Monday 16 December 2019

பொது அறிவு குவியல் - வினாவங்கி

1. ஐக்கிய நாடுகள் அவையின் சுற்றுச்சூழல் திட்டத்தின் ‘எமிசன்ஸ் கேப் ரிப்போர்ட்’ ஆய்வறிக்கை எந்த ஆண்டில் பூமியின் வெப்பநிலை 3.2 டிகிரி உயரும் என்று கூறி உள்ளது?

2. இந்தியா சமீபத்தில் எந்த நாட்டுடன் பாதுகாப்பு தொழில்நுட்ப தொழில்துறை திறன் ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது?

3. இந்தியன் வங்கி, விஜயா வங்கி, தேனா வங்கி இவற்றில் எந்த வங்கி மற்றொரு பெரிய வங்கியுடன் இணைக்கப்படவில்லை?

4. 2019-ல் கோல்டன் குளோப் விருது பெற்ற சிறந்த நாடகம் எது?

5. பிரதமமந்திரியின் ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தை கைவிட முடிவு செய்த மாநில அரசாங்கம் எது?

6. இந்தியாவின் ஒரே கம்பியிலான மிகநீண்ட தொங்கு பாலம் எந்த மாநிலத்தில் திறக்கப்பட்டு உள்ளது?

7. எந்த இந்திய மாநிலம் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை முதன் முதலில் அமல்படுத்தியது?

8. இந்தியாவின் முதல் தேசிய சினிமா அருங்காட்சியகம் எங்கு திறக்கப்பட்டு உள்ளது?.

9. ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மிக வேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் யார்?

10. ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டு திட்டம் (UNDP) எந்த நாட்டில் புதிய ஆய்வக கிளையை தொடங்கி உள்ளது?.

11. பலுசிஸ்தானில் பேசப்படும் ஒரு மொழி திராவிட மொழி குடும்பத்தை சார்ந்தது என்று கால்டுவெல் கூறி உள்ளார், அது எந்த மொழி?

12. 23½ டிகிரி தென் அட்சக்கோடு எப்படி அழைக்கப்படுகிறது?

13. பஞ்சாபின் தாரிவாலில் எந்தவிதமான தொழிற்சாலைகள் மிகுதியாக உள்ளன?

14. இந்தியாவில் முதல் ஐ.எஸ்.டி. அழைப்பு எங்கிருந்து, எந்த நாட்டிற்கு செய்யப்பட்டது?

15. அரிசி, சணல், கடுகு இவற்றில் எது கோடைகால பயிர் அல்ல?

16. சட்ட மேலவை உறுப்பினருக்கான குறைந்தபட்ச வயது வரம்பு என்ன?

17. இந்திய உச்சநீதிமன்றம் எந்த சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது?

18. அந்நிய செலாவணி மற்றும் கடன்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்ட அமைப்பு எது?

19. ஒரு கியூபிட் அலகு என்பது எத்தனை அங்குலம் கொண்டது?

20. அணுவில் அணுக்கரு மாற்றம் ஏற்படும்போது உருவாகும் கதிர்கள் எவை?

21. தனிமங்களை அணு எண் அடிப்படையில் வரிசைப்படுத்தியவர் யார்?

22. நிலக்கரி சுரங்க விபத்துகள் ஏற்பட காரணமாக இருக்கும் வாயு எது?

23. பொதிகை மலையை ஆண்ட அரசன் யார்?

24. பிளாஸ்டர் ஆப் பாரிஸ் இறுகிவிட காரணம் என்ன?

25. குளத்தில் வாழும் தாவரங்கள் எப்படி அழைக்கப்படும்?

விடைகள்

1. 2021-ல், 2. யுனைட்டட் கிங்டம், 3. இந்தியன் வங்கி, 4. போகிமெய்ன் ராப்சோடி, 5. மேற்கு வங்காளம், 6. அருணாசலபிரதேசம், 7. குஜராத், 8. மும்பை, 9. முகமது ஷமி, 10. இந்தியாவில், 11. பிராகுய், 12. மகர ரேகை, 13. கம்பளி, 14. மும்பையிலிருந்து இங்கிலாந்தின் லண்டன் நகருக்கு, 15. கடுகு, 16. 30, 17. ஒழுங்குமுறை சட்டம், 1773., 18. ரிசர்வ் வங்கி, 19. 18 அங்குலம், 20. காமா கதிர்கள், 21. மோஸ்லே, 22. மீத்தேன், 23. நள்ளி, 24. நீர் வெளியேற்றம், 25. லிம்னோபைட்.

No comments: