Monday 3 February 2020

பொது அறிவு | வினா வங்கி,

1. முருகனை முழு முதற்கடவுளாகக் கொண்ட இந்து மதப்பிரிவின் பெயர் என்ன?

2. பிரமாணங்களின் நிறைவுப் பகுதியாக அமைவன எவை?

3. சங்ககால இசைக்கருவி வகைகள் எவை?

4. தீவிரவாதிகள் இந்திய பாராளுமன்றத்தை தாக்கிய நாள் எது?

5. திருவள்ளுவர் கூற்றுப்படி போலித்துறவிகளை கண்டு எவை சிரிக்கும் என்று பாடியுள்ளார்?

6. இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்தில் தமிழக முதல் அமைச்சராக இருந்தவர் யார்?

7. இனியவை நாற்பதை எழுதியவர் யார்?

8. சி.ஐ.சி.டி. (CICT) என்பதன் விரிவாக்கம் என்ன?

9. கே.கே.பிள்ளை, கா.சு.பிள்ளை, எஸ்.வையாபுரிப்பிள்ளை இவர்களில் கால ஆராய்ச்சியின் முன்னோடி யார்?

10. நாளை மற்றொரு நாளே புதினத்தை எழுதியவர் யார்?

11. பாராளுமன்றத்தின் இரு அவைகள், சட்டமன்றத்தின் இரு அவைகள் ஆகிய நான்கிற்கும் தேர்வு செய்யப்பட்ட முதல் இந்தியர் என்ற பெருமைக்குரியவர் யார்?

12. பூலித்தேவன் பிறந்த இடம் எது?

13. ஒருகிராம் பனிக்கட்டி 0 டிகிரி செல்சியசில் நீராவதற்கு தேவையான வெப்பம் எப்படி அழைக்கப்படுகிறது?.

14. ஆண்களைப் பற்றிய ஆய்வுப்படிப்பு எது?

15. மழையால் கிரிக்கெட் போட்டி பாதிக்கப்பட்டால் ரன்ரேட் கணக்கிடும் முறை எப்படி அழைக்கப்படுகிறது?

விடைகள்:

1. கவுமாரம், 2. ஆரண்யகங்கள், 3. தோற்கருவிகள், துளைக்கருவிகள், நரம்புக்கருவிகள், கஞ்சக்கருவிகள், 4. 2001 டிசம்பர் 13, 5. ஐம்பூதங்கள், 6. ஓ.பி. ராமசாமி ரெட்டியார், 7. பூதம் சேந்தனார், 8. Central Institute of Classical Tamil. 9. எஸ்.வையாபுரிப்பிள்ளை. 10. ஜி.நாகராஜன், 11. அண்ணாத்துரை, 12. நெற்கட்டும் செவல், 13. நீர் உருகுதலின் உள்ளுறை வெப்பம், 14. ஆன்ட்ராலஜி, 15. டக்வொர்த் லூயிஸ் முறை.

No comments: