Monday, 3 February 2020

பொது அறிவு குவியல்

விண்வெளியைப் பற்றியும், விண்வெளி ஆய்வின் குறிப்பிட்ட சாதனை நிகழ்வுகளின் சுருக்க குறிப்புகள்...

பிரபஞ்சத்தில் சூரியன் உட்பட ஏராளமான நட்சத்திரங்கள் உள்ளன.

நட்சத்திர கூட்டங்களின் தொகுப்பு அண்டவெளி.

நாம் வாழும் அண்டவெளி பால்வீதி எனப்படுகிறது.

பால்வீதியில் உள்ள பல்வேறு நட்சத்திரக் கூட்டங்களில் நம் சூரியக் குடும்பமும் ஒன்று.

நட்சத்திரங்களுக்கு இடையேயுள்ள தொலைவைக் குறிப்பிட ‘பார்செக்’ என்ற அலகு பயன்படுகிறது.

ஒரு பார்செக் என்பது 3.26 ஒளி ஆண்டு களைக் கொண்டது.

ஓர் ஒளி ஆண்டு என்பது சூரிய ஒளியானது ஓராண்டில் கடக்கும் தொலைவை குறிக்கும். அதாவது 9.43 லட்சம் கோடி கிலோ மீட்டராகும்.

நட்சத்திரங்களின் வெப்பத்தை அவற்றின் நிறத்தை கொண்டு அறியலாம்.

மிகப்பிரகாசமான நட்திரம் ஸிரியஸ்.

விண்வெளிக்குச் சென்ற முதல் விண்கலம் ஸ்புட்னிக்-1.

ஸ்புட்னிக் 1957-ம் ஆண்டு அக்டோபர் 4-ம் தேதி ரஷ்யாவிலிருந்து அனுப்பப்பட்டது.

ஸ்புட்னிக் என்றால் சக பயணி என்று பொருள்.

விண்வெளிக்குச் சென்ற முதல் அமெரிக்க விண்கலம் எக்ஸ்புளோரர்-1.

முதன் முதலாக சந்திரனின் மறுபக்கத்தை படம் பிடித்த ரஷிய விண்கலம் லூனா-2.

விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர் யூரி ககாரின்.

விண்வெளியில் நடந்த முதல் மனிதர் அலெக்ஸ் லியானோவ்.

விண்வெளி விபத்தில் மறைந்த முதல் விண்வெளி வீரர் கோமரோ.

முதல் விண்வெளி சுற்றுலா பயணி டெனிஸ் டிடோ.

விண்வெளிக்கு சென்ற முதல் சுற்றுலா பெண்மணி அனுஷே அன்ஸாரி.

மனிதனோடு சென்ற முதல் விண்கலம் வாஸ்டாக்-1

வாஸ்டாக் என்ற ரஷிய வார்த்தைக்கு ‘கிழக்கு’ என்று பொருள்.

விண்வெளிக்கு சென்ற முதல் பெண்மணி வாலன்டினா தெரஸ்கோவா.

முதல் இந்திய விண்வெளி வீரர் ராகேஷ் சர்மா.

விண்வெளிக்குச் சென்ற முதல் விலங்கு லைக்கா என்ற நாய்.

No comments: