சைவ சித்தாந்தம்

கல்விச்சோலை பொது அறிவு - kalvisolai latest g.k and qr code
கடவுளை ‘பதி’ என்றும், உயிர்களை ‘பசு’ என்றும், உயிர்கள் இறைவனை அடையத் தடையாக இருக்கும் ஆணவம், கன்மம், மாயை எனும் மும்மலங்களை, ‘பாசம்’ என்றும் சைவ சித்தாந்தம் குறிப்பிடுகிறது.

சைவ சித்தாந்தம் வேதங்களைவிட, ஆகமங்களையே முக்கிய பிரமாண நூல்களாக கொண்டுள்ளது என்பர். சைவ ஆகமங்களின் எண்ணிக்கை 28, அவற்றுள் 10 சிவனாலும், 18 சிவஞானிகளாலும் ஆக்கப்பட்டவை என்று கொள்வது மரபு.

சைவ சித்தாந்தக் கருத்துகளைப் பன்னிரண்டு சூத்திரங்களில் கூறும் நூல், மெய்கண்டர் எழுதிய சிவஞான போதம். இந்த நூல் ரவுரவ ஆகமத்தின் மொழி பெயர்ப்பு என்று கூறுவோரும் உண்டு. அதை மறுப்போரும் உண்டு.

பதி என்னும் இறைவனின் ஐந்தொழில்களாக படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளலை கூறுகிறது சைவசித்தாந்தம். பசு என்னும் ஆன்மா, சகல அவத்தை, சுத்த அவத்தை, கேவல அவத்தை ஆகிய மூன்று அவத்தை நிலைகளை கொண்டிருப்பதாகவும் அது குறிப்பிடுகிறது. சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய நான்கு மார்க்கங்கள் மூலம் உயிர்கள் அவத்தையிலிருந்து விடுபட முடியும் என்றும், அப்படி அவத்தை நீங்கிய உயிர்கள் சாலோகம், சாமீபம், சாரூபம், சாயுச்சியம் ஆகிய நான்கு பலன்களைப் பெறும் என்றும் சைவ சித்தாந்தம் விளக்குகிறது.

Comments