Monday 24 February 2020

திருக்குறள்

திருக்குறள் 2 ஆயிரம் ஆண்டு களுக்கு முற்பட்டது. திருக் குறளை எழுதியவர் திருவள்ளுவர்.

திருக்குறள் அறம், பொருள் இன்பம் மூன்று பிரிவாக பாடப்பட்டு உள்ளது. மொத்தம் 133 அதிகாரங்கள் உள்ளன.

அறத்துப்பாலில் 38 அதிகாரங்கள், பொருட்பாலில் 70 அதிகாரங்கள், இன்பத்துப்பாலில் 25 அதிகாரங்கள் உள்ளன.

ஒரு அதிகாரத்திற்கு 10 குறள்கள் வீதம் மொத்தம் 1330 குறட்பாக்கள் உள்ளன.

திருக்குறள் தமிழ்வேதம் என்று போற்றப்படுகிறது.

திருக்குறள் 80-க்கும் மேற்பட்ட உலக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளது.

திருக்குறளை ஆங்கிலத்தில் ஜி.யு.போப்பும், லத்தினில் வீரமாமுனிவரும், ஜெர்மன் மொழியில் கிரால், பிரெஞ்ச் மொழியில் ஏரியல், ரஷிய மொழியில் யூரி கில்சோவ், இந்தியில் பி.டி.ஜெயின், சமஸ்கிருதத்தில் அப்பாதீட்சிதர் ஆகியோர் மொழி பெயர்த்துள்ளனர்.

திருக்குறளில் தமிழ், தமிழ்நாடு, மதம், இடம் பற்றிய குறிப்புகள் இல்லாமல் பாடப்பட்ட உள்ளது. எனவே இனம், மதம், மொழி, காலம் கடந்த உலகப் பொது நூலாக திருக்குறள் போற்றப்படுகிறது. அத்துடன் திருக்குறளில் மாறாத்தன்மை கொண்ட மெய்யறிவு கருத்துகள் இடம் பெறுவதால் அது யாவருக்கும் பொருந்தும் உலகப் பொதுமறை நூல் என்றும் போற்றப்படுகிறது.

திருக்குறளுக்கு ஏராளமானவர்கள் உரை எழுதி உள்ளனர். அதில் 10 பேரை திருக் குறள் உரைகண்ட பதின்மர் என்று சிறப்பித்துப் போற்று கிறார்கள். தருமர், மணக்குடவர், தாமத்தர், நச்சர், பரிமேலழகர், பரிதி, திருமலையர், மல்லர், பரிப்பெருமாள், காளிங்கர் ஆகியோரே அவர்கள். இவர்களுக்குப் பின்னாலும் பல்வேறு பிர பலங்கள் திருக்குறளுக்கு உரைகண்டிருக்கிறார்கள்.

No comments: