Thursday 28 March 2019

விண்வெளி தொழில்நுட்பத்தில் இந்தியா புதிய சாதனை செயற்கைக்கோள் அழிப்பு ஏவுகணை சோதனை வெற்றி தொலைக்காட்சி உரையில் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

ஒடிசா மாநிலத்தில் உள்ள அப்துல் கலாம் தீவிலிருந்து நேற்று (28.03.2019) ஏவப்பட்ட ஏ-சாட் ஏவுகணை இலக்கை நோக்கி சீறிப் பாய்கிறது.புதுடெல்லி நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, விண்வெளியில் செயற்கைக் கோளை இடைமறித்து சுட்டு வீழ்த்தும் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமையுடன் தெரிவித்துள்ளார். இதன் மூலம், இத்தகைய விண் வெளி தொழில்நுட்பம் கொண்ட அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுடன் இந்தியாவும் இணைந்துள்ளது. பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி, வானொலி மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் ஆற்றிய உரையில் கூறியதாவது: ஒவ்வொரு நாட்டின் பயணத் திலும் மிகுந்த பெருமை தரக்கூடிய மற்றும் அடுத்த தலைமுறையின ரிடம் வரலாற்று சிறப்புமிக்க தாக் கத்தை ஏற்படுத்தக்கூடிய தருணங்கள் இருக்கும். நம் நாட்டில் இன்று (நேற்று) அதுபோன்ற ஒரு தருணம் நிகழ்ந்துள்ளது. ஆம், முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட செயற்கைக்கோள் அழிப்பு ஏவுகணையை (ஏ-சாட்) இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. இதன்மூலம் விண் வெளி தொழில்நுட்பத்தில் இந்தியா மிகப்பெரிய சாதனை புரிந்துள் ளது. இந்த ஏவுகணை நாட்டின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும். பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) ‘மிஷன் சக்தி’ என்ற பெயரில் இந்த சோதனையை நடத்தியது. ஒடிசா மாநிலத்தில் உள்ள அப்துல் கலாம் தீவிலிருந்து ஏவப்பட்ட இந்த ஏவு கணை, தாழ்வான புவி வட்டப் பாதையில் (எல்இஓ) (பூமியிலிருந்து 300 கி.மீ. உயரத்தில்) சுற்றி வந்த ஒரு செயற்கைக்கோளை சுட்டு வீழ்த்தியது. இதன் வெற்றிக்காக பாடுபட்ட அனைவருக்கும் வாழ்த்து கள். இந்த ஏவுகணை எந்த ஒரு நாட்டுக்கும் எதிரானது அல்ல. நம் நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த சோதனை மூலம் சர்வதேச சட்டங்கள் மற்றும் உடன்படிக்கைகள் என எதையும் இந்தியா மீறவில்லை. மிஷன் சக்தி என்ற இந்த திட்டம் மிகவும் சிக்கலானது. தாழ்வான புவி வட்டப் பாதையில் சுற்றி வரும் செயற்கைக்கோளை சுட்டு வீழ்த்து வது அரிய சாதனை ஆகும். அதுவும் அதிவேகத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இந்த ஏவுகணை ஏவப்பட்ட 3 நிமிடங்களில் குறி வைக்கப்பட்ட செயற்கைக்கோளை இடைமறித்து சுட்டு வீழ்த்தியது. நம் நாட்டு விஞ்ஞானிகளின் திறமை மற்றும் விண்வெளி திட்டங்களின் வெற்றியை பறைசாற்றுவதாக இந்த சோதனை அமைந்துள்ளது. இதன் மூலம், விண்வெளியில் சுற்றி வரும் செயற்கைக்கோள்களை சுட்டு வீழ்த்தும் ஏவுகணைகளை வைத்திருக்கும் நாடுகள் பட்டிய லில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா வுடன் இந்தியாவும் இணைந் துள்ளது. இவ்வாறு அவர் தெரி வித்தார். இந்த சோதனையின்போது எந்த செயற்கைக்கோள் சுட்டு வீழ்த் தப்பட்டது என்ற தகவலை பிரதமர் மோடி தெரிவிக்கவில்லை. எனி னும், இந்தியாவுக்கு சொந்தமான கைவிடப்பட்ட அல்லது செயலிழந்த செயற்கைக்கோளை இலக்காக கொண்டு இந்த சோதனை நடந்த தாக தகவல் வெளியாகி உள்ளது. வருங்காலத்தில் போர் மூண்டால் எதிரி நாட்டு செயற்கைக்கோள் மீது தாக்குதல் நடத்த இதுபோன்ற ஏவுகணைகள் பயன்படுத்தப்பட வாய்ப்பு உள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் இது போன்ற அறிவிப்பை வெளியிட்ட பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உட்பட் எதிர்க்கட்சித் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆனால், பாதுகாப்பு தொடர்பான அறிவிப்புக்கு தேர்தல் ஆணை யத்திடம் அனுமதி பெறத் தேவை யில்லை என அதன் உயர் அதிகாரிகள் வட்டாரத்தினர் தெரிவித் துள்ளனர். இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், “மிஷன் சக்தி திட்டம் வெற்றி பெற்றதற்காக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ), இந்திய விண் வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) ஆகியவற்றுக்கு வாழ்த்துகள். பிரதமர் மோடிக்கும் ‘உலக நாடக தின’ நல்வாழ்த்துகள்” என பதிவிட்டுள்ளார். பின்னர் டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ராகுல் பேசும்போது, “பிரதமர் மோடி தனது அறிவிப்புக்காக நாட்டு மக்களை 45 நிமிடம் காக்க வைத்துவிட்டார். அப்போது அவருடைய முகத்தைப் பார்த்தீர்களா? காங்கிரஸ் கட்சி இப்போது நீதி வழங்கும் என்று அவர் உணர்ந்து கொண்டார். தன்னுடைய நேரம் முடிவுக்கு வர உள்ளது என்பதை நினைத்து அவர் பயப்படுகிறார்” என்றார். காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் பக்கத்தில், “மிஷன் சக்தி திட்டம் வெற்றி பெற்றதற்கு டிஆர்டிஓ, இஸ்ரோ மற்றும் மத்திய அரசுக்கு வாழ்த்துகள். இந்திய விண்வெளி அமைப்பு 1961-ல் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் நிறுவப்பட்டது. பின்னர் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தலைமை யிலான ஆட்சியின்போது நிறுவப் பட்ட இஸ்ரோ, நாட்டுக்கு பெருமை சேர்க்கும் வகையில் தொடர்ந்து பல்வேறு சாதனைகளை செய்து வருகிறது” என கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் கூறும்போது, “முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தான் ஏ-சாட் திட்டத்துக்கு அடித்தள மிட்டது. அந்தத் திட்டம்தான் இன்று வெற்றி பெற்றுள்ளது. இதற்காக நமது விஞ்ஞானிகளுக்கும் மன் மோகன் சிங்குக்கும் வாழ்த்துகள்” என்றார். மேற்கு வங்க மாநில அமைச்சர் பிர்ஹத் ஹக்கிம் கூறும்போது, “பிறர் செய்த சாதனைகளுக்கு சொந்தம் கொண்டாடுவதை பிரதமர் மோடி நிறுத்திக் கொள்ள வேண்டும். மக் களவைத் தேர்தல் நெருங்கும் நிலை யில், மக்களை முட்டாளாக்குவதற் காக பிரதமர் மோடியும் பாஜகவும் இதுபோன்ற செயலில் ஈடுபடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இதனால் வரும் தேர்தலில் பாஜக வுக்கு எந்தப் பயனும் கிடைக்காது” என்றார்.

No comments: