Friday 1 May 2020

கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு

கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள் ளது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில் பட்டி சுற்றுவட்டார கரிசல் மண்ணில் விளையும் நிலக்கடலைக்கு தனி மவுசு உண்டு. இயற்கையாகவே இனிப்பு சுவையுள்ள இந்த நிலக்கடலைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் கடலைமிட்டாய் களுக்கு பெரும் வரவேற்பு உள்ளது.

இந்த கடலை மிட்டாய்கள் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில், கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு புவிசார் குறி யீடு பெற விண்ணப்பிக்கப்பட்டது. இதற்காக தமிழக அரசின் புவி சார் குறியீடு வழக்கறிஞர் ப.சஞ்சய் காந்தி ஆஜரானார். மத்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தகத் துறையின் புவிசார் குறியீடு பதிவகம் நேற்று வெளியிட்டுள்ள பட்டியலில் கோவில்பட்டி கடலைமிட்டாய், மணிப்பூர் கருப்பு அரிசி, கோரக்பூர் டெரகோட்டா ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, வழக்கறிஞர் ப.சஞ்சய்காந்தி கூறும்போது, ஏற்கெனவே, தமிழகத்தின் 33 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. தற்போது 34-வது பொருளாக கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு கிடைத்துள்ளது.

1940-ம் ஆண்டு முதல் கோவில் பட்டியில் கடலை மிட்டாய் உற்பத்தி செய்யப்படுவதற்கான ஆவணங்களைச் சமர்ப்பித்தோம். தற்போது அதற்குரிய அங்கீ காரம் கிடைத்துள்ளது மகிழ்ச்சியளிக் கிறது.

இனிமேல், கோவில்பட்டி கடலைமிட்டாய் என்ற பெயரில் கோவில்பட்டி நகரம் மற்றும் அருகே உள்ள கிராமங்களில் மட்டுமே உற்பத்தி செய்ய முடியும், என்று கூறினார்.

கோவில்பட்டி வட்டார கடலை மிட்டாய் உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர் சங்கச் செயலாளர் கே.கண்ணன் கூறுகையில், கோவில்பட்டியில் 150 கடலைமிட்டாய் உற்பத்திக் கூடங்கள் உள்ளன. இப்பணியில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழி லாளர்கள் ஈடுபட்டுள்ளனர். ஒரு கிலோ கடலை மிட்டாய் ரூ.160-க்கு விற்பனை செய் யப்படுகிறது. தற்போது புவிசார் குறியீடு கிடைத்துள்ளதால், எங்கள் வாழ் வாதாரம் பாதுகாக்கப்பட்டுள்ளது. கோவில்பட்டி பகுதி கடைகளுக்கு வெளிநாடுகளில் இருந்தும் ஆர்டர் கள் கிடைக்கும் என்றார்.

1 comment:

Arjun said...
This comment has been removed by the author.