மலர்கள்

மகரந்தத் தாள், சூலக வட்டங்கள், அல்லி வட்டம், புல்லி வட்டம் ஆகிய 4 வட்டங்களையும் கொண்ட மலர்கள் முழுமையான மலர்களாகும்.

ஓரிரு வட்டங்கள் இல்லாத மலர்கள் முழுமையற்ற மலர்களாகும்.

மகரந்தத்தாள் சூலக வட்டம் இரண்டையும் கொண்டவை இருபால் மலர்கள்.

எந்த ஒரு நீள வாக்கில் வெட்டினாலும், இரு சம பாகமாகப் பிரியும் மலர் ஆரச்சமச்சீர் மலர். எடுத்துக்காட்டு - செம்பருத்தி.

ஒரு குறிப்பிட்ட நீள வாக்கில் வெட்டினால் மட்டுமே இரு சமபாகமாக பிரியும் மலர் இருபக்க மலர்.

மலரில் புல்லி, அல்லி இதழ்கள் அமைந்திருக்கும் முறை இதழமைவு எனப்படுகிறது. தொடு இதழ் அமைவு, திருகு இதழமைவு, இறங்கு தழுவிதழமைவு, ஏறு தழுவிதழமைவு என இவை வகைப்படுத்தப்படுகிறது.

Comments