Monday, 17 February 2020

அட்லாண்டிஸ்

அட்லாண்டிஸ் நகரம் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? பண்டைய தமிழகம் இருந்த குமரிக்கண்டம் கடல்கோளில் அழிந்ததாக கருதப்படுகிறது. அதுபோலவே கடலில் மூழ்கிய கிரேக்க நகர மாக கருதப்படுவதுதான் அட்லாண்டிஸ். இது பற்றி கேள்வி பதில் வடிவில் அறிவோமா?...

அட்லாண்டிஸ் என்பது என்ன?

அட்லாண்டிக் கடலில் மூழ்கிய ஒரு நகரம் அட்லாண்டிஸ் எனப்படுகிறது. கிரேக்க நாட்டுடன் இணைந்த ஒரு தீவாகவோ அல்லது தனிக்கண்டம் போன்ற பெரும் பகுதியாகவோ இருந்த இந்த நகரம் கடுமையான நிலநடுக்கத்தினால் கடலுள் மறைந்ததாக கருதப்படுகிறது.

அட்லாண்டிஸ் பற்றி எப்படி அறிய முடிகிறது?

கிரேக்க தத்துவவியலாளர்களில் ஒருவரான பிளாட்டோ தனது புத்தகமான டிமாயேஸ் புத்தகத்தில் இது பற்றிய குறிப்பு எழுதி உள்ளார். பிளாட்டோ கி.மு. 4-ம் நூற்றாண்டில் வாழ்ந்தார்.

எப்போது அட்லாண்டிஸ் அழிந்தது?

9 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அட்லாண்டிஸ் அழிந்ததாக கருதுவதாக பிளாட்டோ தனது நூலில் குறிப்பிட்டு உள்ளார்.

எங்கு அட்லாண்டிஸ் அமைந்திருந்தது?

1967-ல் தொல்பொருள் ஆய்வாளர்கள் மினாயன் நகரத்தை அகழாய்வில் கண்டுபிடித்தனர். இது மூழ்கிய நகரத்தின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது. மினாயன் நகரம் கி.மு. 1500-ம் ஆண்டில் எரிமலை சீற்றத்தால் புதையுண்டதாக நம்பப்படுகிறது. இந்த நகரம், ஏஜியன் கடலில் இருந்த தேரா கிரேக்கத்தீவில் அமைந்திருந்தது.

அழிந்துபோன நகரத்தைத் தேடிய பல பயணங்கள் மேற்கொள்ளப்பட்டது ஏன்?

அட்லாண்டிஸ் நகரம் செல்வச் செழிப்பு மற்றும் அழகிய நகரமாக இருந்ததாக கருதப்படுகிறது. எனவே அதைத் தேடுவது 14,15-ம் நூற்றாண்டுகளில் கடல் ஆய்வாளர்களின் கவர்ச்சியான தேடுதல் வேட்டையாக இருந்தது.

No comments: