Monday 1 April 2019

பூமியின் வயது 460 கோடி வருடங்கள்

பூமியின் மொத்த பரப்பளவு 509.7 மில்லியன் சதுர கிலோமீட்டர்

பூமியின் நிலப்பரப்பு 29 சதவீதம், நீர்ப்பரப்பு 71 சதவீதம்

பூமியின் மேற்பரப்பில் காணப்படும் முக்கிய தனிமம் ஆக்சிஜன் (46.6 சதவீதம்)

பூமியின் சராசரி வெப்பநிலை 14 டிகிரி செல்சியஸ்

சூரியக்கதிர்வீதித் தளத்திலிருந்து பூமி அச்சின் சாய்வு 23½ டிகிரி

பூமி சூரியனைச் சுற்றும் வேகம் 29.8 கி.மீ./விநாடி

சூரியனிடமிருந்து புவியின் சராசரி தூரம் - 150 மில்லியன் கி.மீ.

சூரியனிடமிருந்து பூமியின் அதிகபட்ச தூரம் 152 மில்லியன் கி.மீ.

பூமியின் அப்ஹீலியன் தூரம் நிகழும் நாள் ஜூலை 2 மற்றும் ஜூலை 5க்கு இடையில்.

சூரியனிலிருந்து பூமியின் குறைந்தபட்ச தூரம் பெரிஹீலியன் 147 மில்லியன் கி.மீ.

பூமியின் பெரிஹீலியன் தூரம் நிகழும் நாள் ஜனவரி 2 மற்றும் 5-ந் தேதிக்கு இடையில்.

பூமியின் நிலநடுக்கோட்டு சுற்றளவு 40,067 கி.மீ.

பூமியின் துருவப்பகுதி சுற்றளவு 40 ஆயிரம் கி.மீ.

இரவு பகல் கால அளவு சமமாக இருப்பது சமநிலை நாள் எனப்படும்.

பூமியின் சமநிலை நாட்கள் மார்ச் 21, செப்டம்பர் 23

புவியின் மையப்பகுதி, திட உள்ளகம்

புவியின் உள்ளகத்தை சுற்றிய பகுதி புறக்கூடு.

புவியைப் பாதுகாக்கும் கவசப்போர்வை - வளிமண்டலம்

வளிமண்டல அடுக்குகள் டிரபோஸ்பியர், ஸ்ட்ரடோஸ்பியர், மீசோஸ்பியர், அயனோஸ்பியர்.

No comments: