Friday 22 December 2017

தமிழ்நாட்டில் மட்டுமல்லாது வேறு எந்த நாடுகளில் தமிழ் ஆட்சி மொழியாக உள்ளது.

251 தமிழ்நாட்டில் மட்டுமல்லாது வேறு எந்த நாடுகளில் தமிழ் ஆட்சி மொழியாக உள்ளது.   சிங்கப்பூர் மலேசியா
253 தமிழ்நாட்டின் கடற்கரை இந்திய அளவில் எத்தனையாவது பெரியது?      3வது பெரியகடற்கரை (1.குஜராத் 2.ஆந்திரப்பிரதேசம்)
254 தமிழ்நாட்டின் இயற்கை அமைப்பு சற்று ஏறக்குறைய எத்தகைய வடிவத்தை ஒத்திருக்கும்.    முக்கோண வடிவம்
255 தமிழ்நாட்டின் இயற்கை அமைப்பை எத்தனை பிரிவுகளாக பிரிக்கலாம்    1.மலைகள் 2.பீடபூமிகள் 3.சமவெளிப்பகுதிகள் 4.கடலோரப்பகுதிகள்
256 தமிழ்நாட்டில் உள்ள இரண்டு மலைத்தொடர்கள் எவை?  1.மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள்2.கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகள்
257 தமிழ்நாட்டில் உள்ள இரு மலைத்தொடர்களை இணைக்கும் பகுதி எங்குள்ளது?    மேற்கு தொடர்ச்சி கிழக்கு தொடர்ச்சி மலைகள் நீலகிரியில் தொட்டப்பெட்டா என்ற இடத்தில் இணைகிறது.
258 இந்திய மாநிலங்களில் மேற்கு கிழக்கு தொடர்ச்சி மலைகள் இணையப்பெற்ற ஒரே மாநிலம் எது?   தமிழ்நாடு
259 தமிழகத்தின் உயரமான மலைச்சிகரமான தொட்டாபெட்டா எவ்வளவு உயரமானது?    2637 மீட்டர்
260 தமிழகத்தில் உள்ள முக்கூர்த்தி மலைச்சிகரம் எவ்வளவு உயரம்?     2540 மீட்டர்
261 தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மலைகள் எவை?    1.நீலகிரி மலை 2.ஆனை மலை 3.பழனிமலை 4.கொடைக்கானல் குன்று 5.குற்றாலமலை 6.மகேந்திரகிரி மலை7.அகத்தியர் மலை 8.ஏலக்காய் மலை 9.சிவகிரிமலை 10.வருஷநாடு மலை
262 தமிழகத்தின் உயர்ந்த மலைச் சிகரமான தொட்டப்பெட்டா எந்த மலையில் அமைந்துள்ளது? நீலகிரி மலை
263 தமிழகத்தின் முக்கிய கோடைவாழிடங்களில் ஒன்றான உதகமண்டலம் குன்னூர் கோத்தகிரி எங்குள்ளது?    நீலகிரி மாவட்டம் நீலகிரி மலை
264 தமிழகத்தின் உயர்ந்த மலைச் சிகரம் தொட்டப்பெட்டா (2637மீட்டர்) என்றால் தென்னிந்தியாவின் உயர்ந்த சிகரம் எது?     ஆனைமுடி (2695மீட்டர்). அமைவிடம் பாலக்காட்டு கணவாயில் உள்ளது.
265 தமிழகத்தின் கோடை வாழிடங்களில் ஒன்றான கொடைக்கானல் எங்குள்ளது?    திண்டுக்கல் மாவட்டம் பழனிமலை
266 தமிழகத்தில் உள்ள முக்கிய அருவிகளில் ஒன்றான குற்றாலம் எங்குள்ளது?    திருநெல்வேலி மாவட்டம் குற்றாலமலை
267 தமிழகத்தில் செங்கோட்டை கணவாய் எங்கு காணப்படுகிறது? வருசநாடு மலைக்கும் அகத்தியர் மலைக்கும் இடையில் காணப்படுகிறது.
268 தமிழ்நாட்டில் கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மலைகள் எவை?    1.ஜவ்வாதுமலை 2.கல்வராயன் மலை 3.சேர்வராயன் மலை 4.பச்சைமலை 5.கொல்லிமலை 6.ஏலகிரிமலை 7.செஞ்சிமலை 8.செயின்ட் தாமஸ் குன்றுகள் 9.பல்லாவரம் 10.வண்டலூர்
269 தமிழ்நாட்டின் கோடை வாழிடங்களில் ஒன்றான ஏற்காடு எங்குள்ளது?    சேலம் மாவட்டத்தில் சேர்வராயன் மலையில் உள்ளது.
270 கொல்லிமலை தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் உள்ளது?     நாமக்கல்
271 தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள கணவாய்கள் எவை?    1.தால்காட் கணவாய் 2.போர்காட் கணவாய் 3.பாலக்காட்டுக் கணவாய் 4.செங்கோட்டை கணவாய் 5.ஆரல்வாய்க் கணவாய்
272 தமிழ்நாட்டில் உள்ள முக்கிய மலை வாழிடங்கள் எவை? ஊட்டி கொடைக்கானல் குன்னூர் கோத்தகிரி ஏற்காடு ஏலகிரி வால்பாறை
273 உலகிலேயே முதல் தரமான கருப்பு கருங்கல் தமிழகத்தில் எங்கு கிடைக்கின்றது?    பச்சை மலை பெரம்பலூர் மாவட்டம்
274 தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள மலைகளின் பெயர் என்ன?    ஜவ்வாது மலை ஏலகிரி மலை இரத்தினகிரி மலை வள்ளி மலை
275 தமிழகத்தில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள மலைகளின் பெயரைக் குறிப்பிடுக.    சென்னிமலை சிவன்மலை
276 தமிழகத்தில் சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மலைகளை குறிப்பிடுக.    சேர்வராயன் மலை கஞ்சமலை காக்குக்குன்றுகள்
277 தமிழகத்தில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மலை எது? கொல்லி மலை
278 பச்சைமலை தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் உள்ளது?   பெரம்பலூர்
279 தீர்த்த மலை தமிழகத்தில் எங்குள்ளது?  தர்மபுரி மாவட்டத்தில்
280 கல்வராயன்மலை ,செஞ்சிமலை தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் உள்ளது?    விழுப்புரம்
281 பழனிமலை, கொடைக்கானல் மலை தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் உள்ளது?    திண்டுக்கல்
282 குற்றாலமலை மகேந்திரகிரிமலை அகத்தியர் மலை எந்த மாவட்டத்தில் உள்ளது?    திருநெல்வேலி
283 சித்தேரி மலை தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் உள்ளது?      தர்மபுரி மற்றும் சேலம்
284 தமிழகத்தில் உள்ள கிழக்குத்தொடர்ச்சி மலைகளில் உயர்ந்த மலை எது?    சேர்வராயன் மலை (1500-1600 மீட்டர் உயரம்)
285 மேற்கு தொடர்ச்சி மலைகளில் உயர்ந்த மலை எது? ஆனைமலை
286 தமிழ்நாட்டில் சேர்வராயன் குன்றுகளுக்கு மேற்கில் காணப்படும் பீடபூமி எது?    பாராமஹால் பீடபூமி
287 தமிழ்நாட்டின் 3 சமவெளிகள் யாவை?   1.சோழ மண்டலக்கடற்கரைச் சமவெளி 2.காவிரி வண்டல் சமவெளி 3.தெற்கு பகுதியிலுள்ள வறண்ட சமவெளி
288 தமிழகத்தில் பாயும் காவிரி ஆற்றில் உள்ள அருவி எது?  ஒக்கேனக்கல்
289 தமிழகத்தில் எந்த ஆற்றில் மேட்டூர் அணை கட்டப்பட்டுள்ளது? காவிரி ஆறு
290 தமிழகத்தில் உள்ள கல்லணையைக் கட்டியது யார்? கரிகாற்சோழன்
291 தமிழகத்தில் பாய்ந்தோடும் காவிரியும் கொள்ளிடமும் திருச்சி அருகில் எந்த ஆற்றுத் தீவை உருவாக்கியுள்ளது?     ஸ்ரீரங்கம்
292 தமிழகத்தில் பாய்ந்தோடும் காவிரி எங்கு எந்தக் கடலில் கலக்கிறது?    காவிரிப்பூம்பட்டினத்தில் வங்கக்கடலில் கலக்கிறது.
293 காவிரி நதி நீர்ப் பிரச்சனை என்பது எந்த இரண்டு மாநிலங்களுக்கு இடைப்பட்டது?    கர்நாடகம் மற்றும் தமிழ்நாடு
294 முல்லைப் பெரியாறு அணை எந்த இரண்டு மாநிலங்களுக்கு இடைப்பட்டது?    தமிழகம் மற்றும் கேரளம்
295 கூவம் மற்றும் அடையாறு தமிழகத்தில் எந்த மாவட்டங்களில் ஓடுகிறது?    சென்னை
296 தமிழகத்தில் திருவள்ளுர் மாவட்டத்தில் ஓடும் ஆறுகள் எவை? கூவம் ஆரணியாறு கொடுதலையாறு
297 பாலாறு அடையாறு செய்யாறு ஆகிய ஆறுகள் தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் பாய்கிறது? காஞ்சிபுரம்
298 பாலாறு பொன்னியாறு ஆகிய ஆறுகள் தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் பாய்கிறது? வேலூர்
299 கோமுகி ஆறு பெண்ணாறு ஆகிய ஆறுகள் தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் பாய்கிறது? விழுப்புரம்
300 தென்பெண்ணை கெடிலம் ஆகிய ஆறுகள் தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் பாய்கிறது? கடலூர்