வீடுகள் மற்றும் பொது இடங்களை வேகமாக தூய்மை செய்ய ‘வாக்வம் கிளீனர்’ கருவிகள் பயன்படுகின்றன. இவை தூசுகளை உறிஞ்சி அகற்றும். இது எப்போது கண்டுபிடிக்கப்பட்டது, எப்படி செயல்படுகிறது என்பது பற்றி கேள்வி பதில் வடிவில் அறிவோமா?
வாக்வம் கிளீனரை யார் கண்டுபிடித்தது?
ஆங்கிலேய என்ஜினீயர் சீசில் பூத் என்பவர் வாக்வம் கிளீனரை கண்டுபிடித்தார்.
இந்த கருவி ஊதிய வயிற்று சாதனம் என அழைக்கப்படுகிறதே ஏன்?
தூசுகளை உறிஞ்சி சேகரிக்கும் இடம் ஊதிய வயிறுபோல பெரிதாக இருப்பதால், இதை அப்படி அழைப்பது உண்டு.
மின்சாரத்தில் இயங்கும், எங்கும் எடுத்துச் சென்று பயன்படுத்தக்கூடிய வாக்வம் கிளீனர் கருவி எங்கு முதன் முதலில் அறிமுகமானது?
அமெரிக்காவில்தான் எங்கும் எடுத்துச் சென்று பயன்படுத்தக் கூடிய, மின்சாரத்தில் இயங்கும் தூசு உறிஞ்சு கருவி வழக்கத்திற்கு வந்தது. இதை ஜேம்ஸ் முர்லேஸ் ஸ்பாங்லர் என்பவர் கண்டுபிடித்தார்.
எப்போது மின்சார வாக்வம் கிளீனர் கருவிகள் பிரபலமானது?
1920-ல், வில்லியம் ஹூவர் என்பவர் விற்பனைக்காக வாக்வம் கிளீனர்களை தயாரித்து விற்கத் தொடங்கிய பின்னர் அவை பிரபலமடைந்தன.
ஹூவரின் இயந்திரங்களை வீட்டுப் பொருளாக கொண்டு சேர்த்த வரிகள் எவை?
எல்லா அழுக்கு தூசுகளையும் ஹூவரின் இயந்திரம் உறிஞ்சி அகற்றிவிடும் எனும் பொருள்பட அமைந்த ஆங்கில வரிகளே இதனை பெருமைப்படுத்தின. அந்த வரிகள்...
all the dirt, all the grit
hoover gets it, every bit என்பதாகும்.

No comments:
Post a Comment