Saturday, 11 July 2020

ஆசியாவில் மிகப் பெரிய சூரிய மின்னுற்பத்தி நிலையம்

மத்திய பிரதேச மாநிலம் ரெவா பகுதியில் மிகப்பெரிய சூரிய மின் உற்பத்தி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதை, பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். படம்: பிடிஐ
ரெவா (ம.பி.)
‘‘சுற்றுச் சூழலை பாதிக்காத வகை யில் சூரிய ஆற்றலில் மின்னுற்பத்தி செய்வதில் இந்தியா மிகவும் முன் னேற்றம் அடைந்துள்ளது. இதன் காரணமாக அன்னிய முதலீடுகளை ஈர்க்கும் ஒரு துறையாக இத்துறை வளர்ந்து வருகிறது’’ என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

மத்தியப் பிரதேச மாநிலம் ரெவா எனுமிடத்தில் முதல் கட்டமாக 750 மெகா வாட் சூரிய மின்னுற்பத்தி மையத்தை வீடியோ கான்பரன்ஸ் மூலம் பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார். ஆசியாவி லேயே மிகப் பெரிய சூரிய மின் னுற்பத்தி பூங்கா இங்கு உருவாக் கப்பட்டுள்ளது. மொத்தம் 1,500 ஹெக்டேர் பரப்பளவு இதற்கென ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்விழா வில் பிரதமர் மோடி பேசியதாவது:

மத்திய பிரதேச மாநிலம் சூரிய மின்னுற்பத்தியில் முன்னணி மாநிலமாக திகழ்கிறது. சுற்றுச் சூழலுக்கு பாதிப்பில்லாத மின்சா ரத்தை இந்தியாவுக்கு அளிக்கும் மாநிலமாகவும் விளங்குகிறது. இந்த சூரிய மின்னுற்பத்தி ஆலை யில் உற்பத்தியாகும் மின்சாரம் மூலம் ஆண்டுக்கு 15 லட்சம் டன் கரியமில வாயு காற்றில் கலப்பது குறையும்.

சூரிய மின் சக்தி நிச்சயமானது, சுத்தமானது. சூரிய மின்னுற்பத்தி யில் முன்னணியில் திகழும் ஐந்து நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகத் திகழ்கிறது. ரெவா சூரிய மின்னுற் பத்தி ஆலையில் உற்பத்தியாகும் மின்சாரம், மத்திய பிரதேச மாநிலத்துக்கு மட்டுமின்றி, டெல்லி மெட்ரோ சேவைக்கும் அளிக்கப்படும். 21-ம் நூற்றாண்டில் மின் சக்தி மிகவும் முக்கியமானது. அதில் சுத்தமான, சூழல் பாதிப்பில்லாத மின்சாரம் சூரிய ஆற்றலில் இருந்து கிடைக்கிறது.

வளர்ச்சிப் பாதையை நோக்கி இந்தியா முன்னேறி வருகிறது. பொருளாதார வளர்ச்சிக்கு மின்சாரம் மிகவும் அவசியமானது. இத்தகைய சூழலில் சுய சார்புடன் திகழ சூரிய மின்னுற்பத்தி மிகவும் உதவியாக இருக்கும்.

இதுபோன்ற மிகப் பெரிய சுற்றுச் சூழலுக்கு பாதிப்பில்லாத மின்னுற்பத்தி திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம், சூழல் பாதுகாப்பில் நமக்குள்ள அக்கறை வெளிப்படுவதோடு, சூரிய மின்னுற்பத்தியில் நமது சுய தேவையும் பூர்த்தியாகும். நமது மின் தேவையை நாமே பூர்த்தி செய்யும் திறனை பெற்றுள்ளோம்.

இந்தியாவில் இருந்து மனித நேயத்தை எதிர்நோக்குகிறது இந்த உலகு. இந்த உலகை ஒருங் கிணைக்கும் பணியில் இந்தியா ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதி தான் ஐஎஸ்ஏ அதாவது சர்வதேச சூரிய ஒருங்கிணைப்பு. இந்த சக்தி தான் உலகை ஒன்றிணைக்கிறது. ரெவா தவிர, ஷஜாபூர், நீமுச், சத்ர பூர் ஆகிய பகுதிகளிலும் சூரிய மின்னுற்பத்தி பூங்கா அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

ரெவா மின்னுற்பத்தி திட்ட மானது 3 திட்டங்களை உள்ளடக்கி யது. ஒவ்வொன்றும் தலா 250 மெகாவாட் மின்னுற்பத்தி செய்யும் பகுதிகளைக் கொண்டது. இந்த சூரிய மின்னுற்பத்தி நிறுவனம் ரெவா அல்ட்ரா மெகா சோலார் லிமிடெட் (ஆர்யுஎம்எஸ்எல்) நிறு வனத்தால் அமைக்கப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேச உர்ஜா விகாஸ் நிகாம் லிமிடெட் (எம்பியுவிஎன்) மற்றும் சூரிய மின்னுற்பத்தி கார்ப்ப ரேஷன் ஆப் இந்தியா (எஸ்இசிஐ) ஆகிய இரண்டும் கூட்டாக உருவாக்கிய நிறுவனமாகும்.

சூரிய மின்னுற்பத்தி பூங்கா அமைப்பதற்கு மத்திய அரசு ரூ.138 கோடி முதலீடு செய்துள்ளது. மஹிந் திரா ரெனிவபிள்ஸ் பிரைவேட் லிமிடெட், அரின்சுன் கிளீன் எனர்ஜி பிரைவேட் லிமிடெட், ஏசிஎம்இ ஜெய்ப்பூர் சோலார் பவர் பிரைவேட் லிமிடெட் ஆகிய மூன்று நிறுவனங் கள் இங்கு ஆலை அமைத்துள்ளன.

டெல்லி மெட்ரோ ரயில் நிறு வனத்துக்கு இங்கு உற்பத்தியாகும் மின்சாரத்தில் 24 சதவீத மின்சாரம் சப்ளை செய்யப்படும். எஞ்சிய மின்சாரம் மாநில மின் உபயோகத் துக்கு வழங்கப்படும். சூரிய மின்னுற்பத்தி மூலம் பெறப்படும் மின்சாரம் வெளி மாநிலத்துக்கு சப்ளை செய்வது இதுவே முதல் முறை. மத்தியப் பிரதேசத்தில் இருந்து டெல்லி மெட்ரோ ரயில் சேவைக்கு இந்த மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. ஒரு யூனிட் மின்சாரம் ரூ.2.97 முதல் ரூ.3.30 என்ற விலையில் வழங்கப்படும்.

இந்நிகழ்ச்சியில் மத்தியப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதல்வர் சிவராஜ் சிங் சவு கான், மத்திய மரபுசாரா எரிசக்தித் துறை அமைச்சர் ஆர்.கே.சிங், மத் திய எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறை அமைச்சர் தர்மேந்திர பிர தான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஐ.நா. பாராட்டு

ஐக்கிய நாடுகள் சபையின் தலை வர் அன்டோனியோ குத்தேரஸ், இந்திய சூரிய மின்னுற்பத்தி திட்டத் துக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். கரோனா வைரஸ் பரவல் சூழலிலும் இந்தியா இத்தகைய சூழல் பாதுகாப்பு மின்னுற்பத்தி திட்டத்தை செயல்படுத்தி உள்ளது மிகவும் பாராட்டுக்குரியது என்று அவர் குறிப்பிட்டார்.

வரும் 2050-ம் ஆண்டுக்குள் கரியமில வாயு வெளியேற்றத்தை பூஜ்யம் அளவுக்குக் குறைக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக் கப்பட்டுள்ளது. அந்த இலக்கை எட்டுவதற்கு சூரிய மின்னுற்பத்தி மிகவும் உதவியாக இருக்கும் என்று குத்தேரஸ் சுட்டிக் காட்டினார்.