Saturday, 11 July 2020

முதல்வர் பழனிசாமியின் சேவையை பாராட்டி சிகாகோ ரோட்டரி சங்கம் கவுரவம்

சிறந்த சேவைக்காக முதல்வர் பழனிசாமியை ‘பால் ஹாரிஸ் ஃபெல்லோ’ என்று அமெரிக்காவின் சிகாகோ ரோட்டரி ஃபவுண்டேஷன் கவுரவப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அமெரிக்காவின் சிகாகோவை தலைமையகமாக கொண்டு இயங்கி வரும் ‘தி ரோட்டரி ஃபவுண்டேஷன் ஆஃப் ரோட்டரி இன்டர்நேஷனல்’ அமைப்பு, குடிநீர், சுகாதாரம், நோய்த் தடுப்பு, தாய்சேய் நலம், சுற்றுச்சூழல், உலக சமாதானம் போன்ற துறைகளில் சிறப்பான முறையில் சேவையாற்றுபவர்களுக்கு ‘பால் ஹாரிஸ் ஃபெல்லோ’ (PAUL HARRIS FELLOW) என அழைத்து கவுரவப்படுத்தி வருகிறது.

அந்த வகையில் முதல்வர் பழனிசாமியின் சேவையை பாராட்டி, இந்த அமைப்பு ‘பால் ஹேரிஸ் பெல்லோ’ என கவுரவப்படுத்தியுள்ளது. இத் தகவலை செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.