Monday 23 September 2019

சமண சமயம்

சமண சமயம் பற்றிய முக்கிய குறிப்புகள்...

* சமண சமயத்தை உருவாக்கியவர் வர்த்தமான மகாவீரர்.

* மகாவீரர் வைசாலி நகரில் உள்ள குந்டக் கிராமத்தில் பிறந்தார்.

* 24-வது கடைசி தீர்த்தங்கரராக கருதப்படுபவர் மகாவீரர்.

* தீர்த்தங்கரர் என்ற வார்த்தைக்கு ‘கோட்டை கட்டுபவர்’ என்று பொருள்.

* முதல் தீர்த்தங்கரர் - ரிஷபா

* 23-வது தீர்த்தங்கரர் - பர்ஷவனதர்

* திருவள்ளுவரை சமணர் என்று கருதுபவர்கள் முதல் திருக்குறளில் வரும் ஆதிபகவன் என்பது முதல் தீர்த்தங்கரான ரிஷப தேவரை குறிப்பதாக கொள்வார்கள்.

* மகாவீரர் சால் மரத்தடியில் ஞானம்பெற்ற பின் ‘ஜினா’ என்று அழைக்கப்பட்டார்.

* ஜினா என்றால் வெற்றி பெற்றவர் என்று பொருள். இந்தச் சொல்லில் இருந்து ஜைனம் என்ற பெயர் உருவானது.

* சமண சமயத்தின் இரு பிரிவினர் திகம்பரர் மற்றும் ஸ்வேதாம்பரர்.

* ஆடை அணியாத திகம்பரர்களின் தலைவர் பத்ரபாகு.

* வெண்ணிற ஆடை அணிந்த ஸ்வேதாம்பரர்களின் தலைவர் ஸ்தலபாகு.

*சமண சமயம் திகம்பரர்களால் தென்னிந்தியாவிலும், ஸ்வேதாம்பரர்களால் வட இந்தியாவிலும் பரவியது.

* ராஜஸ்தானில் உள்ள மவுன்ட் அபுவில் உள்ள தில்வாரா ஜெயின் கோவிலும், கர்நாடகத்திலுள்ள சிரவணபெல கோலாவும் சமணர்களின் புனிதத் தலங்கள்.

No comments: