Monday 11 November 2019

மெண்டலின் ஆய்வுக் குறிப்புகள்

கிரிகர் ஜோகன் மெண்டல் மரபியலின் தந்தை எனப்படுகிறார்.

மெண்டல், தாவரங்களில் மரபுப் பண்புகளை கடத்தும் பொருட்களை பேக்டர் (காரணிகள்) என்று குறிப்பிட்டார். இதை மரபணு (ஜீன்) என்று அழைத்தவர் ஜோகன்ஸன் ஆவார்.

மெண்டல் ஆய்வுக்குப் பயன்படுத்திய பட்டாணி தாவரத்தின் அறிவியல் பெயர் பைசம் சட்டைவம்.

பட்டாணி தாவரம் குறைந்த வாழ்நாளையும் அதிக வகைகளையும் கொண்டிருந்ததே மெண்டல் இந்த தாவரத்தை ஆய்வுக்குப் பயன்படுத்த காரணமாகும்.

பட்டாணியில் ஒரு பண்பு. இரு பண்பு கலப்பு சோதனைகளை மெண்டல் மேற்கொண்டார்.

ஆய்வின் முடிவாக தனித்துப் பிரிதல் விதி, சார்பின்றி ஒதுங்குதல் விதி ஆகிய மரபியல் விதிகளை மெண்டல் உருவாக்கினார்.

மெண்டலின் ஒரு பண்பு கலப்பை விளக்குவது தனித்துப் பிரிதல் விதி.

மெண்டலின் இருபண்பு கலப்பை விளக்குவது சார்பின்றி ஒதுங்குதல் விதி.

ஒரு பண்பு கலப்பு என்பது உயரமான பட்டாணி தாவரத்தை குட்டையான பட்டாணி தாவரத்துடன் கலப்பு செய்வது.

ஒரு பண்பு கலப்பு சோதனையின் புறத்தோற்ற விகிதம் 3:1

ஒரு பண்பு கலப்பு சோதனையின் மரபுத் தோற்ற விகிதம் 1:2:1

இருபண்பு கலப்பு என்பது வட்டமான பச்சை விதை பட்டாணி தாவரத்தை சுருங்கிய மஞ்சள் விதை பட்டாணி தாவரத்துடன் கலப்பு செய்வது.

இரு பண்பு கலப்பு சோதனையின் புறத்தோற்ற விகிதம் 9:3:3:1

பிற்கலப்பு என்பது முதல் தலைமுறை தாவரத்தை ஏதேனும் ஒரு பெற்றோர் தாவரத்துடன் கலப்பு செய்வது.

சோதனைக் கலப்பு என்பது முதல் தலைமுறை தாவரத்தை ஒடுங்கு பெற்றோர் தாவரத்துடன் கலப்பு செய்வது.

No comments: