ஒளிச்சேர்க்கை

ஒளிச்சேர்க்கை ஒளிச்சேர்க்கை, சுவாசித்தல், ஒளிசார்பு இயக்கம், விதை முளைத்தல் போன்றவை முக்கிய தாவர செயல்களாகும். ஒளிச்சேர்க்கை என்பது தாவரங்கள் ஸ்டார்ச்சை தயாரிக்கும் நிகழ்ச்சி. தாவரங்கள் ஸ்டார்ச்சை எரித்து ஆற்றல் பெறும் நிகழ்ச்சி சுவாசித்தல் எனப்படுகிறது. சுவாசித்தல் மூலமே தாவரங்கள் தங்களுக்குத் தேவையான ஆற்றலைப் பெறுகிறது. ஒளிச்சேர்க்கை நடைபெற சூரிய ஆற்றல் தேவை. ஒளிச்சேர்க்கையின்போது தாவரங்கள் கார்பன்-டை-ஆக்சைடை எடுத்துக் கொண்டு ஆக்சிஜனை வெளியிடுகின்றன. சுவாசித்தலின்போது தாவரங்கள் ஆக்சிஜனை எடுத்துக் கொண்டு கார்பன்-டை-ஆக்சைடை வெளியிடுகின்றன. ஒளிச்சேர்க்கையின்போது தாவரங்கள் வெளியிடும் ஆக்சிஜன் முழுக்க நீரில் இருந்து வருகிறது. ஒளிச்சேர்க்கை ஒரு வளர்மாற்ற நிகழ்வாகும், சுவாசித்தல் ஒரு சிதை மாற்ற நிகழ்வாகும். ஒளிச்சேர்க்கை பெருமளவு பகலிலும் சிறிதளவு இரவிலும் நடைபெறுகிறது. சுவாசித்தல் பெருமளவு இரவிலும், சிறிதளவு பகலிலும் நடைபெறுகிறது. ஒளிச்சேர்க்கையில் ஒளி கிரிகை, இருட்கிரியை என இருவினைகள் உள்ளன. இருட்கிரிகையை கண்டறிந்தவர் மெல்வின்கால்வின். ஒளிச்சேர்க்கையில் கார்பன் டைஆக்சடைடுடன், நீரிலிருந்து பெறப்படும் ஹைட் ரஜன் சேர்க்கப்பட்டு ஸ்டார்ச் தயாரிக்கப்படுவதால் அது ஒரு ஒடுக்கவினை. சுவாசித்தலின்போது ஸ்டார்ச்சுடன் ஆக்சிஜன் சேர்க்கப்படுவதால் அது ஆக்சிஜனேற்ற வினை. தாவரங்களில் நீராவிப்போக்கு நடைபெறுவதை கேனாங்கின் போட்டோமீட்டர் மூலம் அறியலாம். சில சமயங்களில் தாவரங்களிலுள்ள அதிகப்படியான நீர், நீராவியாக மாறாமல் நீராகவே தாவரத்தில் இருந்து கொட்டும். இதற்கு நீர் வடிதல் என்று பெயர்.

Comments