Friday 29 May 2020

தகவல் களஞ்சியம்

டெலிபோனை கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிரகாம்பெல்தான், காது கேட்கும் கருவியையும் கண்டுபிடித்தார்.

போரில் முதன் முதலில் ஹெலிகாப்டர்களை பயன்படுத்திய நாடு, ‘அமெரிக்கா’.

அமெரிக்காவுக்கு ‘சூரியன் மறையும் நாடு’ என்ற பெயர் உண்டு.

உலகில் 500-க்கு மேற்பட்ட எரிமலைகள், செயல்படும் எரிமலைகளாக உள்ளன.

இயந்திர ஆற்றலை மின்னாற்றலாக மாற்றும் சாதனம், ‘டைனமோ’.

இந்தோனேஷியாவின் விமான நிறுவனம் ஒன்றின் பெயர், ‘கருடா’.

‘மார்த்தா வாஷிங்டன் ஓட்டல்’, பெண்களுக்காக கட்டப்பட்ட ஓட்டலாகும்.

ஐஸ்லாந்தில் ரெயில்கள் இல்லை.

எரிவதற்கு காற்று தேவை என்பதை நிரூபித்துக் காட்டியவர், ஜான்மேயோவ்.

அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில், இந்தியர்கள் அதிகம் வாழுகிறார்கள்.

முகத்தை (கிரீம்மூலம்) ஈரப்படுத்திக் கொண்டு தாடி மழிக்கும் (ஷேவ்) முறையை கையாண்டவர்கள், ரோமானியர்கள்.

உலகின் மிகப்பெரிய வெண்கலச் சிலை, ஜப்பான் நாட்டில் உள்ள ஒரு புத்தர் சிலையாகும்.

ஐ.நா. பொதுசபை தலைவர் பதவி வகித்த முதல் பெண்மணி, இந்தியரான விஜயலட்சுமி பண்டிட் ஆவார்.

கர்நாடகாவில் உள்ள ஜோக் நீர்வீழ்ச்சி, ஷராவதி நதியிலிருந்து உற்பத்தியாகிறது.

‘புளுட்டோனியம்’ அதிக நச்சுத்தன்மை கொண்டதாகும்.

அமெரிக்காவில் 1830-ல் பயணிகள் ரெயில் இயக்கப்பட்டது.

No comments: