Thursday 11 April 2019

பாண்டியர் ஆட்சி

களப்பிரர்களை வெற்றி கொண்டு பிற்கால பாண்டியர் ஆட்சியை கி.பி. 575-ல் கடுங்கோன் என்ற பாண்டிய மன்னன் நிறுவினான்.

கடுங்கோன் முதல் வீரபாண்டியன் வரை சுமார் 800 ஆண்டுகள் ஆண்ட பிற்கால பாண்டியர்கள் 32 பேர்.

பிற்கால பாண்டியர்களை பல்லவர் கால பாண்டியர்கள் (10 பேர்), சோழர்கால பாண்டியர்கள் (16 பேர்), பாண்டிய பேரரசர்கள் (6 பேர்) என மூன்று பட்டியல்களில் அடக்கலாம்.

இரண்டாம் நந்திவர்மனை தோற்கடித்த பாண்டிய மன்னன் அரிகேசரி பராங்குசன்.

பராங்குசன் கங்கர்களை வென்று கங்கை இளவரசி கூசுந்தரியை மணந்ததை சீவரமங்கலம் செப்பேடு தெரிவிக்கிறது.

பல்லவர் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்த பாண்டிய மன்னன் முதலாம் வரகுண பாண்டியன் (கி.பி.768-815)

திருப்பரங்குன்றம், கழுகுமலைக் குடை வரைக் கோவில்கள் முதலாம் வரகுண பாண்டியன் காலத்தவை.

பல்லவர்களால் கொள்ளிடக் கரையான திருப்புறம்பியத்தில் தோற்கடிக்கப்பட்ட பாண்டிய மன்னன் ஸ்ரீமாறன் ஸ்ரீ வல்லபன்.

கடுங்கோன் பாண்டிய மரபில் கடைசி மன்னன் பராந்தகப் பாண்டியன்.

முதலாம் சுந்தரபாண்டியன் மூன்றாம் ராஜ ராஜனை வெற்றி கொண்டான் (கி.பி. 1216 -1239), இரண்டாம் சுந்தரபாண்டியன் சோழ மன்னன் மூன்றாம் ராஜேந்திரனால் தோற் கடிக்கப்பட்டான்.

மூன்றாம் சுந்தர பாண்டியன், மூன்றாம் ராஜேந்திரனை தோற்கடித்தான்.

மூன்றாம் சுந்தரபாண்டியன் மதுரை கோவிலின் கிழக்கு கோபுரத்தை கட்டியதோடு திருவரங்கம் கோவில் விமானத்துக்கு பொன் வேய்ந்தான்.

குலசேகர பாண்டியன் காலத்தில் (1265-1310) வெனிஸ் நகரப் பயணி பாண்டிய நாட்டுக்கு வருகை தந்தார்.

குலசேகர பாண்டியன் காலத்துக்குப் பின் குலசேகரனின் புதல்வர்கள் நான்காம் சுந்தர பாண்டியனும், வீர பாண்டியனும் அரியணைக்குப் போட்டியிட்டனர்.

மாலிக்காபூர் உதவியோடு நான்காம் சுந்தரபாண்டியன் கி.பி. 1303-ல் அரியணை ஏறினார். கி.பி. 1310-ல் குலசேகரப் பாண்டியன் கொல்லப்பட்ட பின்பு அரியணை ஏறிய வீர பாண்டியனே கடைசி பாண்டிய மன்னன்.

No comments: