Monday 23 March 2020

காந்திக்கு நோபல் பரிசு?

அமைதிக்கான நோபல் பரிசு 1901-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. அமைதிக்கான முதல் நோபல் பரிசு செஞ்சிலுவை சங்கத்தை ஏற்படுத்திய ஹென்றி டூனன்டுக்கு வழங்கப்பட்டது.

அமைதிக்கான நோபல் பரிசுக்கு மகாத்மா காந்தியின் பெயர் 5 முறை (1937, 1938, 1939, 1947, 1948) ஆண்டுகளில் பரிந்துரைக்கப்பட்டது. அவருக்கு விருது வழங்கும் வாய்ப்பு 1948-ல் பெரிதும் இருந்தும் அந்த ஆண்டு ஜனவரி 30-ந்தேதி அவர் கொல்லப்பட்டதால் அவருக்கு நோபல் பரிசு வழங்கப்படவில்லை. உயிரோடு இருப்பவர்களுக்கு மட்டும் நோபல் பரிசு அறிவிக்கப்படுகிறது. எனவே நோபல் கமிட்டி, ‘வாழ்பவர்களில் யாரும் அந்த ஆண்டு நோபல் பரிசுக்கு தகுதி பெறவில்லை’ என அறிவித்தது. காந்தியடி களுக்கு நோபல் பரிசு வழங்க இயலாமல் போனதற்கு 2009-ம் ஆண்டிலும் நோபல் பரிசு கமிட்டி வருத்தம் தெரிவித்தது.

No comments: