Monday 9 March 2020

ஆரியபட்டர்

இந்தியாவின் பழமையான விஞ்ஞானிகளில் ஒருவராக போற்றப்படுபவர் ஆரியபட்டர். கணிதம் மற்றும் வானவியல் சாஸ்திரத்தில் நிபுணத்துவம் பெற்ற அவரைப் பற்றி கேள்வி பதில் வடிவில் அறிவோமா?

ஆரியபட்டர் என்பவர் யார்?

ஆரியபட்டர் பழமையான இந்தியாவில் வசித்த புகழ்பெற்ற கணிதவியல் மற்றும் வானவியல் நிபுணர் ஆவார்.

அவர் எப்போது வாழ்ந்தார்?

அவர் 1510 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தார்.

ஆரியபட்டரின் பிறப்பிடம் எது?

பாடலிபுத்திரம் அருகே உள்ள கசுமபுரம் என்ற இடத்தில் கி.பி. 476-ம் ஆண்டு மார்ச் 21-ந் தேதி ஆரியபட்டர் பிறந்தார்.

வானவியல் மற்றும் கணிதவியலில் ஆரியபட்டரின் பங்களிப்பு என்ன?

உலக மக்கள் அனைவரும், பூமி தட்டையானது என்றும், அது பிரபஞ்சத்தின் மையமாக இருக்கிறது என்றும் எண்ணிக் கொண்டிருந்த காலகட்டம் அது. அப்போதே முதலாம் ஆரியபட்டர் இந்தக் கருத்துக்கள் தவறானது என்று உணர்ந்திருந்தார்.

அவர் பூமியானது கோள வடிவம் கொண்டது என்றும், பூமி சூரியனைச் சுற்றி வருகிறது என்றும் தனது கருத்தை பதிவு செய்தார். மேலும் ‘பை’ () எனும் கணித குறியீட்டின் மதிப்பை கண்டுபிடித்தார், இரவு பகலின் நேரத்தை அளந்தார், பூமியின் குறுக்களவு எவ்வளவு இருக்கும், நிலவின் குறுக்களவு எவ்வளவு? என்று கணித்தார். இந்த கருத்துக்களை எல்லாம் தனது ஆரியபட்டியம் என்ற நூலில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். இந்த கணிப்புகள் எல்லாம் நவீன கால கண்டுபிடிப்புகளுடன் பெரிதும் ஒத்துப் போகிறது என்பது அவரது விஞ்ஞானத்திறனை போற்றுவதாக உள்ளது.

இந்தியாவின் முதல் செயற்கை கோளுக்கு ஆரியபட்டா என்று ஏன் பெயர் சூட்டப்பட்டது?

இந்தியா முதல் செயற்கை கோளை தயாரித்திருந்த கால கட்டம், ஆரியபட்டரின் 1500-வது பிறந்த ஆண்டாக வந்தது, அவரது விஞ்ஞான கண்டுபிடிப்புகளுக்கு கவுரவம் அளிக்கும் வகையில் ஆரியபட்டா என்று பெயர்சூட்டப்பட்டது.

No comments: