Monday, 30 April 2018

அமில குணங்கள்

வேதிப்பொருட்களின் அரசன் எனப்படுவது சல்பியூரிக் அமிலம். விட்ரியால் எண்ணெய் என்பது சல்பியூரிக் அமிலத்தின் வேறு பெயர்.

எறும்பு கடிக்கும்போது நம் உடமிபினுள் செலுத்தப்படுவது பார்மிக் அமிலம்.

அமில மழையில் காணப்படும் அமிலங்கள், கந்தகம் மற்றும் நைட்ரிக். மழை நீரின் பி.எச். அளவு 5.6க்கு குறைவாக இருந்தால் அது அமில மழையாகும்.

நைட்ரிக் அமிலம் வலிமையான திரவம் எனப்படுகிறது.

வினிகர் எனப்படும் புளித்த காடியில் இருப்பது அசிட்டிக் அமிலம்.

கார் பேட்டரியிலுள்ள அமிலம் சல்பியூரிக்.

ஹைட்ரோ புளூரிக் அமிலம் கண்ணாடியை கரைக்கும் திறன் கொண்டது.

மூன்று பங்கு ஹைட்ரோ குளோரிக் அமிலம், ஒரு பங்கு நைட்ரிக் அமிலம் கலந்தால் அது ராஜ திராவகம். ராஜ திராவகத்தில் மட்டுமே தங்கம் கரையும்.

எலுமிச்சம் பழத்தில் காணப்படுவது சிட்ரிக் அமிலம்.

புளி மற்றும் திராட்சையில் உள்ளது டார்டாரிக் அமிலம்.

ஆஸ்பிரினின் வேதியியல் பெயர் அசிட்டைல் சாலிசிலிக் அமிலம்.

மயக்கமருந்தாக உதவுகிறது பார்பியூரிக் அமிலம்.

நைலான் தயாரிக்க உதவுவது அடிப்பிக் அமிலம்.

பினாப்தலின் தயாரிக்க உதவுவது தாலிக் அமிலம்.

பீனாலின் வேறு பெயர் கார்பாலிக் அமிலம்.

கலோரி மீட்டரில் பயன்படுவது பென்சாயிக் அமிலம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஒளிச்சேர்க்கை

ஒளிச்சேர்க்கை ஒளிச்சேர்க்கை, சுவாசித்தல், ஒளிசார்பு இயக்கம், விதை முளைத்தல் போன்றவை முக்கிய தாவர செயல்களாகும். ஒளிச்சேர்க்கை என்பது தாவரங்கள் ஸ்டார்ச்சை தயாரிக்கும் நிகழ்ச்சி. தாவரங்கள் ஸ்டார்ச்சை எரித்து ஆற்றல் பெறும் நிகழ்ச்சி சுவாசித்தல் எனப்படுகிறது. சுவாசித்தல் மூலமே தாவரங்கள் தங்களுக்குத் தேவையான ஆற்றலைப் பெறுகிறது. ஒளிச்சேர்க்கை நடைபெற சூரிய ஆற்றல் தேவை. ஒளிச்சேர்க்கையின்போது தாவரங்கள் கார்பன்-டை-ஆக்சைடை எடுத்துக் கொண்டு ஆக்சிஜனை வெளியிடுகின்றன. சுவாசித்தலின்போது தாவரங்கள் ஆக்சிஜனை எடுத்துக் கொண்டு கார்பன்-டை-ஆக்சைடை வெளியிடுகின்றன. ஒளிச்சேர்க்கையின்போது தாவரங்கள் வெளியிடும் ஆக்சிஜன் முழுக்க நீரில் இருந்து வருகிறது. ஒளிச்சேர்க்கை ஒரு வளர்மாற்ற நிகழ்வாகும், சுவாசித்தல் ஒரு சிதை மாற்ற நிகழ்வாகும். ஒளிச்சேர்க்கை பெருமளவு பகலிலும் சிறிதளவு இரவிலும் நடைபெறுகிறது. சுவாசித்தல் பெருமளவு இரவிலும், சிறிதளவு பகலிலும் நடைபெறுகிறது. ஒளிச்சேர்க்கையில் ஒளி கிரிகை, இருட்கிரியை என இருவினைகள் உள்ளன. இருட்கிரிகையை கண்டறிந்தவர் மெல்வின்கால்வின். ஒளிச்சேர்க்கையில் கார்பன் டைஆக்சடைடுடன், நீரிலிருந்து பெறப்படும் ஹைட் ரஜன் சேர்க்கப்பட்டு ஸ்டார்ச் தயாரிக்கப்படுவதால் அது ஒரு ஒடுக்கவினை. சுவாசித்தலின்போது ஸ்டார்ச்சுடன் ஆக்சிஜன் சேர்க்கப்படுவதால் அது ஆக்சிஜனேற்ற வினை. தாவரங்களில் நீராவிப்போக்கு நடைபெறுவதை கேனாங்கின் போட்டோமீட்டர் மூலம் அறியலாம். சில சமயங்களில் தாவரங்களிலுள்ள அதிகப்படியான நீர், நீராவியாக மாறாமல் நீராகவே தாவரத்தில் இருந்து கொட்டும். இதற்கு நீர் வடிதல் என்று பெயர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பொது அறிவு - வினா வங்கி

வினா வங்கி

1. சுதந்திர போராட்ட காலத்தில் மோதிலால் நேரு நடத்திய பத்திரிகையின் பெயர் என்ன?

2. சூரிய குடும்ப துணைக் கோள்களில் பெரியது எது?

3. சந்திரயான் விண்கலம் எப்போது விண்ணில் செலுத்தப்பட்டது?

4. மெஸ்தா என்பது எந்த வகைப் பயிர்?

5. இந்தியாவில் தொலைக்காட்சி ஒளிபரப்பு தொடங்கியது எப்போது?

6. பொக்காரா இரும்பு எக்கு தொழிற்சாலை எங்கு அமைந்துள்ளது?

7. அகில இந்திய அளவில் புதிய பணிகளை உருவாக்கும் அதிகாரமுடைய அமைப்பு எது?

8. இந்தி அரசியலமைப்பின் எந்தப் பகுதி இந்திய குடிமகனின் அடிப்படை கடமைகளை குறிக்கிறது?

9. வணிக வங்கிகள் ரிசர்வ் வங்கியில் வைத்திருக்க வேண்டிய டெபாசிட் எப்படி அழைக்கப்படுகிறது?

10. லாபர் வளைவு எதனுடன் தொடர்புடையது?

விடைகள் : 1. இண்டிபெண்டன்ட், 2. கனிமிட், 3. 2008 அக்டோபர் 22, 4. நார்ப்பயிர், 5. 1969, செப்டம்பர் 15, 6. ஜார்க்கண்ட், 7. ராஜ்யசபா, 8. பகுதி 4ஏ, 9. சி.ஆர்.ஆர். , 10. வரி விகிதம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 23 April 2018

இலக்கண நூல்கள்

தமிழ் இலக்கண நூல்களை அறிவோம்...

தொல்காப்பியம் - தொல்காப்பியர்

நன்னூல் - பவணந்தி முனிவர்

யாப்பெருங்கல காரிகை - அமரிதசாக ரர்

தண்டியலங்காரம் - தண்டி

புறப்பொருள் வெண்பா மாலை - ஐயனரிதனார்

நம்பியகப் பொருள் - நாய்கவிராச நம்பி

மாறனலங்காரம் - திருக்குருகைப் பெருமாள் கவிராயர்

வீரசோழியம் - குணவீர பண்டிதர்

இலக்கண விளக்கம் - வைத்திய நாத தேசிகர்

தொன்னூல் விளக்கம் - வீரமாமுனிவர்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பாசிகள்

பாசிகள் பற்றிய படிப்பு பைகாலஜி

பாசிகள் பச்சையமுள்ள சுயஜீவிகள் ஆகும்.

நீர்ப்பட்டு எனப்படுவது ஸ்பைரோகைரா என்ற பாசியாகும்.

விண்வெளி வீரர்கள் ஆக்சிஜன் பெற உதவும் பாசி குளோரெல்லா.

அகார் அகார் ஊடகத்தை தரும் பாசிகள் ஜெலிடியம், கிரேசிலேரியா.

அகார் அகார் ஆய்வகத்தில் பாக்டீரியாவை வளர்க்கப் பயன்படுகிறது.

கிளாமிடோமோனாஸ் என்பது ஒரு செல் பாசியாகும்.

நீரை சுத்திகரிக்கப்பயன்படும் ஒருசெல் பாசி, கிளாமிடோமானாஸ்.

மிகப்பெரிய ஒருசெல் பாசி அசிட்டபுலெரியா.

உயிரி எரிபொருள் தயாரிக்கப் பயன்படும் பாசி போட்ரியோ காக்கஸ்.

ஒருசெல் புரதம் தயாரிக்கப் பயன்படும் பாசி ஸ்பைருலினா.

கழிவு நீர்த் தொட்டியில் வளரும் பாசி வால்பாக்ஸ்.

அயோடின் சத்து மிக்க கடல் பாசிகள் லேமினேரியா மற்றும் கெல்ப்.

கால்நடைத் தீவனமாகப் பயன்படும் பாசி லேமினேரியா.

செங்கடல் சிவப்பாக இருக்கக் காரணம் சிவப்பு பாசி.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

சரணாலயங்கள்


இந்தியாவில் 92 தேசிய பூங்காக்களும், 500 சரணாலயங்களும் உள்ளன. அவற்றில் முக்கிய சரணாலயங்கள், தேசிய பூங்காக்கள் சிலவற்றை அறிவோம்...

காசிரங்கா (ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம்) தேசியப்பூங்கா - அசாம்

கிர் தேசிய பூங்கா (ஆசிய சிங்கம்) - குஜராத்

ரான் ஆப் கட்ச் (வனக்கழுதை) சரணாலயம்

- குஜராத்

கச்சிகாம் தேசிய பூங்கா (காஷ்மீர் மான்)

- காஷ்மீர்

ஜலதாபார சரணாலயம் - மேற்கு வங்காளம்

பெரியார் தேசிய பூங்கா (யானைகள்)

- கேரளா

சுந்தர வன தேசிய பூங்கா (புலிகள்)

- மேற்கு வங்காளம்

ரங்கன்திட்டு பறவைகள் சரணாலயம்

- கர்நாடகா

பிதர் கனிகா தேசிய பூங்கா - ஒரிசா

பந்திப்பூர் தேசியப்பூங்கா - கர்நாடகா

மானஸ் தேசிய பூங்கா (காட்டெருமை )

- அசாம்

ராஜாஜி தேசியப் பூங்கா - உத்தராஞ்சல்

கார்பெட் தேசியப்பூங்கா - உத்திராஞ்சல்

பெய்புல் லாம் ஜாப் (தமின் மான்) - மணிப்பூர்

வால்மீகி தேசியப்பூங்கா - பீகார்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பொது அறிவு குவியல்!

1. மருத்துவ துறையில் நோபல் பரிசு வென்ற இந்தியர்கள் யார்?

2. மின்காந்தப் புயல் எப்படி அழைக்கப்படுகிறது?

3. ரேயான் இழை எதிலிருந்து எடுக்கப்படுகிறது?

4. ஐ.நா. சபையின் சமாதான பல்கலைக்கழகம் எங்குள்ளது?

5. யுரேனியத்தை கண்டுபிடித்தவர் யார்?

6. தேனீக்களால் எந்த வண்ணத்தை பார்க்க முடியாது?

7. நளவெண்பாவை இயற்றியவர் யார்?

8. உலகின் மிக நீளமான பாசன கால்வாய் எது?

9. இந்தியாவின் வானம்பாடி என்று சிறப்பிக்கப்பட்டவர் யார்?

10. தாஜ்மகால் எந்த ஆற்றின் கரையில் அமைந்துள்ளது?

11. தெர்மாமீட்டரை கண்டுபிடித்தவர் யார்?

12 சாலைகளின் முன்னோடி யார்?

13. பூச்சிகளால் நடக்கும் மகரந்தச் சேர்க்கைக்கு என்ன பெயர்?

14. தியாகிகள் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?

15. இரவும் பகலும் சமமாக இருக்கும் நிலை எப்படி அழைக்கப்படுகிறது?

விடைகள் :

1. ரொனால்டு ராஸ்(1902), ஹர்கோபிந்த் குரானா(1968), 2. ஆரோரா, 3. மூங்கில், 4. கோஸ்டா ரிகா, 5. கிளாப்ராத், 6. சிவப்பு, 7. புகழேந்தி, 8. காராகும் கால்வாய், 9. சரோஜினி நாயுடு, 10. யமுனை, 11. காப்ரியல் பாரன்ஹீட், 12. ரோமானியர்கள், 13. எண்டமோபில்லி, 14. ஜனவரி, 30, 15.ஈக்னாவிக்ஸ்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அறிவியல் கருவி

KALVISOLAI - கல்விச்சோலை - kalvisolai latest news -
1. கடல் பயணத்தில் தீர்க்கரேகை அளவை அறிந்துகொள்ள உதவும் கருவி போன்று துல்லியமாகக் கால அளவைக் காட்டும் கால அளவி - கால்வனோமீட்டர்
2. ரத்த அழுத்தத்தை அளக்க உதவும் ரத்த அழுத்த அளவி - ஸ்பிக்மோ மானோ மீட்டர்
3. பொருளின் எடையை அளக்க உதவும் சுருள் தராசு - ஸ்பிரிங் பாலன்ஸ்
4. இதயத்தின் நாடித்துடிப்பை அளக்க மருத்துவர் பயன்படுத்தும் இதயத்துடிப்
பளவி - ஸ்டெதஸ்கோப்
5. தொலை தூரப் பொருட்களை பெருக்கி இரு கண்களுக்கும் ஒரே சமயத்தில் காட்டும் இரட்டைத் தொலைகாட்டி - பைனாகுலர்கள்

சு.லோகேஷ்வரன், 9-ம் வகுப்பு, அன்னை வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருவேற்காடு, சென்னை-77.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 16 April 2018

வைரஸ்களும், பாக்டீரியாக்களும்...

 1. வைரஸ்களை கண்டறிந்தவர் டிமிட்ரி ஐவனோஸ்கி.
 2. பாக்டீரியாக்களை கண்டறிந்தவர் லிவன்காக்.
 3. வைரஸ் என்பதற்கு நச்சு என்று பொருள்.
 4. பாக்டீரியா என்பதற்கு குச்சி என்று பொருள்.
 5. வைரஸ்களின் அளவு நானோ மீட்டரில் 10-9 இருக்கும் .
 6. பாக்டீரியாக்களின் அளவு மைக்ரான்களில்10-6 இருக்கும்.
 7. வைரஸ்களை எலக்ட்ரான் நுண்ணோக்கியில்தான் பார்க்க முடியும்
 8. பாக்டீரியாக்களை கூட்டு நுண்ணோக்கியில் பார்க்கலாம்.
 9. வைரஸ் உயிருள்ள செல்களில் மட்டுமே வளரும்.
 10. பாக்டீரியா உயிருள்ள, உயிரற்ற செல்களில் வளரும்.
 11. வைரஸ் அது தாக்கும் உயிரினத்தின் செல்லுக்கு உள்ளேதான் வளரும்.
 12. பாக்டீரியா அது தாக்கும் உயிரினத்தின் செல்லுக்குள்ளும் வெளியிலும் வளரும்.
 13. வைரஸ் செல் இல்லாத உயிரினம்.
 14. பாக்டீரியா ஒரு செல் உயிரி.
 15. வைரஸ் மரபுப் பொருள் புரத உறை ஆகிய இரண்டையும் கொண்டது.
 16. பாக்டீரியா மரபுப்பொருளும் புரோகேரியாட் அமைப்பும் கொண்டது.
 17. வைரசின் மரபுப்பொருள் டி.என்.ஏ. அல்லது ஆர்.என்.ஏ.
 18. பாக்டீரியாவின் மரபுப்பொருள் டி.என்.ஏ.
 19. வைரஸ் ஆண்டி பயாடிக் மருந்துகளுக்கு கட்டுப்படாதது.
 20. பாக்டீரியா ஆண்டிபயாடிக் மருந்துகளுக்கு கட்டுப்படும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

வீரர்களும், விளையாட்டும்


வீரர்களும், விளையாட்டும் அஞ்சலி பகவத் சில வீரர்களையும் அவர்கள் சம்பந்தப்பட்ட விளையாட்டுகளையும் அறிவோம்...
 1. அஞ்சலி பகவத் - துப்பாக்கி சுடுதல்
 2. கீத் சேத்தி - ஸ்னூக்கர்
 3. அபர்ணா பப்பட் - பேட்மிண்டன்
 4. திங்கோ சிங் - குத்துச்சண்டை
 5. சஞ்சய் சிங் - மல்யுத்தம்
 6. விஜய்குமார் - கோல்ப்
 7. உதய்பவார் - வாலிபால்
 8. சுக்பால்சிங் - வாலிபால்
 9. நந்தி சிங் - ஆக்கி
 10. டோலா பேனர்ஜி - வில்வித்தை
 11. ககன் நரங் - துப்பாக்கி சுடுதல்
 12. ஷிகா டான்டன் - நீச்சல்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பெண் புலவர்கள் | சங்க காலத்தில் புகழ்பெற்று விளங்கிய சில பெண் புலவர்களை பற்றி அறிவோம்...


பெண் புலவர்கள் | சங்க காலத்தில் புகழ்பெற்று விளங்கிய சில பெண் புலவர்களை பற்றி அறிவோம்...
 • சங்க இலக்கியத்தில் 31 பெண் புலவர்களின் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. அதிகப் பாடல்களை எழுதியவர் அவ்வையார் . அவர் 59 பாடல்களை எழுதியுள்ளார்.
 • அதியமானுக்கும், நெடுங்கிள்ளிக்குமான போரை பாட்டுத்திறத்தால் தவிர்த்தவர் அவ்வையார்.
 • அற்றைத் திங்கள் பாடலை எழுதியவர்கள் பாரி மகளிரான அங்கை, சங்கவை.
 • ஆதிமந்தியார், கரிகால் சோழனின் மகள்.
 • ஆதிமந்தியாரின் கணவர் சேரன் ஆட்டனத்தி.
 • ஆதிமந்தி கதையை ‘சேரதாண்டவம்’ என்ற தலைப்பில் பாடியவர் பாரதிதாசன்.
 • கண்ணதாசனின் ‘ஆட்டனத்தி ஆதிமந்தி’ படைப்பே ‘மன்னாதி மன்னன்’ திரைப்படம்.
 • சோழ இளவரசன் கோப்பெரு நற்கிள்ளியின் மல்யுத்தத்தை பாடியவர் நக்கண்ணையார்.
 • சேரமன்னன் சேரலாதனைப் பாடி, அவனை மணந்தவர் நச்செள்ளையார்.
 • நச்செள்ளையார் காக்கைப் பாடியதால் காக்கை பாடினியார் ஆனார்.
 • இலக்கண நூல் இயற்றிய ஒரே பெண்பாற்புலவர் காக்கைப் பாடினியார், அந்த நூல் காக்கை பாடினியம்.
 • நச்செள்ளையார் கதையை ‘வில்லோடு வா நிலவே’ என்ற தலைப்பில் நாவலாக்கியவர் வைரமுத்து.
 • தாய், தந்தை, அரசன், மகன் கடமைகளை பாடியவர் பொன்முடியார்.
 • கணவனை, தமையனை இழந்து மகனையும் போருக்கு அனுப்பிய பெண்ணின் வீரத்தை பாடியவர் ஒக்கூர் மாசாத்தியார்.
 • ஒக்கூர் திருக்கோஷ்டியூருக்கு அருகிலுள்ளது.
 • பேயோட்டும் வெறியாடல் பற்றிப் பாடியவர், காமக்கண்ணியார்.
 • கார்கீரன் எயிற்றியார், வாடைப்புலவர் என்று சிறப்பிக்கப்படுகிறார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பொது அறிவு | வினா வங்கி


வினா வங்கி

1. இந்தியாவின் முதல் பெண் ஐ. ஏ. எஸ். அதிகாரி யார்?

2. ஆசியாவிலே முதன் முதலாக விற்பனை வரியை அறிமுகம் செய்த மாநிலம் எது?

3. ‘தி லாஸ்ட் ஜட்ஜ்மென்ட்’ ஓவியத்தை வரைந்த ஓவியர் யார்?

4. ஹூக்ளி நதியில் அமைந்துள்ள துறைமுகம் எது?

5. ஐன்ஸ்டீனின் புகழ் பெற்ற கோட்பாடு எது?

6. தமிழ்நாட்டின் வால்டர்ஸ்காட் என்றழைக்கப்படுபவர் ?

7. உலகிலே மிக அதிக ஆண்டுகள் ஒரு நாட்டின் அதிபராக இருந்தவர் யார்?

8. ஸ்டார்ச்சுக்கு நீல நிறத்தைக் கொடுப்பது எது?

9. ஷெர்லாக் ஹோம்ஸ் கதாபாத்திரம் இடம் பெற்ற முதல் புத்தகம் எது?

10. முதன் முதலில் கலிங்கா விருது வாங்கியவர் யார்?

விடைகள் : 1. அன்னா ஜார்ஜ் மல்கோத்ரா, 2. தமிழ்நாடு, 3. மைக்கேல் ஏஞ்சலோ, 4. ஹால்தியா, 5. சார்பியல் தத்துவம், 6. கல்கி, 7. பிடல் காஸ்ட்ரோ ( 47 ஆண்டுகள்), 8. அயோடின், 9. ஸ்டடி இன் ஸ்கர்லட், 10. லூயி டே பிராலி
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஏழு வள்ளல்கள்..! சங்க காலத்தில் வாரி வாரி வழங்கிய பல தமிழ் மன்னர்கள் இருந்திருக்கின்றனர். அவர்களுள் மிக சிறப்பு வாய்ந்த வள்ளல்கள் ஏழு பேர்.

ஏழு வள்ளல்கள்..! சங்க காலத்தில் வாரி வாரி வழங்கிய பல தமிழ் மன்னர்கள் இருந்திருக்கின்றனர். அவர்களுள் மிக சிறப்பு வாய்ந்த வள்ளல்கள் ஏழு பேர். அவர்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்..!

1. பேகன் - ஆற்றலும், அழகும் நிறைந்தவன், பெரிய மலை நாட்டுக்குத் தலைவனாக இருந்தவன் பேகன். மழை ஓயாது பொழியும் வளமிக்க மலைச் சாரலில், காட்டுப் பாதையில் சென்றுக் கொண்டிருந்தபோது கருமேகங்களைக் கண்டு ஆடிக் கொண்டிருந்த மயில், குளிரில் நடுங்குவதாக எண்ணி தனது போர்வையை அதன் மீது போர்த்திவிட்டான். இதனால் இவன் மயிலுக்குப் போர்வை தந்த வள்ளல் பேகன் என சிறப்புடன் அழைக்கப்பட்டான்.

2. பாரி - பறம்பு மலை பகுதியை ஆண்ட மன்னன். மணம் வீசும் மலர்களை உதிர்க்கின்ற புன்னை மரங்கள் நிறைந்த நெடிய வெளியில், பற்றுக்கொம்பு இல்லாமல் காற்றில் ஆடிக்கொண்டிருந்த முல்லைக் கொடிக்குத் தனது பெரிய தேரை படர்வதற்காக அருகில் நிறுத்தி விட்டுச் சென்றவன். ஆகவே இவன் முல்லைக்குத் தேர் ஈந்த பாரி’ என பெயர் பெற்றான்.

3. காரி - தன்னை நாடி வந்த வருக்கு, அன்பு நிறைந்த சொற்களை கொடுத்தவன் காரி. பகைவர் கண்டு அஞ்சுகின்ற சினத்தீ விளங்கும் ஒளி வீசும் நீண்ட வேலினை உடையவன் அவன். வீரக்கழலும், வளையும் அணிந்துள்ள பெரிய கைகளை உடையவனுமாக திகழ்ந்தான் காரி. வீரம் மிகுந்த அவனும் வள்ளல்தன்மையிலும் சிறப்புற்று விளங்கினான்.

4. ஆய் - வில்லைத் தாங்கிய, சந்தனம் பூசி உலர்ந்த வலிமை மிக்க தோளினை உடையவனும், அன்பான மொழிகளைப் பேசியவனுமாகிய மன்னன் ஆய், பொதியமலைப் பகுதியில் உள்ள மலைப்பகுதிகளையும், நிலப்பகுதிகளையும் ஆண்டு வந்த குறுநில மன்னன். இவன் எப்போதும் வில்லும், அம்பும் கையுமாக திரிபவன். உதவி வேண்டி வருவோர்க்கு இல்லை என்று சொல்லாமல் பொருள் வழங்கினான். இவனைத் ‘திண் தோள் ஆர்வ நன்மொழி ஆய்!’ எனப் போற்றினர்.

5. அதியமான் - மேகம் தங்கும் மலையில் மணம் வீசும் மலர்கள் மலர்ந்திருக்கும் மலைச்சாரலில் அழகிய நெல்லி மரத்தில் அமிழ்தாக விளைந்த இனிய நெல்லிக் கனியை அவ்வைக்குக் கொடுத்தவன். இதனால் அவ்வைக்கு நெல்லிக்கனி ஈந்த அதியமான் என எல்லோராலும் போற்றப்பட்டான். பகைவரை அழிப்பதற்கு உறுதியோடு எழுந்த சினத்தீயும், ஒளி மிக்க நெடிய வேலும் ஆரவாரமிக்க கடல் போன்ற படையும் கொண்டவன் அதியமான். இவனது ஆட்சிக் காலத்தின் பெரும் பகுதியை போரிலேயே கழித்துள்ளான் என்பதை இவன் வரலாற்று நூல்கள் குறிப்பிடுகின்றன. வாள் வீச்சில் இவனை வெல்ல யாரும் கிடையாது என்பார்கள்.

6. நள்ளி - தன்னிடம் இருக்கும் பொருளை மறைக்காது அன்பு காட்டுவோர் மனம் மகிழுமாறு, அவர்கள் வாழ்க்கை நடத்துவதற்கான பொருளைக் குறைவின்றிக் கொடுத்தவன். போர் செய்வதில் வல்லவன். மழை பொழிவதற்குக் காரணமான, காற்று தங்குகின்ற நெடிய குவடு களைக் கொண்ட பெருமை பொருந்திய மலை நாட்டுக்குத் தலைவன்தான் நள்ளி. இவன் போர் முனையில் எப்படி கைகள் முன்னால் நிற்குமோ, அதுபோல் மலைவாழ் மக்களின் வாழ்க்கைக்கு வேண்டிய அனைத்துப் பொருட்களையும் வழங்கிப் புகழ்பெற்றவன்.

7. ஓரி - நறுமணம் வீசும் அரும்புகளைக் கொண்டுள்ள இளமையான உயர்ந்த புன்னை மரங்களையுடைய சிறிய மலைகளைக் கொண்ட நல்ல நாடுகளைக் கூத்தர்களுக்கு அளித்தவன். பிடரி மயிர் அமைந்த குதிரையினை உடையவன் ஓரி. மலை நாட்டைச் சேர்ந்த வல்வில் வீரனான ஓரி போர் முனையில் வெற்றிபெற்று புகழுடன் விளங்கியவன். காரியை போரில் வென்ற பெரும் வள்ளல் எனப் போற்றப் பட்டான்.

கு.சாருநிஷா, 10-ம் வகுப்பு,மகரிஷி வித்யா மந்திர்,சேத்துப்பட்டு, சென்னை.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

printfriendly

Print Friendly and PDF