Monday 23 March 2020

வினைத் தொகை

முக்காலத்துக்கும் பொருந்தி வரும் வினைச்சொல்லே வினைத் தொகை. இதை காலம் கடந்த பெயரெச்சம் என்பர். உழுபடை என்பது உழுதபடை, உழுகின்ற படை, உழும்படை என முக்காலத்துக்கும் பொருந்தும். இந்த வினைத் தொகைச் சொற்களில் வல்லினம் மிகாது என்பது தமிழ் இலக்கண விதிகளில் ஒன்று.

உழுபடை, கொல்புலி, வளர்தமிழ், ஊறுகாய், சுடுசோறு போன்ற சொற் களைச் சொல்லிப் பார்த்தாலே ஊறுக்காய், சுடுச்சோறு என்று வராது என்பதை உணரலாம்.

ஆனால் இந்தப் பொது விதியை உணராமல் நாம் தவறு செய்யும் சில இடங்கள் உண்டு. திருநிறை செல்வன், கணிபொறி என்பதில் பலர், வல்லினம் மிகுந்து எழுதுவது உண்டு.

திருநிறை செல்வன் என்ற சொல் வினைத் தொகை என்பதால் திரு நிறைச் செல்வன் என்று எழுதுவது பிழை. திருநிறை என்ற சொல், ‘ஐ’ ஈறுற்றுப் பெயர்ச் சொல்லாக இருப்பதால் நாம் இந்த தவறைச் செய்கிறோம். இனி திருநிறை செல்வன் என்றே எழுதுவோம்.

கணிப்பொறி என்று எழுதுவது பிழை என்று சொன்னாலும் பலர் அதை பின்பற்றுவதில்லை என்பதால் அதற்கு மாற்றாக கணினி என்ற சொல்லை பயன்படுத்தலாம் என்று தமிழ் அறிஞர் குழு அறிமுகப்படுத்தியது. தற்போது இந்தச் சொல் பரவலாக பயன்படுத்தப்படுகிறது.

No comments: