Ad Code

ஒலிம்பிக் துளிகள்

ஒலிம்பிக்கை தடை செய்த ரோமானிய அரசர் தியோடோசிஸ்.

பழங்கால ஒலிம்பிக் போட்டிகள் கி.மு. 776-ல் இருந்து கி.பி. 392 வரை நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வந்திருக்கின்றன.

பதக்க வடிவமைப்பு, 1928-க்குப் பின் 2004-ல் தான் மாற்றி அமைக்கப்பட்டது.

கிரேக்க கடவுள் நைக்கியின் உருவம் மெடலின் ஒரு பக்கம் செதுக்கப்பட்டிருக்கும்.

ஒலிம்பிக்கின் குறிக்கோள் Citius Altius Fortius என்பதாகும். இது தமிழில் “விரைவாக, உயரமாக, பலமாக” என பொருள்படும்.

முதல் ஒலிம்பிக்கில் முதல் தங்கம் வென்றவர் ஜேம்ஸ் கானோலி.

ஒலிம்பிக் வரலாற்றில் தனி போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய வீரர் அபினவ் பிந்த்ரே. 2008 ஒலிம்பிக்கில் இந்த சாதனையை அவர் படைத்தார்.

குளிர்கால ஒலிம்பிக், கோடை கால ஒலிம்பிக் இரண்டிலும் தங்கம் வென்றவர் எடி ஈகன்.

ஒலிம்பிக் கமிட்டியின் தாயகம் சுவிட்சர்லாந்தில் லாசானோவில் உள்ளது.

1936 பெர்லின் ஒலிம்பிக்கில் இந்திய விளையாட்டான கபடி சோதனை முறை விளையாட்டாக விளையாடப்பட்டது.

1900 பாரீஸ் ஒலிம்பிக்கில்தான் முதன் முதலாக பெண்கள் பங்கு கொள்ள அனுமதிக்கப்பட்டனர். இது இரண்டாவது ஒலிம்பிக் போட்டியாகும்.

Post a Comment

0 Comments

Ad Code