Friday 22 December 2017

வில்லியம் பென்டிங் பிரபு

வில்லியம் பென்டிங் பிரபு (Lord William Bentinck) - இவரது ஆட்சிக் காலம் கி.பி. 1828 முதல் கி.பி. 1835 வரை. "இந்திய கவர்னர் ஜெனரல்களில் தலைசிறந்தவர்" என்று இவர் புகழப்படுகிறார். கி.பி.1829ல், இவர் ராஜாராம் மோகன்ராய் உதவியுடன் "சதி ஒழிப்பு" என்ற புரட்சிகரமான, சமுதாயச் சீர்திருத்தச் சட்டம் கொண்டு வந்தார். அக்காலத்தில், கணவன் இறந்தவுடன் மனைவியும் கணவனுடன் சேர்ந்து மரணமடைந்து விட வேண்டும் என்ற கொடுமையான ஒரு பழக்கம் வட இந்தியாவில் இருந்தது. அதற்காக, கணவனின் இறந்த உடல் எரியும் போது, அந்த சிதையில் மனைவியையும் உயிருடன் தூக்கிப் போட்டு விடுவார்கள். இதற்கு, "உடன் கட்டை ஏறுதல்" அல்லது "சதி" என்று பெயர். இப்பழக்கத்தை ஒழிப்பதற்காக, வில்லியம் பென்டிங் பிரபு "சதி ஒழிப்பு" என்ற சட்டம் கொண்டுவந்தார். மேலும், இவர் பெண் சிசுக் கொலை ஒழிப்பு, நரபலி ஒழிப்பு போன்ற முக்கியமான சமுதாயச் சீர்திருத்தச் சட்டங்களைக் கொண்டு வந்தார். இவர் இந்தியாவின் முதல் மருத்துவக் கல்லூரியை (Medical College) 1835ல் கல்கத்தாவில் ஆரம்பித்தார். ஆகவே, "நவீன மேற்கத்தியக் கல்வியின் தந்தை" (Father of Modern Western Education in India) என்று வில்லியம் பென்டிங் பிரபு அழைக்கப்படுகிறார்.

No comments: