Saturday 29 June 2019

CURRENT AFFAIRS IN TAMIL | கடந்து வந்த பாதை - ஜூன் 14-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை

CURRENT AFFAIRS IN TAMIL | கடந்து வந்த பாதை - ஜூன் 14-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை | போட்டித் தேர்வுக்கு பயன்படும் வகையில் முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இங்கே வழங்கப்படுகிறது. 2019 ஜூன் 14-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இது...

  • ஷாங்காய் மாநாட்டில் பிரதமர் மோடி அழைப்பு : பயங்கரவாதத்துக்கு எதிராக அனைவரும் ஒன்று சேர்ந்து போரிடுவோம் என்று கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கேக்கில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார். (ஜூன் 14) 
  • சபரிநாதன், தேவி நாச்சியப்பனுக்கு சாகித்ய அகாடமியின் விருதுகள் : இந்த ஆண்டுக்கான யுவ புரஸ்கார் விருது கவிஞர் சபரி நாதனுக்கும், பால சாகித்ய புரஸ்கார் விருது தேவி நாச்சியப்ப னுக்கும் வழங்கப்படுவதாக சாகித்ய அகாடமி அறிவித்தது. (ஜூன் 14) 
  • டாக்டர்கள் வேலைநிறுத்தத்தால் மருத்துவப் பணிகள் பாதிப்பு : மேற்கு வங்காளத்தில் பயிற்சி மருத்துவர்கள் மீது நடந்த தாக்குதலைக் கண்டித்து நாடு முழுவதும் டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் மருத்துவப் பணிகள் பாதிக்கப் பட்டன. அதனால் நோயாளிகள் கடும் அவதியடைந்தனர். (ஜூன் 14) 
  • மொத்த விலை பணவீக்கம் குறைந்தது : மே மாதத்தில், மொத்த விலை பணவீக்கம் 2.45 சதவீதமா கக் குறைந்தது. இது 2 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைவாகும். முந்தைய மாதத்தில் அது 3.07 சதவீதமாக இருந்தது. (ஜூன் 14) 
  • ஈரான் மீது அமெரிக்கா நேரடிக் குற்றச்சாட்டு : ஒமன் வளைகுடாவில் எண்ணெய்க் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியது ஈரான்தான் என அமெரிக்கா நேரடியாகக் குற்றஞ்சாட்டியது. இதுதொடர்பாக வீடியோ ஆதாரம் ஒன்றை அமெரிக்க ராணுவம் வெளியிட்டது. (ஜூன் 14) 
  • முதல்-மந்திரிகளுக்கு மோடி வேண்டுகோள் : டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, வறட்சியைச் சமாளிக்க துரித நடவடிக்கை எடுக்குமாறு மாநில முதல்-மந்திரிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார். (ஜூன் 15) 
  • ஹாங்காங்கில் சர்ச்சைக்குரிய மசோதா நிறுத்திவைப்பு : ஹாங்காங்கில் கைதிகளை சீனாவுக்கு நாடு கடத்துவது தொடர்பான சர்ச்சைக்குரிய மசோதா, மக்கள் போராட்டம் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டது. (ஜூன் 15) 
  • உலக ஆக்கி தொடர்: இந்தியா சாம்பியன் : ஒடிசா தலைநகர் புவனேசுவரத்தில் நடந்த உலக ஆக்கி தொடர் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 5-1கோல் கணக்கில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியன் ஆனது. பட்டம் வென்ற இந்தியா, 2-வது இடம் பிடித்த தென்ஆப்பி ரிக்கா அணிகள் அடுத்த ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச் சுற்றுப் போட்டியில் விளையாடத் தேர்வாகின. (ஜூன் 15) 
  • தமிழக, கர்நாடக முதல்வர்கள் மத்திய நீர்வள மந்திரியுடன் சந்திப்பு : மேகதாது அணை பிரச்சினை மற்றும் காவிரி நீர் பங்கீடு தொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி ஆகியோர் டெல்லியில் மத்திய நீர்வள மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து ஆலோசனை நடத்தினர். (ஜூன் 15) 
  • பாகிஸ்தானை எளிதாக வென்றது இந்தியா : உலகக் கோப்பை கிரிக்கெட்டில் மான்செஸ்டரில் மழை பாதிப்புக்கு இடையில் நடந்த ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானை 89 ரன்கள் வித்தியாசத்தில் எளிதில் வென் றது. (ஜூன் 16) 
  • பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்றனர் : டெல்லியில் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கியது. பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட உறுப்பினர்கள் புதிய எம்.பி.க்களாக பதவி ஏற்றுக்கொண்டனர். அவர்களுக்கு இடைக்கால சபாநாயகர் வீரேந்திரகுமார் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். (ஜூன் 17) 
  • நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதமாகக் குறையும் : நடப்பு 2019-2020-ம் நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதமாகக் குறையும் என பிட்ச் ரேட்டிங்ஸ் நிறுவனம் தெரிவித்தது. (ஜூன் 17) 
  • ஆவடி மாநகராட்சி உதயம் : மாநகராட்சியாக ஆவடி நகராட்சி தரம் உயர்த்தப்பட்டு அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இதுதொடர்பான கவர்னர் பன்வாரிலால் புரோகித்தின் உத்தரவு தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டது. (ஜூன் 18) 
  • சீனாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் : சீனாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத் தால் 12 பேர் பலியானார்கள். 122 பேர் படுகாயம் அடைந்தனர். (ஜூன் 18) 
  • அனைத்துக் கட்சி கூட்டத்தில் பிரதமர் மோடி அறிவிப்பு : நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த முடியுமா என்பது பற்றி ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும் என்று டெல்லியில் அனைத்துக் கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி அறிவித்தார். (ஜூன் 19) 
  • நாடாளுமன்ற சபாநாயகராக ஓம் பிர்லா பொறுப்பு ஏற்றார் : நாடாளுமன்ற சபாநாயகராக ஓம் பிர்லா பொறுப்பு ஏற்றார். அவருக்கு பிரதமர் மோடியும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் வாழ்த்துத் தெரிவித்தனர். (ஜூன் 19) 
  • உலகக் கோப்பையில் இருந்து தவான் விலகல் : கைவிரலில் காயமடைந்த இந்திய வீரர் ஷிகர் தவான் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகினார். அவருக்குப் பதிலாக ரிஷாப் பான்ட் சேர்க்கப்பட்டார். (ஜூன்19)
  • நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், எதிர்கால தலைமுறையினருக்காக தண்ணீரைப் பாதுகாப்போம் என்று கூறினார். (ஜூன் 20) 
  • அமெரிக்க உளவு விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது: தங்கள் வான்பரப்பில் அத்துமீறி நுழைந்த அமெரிக்க உளவு விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது. (ஜூன் 20)


No comments: