ஞான பீட விருது (Jnanpith Award ) என்பது இந்தியாவில்இலக்கியத்துக்காக வழங்கப்படும் ஒரு உயரிய விருது ஆகும். இந்த விருதை வழங்குபவர்கள் பாரதிய ஞானபீடம் (Bharathiya Jnanpitham) என்ற பண்பாட்டு இலக்கியக் கழகமாகும். இவ்வறக்கட்டளை தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழை வெளியிடும் சாகு ஜெயின் குடும்பத்தினரால் நிறுவப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட 15 மொழிகளுள் சிறந்த எழுத்தாளருக்கு வழங்கப்படுகிறது. 1954 -ல் இதைத் தோற்றுவித்தவர் சாந்திபிரசாத் ஜெயின்(Shanti Prasad Jain) என்பவர். இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரான டாக்டர். இராஜேந்திரபிரசாத் இந்தியாவின் சிறந்த எழுத்தாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் விருதுவழங்கி பெருமைப்படுத்த ஒரு அமைப்பு வேண்டும் என்று பல தொழிலதிபர்களிடம் கேட்டுக் கொண்டார். அதன் விளைவாக உருவானதே பாரதிய ஞானபீடம் பண்பாட்டு இலக்கியக்கழகம். இந்த விருது, இந்திய ரூபாய் 5 இலட்சத்திற்கான காசோலை, தங்கமும் செம்பும் கலந்த பட்டயமும், பாராட்டுப் பத்திரம் மற்றும் பித்தளையால் ஆன கலைமகள் {வாக்தேவி} சிலையை உள்ளடக்கியது. 1961ல் இந்த விருது நிறுவப்பட்டது. 1965ல் முதன் முதலாக மலையாள எழுத்தாளர் ஜீ. சங்கர குருப் (G Shankara Kurup)க்கு வழங்கப்பட்டது. இந்தியாவின் அதிகாரபூர்வ மொழிகளில் எழுதும் எந்த ஓர் எழுத்தாளரும் இந்த விருதுக்கு தகுதியானவர் ஆவார். 1982 வரை, ஓர் எழுத்தாளரின் குறிப்பிட்ட படைப்பை பாராட்டி, ஞான பீட விருது வழங்கப்பட்டது. அதன் பின்னர் ஓர் எழுத்தாளரின் வாழ்நாளில் அவர் இலக்கியத்திற்கு ஆற்றிய பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை, அதிகப்பட்சமாக, கன்னட மொழி எழுத்தாளர்கள் 7 முறையும் இந்தி மொழி எழுத்தாளர்கள் 6 முறையும் இந்த விருதைப் பெற்றுள்ளார்கள்.
1965 - ஜி சங்கர குருப் - ஓடக்குழல் (புல்லாங்குழல்) - மலையாளம்
1966 - தாராசங்கர் பந்தோபாத்தியாய் - கணதேவ்தா - வங்காள மொழி
1967 - குவெம்பு (முனைவர் கே.வி. புட்டப்பா) - ஸ்ரீ இராமயண தரிசனம் - கன்னடம்
1967 - உமா ஷங்கர் ஜோஷி - நிஷிதா - குஜராத்தி
1968 - சுமித்ரானந்தன் பந்த் - சிதம்பரா - ஹிந்தி
1969 - பிராக் கோரக்புரி - குல்-இ-நக்மா - உருது
1970 - விஸ்வநாத சத்யநாராயணா - இராமயண கல்பவ்ரிக்ஷமு - தெலுங்கு
1971 - விஷ்ணு டே - ஸ்ம்ருதி சட்டா பவிஷ்யத் - வங்காள மொழி
1972 - இராம்தாரி சிங் தினகர் - ஊர்வஷி - ஹிந்தி
1973 - தத்தாத்ரேய ராமச்சந்திரன் பிந்த்ரே - நகுதந்தி - கன்னடம்
1973 - கோபிநாத் மொஹந்தி - மட்டிமடல் - ஒரியா
1974 - விஷ்ணு சகரம் காண்டேகர் - யயாதி - மராத்தி
1975 - அகிலன் - சித்திரப்பாவை - தமிழ்
1976 - ஆஷாபூர்ணா தேவி - ப்ரதம் ப்ரதிஸ்ருதி - வங்காள மொழி
1977 - க. சிவராம் கரந்த் - முக்கஜ்ஜிய கனசுகலு (ஆயாவின் கனவுகள்) - கன்னடம்
1978 - ச.ஹ.வ. அஜ்னேயா - கித்னி நாவோம் மே கித்னி பார் (எத்தனை முறை எத்தனை படகுகள் - [ஹிந்தி
1979 - பிரேந்த்ர குமார் பட்டாச்சார்யா - ம்ருத்யுஞ்சய் (சாகாவரம்) - அஸ்ஸாமி
1980 - ச.க.பொட்டிக்கட் - ஒரு தேசத்திண்டே கதா (ஒரு நாட்டின் கதை) - மலையாளம்
1981 - அம்ரிதா பிரீதம் - காகஜ் தே கான்வாஸ் - பஞ்சாபி மொழி
1982 - மஹாதேவி வர்மா - ஹிந்தி
1983 - மாஸ்தி வெங்கடேச ஐயங்கார் - சிக்கவீர ராஜேந்திரா - கன்னடம்
1984 - தகழி சிவசங்கரப் பிள்ளை - மலையாளம்
1985 - பன்னாலால் படேல் - குஜராத்தி
1986 - சச்சிதானந்த் ரௌத் ராய் - ஒரியா
1987 - விஷ்ணு வாமன் ஷிர்வாத்கர் - (குசுமக்ராஜ்) - மராத்தி
1988 - முனைவர். சி. நாராயண ரெட்டி - தெலுங்கு
1989 - குர்ராடுலென் ஹைதர் - உருது
1990 - வி. கே. கோகாக் - பாரத சிந்து ரஷ்மி - கன்னடம்
1991 - சுபாஷ் முகோபாத்யாய் - வங்காள மொழி
1992 - நரேஷ் மேத்தா - ஹிந்தி
1993 - சீதாகாந்த் மஹாபாத்ரா - ஒரியா
1994 - உ. இரா. அனந்தமூர்த்தி - கன்னடம்
1995 - எம். டி. வாசுதேவன் நாயர் - மலையாளம்
1996 - மகாசுவேதா தேவி - வங்காள மொழி
1997 - அலி சர்தார் ஜாஃப்ரி - உருது
1998 - கிரிஷ் கர்னாட் - கன்னடம்
1999 - நிர்மல் வர்மா - ஹிந்தி
1999 - குர்தியால் சிங் - பஞ்சாபி
2000 - இந்திரா கோஸ்வாமி - அஸ்ஸாமி
2001 - ராஜேந்திர கேஷவ்லால் ஷா - குஜராத்தி
2002 - ஜெயகாந்தன் - தமிழ்
2003 - விந்தா கரண்டிகர்' - மராத்தி மொழி
2004 - ரகுமான் ராகி சுப்துக் சோடா, கலாமி ராகி மற்றும் சியா ரோட் ஜாரேன் மான்சு - காசுமீரம்
2005 - கன்வர் நாராயண் இந்தி மொழி
2006 - ரவீந்திர கேல்கர் கொங்கணி
2006 - சத்திய விரத் சாஸ்திரி சமசுகிருதம்
2007 - ஓ. என். வி. குரூப் மலையாளம்
2009 - அமர் காந்த் - இந்தி & ஸ்ரீ லால் சுக்லா - இந்தி
2010- சந்திர சேகர கம்பரா - கன்னடம்
2011- பிரதிபா ரே யஜனசெனி - ஒரியா
2012 - ரவுரி பாரத்வாச பாகுடுரல்லு - [ தெலுங்கு]
2013 - கேதார்நாத் சிங் - இந்தி
2014- பாலச்சந்திர நெமதே, மராத்தி
2015- ரகுவீர் சவுத்ரி - குஜராத்தி
2016- ஷாங்கா கோஷு - வங்காள மொழி