Monday 13 August 2018

பொது அறிவு | வினா வங்கி,

கல்விச்சோலை பொது அறிவு - kalvisolai latest g.k and qr code
1. கல்லீரல் சுரக்கும் திரவத்தின் பெயர் என்ன?

2. குளத்தில் வாழும் தாவரங்கள் எப்படி அழைக்கப்படுகின்றன?

3. காந்த மின்புலங்களில் விலக்கமடையாத கதிர்கள் எவை?

4. ஒரு பொருளின் வேகம் இரட்டிப்பாகும்போது அதன் இயக்க ஆற்றல் எத்தனை மடங்கு அதிகமாகும்?

5. நியோபியத்தின் தனிம குறியீடு என்ன?

6. விமான புறப்படுதலை எந்த அறிவியல் விதிப்படி விளக்கலாம்?

7. நுரையீரல் அழற்சியால் ஏற்படும் பாதிப்பு எப்படி குறிப்பிடப்படுகிறது?

8. பாக்டீரியாக்கள் அனைத்தும் எந்த வகை உயிரினங்களாகும்?

9. ஆக்சிஜனின் அணு எண் எத்தனை?

10. இந்தியாவில் காணப்படும் ஒரே மனித குரங்கினம் எது?

விடைகள்:

1. பித்தநீர், 2. லிம்னோபைட், 3. காமா, 4.நான்கு, 5. Nb, 6. பெர்னோலி தத்துவம், 7. நிமோனியா, 8. புரோகேரியாட்டுகள், 9. 8, 10. கிப்பன்

No comments: