Friday 15 November 2019

2020-ம் ஆண்டு குடியரசு தின விழாவில்  சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார் பிரேசில் அதிபர்

2020-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி நடைபெறும் குடியரசு தின விழா வில் சிறப்பு விருந்தினராக பங் கேற்க வருமாறு பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பை பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ ஏற்றுக்கொண்டுள்ளார்.

பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடு களின் 11-வது உச்சி மாநாடு பிரேசில் தலைநகர் பிரேசிலியாவில் நடைபெற்றது. நேற்றுடன் முடிவடைந்த இந்த 2 நாள் மாநாட்டில் பிரிக்ஸ் அமைப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இந்நிலையில் நேற்று இந்த மாநாட்டுக்கு இடையே பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார். அப்போது இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். இந்தியாவில் வேளாண் உப கரணங்கள், கால்நடை பண்ணை கள், அறுவடைக்கு பிந்தைய தொழில்நுட்பம், உயிரி எரிபொருள் உள்ளிட்ட துறைகளில் முதலீடு செய்யுமாறு பிரதமர் அழைப்பு விடுத்தார்.

இந்த சந்திப்பின்போது, டெல்லியில் அடுத்த ஆண்டு நடைபெறும் இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்குமாறு போல்சனாரோவுக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார். இதனை போல்சனாரோ மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்.

பிரேசில் நாட்டில் இந்திய குடிமக்கள் விசா இன்றி பயணம் செய்ய அனுமதிக்கும் அதிபரின் முடிவுக்கு மோடி வரவேற்பு தெரிவித்தார்.

பிரிக்ஸ் மாநாட்டுக்கு இடையே ரஷ்ய அதிபர் புதினை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.

No comments: