Thursday 11 April 2019

ஜாலியன்வாலாபாக் படுகொலை வருத்தம் தெரிவித்தார் தெரசா

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் போது அரசுக்கு எதிராக செயல் பட்டதாக கூறி சத்யபால், சைபுதின் கிச்லியு ஆகிய சுதந்திரப் போராட்ட தலைவர்களை போலீஸார் கைது செய்தனர். இதனைக் கண்டிக்கும் வித மாக, பஞ்சாப் மாநிலம் அமிர் தசரஸ் அருகே உள்ள ஜாலியன் வாலாபாக் எனும் பூங்காவில் 1919-ம் ஆண்டு ஏப்ரல் 13-ம் தேதி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு அமைதி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஜெனரல் டயர் என்ற அதிகாரி தலைமையில் அங்கு வந்த பிரிட்டன் ராணுவத்தினர், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களை நோக்கி சரமாரியாக சுட்டனர். இந்தக் கொடூர நிகழ்வில் 1000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இறந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தின் 100-ம் ஆண்டு நினைவு நாளினை வரும் சனிக்கிழமையன்று அனுசரிக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த சம்பவத்தை நிகழ்த்திய தற்காக பிரிட்டன் அரசு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என அரசியல் கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றன. இந்தக் கோரிக் கைக்கு பிரிட்டன் எதிர்க்கட்சி எம்.பி.க்களும் ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில், இந்த விவ காரம் தொடர்பாக பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பிரதமர் தெரசா மே நேற்று பேசி னார். அப்போது அவர், "ஜாலியன் வாலாபாக்கில் நடைபெற்ற சம் பவத்துக்கும், அதனால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கும் ஆழ்ந்த வருத் ததை தெரிவிக்கிறேன்" என்றார். எனினும், தமது உரையில் அவர் மன்னிப்பு கேட்கவில்லை.

No comments: