Monday 23 March 2020

தேசியச் சின்னம்

நம் தேசியச் சின்னம் அசோகரின் சாரநாத் சிம்மத் தூணிலிருந்து பெறப்பட்டது.

சாரநாத் சிம்மத்தூணில் ஒன்றுக்கொன்று முதுகுப்புறமாக அமைந்த நான்கு சிங்கங்கள் ஒரு பீடத்தில் அமைந்துள்ளன.

சிம்மத் தூணின் பீடத்தில் ஒரு யானை, ஒரு எருது, ஒரு குதிரை ஆகியவை அமைந்துள்ளன.

பீடத்திலுள்ள மிருகங்களுக்கு இடையே 24 ஆரங்கள் கொண்ட தர்ம சக்கரங்கள் உள்ளன.

சிம்மத்தூண் பீடம், ஒரு தாமரை மேல் அமைந்துள்ளது.

1950 ஜனவரி 26-ல் நம் தேசியச் சின்னம் அங்கீகரிக்கப்பட்டது.

நமது தேசிய சின்னத்தில் மூன்று சிங்கங்கள் மட்டுமே பார்வைக்குத் தெரிகின்றன.

சிங்க பீடத்தில் எருது வலது பக்கத்திலும், ஓடும் குதிரை இடது பக்கத்திலும் இருக்க நடுவே தர்ம சக்கரம் உள்ளது.

சிங்க பீடத்தின் வலது, இடது நுனிகளில் தர்ம சக்கரங்களின் சிறு பகுதி தென்படுகிறது.

தேசியச் சின்னத்தில் முண்டக உபநிஷதத்தில் இருந்து எடுக்கப்பட்ட ‘சத்யமேவ ஜெயதே (வாய்மையே வெல்லும்)’ என்ற வாசகம் பொறிக்கப்பட்டு உள்ளது.

சாரநாத் சிம்மத்தூணில் இருக்கும் யானை, தாமரை நம் தேசிய சின்னத்தில் இடம் பெறவில்லை.

தேசியச் சின்னம் அமைச்சர்கள் பயன்படுத்தும் எழுது தாள்களில் (லெட்டர் ஹெட்ஸ்) நீலவண்ணத்தில் இடம்பெறும்.

அதிகாரிகள் பயன்படுத்தும் எழுது தாள்களில் தேசியச் சின்னம் சிவப்பு வண்ணத்தில் இடம்பெறும்.

மக்களவை உறுப்பினர்கள் பச்சை நிறத்திலும், மாநிலங்களவை உறுப்பினர்கள் சிவப்பு நிறத்திலும் தேசியச் சின்னத்தை பயன்படுத்த வேண்டும்.

வெளிநாட்டு அரசுகளுடனான கடித தொடர்புக்கு நீல நிறத்தில் தேசியச் சின்னம் அச்சிடப்பட்ட எழுது தாள்களையே பயன்படுத்த வேண்டும்.