Ad Code

கலிங்கத்துப்பரணி

தமிழ் இலக்கியங் களில் ஒன்று கலிங் கத்துப்பரணி. இதை இயற்றியவர் ஜெயங் கொண் டார். 11-ம் நூற்றாண்டின் இறுதியில் இந்த நூல் எழுதப்பட்டதாக கருதப்படு கிறது.

போர் முனையில் ஆயிரம் யானைகளை கொன்று வெற்றி கண்ட வீரனைப் பாடுவது பரணி எனப்படும் தமிழ் சிற்றிலக்கிய வகையாகும். முதலாம் குலோத்துங்க சோழனின் அவைப்புலவராக இருந்த ஜெயங்கொண்டார், இதைப் பாடினார். இது தமிழில் தோன்றிய முதல் பரணி இலக்கிய நூலாக கருதப்படுகிறது.

முதலாம் குலோத்துங்க சோழனின் படை, கலிங்க நாட்டின் மீது படையெடுத்து வெற்றி பெற்றதை இந்த நூல் பாடுகிறது. இதில் கூறப்படும் கலிங்கம் இன்று ஒரிசா மாநிலத்தில் உள்ளது. போரில் கலிங்க மன்னன் அனந் தபத்மன் தோற்கடிக்கப்பட்ட தாக பாடப்பட்டுள்ளது. இதில் கொற்றவை எனும் தெய்வம் போற்றப்படுகிறது.

கலிங்கத்துப் பரணியின் சிறப்பை பலரும் கூறியுள்ளனர். தென்தமிழ் தெய்வப்பரணி, முதல் பரணி என்பது கலிங்கத்துப் பரணியின் சிறப்பு பெயர்களாகும். தென்தமிழ்த் தெய்வப்பரணி என கலிங்கத்துப் பரணியை புகழ்ந்தவர் அவரது சமகாலத்துப் புலவரான ஒட்டக்கூத்தர் ஆவார்.

Post a Comment

0 Comments

Ad Code