Monday 9 March 2020

அடிப்படை உரிமைகள்

இந்திய அரசமைப்பு சட்டத்தின் உறுப்புகள் 12 முதல் 35 வரை அடிப்படை உரிமைகள் பற்றியவை.

அரசமைப்பு சட்டத்தின் உறுப்பு 13 அடிப்படை உரிமைகளுக்கு முரண்படும் சட்டங்களை விளக்குவதோடு, அவ்வாறு முரண்படும் சட்டங்கள் செல்லாதவையாகும் என்று குறிப்பிடுகிறது. மேலும் இவ்வுறுப்பு சட்டம் எது எனவும் வரையறுக்கிறது.

இந்திய அரசமைப்பு சட்டத்தின் 14 முதல் 32 வரையான உறுப்புகள் இந்திய குடிமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஆறு அடிப்படை உரிமைகள் பற்றியவை.

சமத்துவ உரிமை, சுதந்திர உரிமை, சுரண்டலுக்கு எதிரான உரிமை, சமய உரிமை, கலாசார மற்றும் கல்வி உரிமை, அரசமைப்புச் சட்டத் தீர்வு உரிமை ஆகிய 6 தான் அடிப்படை உரிமைகள்.

No comments: