Saturday 9 March 2019

கடந்து வந்த பாதை - பிப்ரவரி 23 28


  • டெல்லியில் நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பந்தயத்தில் இந்திய வீராங்கனை அபுர்வி சண்டிலா 252.9 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்து தங்கப் பதக்கம் பெற்றார். அத்துடன் புதிய உலக சாதனையும் படைத்தார். (பிப்ரவரி 23)
  • பாரத ரிசர்வ் வங்கியின் அன்னியச் செலாவணி கையிருப்பு, பிப்ரவரி 15ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 15 கோடி டாலர் உயர்ந்து 39 ஆயிரத்து 827 கோடி டாலராக அதிகரித்து இருக்கிறது. பிப்ரவரி 8ம் தேதியுடன் முடிவடைந்த முந்தைய வாரத்தில் அது 211 கோடி டாலர் சரிவடைந்து 39 ஆயிரத்து 812 கோடி டாலராக இருந்தது. (பிப்ரவரி 23)
  • உத்தரபிரதேசத்தின் ரோத்தா பஜாரில் பட்டாசுக் கடையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் சிக்கி 13 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தில் 3 வீடுகளும் இடிந்து தரைமட்டமாகின. (பிப்ரவரி 23)
  • கட்டி முடிக்கப்படாத வீடுகளுக்கான ஜி.எஸ்.டி.யை 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகவும், குறைந்த விலை வீடுகளுக்கான ஜி.எஸ்.டி.யை ஒரு சதவீதமாகவும் குறைக்க ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. (பிப்ரவரி 24)
  • உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் ஆண்களுக்கான 100 மீட்டர் ஏர் பிஸ்டல் பந்தயத்தில் 16 வயதான இளம் இந்திய வீரர் சவுரப் சவுத்ரி உலக சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்றார். (பிப்ரவரி 24)
  • கடந்த ஜனவரி மாதத்தில், ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி டாலர் மதிப்பு அடிப்படையில் 9 சதவீதம் அதிகரித்து 153 கோடி டாலராக உயர்ந்தது. முந்தைய டிசம்பர் மாதத்தில் ஏற்றுமதி 3 சதவீதம் மட்டுமே அதிகரித்து இருந்தது. (பிப்ரவரி 25)
  • மும்பையில் இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய பெண்கள் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது. (பிப்ரவரி 25)
  • அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் நடந்த விழாவில் 2018ம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருதுகள் வழங்கப்பட்டன. இதில் சிறந்த படமாக ‘கிரீன் புக்’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டது. சிறந்த நடிகராக ரமி மாலிக்கும், சிறந்த நடிகையாக ஒலிவியா கால்மனும் விருது பெற்றனர். (பிப்ரவரி 25)
  • இந்திய விமானப் படை விமானங்கள் அதிகாலையில் பாகிஸ்தானின் பாலகோட், முசாபராபாத், சகோதி ஆகிய இடங்களில் குண்டுமழை பொழிந்தன. இதில் 350 பயங்கர வாதிகள் கொல்லப்பட்டனர். (பிப்ரவரி 26)
  • ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். அப்போது அவர், பாகிஸ்தானில் இந்திய விமானப் படை நடத்திய அதிரடித் தாக்குதல் குறித்த தகவல்களைத் தெரிவித்தார். (பிப்ரவரி 26)
  • ஜனவரி மாதத்தில், ரூபாய் மதிப்பு அடிப்படையில் கடல் உணவுப்பொருள்கள் ஏற்றுமதி 1.45 சதவீதம் உயர்ந்து ரூ. 3 ஆயிரத்து 58 கோடியாக அதிகரித்தது. (பிப்ரவரி 26)
  • இந்தியாவும் பாகிஸ்தானும் பொறுமையைக் கடைப்பிடிப்பதுடன் தூதரக ரீதியாகத் தீர்வுகாண வேண்டும் என்று உலக நாடுகள் வேண்டுகோள் விடுத்தன. (பிப்ரவரி 26)
  • அயோத்திய ராமஜென்ம பூமி வழக்கில் புதிய திருப்பமாக, மத்தியஸ்தம் மூலம் சுமுகமாகத் தீர்க்க சுப்ரீம் கோர்ட்டு யோசனை தெரிவித்தது. (பிப்ரவரி 26)
  • காஷ்மீருக்குள் நுழைந்த பாகிஸ்தான் விமானங்களை இந்திய போர் விமானங்கள் விரட்டி அடித்தன. அப்போது இந்திய போர் விமானம் ஒன்று பாகிஸ்தானுக்குள் விழுந்ததால், அதில் இருந்த சென்னையைச் சேர்ந்த விமானி அபிநந்தன் அந்த நாட்டு ராணுவத்திடம் சிக்கினார். காஷ்மீருக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. (பிப்ரவரி 27)
  • தனது மண்ணில் இயங்கிவரும் பயங்கரவாதிகள் மீது பாகிஸ்தான் அர்த்தமுள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்கா கண்டித்தது. (பிப்ரவரி 27)
  • வரும் 2019 2020ம் நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை 3.6 சதவீதமாக உயரும் என பிட்ச் சொல்யூஷன்ஸ் நிறுவனம் மதிப்பீடு செய்தது. (பிப்ரவரி 27)
  • காஷ்மீர் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். (பிப்ரவரி 27)
  • அமெரிக்காவில் அவசர நிலைக்கு எதிரான தீர்மானம், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. (பிப்ரவரி 27)
  • நில உரிமை இன்றி சட்டவிரோதமாக காடுகளில் வசித்து வரும் பழங்குடியினரை வெளியேற்றத் தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதுதொடர்பாக பிப்ரவரி மாதம் 13ம் தேதி பிறப்பித்த உத்தரவை நீதிபதிகள் நிறுத்திவைத்தனர். (பிப்ரவரி 28)
  • பதிலடி தாக்குதலின்போது பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்ட சென்னையைச் சேர்ந்த விமானி அபிநந்தன் விடுவிக்கப்படுவார் என்று அந்நாட்டு நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் இம்ரான்கான் அறிவித்தார். (பிப்ரவரி 28)
  • பாகிஸ்தான் அத்துமீறினால் பதிலடி கொடுப்போம் என்று டெல்லியில் இந்திய முப்படை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். (பிப்ரவரி 28)
  • மும்பையில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி ஆறுதல் வெற்றி பெற்றது. (பிப்ரவரி 28)
  • வியட்நாமில் நடந்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வடகொரியத் தலைவர் கிம் ஜாங் அன் இடையிலான சந்திப்பு எந்த உடன்பாடும் எட்டப்படாமல் முடிவுக்கு வந்தது. (பிப்ரவரி 28)
  • நாசா’வின் புதிய தொலைநோக்கியால் 1400 கிரகங்களை கண்டுபிடிக்கலாம்



No comments: