Monday 13 August 2018

வங்கிகள்

கல்விச்சோலை பொது அறிவு - kalvisolai latest g.k and qr code
இந்திய அரசாங்கத்தின் தலைமை வங்கி ரிசர்வ் வங்கி. இது சுருக்கமாக ஆர்.பி.ஐ. என அழைக்கப்படுகிறது.

தனிநபர் கணக்கு தொடங்க முடியாத வங்கி ரிசர்வ் வங்கி. இது அரசாங்கத்தின் வங்கி எனப்படுகிறது.

ரிசர்வ் வங்கி 1935-ல் தொடங்கப்பட்டு, 1949-ல் நாட்டுடைமை ஆக்கப்பட்டது.

1881-ல் தொடங்கப்பட்ட Oudh Commercial Bank தான் இந்தியர்களால் தொடங்கப்பட்ட முதல் வணிக வங்கி.

‘இம்பீரியல் பேங்க் ஆப் இந்தியா’ 1920-ல் தொடங்கப்பட்டது. இது 1955-ல் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா என்ற பெயரில் தேசிய மயமாக்கப்பட்டது.

இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டன.

1969-ல் 14 வங்கிகளும், 1980-ல் 6 வங்கிகளும் தேசியமயமாக்கப்பட்டன. இதுவரை 27 வங்கிகள் பொதுத்துறை வங்கிகளாக்கப்பட்டு உள்ளன.

குறைந்தபட்சம் 5 லட்சம் முதலீடு உள்ள வங்கிகள் செட்யூல்டு வங்கிகளாக உள்ளன.

செட்யூல்டு வங்கிகள் ரிசர்வ் வங்கியின் 2-வது அட்டவணையில் இடம் பெறுகிறது.

வங்கிகளில் தனிநபர் தொடங்கும் கணக்கு சேமிப்புக் கணக்கு.

நிறுவனங்கள் தொடங்கும் கணக்கு நடப்புக் கணக்கு.

நடப்புக்கணக்கில் இருப்புக்குமேல் பணம் எடுக்கும் வசதி உண்டு.

வாடிக்கையாளர் காசோலையை முதன் முதலாக அறிமுகப்படுத்திய வங்கி பேங்க் ஆப் இந்தியா.

No comments: