Friday 22 December 2017

கங்கைகொண்டான் புள்ளிமான் உயிரின சரணாலயம் தமிழகத்தில் எங்குள்ளது?

201 கங்கைகொண்டான் புள்ளிமான் உயிரின சரணாலயம் தமிழகத்தில் எங்குள்ளது?    திருநெல்வேலி மாவட்டம்
202 கொடைக்கானல் வனவிலங்கு சரணாலயம் எங்குள்ளது? திண்டுக்கல்,  தேனி மாவட்டம்.
203 தமிழ்நாட்டில் திருவள்ளுவர் மாவட்டத்தில் உள்ள பறவைகள் சரணாலயம் பெயர் என்ன?     புலிக்கட் ஏரி பறவைகள் சரணாலயம்
204 தமிழ்நாட்டில் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் எங்குள்ளது? காஞ்சிபுரம் மாவட்டம்
205 தமிழ்நாட்டில் கரிகிலி பறவைகள் சரணாலயம் எங்குள்ளது?   காஞ்சிபுரம் மாவட்டம்
206 தமிழ்நாட்டில் உதய மார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம் எங்குள்ளது?    திருவாரூர் மாவட்டம்
207 தமிழகத்தில் வடுவூர் பறவைகள் சரணாலயம் எங்குள்ளது?     தஞ்சாவூர் மாவட்டம்
208 சித்தரங்குடி பறவைகள் சரணாலயம் தமிழ்நாட்டில் எங்குள்ளது?    இராமநாதபுரம் மாவட்டம்
209 கூத்தன்குளம் பறவைகள் சரணாலயம் தமிழ்நாட்டில் எங்குள்ளது?    திருநெல்வேலி மாவட்டம்
210 வெள்ளோடு பறவைகள் சரணாலயம் தமிழ்நாட்டில் எங்குள்ளது?     ஈரோடு மாவட்டம்
211 தமிழகத்தின் பெரிய சரணாலயமாகிய மேல் செல்வனூர் கீழ் செல்வனூர் பறவைகள் சரணாலயம் எங்குள்ளது?  இராமநாதபுரம் மாவட்டம்
212 காஞ்சிரங்குளம் பறவைகள் சரணாலயம் தமிழகத்தில் எங்குள்ளது?    இராமநாதபுரம் மாவட்டம்
213 வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் தமிழகத்தில் எங்குள்ளது?     சிவகங்கை மாவட்டம்
214 தமிழகத்தில் முதன்முதலில் தொடங்கப்பட்ட இரயில் நிலையம் எது?      ராயபுரம் ரயில் நிலையம்
215 தமிழ்நாட்டின் முதல் இந்திய ஆளுநர் யார்?   மஹராஜா கே.கே.பாவ்சிங்ஜி
216 தமிழ்நாட்டில் காந்தி கிராம பல்கலைக்கழகம் எந்த மாவட்டத்தில் உள்ளது?    திண்டுக்கல்
217 தமிழ்நாட்டில் செய்தித்தாள் காகித ஆலை அமைந்துள்ள இடம் எது? புகளுர்
218 தமிழ்நாட்டின் முதல் அணுமின் நிலையம் (Atomic Power station) எங்கு அமைந்துள்ளது? கல்பாக்கம்
219 தமிழ்நாட்டில் அதிக அளவில் வாழும் பழங்குடி மக்கள் யார்?  தோடர்கள் (நீலகிரி மாவட்டம்)
220 தமிழகத்தில் உள்ள இந்திய கலாச்சார மையம் எது? தஞ்சாவூர்
221 தமிழ்நாட்டில் மதிய உணவு திட்டத்தைக் கொண்டு வந்த முதலமைச்சர் யார்?    காமராசர்
222 தமிழ்நாட்டில் மதிய உணவு திட்டம் எங்கு முதல் முதலில் தொடங்கப்பட்டது?    எட்டையபுரம்
223 பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தமிழகத்தில் எந்த கட்சியின் தலைவராக இருந்தார்? பார்வர்டு பிளாக்
224 தமிழகத்தில் இயற்கை விஞ்ஞானி என்று அழைக்கப்பட்டவர் யார்?    கோ.நம்மாழ்வார்
225 தமிழ்நாடகத்தந்தை என போற்றப்படுபவர் யார்?     பம்மல் சம்பந்தனார்
226 தமிழ்நாட்டில் தமிழில் முதன்முதலாக வெளிவந்த ஆண்டு நூலின் (YEAR BOOK)ன் ஆசிரியர் யார்?  வே.தில்லைநாயகம்
227 தமிழ்நாட்டின் புராதன மருத்துவமுறை எது?   சித்த மருத்துவம்
228 தமிழ்நாட்டைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானி யார்? டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன்
229 தமிழ்நாட்டில் புகழ்பெற்ற மாண்டலின் வித்துவான் யார்? யூ.சீனிவாஸ்
230 தமிழ்நாட்டின் முதல் பெண் காவல்துறைத்தலைவர் யார்? லத்திகா சரண்
231 தமிழ்நாடு என்ற பெயர் மாற்ற மசோதா நிறைவேற்றப்பட்ட ஆண்டு எது?  1967
232 தமிழகத்தில் செசன்ஸ் கோர்ட் நீதிபதியாக இருந்து சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பதவியேற்ற (13.8.2014) முதல் பெண் நீதிபதி யார்?  ஆர்.பானுமதி
233 தமிழ்நாடு தடகள சங்கத்தலைவராக (2014-2018) தேர்வு செய்யப்பட்டுள்ளவர் யார்?    W.I..தேவாரம்
234 தமிழ்நாட்டில் ONGC நிறுவனம் எந்த இடங்களில் இயற்கை எண்ணெய் வளம் இருப்பதாக கண்டறிந்துள்ளனர்?  மண்டபம் தேவிப்பட்டிணம்
235 தமிழகத்தில் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் எங்கு அமைந்துள்ளது?    சென்னை
236 2015ம் ஆண்டுக்கான தமிழக அரசின் கலாம் விருதைப் பெற்ற தமிழக விஞ்ஞானி யார்? வளர்மதி
237 தென்நாட்டின் பெர்னாட்ஷா எனப்படுபவர் யார்?     அறிஞர் அண்ணா
238 தமிழகத்திலிருந்து ரோம் நாட்டிற்கு முற்காலத்தில் வாணிபம் செய்யப்பட்ட பொருள் எது?   முத்துக்கள் & யானைத்தந்தங்கள்
239 மெகஸ்தனிஸ் தமிழகம் எப்போது வந்தார்?    கிமு.4ம் நூற்றாண்டு
240 1967-ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று தமிழக முதலமைச்சரானவர் யார்?    அண்ணாதுரை
241 தமிழகத்தில் பரதலர்கள் வாழ்ந்த பகுதிகளின் பெயர்கள் எந்த விகுதியில் முடிந்தன? கரை
242 பண்டைய தமிழகத்தில் பின்பற்றப்பட்டு வந்த மருத்துவம் எது? சித்த மருத்துவம்
243 தமிழகத்தின் அன்னிபெசன்ட் என அழைக்கப்படுபவர் யார்?     இராமாமிர்தம் அம்மையார்
244 அப்துல்கலாம் தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் பிறந்தார்?    இராமநாதபுரம் மாவட்டம்
245 மஞ்சள் நகரம் என்று அழைக்கப்படும் தமிழக மாவட்டம் எது?  ஈரோடு மாவட்டம்
246 காகித உற்பத்தியில் ஆசியாவிலேயே இரண்டாவது இடம் வகிக்கும் காகித ஆலை எது? தமிழ்நாடு காகித ஆலை புகளுர் கரூர் மாவட்டம் (TNPL)
247 ஏரிகளின் மாவட்டம் என்று அழைக்கப்படும் தமிழக மாவட்டம் எது? காஞ்சிபுரம் மாவட்டம்
248 ஆயிரம் ஆலயங்களின் நகரம் என்று அழைக்கப்படும் தமிழக மாவட்டம் எது?    காஞ்சிபுரம் மாவட்டம்
249 பூட்டுக்கு பெயர்பெற்ற தமிழக நகரம் எது?     திண்டுக்கல் மாவட்டம்
250 தமிழகத்தில் உள்ள எந்தப் பகுதி இந்திய துணைக்கண்டத்தின் தென்கோடி முனையாகும்.   கன்னியாக்குமரி