Monday 4 November 2019

இந்திய பசுமைப்புரட்சியின் தந்தை

இந்திய பசுமைப்புரட்சியின் தந்தை

எம்.எஸ்.சுவாமிநாதன்

பசுமைப் புரட்சியை ஏற்படுத்தி, உணவு உற்பத்தியில் இந்தியாவைத் தன்னிறைவு பெற வைத்த பெருமைக்கு உரியவர் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன்.

இவர், நாட்டின் முதுகெலும்பாக உள்ள வேளாண் துறையில் வளர்ச்சி ஏற்படுத்தி, உலக அரங்கில் இந்தியாவை வியந்து பார்க்க வைத்தவர். உலகம் போற்றும் விஞ்ஞானி, பேராசிரியர்களில் ஒருவர், கவுரவ டாக்டர் பட்டங்கள் நாற்பதுக்கு மேல் பெற்றவர். “மகசேசே'' விருதும், உணவுக்கான உலகப் பரிசும் பெற்றவர். இந்தியாவிலும் அனைத்துலக அரங்கிலும் அதிகாரமிக்கப் பல பதவிகளை வகித்தவர். நூற்றுக்கணக்கான ஆராய்ச்சிக் கட்டுரைகளையும், நூல்களையும் எழுதிக் குவித்தவர். இவர்தான், “பசுமைப் புரட்சியின் தந்தை'' என்றழைக்கப்படும் எம்.எஸ்.சுவாமிநாதன்.

சிறுவயதிலேயே தந்தையை இழந்த இவர், பள்ளி மற்றும் கல்லூரி படிப்பில் சிறந்து விளங்கினார். வங்கப் பஞ்சத்தின் கொடுமைகளை அறிந்து, நாட்டின் உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன், விவசாய ஆராய்ச்சியை தனது துறையாகத் தேர்ந்தெடுத்தார். இந்தியாவின் பசுமைப் புரட்சிக்கு வித்தூன்றியவர்களில் இவரும் ஒருவரே. வேளாண்மையில் பி.எஸ்சி. பட்டம், உயிரணு மரபியலில் பட்டம், பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் தாவர விதைப் பெருக்க நிறுவனத்தில் முனைவர் பட்ட ஆராய்ச்சியில் ஈடுபட்டு பிஎச்.டி. பட்டம் பெற்றார். இவர் அமெரிக்காவின் உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிறுவனத்திலும் பணியாற்றினார். ஆசிரியர், ஆராய்ச்சியாளர், ஆய்வு நிர்வாகி ஆகிய பொறுப்புகளை வகித்த உலக அளவிலும் சுவாமிநாதனின் திறமை உலக அளவிலும் அங்கீகரிக்கப்படுகிறது. அமெரிக்காவின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் தலைவராகவும், பிலிப்பைன்ஸில் சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிலையத்தின் தலைமை இயக்குநராகவும் அவர் பொறுப்பேற்றிருந்தார். தமிழகத்தின் ‘வேளாண் விஞ்ஞானி’ என கருதப்படும் எம்.எஸ்.சுவாமிநாதன், கும்பகோணத்தில் 1925-ம் ஆண்டு பிறந்தார். மான்கொம்பு சதாசிவன் சுவாமிநாதன் என்பதன் சுருக்கமே எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகும்.

மு.திவ்யதர்ஷினி, 9-ம் வகுப்பு,

அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி,

கீழ்மணம்பேடு, திருவள்ளூர்.

No comments: