Tuesday, 24 December 2019

வரலாற்று டைரி

உலக வரலாற்றில் டிசம்பர் 20- முதல் 29 வரை நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு...

டிசம்பர் 10

* மெட்ரிக் அளவுமுறை முதன்முதலில் பிரான்சில் 1799-ல் ஏற்கப்பட்டது.

* முதல் நோபல் பரிசு, செஞ்சிலுவை சங்கத்தை தோற்றுவித்த ஹென்றி டூனாண்டிற்கு 1901-ல் அறிவிக்கப்பட்டது.

டிசம்பர் 11

* மோனாலிசா ஓவியம் லூவர் அருங்காட்சியகத்தில் இருந்து திருட்டுபோன 2 ஆண்டு களுக்குப் பின்பு, 1913-ல் மீட்கப்பட்டது.

* 1946-ல் ஐ.நா.வின் குழந்தைகள் நிதி அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது.

வாஷிங்டன் தலைநகரானது

டிசம்பர் 12

* 1800-ல், அமெரிக்காவின் தலைநகரமாக வாஷிங்டன் டி.சி. உருவாக்கப்பட்டது.

டிசம்பர் 13

* 2003-ல், பதுங்கு குழியில் இருந்த ஈராக் அதிபர் சதாம் உசேன், அமெரிக்க படைகளால் பிடிக்கப்பட்டார்.

டிசம்பர் 14

* 1903-ல் ரைட் சகோதரர்கள், தங்கள் விமானத்தை பறக்க வைக்கும் முதல் முயற்சியை தொடங்கினர்.

* 1900-ல், ஜெர்மனி இயற்பியலாளர் மேக்ஸ் பிளாங், பிளாக்பாடி ரேடியேசன் விதியை விவரித்தார். குவாண்டம் இயற்பியல் துறைக்கு இது வழிவகுத்தது.

டிசம்பர் 15

* 1840-ல், நெப்போலியனின் உடல் பிரான்சு நாட்டினால் அவர் இறந்த 19 ஆண்டுகளுக்கு பின்பு பெறப்பட்டு, பாரீஸில் அடக்கம் செய்யப்பட்டது.

* ஹாலந்தில் 1593-ல், காற்றாலைக்கு காப்புரிமம் வழங்கப்பட்டது.

டிசம்பர் 16

* 1689-ல், இங்கிலாந்து பாராளுமன்றத்தில் முடியாட்சிக்கு அதிகார வரம்பு நிர்ணயம் செய்யவும், முறையான தேர்தல் நடைபெறவும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

விமானம் பறந்தது

டிசம்பர் 17

* 1903-ல், ரைட் சகோதரர்களின் விமானம் கலிபோர்னியாவில் வெற்றிகரமாக பறந்தது. ஆர்வில்ரைட் இதை இயக்கினார்.

டிசம்பர் 18

* 1603-ல் டச்சு கிழக்கிந்திய கம்பெனி கிழக்கிந்திய தீவில் கால்பதித்தது.

* பென்சில்வேனியாவில், 1957-ல் உலகின் முதல் அணுமின் உலை நிறுவப்பட்டது.

டிசம்பர் 19

* 1783-ல் வில்லியம்பிட் 24 வயதில் இங்கிலாந்தின் இளம் பிரதமராக பொறுப்பேற்றார்.

* 1932-ல், தொலைக்காட்சி ஒளிபரப்பும் பிரிட்டிஷ் புராட்காஸ்ட் கழகம் உதயமானது.

ரேடியம் கண்டுபிடிப்பு

டிசம்பர் 20

* 2007-ம் ஆண்டு, இங்கிலாந்தின், இரண்டாம் எலிசபெத் ராணி, 81 வயது 7 மாதம் 29 நாட்கள் கடந்த நிலையில் விக்டோரியா ராணியின் சாதனையை முறியடித்து முதுமையான ராணி என்ற பெருமை பெற்றார்.

டிசம்பர் 21

* பிரெஞ்ச் ஆய்வாளர்கள் பியரி கியூரி மற்றும் மேரி கியூரி ஆகியோர் 1898-ல் ரேடியத்தை கண்டறிந்தனர்.

* 1937-ல், முதல் முழுநீள அனிமேசன் படமான ‘ஸ்னோ ஒயிட் அண்ட் செவன் ட்வார்ப்ஸ்’ படம் வெளியானது.

டிசம்பர் 22

* எடிசன் 1877-ல் போனோகிராப் கண்டுபிடிப்பை வெளியிட்டார்.

* 1885-ல், இட்டோ ஹிரோபுமி, ஜப்பானின் முதல் பிரதமரானார்.

முதல் போர் டிரோன்

டிசம்பர் 23

* 1954-ல் மனிதனுக்கு முதல் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை நடந்தது. அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் பிரிகாம் மருத்துவமனையில் மருத்துவர் ஜோசப் இ.முர்ரே இந்த அறுவைச் சிகிச்சையை செய்தார்.

* 1970-ல், உலக வர்த்தக மையத்தின் வடக்கு கோபுரம் (417மீட்டர்) கட்டப்பட்டது. இது அப்போது உலகின் உயர்ந்த கட்டிடம் என்ற சிறப்பு பெற்றது.

* 1996-ல், ஜமைக்காவில் 4 பெண்கள் முதன்முதலாக கிறிஸ்தவ பாதிரியாராக நியமிக்கப்பட்டனர். ஆங்கிலிகன் திருச்சபை நிர்வாகத்தில் 330 ஆண்டு வரலாற்றில் முதல் பெண் பாதிரியார்கள் அவர்கள் என்ற சிறப்பு பெற்றனர்.

* 2002-ம் ஆண்டு, ஈராக் மிக்25 ரக போர் விமானம், அமெரிக்காவின் எம்.கியு.1 பிரிடேட்டர் என்ற குட்டி டிரோன் விமானத்தை வீழ்த்தியது. இதுதான் போரில் ஈடுபடுத்தப்பட்ட முதல் ஆளில்லா விமானமாகும்.

* 1847-ல் கனடா பிரதமர் மெக்கன்சி பாவெல், (வயது 24), ஹெர்ரிட் மூர் என்பவரை திருமணம் செய்தார்.

நிலவை நெருங்கிய அப்பல்லோ

டிசம்பர் 24

* 1936-ல் ரேடியோ கதிர்வீச்சு மருந்து முதன் முதலாக கலிபோர்னியா பெர்கிலியில் பயன்படுத்தப்பட்டது.

* 1968-ல், அப்பல்லோ 8 விண்கலம், நிலவின் சுற்றுவட்டப்பாதையில் மனிதர்களுடன் நுழைந்து வலம்வந்தது. இது அமெரிக்க தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

* 1901-ல் போஸ்ட் கார்டு (postcard) என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டும் என்று அமெரிக்க தனியார் நிறுவனம் உரிமை கோரியது. அதற்கு முன்பு அவை பிரைவேட் மெயிலிங் கார்டு என அழைக்கப்பட்டது.

கிறிஸ்துமஸ் சமாதானம்

டிசம்பர் 25

* ஆய்வாளர் ஆன்டர்ஸ் செல்சியஸ், சென்டிகிரேடு வெப்ப அளவி கருவியை 1741-ல் அறிமுகம் செய்தார்.

* 1100-ம் ஆண்டு, ஜெருசலேமின் முதல் மன்னராக பால்ட்வின் முடிசூடினார்.

* 1914-ல் ‘கிறிஸ்துமஸ் சமாதானம்’ எனும் புகழ்பெற்ற சமாதான நடவடிக்கை, உலகப் போர்க்களத்தின் மத்தியில் அறிவிக்கப்பட்டது. இங்கிலாந்து மற்றும் ஜெர்மன் படையினர் சண்டையிடுவதற்குப் பதிலாக பரிசு களைப் பரிமாறி, கால்பந்து விளையாடி மகிழ்ந்தனர்.

* ஐசக் நியூட்டன், 1642-ம் ஆண்டு பிறந்தார். முகமது அலி ஜின்னாவின் (1876) பிறந்தநாளும் இதுதான்.

* ஜப்பானிய விஞ்ஞானிகள், 1989-ல் மைனஸ் 271.8 டிகிரி செல்சியஸ் குளிரை பதிவு செய்தனர். இதுதான் உலகின் மிக குளிரான காலநிலைப் பதிவாகும்.

* நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் 1977-ல் மரணம் அடைந்தார்.

சுனாமி தாக்குதல்

டிசம்பர் 26

* 2004-ம் ஆண்டு சுமத்ராதீவு அருகே 9.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் சுனாமி பேரலைகள் இந்தியா, இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா, இலங்கை, மாலத்தீவு ஆகிய நாடுகளை தாக்கியது. இதில் 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் இறந்தனர்.

* அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட்,1941-ல் நன்றி அறிவித்தல் தினத்தை அறிவித்தார்.

* கணினியின் தந்தை என்று போற்றப்படும் சார்லஸ் பாப்பேஜ் 1791-ம் ஆண்டு பிறந்தார்.

டிசம்பர் 27

* 1979-ல் ஆப்கானிஸ்தானில் ஊடுருவிய ரஷிய படை, சதித்திட்டத்தை காரணம் காட்டி, அந்த நாட்டு அதிபராக இருந்த ஹபிசுலாக் ஆமினை கொன்றது.

* ஸ்பெயின் 40 ஆண்டு சர்வாதிகார ஆட்சிக்குப்பின், குடியரசு நாடாக 1978-ல் மாறியது.

* 1845-ம் ஆண்டு, முதன் முதலாக பிரசவத்தில் ஈதர் பயன்படுத்தப்பட்டு குழந்தை பிறக்க வைக்கப்பட்டது.

* கோள்கள் சூரியனை சுற்றுகிறது என்பதை கண்டுபிடித்த கெப்ளர், 1571-ல் பிறந்தார்.

தடுப்பூசி சாத்தியத்தை கண்டறிந்தவரும், உணவு பதப்படுத்துதலுக்கு வித்திட்டவருமான லூயி பாஸ்டர், 1822-ம் ஆண்டு பிறந்தார்.

* ஈபில் கோபுரத்தை கட்டிய குஸ்டவ் ஈபில் (1923), பெனாசிர் பூட்டோ (2007) டிசம்பர் 27- மரணம் அடைந்தனர்.

நெப்டியூன் கண்டுபிடிப்பு

டிசம்பர் 28

* 1612-ல் நெப்டியூன் கிரகத்தின் இருப்பு, விஞ்ஞானி கலீலியோவால் பதிவு செய்யப்பட்டது.

* 1836-ல், ஸ்பெயின், தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த மெக்சிகோவுக்கு சுதந்திரம் வழங்கியது.

* வில்லியம் ராண்ட்ஜன் 1895-ல், புதுவிதமான கதிர்வீச்சை கண்டுபிடித்தார். அது பின்னாளில் எக்ஸ் கதிர்கள் என்று வரையறுக்கப்பட்டது.

* உட்ரோவில்சன் 1856-ல் பிறந்தார்.

* ஜோல்லி பெல்லின், டிரைகிளீனிங் முறையை 1849-ம் ஆண்டு தற்செயலாக கண்டுபிடித்தார்.

சீன குடியரசு

டிசம்பர் 29

* சன்யாட்சென், சீன குடியரசின் முதல் அதிபராக 1911-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார்.

* 1959-ல், இயற்பியலாளர் ரிச்சர்டு பெய்மான் என்பவர், நானோ தொழில்நுட்பத்திற்கான முக்கிய ஆதாரங்களை வெளியிட்டு சொற்பொழிவு நிகழ்த்தினார்.

* இரும்பு கவசத்துடன்கூடிய எச்.எம்.எஸ். வாரியார் போர்க்கப்பலை இங்கிலாந்து 1860-ல் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தது.

* டயர்களின் நாயகன் குட்இயர் 1800-ல் பிறந்தார்.

No comments: