Friday 22 December 2017

காரன் வாலிஸ் பிரபு

காரன் வாலிஸ் பிரபு (Lord Corn Wallis) - இவரது ஆட்சிக் காலம் கி.பி.1786 முதல் கி.பி.1793 வரை. இவரது ஆட்சிக் காலத்தில் சிவில் சர்வீஸ் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவில் காவல் துறையை முதன் முதலில் உருவாக்கியவர் காரன்வாலிஸ். இவர் கி.பி 1793ல், அன்றைய காலத்தில் இருந்த சட்டங்களை நெறிமுறைப்படுத்தினார். இவர் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனியாக நீதிபதிகளை (District Judge) நியமித்தார். இவர் நீதித்துறை மற்றும் சிவில் சர்வீஸ் துறைகளில் நிறைய சீர்திருத்தங்களைச் செய்தார். எனவே , "இந்திய பொது குடிமையியல் பணியின் தந்தை" (Father of Civil Services in India) என்று இவர் அழைக்கப்படுகிறார்.

No comments: