Tuesday 16 April 2019

பரணி இலக்கியம்

* 96 வகை சிற்றிலக்கியங்களில் புகழ்பெற்றவை பரணி இலக்கியங்கள்.

* போரில் ஆயிரம் யானைகளைக் கொன்ற மன்னனின் புகழைப் போற்றிப் பாடப்படுவது பரணி இலக்கியமாகும்.

* பரணி இலக்கியம், தோல்வி அடைந்த நாட்டின் பெயரில் அமைந்திருக்கும்.

* பரணியின் பெயரிலக்கண முறைக்கு விதிவிலக்காக திராவிட பரணி, திராவிட நாட்டின் வெற்றியைப் பாடுகிறது.

* தமிழ் பரணி நூல்களில் புகழ்பெற்றது ஜெயங்கொண்டார் எழுதிய கலிங்கத்துப்பரணி.

* குலோத்துங்க சோழனின் தளபதியான கருணாகர தொண்டைமான் கலிங்கத்தைத் தோற்கடித்ததைச் சிறப்பித்துப் பாடுகிறது கலிங்கத்துப்பரணி.

* தக்கயாகப் பரணியைப் பாடியவர் ஒட்டக்கூத்தர்.

* அகமும், புறமும் கலந்து பாடப்படும் சிற்றிலக்கியமாக பரணி திகழ்கிறது.

* உணர்வுகளை கட்டுப்படுத்துவதை கருவாகக் கொண்டு பாடப்பட்ட மோகவதைப் பரணி என்ற நூலை தத்துவராயர் இயற்றி உள்ளார்.

* ஒட்டக்கூத்தரின் தக்கயாகப் பரணி, தக்கனின் யாகத்தை அழித்த சிவனின் வெற்றியை சிறப்பித்து பாடப்படுகிறது.

No comments: