்டு யாரால் எழுதப்பட்டது?

8. முதுகெலும்பி உயிரினங்களின் சிறுநீர் மஞ்சள் நிறமாக இருக்கக் காரணம் எது?

9. ராணி தேனீக்கு மட்டும் தரப்படும் உணவு எப்படி அழைக்கப்படுகிறது?

10. செயற்கை பட்டு எனப்படுவது எது?

விடைகள்

1. இறையனார் களவியலுரை, 2. ரத்தம், 3. ஸ்னிக்கோ மீட்டர், 4. அக்டோபர் 3, 5. வஞ்சிப்பா, 6. அகத்தியர், 7. காங்கேயர், 8. யூரோகுரோம், 9. ராயல் ஜெல்லி, 10. ரேயான் இழை.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE