கல்விச்சோலை பொதுஅறிவுச் தகவல்கள் | KALVISOLAI TAMIL G.K -1

கல்விச்சோலை பொது அறிவு - kalvisolai latest g.k and qr code
1. ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்விகளும், அவற்றை அறிய நாம் விடை தேட மேற்கொள்ளும் அனைத்து வகைச் செயல்பாடுகளுமே _______________ ஆகும்.
அறிவியல்
2. நாம் வாழும் இந்தப் பூமி, விண்வெளி, அதிலுள்ள கோள்கள், விண்மீன்கள், அவற்றின் இயக்கம், வெளிச்சம், ஓசை,
என விரியும் அறிவியலை ______________ என்கிறோம்.
இயற்பியல்
3. நாம் பயன்படுத்தும் பொருள்கள் எதனால் ஆனவை? உலோகமா? அலோகமா? தன்மை என்ன? நெடி என்ன? மணம் என்ன? சுவை என்ன? அமிலமா, காரமா? என்று ஆராய்வதனை _______________ என்கிறோம்
வேதியியல்
4. நம்மைச் சுற்றியுள்ள செடி, கொடி, மரம், வீட்டு விலங்குகள், காட்டு விலங்குகள், நீர்வாழ் உயிரனங்கள், கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரிகள் - இப்படி உயிருள்ளவைப் பற்றிய படிப்பிற்கு பெயர் என்ன?
உயிரியல்
5. செடி கொடிகள், மரங்கள் பற்றி கற்பது _______________ எனப்படும்
தாவரவியல்
6. விலங்குகளைப் பற்றி கற்பது _______________ எனப்படும்.
விலங்கியல்
7. உணவு தொடர்பான தொழில்கள் அனைத்தும் எதை நம்பியே உள்ளன?
தாவரம்
8. விவசாயம் என்பது ஓர் ____________ ஆகும்.
அறிவியல்
9. மருத்துவக் குணம் நிறைந்த தாவரங்களை நாம் _______________ என்று சொல்கின்றோம்.
மூலிகைகள்
10. சளித்தொல்லை, கோழை அகற்றும், மார்புச்சளி நீக்கும், உடல் பலம் தரும் மூலிகை எது?
தூதுவளை
11. மஞ்சள் காமாலை நோயைத் தீர்க்கும் மூலிகை எது?
கீழாநெல்லி
12. வயிற்றுப் பூச்சியை நீக்கும் மூலிகை எது?
வேம்பு
13. வாய்ப் புண்ணைக் குணப்படுத்தவும், உடம்பிற்கு குளிர்ச்சியையும் தரும் மூலிகை எது?
நெல்லிக்காய்
14. சளி, கோழை அகற்றும், காய்ச்சல் நீக்கும் மூலிகை எது?
துளசி
15. வியர்வை பெருக்கும், கோழை அகற்றும், காய்ச்சல் நீக்கும் மூலிகை எது?
ஓமவல்லி
16. வயிறு தொடர்பான நோய்களைத் தீர்க்கும் மூலிகை எது?
வசம்பு
17. கிருமி நாசினி, உணவுக்காகவும் பயன்படும் மூலிகை எது?
மஞ்சள்
18. பசியைத் தூண்டும், செரிமான மின்மையை நீக்கும் மூலிகை எது?
பிரண்டை
19. செரிமானக் கோளாறுகளைக் நீக்கும் மூலிகை எது?
இஞ்சி
20. தொண்டைக் கரகரப்பை நீக்கும் மூலிகை எது?
மிளகு

Comments